உலகின் அதிவேகமான, காஸ்ட்லியான, த்ரில்லிங்கான, ஆபத்தான விளையாட்டு, மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற வார்த்தை, ஃபார்முலா-1 பந்தயங்களுக்குப் பொருந்தும். ஃபார்முலா-3, ஃபார்முலா-2 போன்ற பார்ட்களில் கலந்து ஜெயித்த பிறகுதான், ஃபார்முலா-1 பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும். ‘வாவ்.. செம ஸ்பீடுல’ என்று மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கும் ஃபார்முலா-1 கார்களைப் பற்றி ஒற்றை வார்த்தையில் வியந்து கடந்துவிட முடியாது. நம்மோடு 20 ஆண்டுகள் குடும்ப உறுப்பினராக உழைத்துக் கொட்டும் சாதாரண கார்களுக்கும், ஃபார்முலா-1 ரேஸ் கார்களுக்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஃபார்முலா-1 கார்கள் பற்றிய டாப்-10 ‘வாவ்’ தகவல்கள்...

* ரேஸ் காரின் எடை மொத்தமே 550 கிலோவுக்குள்தான் இருக்கும். இவை, கார்பன் ஃபைபர் என்னும் கெமிக்கலால், 3,272 டிகிரி ஃபாரன்ஹீட்டில் மோல்டு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சாதாரண காட்டன் துணி அளவுதான் இதன் எடை இருக்கும். எடை குறைந்தால்தான் வேகம் இருக்கும் என்பதற்காக இந்த ஐடியா. முதன்முதலில் 1980-ல் மெக்லாரன் டீம்தான், கார்பன் ஃபைபரில் காரைத் தயாரித்தது. அதுதான் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. சில டீம்கள் பாலிமெரிக் மூலமும் இதைத் தயாரிக்கிறார்கள்.

* ஃபார்முலா-1 கார்களில் இருப்பது சிங்கிள் சீட்தான். ‘டெத் ரேஸ்’ படத்தில் வருவது போல், துணைக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் நேவிகேட்டரை எல்லாம் காரில் ஏற்றிக்கொண்டு பறக்க முடியாது.

*  ஃபார்முலா-1 காரின் 10 சிலிண்டர் கொண்ட இன்ஜின்கள், 18,000rpm-ல் 800 முதல் 900bhp பவர் வரை வெளிப்படுத்துகிறது. அதாவது, இதன் பிஸ்டன் 1,000 குதிரை சக்தியில் ஒரு விநாடிக்கு 300 தடவை - ஒரு நிமிடத்துக்கு 18,000 தடவை மேலும் கீழுமாக இயங்கும். உலகின் அதிவேகமான ஃபார்முலா-1 கார் - மெக்லாரன் MP4-20A. இதன் அதிகபட்ச பவர் 920bhp. நம் நாட்டில் குறைந்தபட்ச இன்ஜின் சிலிண்டர், பவர் கொண்ட கார் - டாடா நானோ. 38bhp, 2 சிலிண்டர். ஃபார்முலா-1 கார் இன்ஜின்கள் யூஸ் அண்டு த்ரோ வகையறாவைச் சேர்ந்தவை. இதன் அதிகபட்ச வாழ்நாள் நேரம் - இரண்டே மணி நேரம். போட்டி முடிந்த பிறகு இதை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நடக்கும்.

*  ஸ்டீயரிங் வீலின் மொத்த எடையே சுமார் 1.36 கிலோதான். ஆனால் மேப், கியர், ECU, டேம்ப்பர் செட்டிங் என்று 120 வகையான வெயிட்டான பணிகளுக்கு இந்த ஒரே ஒரு ஸ்டீயரிங்தான் பொறுப்பு. இந்த ஸ்டீயரிங்கின் விலை 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சத்தில் இருந்து 32 லட்சம் வரை!

*  ஃபார்முலா-1 காரின் ஒவ்வொரு டயர்களும், ரேஸ் முடிந்தபிறகு, அரை கிலோ முதல் முக்கால் கிலோ வரை எடை குறைந்திருக்கும். இங்கு எடை குறைவது டயர்கள் மட்டுமல்ல; டிரைவர்களும்தான். ‘ஆரம்பம்’ படத்தின் ஆரம்ப ஆர்யா மாதிரி இருக்கும் டிரைவர்கள், ‘ஆரம்பம்’ இடைவேளை ஆர்யா மாதிரி சிக்கென்று சுமார் 4 கிலோ வரை எடை குறைந்திருப்பார்கள்.

*  கார்களில் டயர்கள் மாற்றுவதற்கென்று உள்ள ஓர் இடம் பிட்-ஸ்டாப். கிட்டத்தட்ட 18 பேர் கொண்ட இந்தக் குழுவினர், ரேஸுக்கு இடையில் டயர்களை மின்னல் வேகத்தில் மாற்ற வேண்டும். அப்படி ஒரு காரின் நான்கு டயர்களையும் இவர்கள் மாற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் - ஜஸ்ட் மூன்றே விநாடிகள். குறைந்தபட்சமாக 2.8 விநாடிகளில் டயர்கள் மாற்றி சாதனை புரிந்தது ஃபெராரி டீம். வீடியோவுக்கு: https://www.youtube.com/watch?v=aHSUp7msCIE. இந்த டயர்களின் ஆயுள் - மொத்தமே அதிகபட்சம் 120 கி.மீ வரைதான்!

*  பொதுவாக, ரேஸ் கார்களில் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பது விதி. காற்றைக் கிழித்துக் கொண்டு ஸ்டேபிளாகச் செல்ல, இந்தக் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் உதவும். சீட்டிங் செய்வதைத் தடுக்க, காருக்குக் கீழே மரப்பலகை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பலகை தேய்ந்திருந்தால், ‘சுமாரான சூப்பர் ஸிங்கர்கள்’ மாதிரி ரேஸர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள்.

*  ஒரு ஃபார்முலா-1 காரில் கிட்டத்தட்ட 150 வயர்லெஸ் சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை கராஜில் உள்ள இன்ஜினீயர்களின் கம்ப்யூட்டர்களுக்கு, கார் பற்றிய தகவல்களை ஒரு விநாடிக்கு 1,000-க்கும் மேற்பட்ட தடவை அனுப்பிக்கொண்டே இருக்கும். அதிகபட்சமாக, லோட்டஸ் டீமின் சூப்பர் கம்ப்யூட்டர், 38 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) கால்குலேஷன்களைப் போட்டுக் காட்டி அசத்தியிருக்கிறது.

*  இவற்றில் இரட்டை பெட்ரோல் டேங்க் உண்டு. ஒரு டேங்க் சுமார் 70 லிட்டரில் இருந்து 75 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டது. ரேஸில் கிட்டத்தட்ட 140 லிட்டர் பெட்ரோலைச் சுமந்து பறக்கும் இந்த கார்களின் மைலேஜ், ஒரு லிட்டருக்கு 1.5 கி.மீ.!

*  F1 கார்கள், 0-160 கி.மீ வேகத்தை வெறும் நான்கு விநாடிகளில் கடக்கின்றன. பிரேக் பிடித்த அடுத்த நான்காவது விநாடியில் முழுமையாக நிற்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கி.மீ வேகம். ரேஸ் ட்ராக்கில் கிட்டத்தட்ட 56 முதல் 61 லேப்கள் வரை இருக்கும். (ஒரு லேப் என்பது 5 கி.மீ-யில் இருந்து 6 கி.மீ வரை) ஆஸ்திரியாவில் நடந்த போட்டியில் ஒரு 5.5 கி.மீ கொண்ட ஒரு லேப்பை, 1.08 நிமிடத்தில் ‘வ்வ்ர்ர்ரூம்’ எனக் கடந்து, ‘ஃபாஸ்டஸ்ட் லேப் சாம்பியன்’ அவார்டு பெற்றவர் லூயிஸ் ஹாமில்டன். மணிக்கு 320 கி.மீ வேகம். அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்குப் போவதற்கு ஜஸ்ட் ஒண்ணே கால் மணி நேரம்!