Published:Updated:

யுரேகார் - வீராவின் சூறாவளி!

யுரேகார் - வீராவின் சூறாவளி!

கா.பாலமுருகன்  சொ.பாலசுப்ரமணியன்

 ##~##

ரிபொருள் சிக்கனம் எவ்வளவு அவசியம் என்பதை, அடிக்கடி ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல்/டீசல் விலை நமக்குச் சொல்லாமல் சொல்லும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தக் குறையை ஓரளவு தீர்க்கும் அம்சம்தான் 'வீரா சைக்ளோன்’ எனும் இந்தச் சின்ன கருவி! ஒரு சின்ன பைப்; அதனுள்ளே ஃபேன் போன்ற மூன்று சுழலாத இறக்கைகள் வெல்டிங் செய்து பொருத்தப் பட்டுள்ளன.  

''இதை உங்கள் வாகனத்தில் பொருத்தினால் நல்ல மைலேஜ் கிடைக்கும்; பிக்-அப் சிறப்பாக இருக்கும்'' என்று அசோக் லேலாண்ட் தொழிற்சாலையில், 37 ஆண்டுகளாகப் பணியாற்றும் வீரக்கவுண்டர் கூறினார்.  

யுரேகார் - வீராவின் சூறாவளி!

வீரக்கவுண்டரின் கருவியை தனது டாடா இண்டிகா டிராவல்ஸ் காரில் சோதித்துப் பார்க்க முன் வந்தார் ஓனர் கம் டிரைவரான சென்னையைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்.

காரின் பேனெட்டைத் திறந்து, ஏர் ஃபில்டருக்கும் இன்டேக் மேனிஃபோல்டுக்கும் இடையே இருக்கும்

யுரேகார் - வீராவின் சூறாவளி!

ரப்பர் ஹோஸ் கிளிப்பை அகற்றி, அதனுள் இந்த கருவியைப் பொருத்தியதும் காரைக் கிளப்பினார். எடுத்த எடுப்பிலேயே 'பிக்-அப்’ அதிகரித்து இருப்பதை உணர்வதாகச் சொன்னவரிடம், ஸ்பீடோ மீட்டர் முள் 40 கி.மீ வேகத்தை எட்டியதும், டாப் கியருக்கு மாற்றுமாறு சொன்னார் வீரக்கவுண்டர்.தயக்கத்துடனே டாப் கியருக்குச் செல்ல... இன்ஜின் இடிக்காமல் இயங்கியதைக் கண்டு வியந்தார்.

பின்பு, ஒரு வாரம் கழித்து நம்மிடம் பேசியவர், ''சிட்டிக்குள் 1 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 2 கி.மீ-யும் மைலேஜ் அதிகரித்திருப்பதாகச் சொன்னார். பிக்-அப் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒரு சின்னக் குழாயில் இவ்வளவு விஷயம் நடக்குமா?'' என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.

பொதுவாக, ஏர் ஃபில்டரில் இருந்து இன்ஜினுக்குள் செல்லும் காற்று, இன்ஜினின் 'சக்ஷன்’ திறனுக்கு ஏற்ற அழுத்தத்தில்தான் செல்லும். அப்படிச் செல்லும் காற்றை, சற்று சுழற்றி அனுப்பினால், அழுத்தம் அதிகரித்து முன்பைவிட வேகமாகச் செல்லும். இதனால், இன்ஜின் சிலிண்டருக்குள் செல்லும் காற்றின் அளவு அதிகரிக்க... எரிபொருள் கலவை அதிகமாக எரிகிறது. இதன் மூலம், கூடுதல் திறன் இன்ஜினிலிருந்து கிடைப்பதால் பிக்-அப் கூடுவதும், மைலேஜ் அதிகரிப்பதும் இயல்பாக நடக்கிறது. வீரக்கவுண்டரின் சைக்ளோன் குழாய் செய்யும் வேலையும் இதுதான்.

''சிறு வயது முதலே ஏதாவது இப்படிச் செய்து கொண்டே இருப்பேன். அதன் பலன், என் தொழிற்சாலையிலேயே நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. இந்த சைக்ளோன் கருவியை உருவாக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சமீபத்தில்தான் காப்புரிமை பதிவு செய்தேன். வெறும்

யுரேகார் - வீராவின் சூறாவளி!

500 செலவில் இந்தக் கருவியை கார் முதல் பஸ், ட்ரக் போன்ற பெரிய வாகனங்கள் வரை பயன்படுத்த முடியும்'' என்கிறார் இந்த சூறாவளி விஞ்ஞானி!