Published:Updated:

ACCESSORIES

ACCESSORIES
பிரீமியம் ஸ்டோரி
ACCESSORIES

ஆக்சஸரீஸ் : கார்/பைக் தமிழ்

ACCESSORIES

ஆக்சஸரீஸ் : கார்/பைக் தமிழ்

Published:Updated:
ACCESSORIES
பிரீமியம் ஸ்டோரி
ACCESSORIES

வாஷ் ஸ்ப்ரே கன்

பைக்கோ, காரோ - சர்வீஸ் சென்டரில் ஆயில் சர்வீஸுக்கு விடும்போது, ‘வாட்டர் சர்வீஸ்’ என்று பில்லில் ஒரு தொகை இருக்கும். பைக்குகளுக்கு 100 முதல் 400 ரூபாய் வரைகூடப் போட்டுத் தாளிப்பார்கள். கார் என்றால் சொல்லவே வேண்டாம். 600 ரூபாய் முதல் ஆரம்பிக்கும். சர்வீஸில் இதைத் தவிர்க்க முடியாது. ஆனால், டெலிவரி எடுத்து இரண்டே நாள்களில் மறுபடியும் பழைய கார்போல ஆவதுதான் நடக்கும். திரும்பவும் வாட்டர் சர்வீஸ் விட்டால், ஜிஎஸ்டியோடு பில் கொடுக்க வேண்டும். சிலர் வாளியும் கையுமாக, காரை இரண்டு மணி நேரம் செலவழித்துச் சுத்தம் செய்வார்கள்.

ACCESSORIES
ACCESSORIES

இந்த நேரத்தில் வாட்டர் கன் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். சர்வீஸ் சென்டர் போல வீரியத்தோடு இல்லையென்றாலும், நமது உழைப்பையும் நேரத்தையும் பாதியாக மிச்சப்படுத்துகிறது வாட்டர் ஸ்ப்ரே கன். தோட்டத்தில் பைப் மூலம் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் அதே டெக்னிக்தான். இதில் நீர் கொஞ்சம் அதிக அழுத்தத்துடன் வருவதால், வேலை சுலபமாகிறது. அமேஸானில் கிடைக்கும் இதில், 4 மீட்டரில் ஆரம்பித்து 14 மீட்டர் வரை விரிவடையக் கூடிய ஹோஸ்களும் உண்டு. நீளத்துக்கு ஏற்ப விலையும் மாறும்.

ஏழு வகையான டெக்னிக்குகளில், ஸ்ப்ரே செட்டிங்குகளை இதில் மாற்றிக்கொள்ளலாம். ஃப்ளாட், சென்டர், கோன், ஃபுல், மிஸ்ட், ஜெட் மற்றும் ஷவர் என்று இதில் உள்ள நாஸிலைத் திருகி, வேண்டிய செட்டிங்கில் க்ளீன் செய்யலாம். இதில் ஜெட் மற்றும் ஷவர் போன்றவற்றில் வீரியம் அதிகம். ஹேண்ட் ஷவர் பயன்படுத்துவதுபோல், சும்மா ஸ்ப்ரே கன்னைப் பிடித்துக்கொண்டு நின்றாலே போதுமானது. தண்ணீர் இதில் நிறைய செலவழியும் - அவ்வளவே! மற்றவை, சும்மா சாதாரண க்ளீனிங்குகளுக்கு.

ஒரு முக்கியமான விஷயம் - நீர் வரத்துக்கு உங்கள் பைப்புகளில் இந்த ஹோஸை கனெக்ட் செய்ய வேண்டும். மற்றபடி இது லைட் வெயிட்தான்,  அதனால், டிக்கியில் போட்டுக்கொண்டு போகும் இடங்களில்கூட காரைச் சுத்தம் செய்துகொள்ளலாம். இதைத் தோட்ட வேலைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

ஃப்ளோரசன்ட் ரிம் ஸ்ட்ரிப்

ACCESSORIES

ஃப்ளோரசன்ட் என்றால், இருளில்கூட ஜொலிப்பது என்று பொருள். ஃப்ளோரசன்ட் லைட்டுகள், இருளில் பார்ப்பதற்கு எக்ஸைட்மென்ட்டாக இருக்கும். இதுவே ஆட்டோமொபைல் விஷயத்தில் பாதுகாப்பு அம்சமாகவும் மாறிவிடுகிறது. இருளில் கண்ணைப் பறிக்காத வெளிச்சம் பயணத்துக்கு வரம்தானே! அந்த வகையில் இன்ஜினுக்கு அடியில், வீல் ஆர்ச்சுக்கு மேலே நியான் லைட்டுகள் வந்தன. இப்போது வீல் ரிம்களில் பொருத்தும்படியான ஃப்ளோரசன்ட் ஸ்ட்ரிப்புகள், பைக் மற்றும் கார் வீல்களுக்கு செம ஸ்டைலிஷ். கிளிப்பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஃப்ளோரசன்ட் ஸ்ட்ரிப்புகள்தான் இளசுகளின் ஃபேவரைட். ஸ்டிக்கர் வடிவில் கிடைக்கும் இவற்றை அலாய் வீல்களின் ரிம்களில் ஃபிட் செய்து ஓட்டும்போது அம்சமாக இருக்கும். இதில் வெள்ளை, நீலம், சிவப்பு என்று கலந்துகட்டி ரேஸிங் ஸ்டிக்கர்களும் கிடைக்கின்றன. 350 ரூபாயில் இருந்து விலை ஆரம்பிக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வாகனத்தை எடுத்துச் சென்றால், இரண்டு நிமிடங்களில் பொருத்திவிடலாம்.

ஃப்ரேம் ஸ்லைடர்

ACCESSORIES

ஃபுல் பேரிங் இல்லாத செமி பேரிங் மற்றும் சாதாரண கம்யூட்டர் பைக்குகளில், முன் பக்கம் ஃபோர்க் ஸ்லைடர் இருக்கும். அதாவது, க்ராஷ் கார்டு. பைக் கீழே விழும்போது வாகனத்துக்கும் நம் கால்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இது பாதுகாக்கும். பழைய சுஸூகி, யமஹா பைக்குகளில் இந்த க்ராஷ் கார்டு நீளமாக இருக்கும். இது சில நேரங்களில் ஓட்டுநர்களுக்குத் தொந்தரவு அளிக்கவும் செய்யலாம். இதுவே ஃபுல் பேரிங் கொண்ட சுஸூகி ஜிக்ஸர், யமஹா R15, ஹோண்டா CBR போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இந்த க்ராஷ் கார்டு இருக்காது. இந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்காக வருவதுதான் ஃப்ரேம் ஸ்லைடர். இதை ஃபோர்க்குக்குக் கீழே இரண்டு பக்கங்களிலும் ஃபிக்ஸ் செய்துவிட்டால்... விபத்தின்போது பைக்கின் வேறெந்தப் பாகமும் அடிபடாமல் காக்கும். பைக் கீழே விழும்போது ஏற்படும் சேதத்தைத் தாங்கும் வகையில் சிறந்த உலோகத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.