Published:Updated:

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

எது பாதுகாப்பான கார்?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்விஃப்ட், ஃபிகோ (முந்தைய  மாடல்), நானோ, கோ, i10, ஆல்ட்டோ 800 ஆகிய கார்களை, 2014-ம் ஆண்டு குளோபல் NCAP அமைப்பு க்ராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தி கழுவிக் கழுவி ஊற்றியது. செலெரியோ, க்விட், இயான், ஸ்கார்ப்பியோ, ஈக்கோ ஆகிய ஐந்து கார்களை இந்த ஆண்டு க்ராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்திய குளோபல் NCAP, இந்த கார்களுக்கு ஜீரோ ரேட்டிங் கொடுத்திருக்கிறது.

 கடந்த முறை நடத்தப்பட்ட டெஸ்ட்டிங்கிலாவது இரண்டு கார்கள் (போலோ,  எட்டியோஸ்) 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றன. ஆனால், இந்த முறை நடத்தப்பட்ட டெஸ்ட்டிங்கில், அனைத்து கார்களும் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது நம் நாட்டுக்குத் தலைகுனிவு. நம் நாட்டில், கார்களில் பாதுகாப்புச் சாதனங்கள் இன்னும் கட்டாயமாக்கப்படாததே இதற்குக் காரணம்.

சூப்பர் பைக்குகளுடன் வெஸ்பா!

மோட்டோ பிளக்ஸ் என்ற பெயரில் இரண்டு சில்லறை விற்பனை ஷோரூம்களை வெற்றிகரமாகத் துவக்கிய பியாஜியோ குழுமம், இந்தியா முழுவதும் தனது வர்த்தகத்தைத் தீவிரமாக விரிவுபடுத்தும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் புனேயில் தனது முதலாவது மோட்டோ பிளக்ஸ் ஷோரூமைத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மே மாதத் துவக்கத்தில் ஹைதராபாத்தில் இரண்டாவது ஷோரூமைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மூன்றாவது ஷோரூமை சென்னை அசோக் நகரில் துவங்கி இருக்கிறது.

இந்த ஷோரூமில் ஏப்ரிலியா SRV 850, ஏப்ரிலியா TUONO V4, ஏப்ரிலியா RSV4-RR, மோட்டோ குஸ்ஸி AUDACE, மோட்டோ குஸ்ஸி CALIFORNIA, வெஸ்பா SXL ஆகியவை விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பியாஜியோ குழுமத்தைச் சேர்ந்த வெஸ்பா, ஏப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி ஆகிய மூன்று பிராண்ட்களும் ஒரே இடத்தில் கிடைப்பது, இருசக்கர வாகன வாடிக்கையாளருக்குப் பல தரப்பட்ட அனுபவத்தைத் தரும்.

டொயோட்டா டிரைவிங் ஸ்கூல்!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

கடந்த ஆண்டு நம் நாட்டில் நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் மேல். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நம் நாட்டில் 16 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். நம் நாட்டின் சாலைப் பாதுகாப்பு பற்றிய நிலை இதுதான். ஆகையால், ‘பாதுகாப்பான கார். பாதுகாப்பான ஓட்டுனர்’ என்ற அடைமொழியோடு டொயோட்டா சென்னையில் டிரைவிங் ஸ்கூல் ஒன்றை பள்ளிக்கரணையில் துவங்கியிருக்கிறது. இதில் டிரைவிங் தாண்டி, சாலை விதிமுறைகள் தாண்டி, சாலை ஒழுக்கம், பாதுகாப்பு  ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து டொயோட்டா இதற்கான பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறது. முற்றிலும் கார் ஓட்டவே தெரியாது என்று வருபவர்களுக்கு, ‘ஸ்டார்ட்’ என்ற பாடத் திட்டத்தின்படியும், டாக்ஸி டிரைவர்களுக்கு என்று பிரத்யேகமாக ‘ஸ்மார்ட்’ என்ற பாடத் திட்டத்தின் படியும் பயிற்சி அளிக்கவிருக்கிறது. இதில் பாதுகாப்பு, மைலேஜ் டிப்ஸ், முதலுதவி மட்டுமல்லாது, நடுவழியில் கார் பஞ்சரானால் ஸ்பேர் வீலை எப்படி மாற்றுவது; ஸ்டார்ட்டிங் பிராப்ளம் வந்தால் அதை எப்படிச் சரி செய்வது;  பேட்டரி வீக்காகிவிட்டால் என்ன செய்வது போன்ற விஷயங்களையும் சொல்லித் தருகிறார்கள். எல்லாவற்றும் மேலாக, டிரைவர்கள் நீண்ட பயணத்துக்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும்; எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும்; என்ன மாதிரி உடுப்புகள் அணிய வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று சின்னச் சின்ன விஷயங்கள் முதற்கொண்டு அனைத்தையும் சொல்லித்தர இருக்கிறார்கள்.

மோட்டார் நியூஸ்

அதிக வசதிகளுடன் ஆல்ட்டோ!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காரான மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800, மேம்படுத்தப்பட்ட டிஸைன், கேபின், இன்ஜின், கூடுதல் கலர் ஆப்ஷன் மற்றும் சிறப்பம்சங்களுடன் களமிறங்கி இருக்கிறது. ரெனோ க்விட், டட்ஸன் ரெடி-கோ, ஹூண்டாய் இயான் என பட்ஜெட் மினி ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் போட்டி அதிகரித்து வருவதால், ஆல்ட்டோ 800 காரின் முதல் ஃபேஸ்லிஃப்ட்டை மாருதி சுஸூகி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் நான்கு வண்ணங்களுடன், பச்சை மற்றும் நீலம் என இரு புதிய வண்ணங்களில் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ 800 காரின் எக்ஸ் ஷோரும் விலை, 2.49 லட்சம் - 3.34 லட்சம்.

மோட்டார் நியூஸ்

அதிக பவருடன் புது TUV 300

கடந்த ஆண்டு செப்டம்பரில் மஹிந்திரா அறிமுகப்படுத்திய காம்பேக்ட் எஸ்யுவியான TUV 3OO காரில், 85bhp பவர், 23kgm டார்க் கொண்ட 1.5 லிட்டர் 3 சிலிண்டர் mHawk80 டீசல் இன்ஜின் இருந்தது. 1,626 கிலோ எடை கொண்ட அந்த காரை இழுக்க இந்தச் சக்தி போதவில்லை. இதனால், கடந்த மாதம் அறிமுகமான நுவோஸ்போர்ட்டில் இருக்கும் 100bhp பவர், 24kgm டார்க்  கொண்ட 1.5 லிட்டர் 3 சிலிண்டர் mHawk100 டீசல் இன்ஜினை அதில் பொருத்தியுள்ளது மஹிந்திரா. எனவே, பவர்ஃபுல் இன்ஜின் பொருத்தப்பட்ட TUV 3OO காரின் விலை, தற்போதிருக்கும் காரைவிட சற்று கூடுதலாகவே இருக்கிறது.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு