சொல்றதைத்தான் செய்வேன்; செய்றதைத்தான் சொல்வேன்’ என்பது சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்குக்கு வேண்டுமானால் பொருந்தும். கார் வாங்கும் விஷயத்தில், அதுவும் மைலேஜ் விஷயத்தில் இந்த டயலாக் நிச்சயம் பொருந்தாது. “26 தரும்... ஹைவேஸ்ல 32 கிடைக்கும்’’ என்று சேல்ஸ்மேன்கள் அள்ளிவிடுவது, யாருக்கும் ஒருபோதும் நடக்காது. (மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது என்று நாம் 2016, மே இதழில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்.)

அதையும் தாண்டி, ‘உங்க காருக்கு எவ்வளவு மைலேஜ்?’ என்றால், ‘அதெல்லாம் செக் பண்றதில்லைங்க...’ ‘18 கிடைக்கும்னு நினைக்கிறேன்...’ ‘4,000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா, மதுரைக்குப் போயிட்டு வரலாம்’ என்று வெரைட்டியாக பதில்கள் கிடைக்கும். துல்லியமான மைலேஜைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீன் ரேஞ்ஜுக்கு சிலர் மண்டையைப் பிய்த்துக்கொள்வார்கள். அதாவது, கூட்டிக் கழிச்சுப் பார்த்தா தப்பா வரும் ஒரே விஷயம் - மைலேஜ்தான். சரி, உங்கள் காரின் சரியான மைலேஜைக் கண்டுபிடிக்க என்ன வழி?

பெட்ரோல் நிரப்பும்போது...

எரிபொருளை ஆட்டோ கட் செய்து நிரப்புவதுதான் உங்கள் காரின் மைலேஜைச் சரியாகக் கண்டுபிடிக்க ஒரே வழி. சிலர் ‘ஆட்டோ கட் ஆனதற்குப் பிறகும், மீண்டும் தளும்பத் தளும்ப எரிபொருளை நிரப்பித் தள்ளுவார்கள். இதுவும் மைலேஜ் கண்டுபிடிக்க ஒரு வழிதான். ஆனால், இது சரியான முறை அல்ல... இதில் கொஞ்சம்... இல்லை, ரொம்பவே ரிஸ்க் அதிகம்.

இப்போதுள்ள மாடர்ன் ஃப்யூல் இன்ஜெக்டட் கார்கள், எரிபொருளுக்கான ரிட்டர்ன் லைன்களுடன் வருவதால், ‘ஓவர்ஃப்ளோ ஆகிடுமோ’ என்று கவலை வேண்டாம்.இப்போதுள்ள பெட்ரோல் பங்க்குகளில் பயன்படுத்தப்படும் நாஸில்களில் சென்ஸார் உண்டு. எரிபொருளின் அளவு ஃப்யூல் நாஸிலைத் தொட்டதும், சென்ஸார் மூலம் தானாகவே எரிபொருள் சப்ளை கட் ஆகிவிடும். இதற்குப் பெயர்தான் ‘ஆட்டோ கட்’!

ஒரே பெட்ரோல் பங்க் அவசியம்!

நிரப்புவதில் மட்டுமில்லை; பெட்ரோல் பங்க்கைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. எப்போதும் ஒரே பங்க்கிலேயே எரிபொருள் நிரப்புவதுதான் பெஸ்ட். ஏனென்றால், ஃப்யூல் பம்ப்களில் வித்தியாசம் இருப்பது மட்டுமில்லை; உங்கள் மைலேஜிலும் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பிராண்ட் பெட்ரோலிலும் தரம் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓடோ மற்றும் ட்ரிப் மீட்டர்...

ட்ரிப் மீட்டர்தான் மைலேஜ் செக்கிங்கின் ஆதாரமே! கார் வாங்கியதிலிருந்து இதுவரை எத்தனை கி.மீ உங்கள் கார் ஓடியிருக்கிறது என்பதைக் காட்டுவது ஓடோ மீட்டர். ஒரு குறிப்பிட்ட தூரத்தை அளவிடுவதற்கு உதவுவது ட்ரிப் மீட்டர். ஓர் இடத்திலிருந்து கிளம்பும் முன் ட்ரிப் மீட்டரை ஜீரோவில் செட் செய்துகொண்டு பயணிக்கலாம். எல்லா கார்களிலும் இப்போது A மற்றும் B என இரட்டை ட்ரிப் மீட்டர்கள் உண்டு.

ஒவ்வொரு தடவையும் நீங்கள் பெட்ரோல் நிரப்பும்போது, ட்ரிப் A-வை மட்டும் பயன்படுத்தி, ரீடிங்கை நோட் செய்வது பெஸ்ட். ட்ரிப் B என்பது நீண்ட தூரப் பயண அளவீடுகளுக்கோ அல்லது ஒவ்வொரு சர்வீஸுக்குமானது என்றோ கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

டேங்க்கை நிரப்பிய பிறகு, ட்ரிப் ஏ-வை, ஜீரோவில் செட் செய்து விட்டுப் பயணத்தைத் தொடருங்கள். சுமார் 500 கி.மீ ஓட்டியபிறகு, மறுபடியும் ஒரு பெட்ரோல் பங்க்கில் ஆட்டோ கட் போடுங்கள்.

இப்போது நீங்கள் எரிபொரு ளுக்காகக் கொடுக்கும் தொகையைக்கொண்டோ, அல்லது பெட்ரோலின் அளவைக் கொண்டோ மைலேஜை ஈஸியாகக் கணக்கிடலாம்.

