இதை HUD என்றும் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால், தலைக்கு மேல் உள்ள டிஸ்ப்ளே என்று அர்த்தம். இது ஒரு டிரான்ஸ்பரன்ட் டிஸ்ப்ளே. அதாவது, நீங்கள் கார் ஓட்டிக்கொண்டே, உங்கள் பார்வையை சாலையிலிருந்து விலக்காமல், படித்துக்கொள்ளக்கூடிய ரீடிங்குகளுக்குப் பெயர் ஹெட்-அப் டிஸ்ப்ளே. விமான ஓட்டிகளுக்கான வசதி இது. இப்போது காரோட்டிகளுக்கும் வந்துவிட்டது.

கார் ஓட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்... கார் எவ்வளவு வேகத்தில் போகிறது... எரிபொருள் எவ்வளவு உள்ளது போன்ற விஷயங்களை உங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் கவனிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு விநாடியாவது சாலையில் இருந்து கண் பார்வையை எடுத்துத்தான் ஆக வேண்டும். ஹெட்-அப் டிஸ்ப்ளேவில் இந்தப் பிரச்னை இருக்காது.

உங்கள் கண் பார்வையின் வசதிக்கேற்ப காரின் விண்ட் ஷீல்டிலோ, ஸ்டீயரிங் பக்கத்திலோ இந்த ஹெட்-அப் டிஸ்ப்ளேவைப் பொருத்திக்கொள்ளலாம். டிரான்ஸ்பரன்ட் என்பதால், வெளிச்சாலை தெரிவதில் எந்த சிக்கலும் இருக்காது.

காரின் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் தெரியும் அத்தனை விஷயங்களையும் இதில் பார்த்துக்கொள்ளலாம். நேவிகேஷன் சிஸ்டத்தையும், ஸ்டீரியோ போன்ற ஆப்ஷன்களையும் இதிலேயே உபயோகிக்கவும் முடியும்.

ராணுவ வாகனங்களில் நேவிகேஷன் மற்றும் டார்கெட்டிங் போன்ற விஷயங்களுக்குப் பெரிதும் பயன்படுவது இந்த ஹெட்-அப் டிஸ்ப்ளேதான்.

காரோ, பைக்கோ - சர்வீஸ் விடும்போது, ‘டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா’ என்று கேட்டு நச்சரிப்பார்கள். வாகனங்கள் பழசாக ஆக, அதன் பொலிவு குறைந்துகொண்டே வரும். அதற்காகத்தான் டெஃப்லான் கோட்டிங். இந்த கோட்டிங் போட்டுக்கொள்வது நல்லதுதான் எனறாலும், சில ஸ்க்ராட்ச்களை இதில் சரிசெய்ய முடியாது. ஜொலி ஜொலிக்கும் வாகனத்தில், திருஷ்டி விழுந்ததுபோல் சில கீறல்கள் கண்ணை உறுத்தும். சர்வீஸில் விட்டால், ‘மொத்தமாகத்தான் மாத்தணும்’ என்பார்கள். அந்த நேரத்தில், இந்த ஸ்க்ராட்ச் பேனா ரொம்பவும் பயன்படும்.

சின்னச் சின்னதாக ஸ்க்ராட்ச்கள் விழுந்த இடத்தில் இந்தப் பேனாவை அழுத்திப் பிடித்து லேசாக டச்-அப் செய்தால் போதும். இதிலுள்ள பெயின்ட் அப்ளை ஆகி, கீறல்கள் மறைந்துவிடும்!

இதை டச்-அப் செய்வதற்கு முன்பு, காரை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டுப் பயன்படுத்தினால்தான், பலன் தெரியும். மார்க்கர் பேனா போன்று இருக்கும் இதை, பாக்கெட்டுக்குள் போட்டு எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இந்த ஸ்க்ராட்ச் பேனாவை உங்கள் வாகனத்தின் கலருக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு முக்கியமான விஷயம் - இதை வைத்து பெரிய ரிப்பேர்களை எல்லாம் சரி பண்ணிவிட முடியாது. இது ஒரு டச்-அப் பேனாதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கார் ஓட்டும்போது, அடிக்கடி நம் ஸ்பரிசத்தில் சிக்கித் தவிப்பது கியர்ஷிஃப்ட் நாப்கள் என்பது மட்டுமில்லை. காரின் இன்டீரியர் தரத்தை உயர்த்துவதில் டேஷ்போர்டுக்கு அடுத்தபடியாக இருப்பதும் இவைதான். கியர் நாப், நாம் பிடித்துப் பிடித்துத் தேய்ந்து பழசாகி இருக்கும். சிலவற்றில் வியர்வை வாடைகூட வரலாம். கார் சீட் கவர்களை மாற்றிக்கொள்வதுபோல், இந்த கியர் நாப்-ஐயும் மாற்றிக்கொள்ளலாம். பென்ஸ், ஜாகுவார் போன்ற பிரீமியம் டைப்பில் ஈரத்தன்மை ஒட்டாத, பிசுபிசுப்பில்லாத ‘வுட் கிளாடிங்குகள்’ கொண்ட கியர் நாப்கள் இதில் கவனிக்கத்தக்கவை. லெதர், நைலான், வுட், LED டைப் என்று ஸ்டைலாக, பல வகைகளில் கியர் நாப்கள் மார்க்கெட்டில் உண்டு. கியர் நாப் உங்கள் சாய்ஸ்!