இளையராஜாவின் பாட்டு கேட்கும்போது தானாக உதடசைவதுபோல் மாருதியின் டிசையரைப் பார்த்ததும் தானாக ஒரு மயக்கம் வந்துவிடும். ஜாகுவார் ‘F’ டைப் ஸ்டைலில் கிரில், டைமண்ட் கட் அலாய் வீல், புரொஜெக்டர் DRL, ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், அதிகப்படுத்தப்பட்ட பூட்/சீட் இடவசதி என்று முன்பைவிட, அந்த மயக்கம் கூடுதலாகிவிட்டது. புதிய டிசையர் பிறந்து மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை; ஓடோமீட்டர் 1,800 கூடத் தாண்டியிருக்கவில்லை; ‘அண்ணா, கிரேட் எஸ்கேப்புக்காகத்தான் டிசையரே வாங்கினேன்’ என்று புதிய டிசையர் படத்துடன் பத்துத் தடவைக்குமேல் வாட்ஸ்-அப் செய்தார் நவீன்.

எஸ்ஆர்எம்-மில் இன்ஜினீயரிங் படிக்கும் நவீனுக்கு, பல்ஸருக்குப் பிறகு ஜாக்பாட்டாகக் கிடைத்தது ஸ்விஃப்ட் டிசையர். முதல் சர்வீஸ்தான் முடிந்திருக்கிறது. ‘‘காலேஜுக்கு அடிக்கடி லீவு எடுக்கிறது(!) எனக்குப் பிடிக்காது. சட்டுனு முடியிற மாதிரி கிரேட் எஸ்கேப் போயிட்டு வந்துடலாம்’’ என்றவர், தன் பெரியப்பா மகனான இன்னொரு நவீனுடன் மடிப்பாக்கத்திலிருந்து கிளம்பத் திட்டம் போட்டே விட்டார் நவீன்.

புதுச்சேரி தாண்டி இருக்கிற சுண்ணாம்பாறு என்று சொன்னால் வெளியூர்க்காரர்கள் பலரும், ‘அது எங்க இருக்கு?’ என்றுதான் கேட்பார்கள். ஆனால், புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் முக்கியமானது சுண்ணாம்பாறுதான். ‘சுண்ணாம்பாறு போட்டிங் போயிட்டு வரலாமே’ என்று முடிவு செய்து டிசையரைக் கிளப்பினோம். தன் பெரியப்பா மகன் நவீனுடன் செல்ஃபி எடுத்துவிட்டு, “Going to Chunnambar... Bye Bye Chennai” என்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, ரெடியாக இருந்தார் நவீன். ‘‘இவனும் நவீன்தான். நான் இவனுக்கு அண்ணன்’’ என்றார் பெரிய நவீன். மொபைலில் சுண்ணாம்பாற்றுக்கு GPS செட் செய்தார்கள். டிசையரில் டச் ஸ்கிரீன் கொண்ட நேவிகேஷன் ஆப்ஷன் இருக்கிறது. அது ZDI+. ஆனால், இதற்கு எக்ஸ்ட்ராவாக ஒரு லட்சம் செலவழிக்க வேண்டும். அதற்கு ZDI வாங்குவதுதான் புத்திசாலித்தனம். அதைச் சரியாகச் செய்திருந்தார் நவீன். ‘‘மொபைல்லயே GPS போட்டா போச்சு! சரிதானே?’’ என்றார்.

டிசையரின் இன்டீரியரில் எவ்வளவு மாற்றங்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று, உள்ளே வருபவர்களிடம் கெத்து காட்டுகிறது இன்டீரியர். லெதர் சீட்டுகள், ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங், இரண்டு காற்றுப் பைகள்... அதைவிட, சீட் வசதி. வீல்பேஸும் பூட் ஸ்பேஸும், பழைய காரைவிட 20 மிமீ-ரும் 62 லிட்டரும் அதிகம். கும்பகோணம் டிகிரி காபி குடிக்கும்போது, சிக்னலில் பறக்கும்போது... ‘‘டிசையரா இது’’ என்று பார்ப்பவர்கள் அனைவரும் கேள்வி கேட்கத் தவறவில்லை. ஹைஸ்பீடில் போய்க்கொண்டிருந்தபோதுகூட விண்டோவை இறக்கி, ‘‘டிசையர் எப்படி இருக்கு’’ என்றும் கேள்வி கேட்டார்கள் சிலர்.