உதாரணத்துக்கு, ஹூண்டாய் எக்ஸென்ட் டீசல் மாடலை எடுத்துக்கொள்ளலாம். இந்த காரின் டேங்க் கொள்ளளவு 43 லிட்டர். 43 லிட்டரையும் நிரப்பிய பிறகு, ட்ரிப் A-வை செட் செய்துவிட்டுப் பயணத்தைத் தொடர்கிறீர்கள். 500 கி.மீ பயணித்த பிறகு, மீண்டும் டேங்க் ஃபில் செய்யுங்கள். இப்போது 21 லிட்டரில் டேங்க் நிரம்புகிறது என்று வைத்துக்கொள்வோம். 21 லிட்டருக்கு 500 கி.மீ. அதாவது, எக்ஸென்ட்டில் லிட்டருக்கு 23.9 கி.மீ மைலேஜ் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். இந்தச் சோதனையை உள்ளூர்ப் பயணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

நல்ல டிரைவிங்! நல்ல மைலேஜ்!

* கியர்களும் கிளட்ச்சும் சும்மா இல்லை; இவைதான் மைலேஜின் மேஜிக் சுவிட்ச்சே! இவற்றைக் கையாள்வதில் தாராளம் கூடாது; கவனம் தேவை.

* உடம்புக்கு செக்-அப் எப்படி அவசியமோ, காருக்கும் அப்படி பாடி செக்-அப் அவசியம். அதனால், குறித்த காலத்தில் காரை சர்வீஸ் விடத் தவறாதீர்கள்.

* நெடுஞ்சாலையில் பறக்கப்போகிறீர்கள் என்றால், ஜன்னலை ஏற்றிவிட்டு, ஏ.சி.யை ஆன் பண்ணிவிட்டு டிரைவிங் போவதுதான் சரி. ஏ.சியால் மைலேஜ் குறையும் என்று நினைத்து, ஜன்னலை இறக்கிவிட்டால், காரின் ஏரோ-டைனமிக்ஸ் காலியாகி, மைலேஜும் அழும்.

* விரட்டி ஓட்டுவது எப்போதும் வாகனங்களுக்கு நல்லதில்லை. சில ஜாலிப் பேர்வழிகள், ‘டப் டப்’ என கிளட்ச் ரிலீஸ் செய்வது; தடால் பிரேக்கிங் செய்வது என்று ஃபன் செய்வார்கள். இந்த டவுன் ஷிஃப்ட் எல்லாமே மைலேஜின் முக்கிய எதிரிகள்.

* டயர்களும் மைலேஜுக்கு ஒரு முக்கிய காரணம். ‘நாளைக்குக் காத்தடிச்சுக்கலாம்’ என்று டயர்களில் குறைவான காற்றழுத்தத்தில் பயணிக்கக் கூடாது. குறைவான பிரஷர் கொண்ட டயர்களில், சுழலும் தன்மை மாறிவிடும். இது மைலேஜுக்கும் பெப்பே காட்டிவிடும். டயர் பிரஷர் - மிகவும் முக்கியம் நண்பர்களே!

* சிக்னலில் நிற்கும்போது, நிறைய பேரைக் கவனித்திருக்கலாம். சிக்னல் போடுவதற்கு இன்னும் 100 விநாடிகள் இருந்தாலும், அதுவரை கிளட்ச்சை மிதித்துக்கொண்டே நிற்பார்கள். இது ரொம்பத் தப்பு பாஸ். உடனே நியூட்ரலுக்குக் கொண்டு வந்துவிடுவதுதான் நல்லது. ஒரு விநாடி நீங்கள் கிளட்ச்சைப் பிடித்துக்கொண்டு நின்றால், ஒரு சொட்டு பெட்ரோல் காலியாகலாம்.

* குறைந்த கியரில் அதிக வேகத்தில் செல்வது; அதிக கியரில் குறைந்த வேகத்தில் செல்வது - இரண்டுமே கூடாது.

* சிலர் கடைசித் துளி காலியாகும் வரை, காரை ஓட்டுவார்கள். ‘இன்னும் 10 கி.மீ போலாம்னு நினைக்கிறேன்’ என்று எரிபொருள் காலியாகி, வழியிலேயே நின்ற காரோட்டிகளும் உண்டு. இது இன்ஜினுக்கு நல்லது அல்ல... ஆமா!

* வாகனங்களுக்கு லேடன் வெயிட் என்றொரு விதிமுறை உண்டு. இத்தனை கிலோ காரில் இத்தனை கிலோ எடையை மட்டும்தான் ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதுதான் விதி. கன்னாபின்னா என லக்கேஜ் ஏற்றிவிட்டு, ‘மைலேஜே வரமாட்டேங்குது’ என்று சொன்னால் கம்பெனி எப்படி பாஸ் பொறுப்பாக முடியும்?

* சரிவான சாலையிலோ, காலியான ரோட்டிலோ சிலர் நியூட்ரலிலேயே போவார்கள். ‘கியர் போட்டா பெட்ரோல் காலியாகுமே’ என்பது இவர்களது எண்ணம். மைலேஜ் ஓகே; அதைவிட உயிர் முக்கியம். நியூட்ரலில் பிரேக்கிங் 60%தான் வேலை செய்யும்.

* சிக்னல் விழப்போகிறது; ஸ்பீடு பிரேக்கர் தெரிகிறது. உடனே ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுங்கள்; ‘பக்கத்துல போய் பிரேக் அடிச்சுக்கலாம்’ என்று காரைப் படுத்தி எடுக்காதீர்கள். இதனால் இரண்டு மடங்கு கூடுதல் எரிபொருள் செலவாகும்.

* முக்கியமாக, நம் ஊர் பெட்ரோல் பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்று உங்களுக்கே தெரியும். முடிந்தவரை நல்ல பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புங்கள்.