இன்ஜின் விஷயத்தில் ‘மாற்றம்’ எதுவுமில்லை; அதனால் பெரிதாக முன்னேற்றமும் இல்லை. ‘ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ படத்தில் வருவதுபோல், திடீரென 5,000 ஆர்பிஎம்-முக்கு மேல் ‘வ்வ்வர்ர்ரூம்’ எனப் பறந்தது டிசையர். ‘200-ஐத் தொட்டிருக்குமோ’ என்று ஸ்பீடோ முள்ளைப் பார்த்தால்... 100-ஐத் தாண்டத்தான் திணறிக்கொண்டிருந்தது. ‘‘ஆமாண்ணா... 120-ல் போனா, வெளிச்சத்தம் காதைக் கிழிக்குது’’ என்றார் நவீன். இன்ஜின் நாய்ஸ் இன்சுலேஷன் சரியில்லாததுதான் இதற்குக் காரணமாக இருக்கும். இதை Sound Deadening Checking என்றும் சொல்வார்கள். ஆஃப்டர் மார்க்கெட்டில் சவுண்ட் டெட்டனிங் மெட்டீரியலைக்கூட வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இந்த அதிர்ச்சியிலும் ஒரு சந்தோஷ அதிர்ச்சி... ஸ்டீயரிங்கிலோ, பெடலிலோ அதிர்வுகள் இல்லாதது. அதாவது, NVH என்னும் நாய்ஸ் வைப்ரேஷன் ஹார்ஷனிங் சரியாக இருக்கிறது என்று அர்த்தம். ‘‘நான் ஸ்விஃப்ட் வெச்சிருக்கேன். இந்த அளவு சத்தம் இருக்காதே’’ என்றார் சின்ன நவீன்.

புதுச்சேரிக்கு இரண்டு வழியாகப் பறக்கலாம். ஈசிஆர் வழி; திண்டிவனம் வழி. ஈசிஆர் இப்போது பறப்பதற்குச் சரியான தேர்வு இல்லை. ‘‘திண்டிவனம் தாண்டி இடதுபுறம் திரும்பிடலாம்ணே’’ என்றார் பெரிய நவீன். டோல்கேட்டுகளில் வழக்கம்போல் 3 நிமிடத்துக்கு மேல் காத்திருந்து பணம் செலுத்தினோம். ‘‘3 நிமிஷத்துக்கு மேல நின்னா, பணம் கட்ட வேண்டியதில்லையே’’ என்றதற்கு, ‘‘அது பஞ்சாப்ல மட்டும்தான் சார்’’ என்று கல்லாவை நிரப்புவதில் கவனமாக இருந்தார்கள் டோல் ஊழியர்கள். டோல் பணம் கட்டும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள். பில்லில் தங்கள் கார் நம்பர் இருக்கிறதா என்பதைப் பலரும் சரிபார்ப்பதில்லை. டெம்ப்ளேட் பில்லைக் கொடுத்து காசு வாங்கும் சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன சில டோல்கேட்களில். வெளிமாநில நம்பர் பிளேட் கொண்ட கார்கள் நெடுஞ்சாலை ஆர்டிஓ-க்களில் சோதனைக்குச் சிக்கும்போது, இந்த டோல் பில் ரொம்பவும் அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

புதுச்சேரி வந்திருந்தது. புதுச்சேரியில் ‘காமாட்சி உணவகத்தில்’ மதிய உணவைப் பிடித்துவிட்டு, சுண்ணாம்பார் கிளம்பினோம். ஆரோவில், ஆயி மண்டபம், காந்தி சிலை பீச், அரவிந்தர் ஆசிரமம், பாரதி பார்க், ரோமல் ரோலண்ட் நூலகம், அருங் காட்சியகம் என்று எக்கச்சக்க விஷயங்கள் குடும்பத்துடன் என்ஜாய் பண்ண புதுச்சேரியில் இருக்கின்றன. அதையும் தாண்டி பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்ற பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனால், ‘தண்ணீர்/இளநீர் என்றால் உதடுகள் ஒட்டாது; பீர்/பிராந்தி என்றால்தான் உதடுகள் ஒட்டும்’ என்று இளைஞர்கள் கவிதை வாசிக்கும் போதை ஸ்பாட்டாகப் புதுச்சேரி ஆகிவிட்டது துரதிர்ஷ்டம். ‘‘நாங்க நல்ல பசங்கண்ணா’’ என்று கோரஸாகச் சொன்னார்கள் நவீன்கள்.

மது விலை மட்டும்தான் குறைவு; மற்றபடி புதுச்சேரி ஒரு காஸ்ட்லி டூரிஸ்ட் ஸ்பாட் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும் ஜிஎஸ்டி வந்ததிலிருந்து, ஹோட்டல்களில் பில் தாளித்து எடுத்தார்கள். சாலையோர கலைப்பொருள்கள் கடைகளில்கூட, ‘‘ஜிஎஸ்டியெலாம் வந்துடுச்சு சார்... பார்த்துப் பண்ணுங்க சார்..’’ என்று பேரம் பேசினார்கள். தங்கும் இடங்களும் இப்போது விலையேற்றம் கண்டிருந்தது. 1,500-ல் இருந்து 8,500 வரை ரூம்கள் புதுச்சேரியில் கிடைக்கின்றன. புதுச்சேரியில் ஸ்டே பண்ணிவிட்டு, அதிகாலை காந்தி பீச்சில் ஒரு போட்டோ ஷூட். ‘இந்தியாவின் இரண்டாவது பெரிய பீச், மெரீனா என்றால்... இந்தியாவின் சுத்தமான பீச்களில் ஒன்று என்று புதுச்சேரிக் கடற்கரையைச் சொல்லலாம். பழைய பிரெஞ்சு தேசம் என்பதால், வெளிநாட்டுக்காரர்கள் அதிகமாகத் தெரிந்தார்கள்.

அடுத்து சுண்ணாம்பாறுதான். சென்னையிலிருந்து ஒரு நாள் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்குச் சரியான சாய்ஸ் சுண்ணாம்பாறு. காலையில் சென்னையிலிருந்து கிளம்பினால், மதியம் புதுச்சேரியில் உணவு; அப்புறம் அங்கிருந்து சுண்ணாம்பாறு 9 கி.மீ. அவசர கதியில் டூர் அடிக்க விரும்பாதவர்கள், புதுச்சேரியில் தங்கிவிட்டும் செல்லலாம். இருந்தாலும், போட்டிங் செல்வதற்குச் சரியான நேரம் - மாலை நேரம்தான். வெயிலும் குறைவு; அடித்துப் பிடித்தும் போட்டிங் போக வேண்டியதில்லை. ‘சுண்ணாம்பாறு படகுக் குழாம்’ என்கிற போர்டு நம்மை வரவேற்றது.

நாம் ஏற்கெனவே சொன்னதுபோல், காஸ்ட்லி டூரிஸ்ட் ஸ்பாட் என்பது மிகச் சரியாகவே இருந்தது. படகுச் சவாரிக்கு, தலைக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள். இதுவே ஸ்பீடு போட் என்றால் அப்படியே டபுள். ஆனால், படகில் ஏறி உட்கார்ந்து சுற்றிலும் உள்ள காயலைப் பார்த்தால், ‘காசாவது பணமாவது’ என்று நினைக்கத் தோன்றுகிறது. வங்காள விரிகுடாவின் எச்ச சொச்சம்; சங்கராபரணி ஆற்றுத் தண்ணீரின் மிச்சம் - இதுதான் சுண்ணாம்பாறு. பம்பையாறு எனும் துணை நதியைத் தன்னோடு இணைத்துக்கொண்டு, அங்கிருந்து புதுச் சேரியில் குடுவையாற்றோடு சேர்ந்து, சுண்ணாம்பாறு வழியாகத்தான் வங்காள விரிகுடாவில் கலக்கிறது சங்கராபரணி.

இது சேரும் இடம்தான் ‘பேரடைஸ் பீச்’. ஈசிஆரில் பைக்கில் செல்வதுபோல், காயல் நீரில் ‘வ்வ்ர்ர்ரூம்’ என ஒரு படகுப் பயணம். லைஃப் ஜாக்கெட் போட்டால்தான் படகை எடுக்கிறார்கள். ‘‘10 அடி ஆழம்தான். ஆனா சிப்பிங்க காலைக் கிழிக்கலாம்’’ என்றார் படகோட்டி.

3 கி.மீ தாண்டி ஓர் இடத்தில் இறக்கினார்கள். அதுதான் பேரடைஸ் பீச். பெயருக்கு ஏற்றபடி ஏதோ சொர்க்கத்துக்கு வந்தது போல்தான் இருக்கிறது. ‘ஆஸ்திரேலியா பீச் மாதிரியே இருக்குல்ல’ என்று படகிலிருந்து இறங்கியதும் சொன்னார் நவீன். ‘யாரடி நீ மோகினி’ எனும் படத்தில் தனுஷ், நயன்தாரா ஆஸ்திரேலியக் கடற்கரையில் ஆடுவதுபோன்ற பாடல் இங்குதான் படமாக்கப் பட்டதாம். ‘அடப்பாவிகளா’ என்றார் நவீன்.

இது ஒரு தனி உலகமாக இருந்தது. சாதாரண பீச்தான். ஆனால், பண பீச். ஆண்ட்ராய்டு போனிலிருந்து சார்ஜ் ‘சர்’ரென இறங்குவதுபோல், பர்ஸிலிருந்து பணம் ‘சர்’ எனக் காலியாகலாம். அதற்கு ஏற்றாற்போல், மிடில் கிளாஸ்காரர்களைப் பார்க்கவே முடியவில்லை. ‘‘இங்க பெங்களூரு டூரிஸ்ட்டுங்கதான் அதிகம்’’ என்றார்கள். ரெஸ்டாரன்ட், கடல் உணவுகள், தீம் பார்க் மாதிரி எக்கச்சக்க விளையாட்டுகள் என்று பொருட்காட்சி போலவே இருந்தது பேரடைஸ் பீச். தேக்கடி ஸ்டைலில், ‘ஃபிஷ் ஸ்பா’வெல்லாம் வைத்திருந்தார்கள். அதாவது, மீன் மருத்துவம். மீன் தொட்டியில் கால்கள் வைத்துச் சுத்தப்படுத்தும் ஸ்பா. இதற்கும் 200 ரூபாய்.

நம்மை இறக்கிவிட்ட படகு, அடுத்த ரவுண்ட் போய்வந்து, வேறு ஆட்களை இறக்கிவிட்டு... என்று ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஆறேழு ட்ரிப் அடிக்குமாம். அதுவரை, நாம் விரும்பிய நேரம் வரை பேரடைஸ் பீச்சில் என்ஜாய் பண்ணலாம். சனி, ஞாயிறு என்றால், பீச்சே நிரம்பி வழியுமாம்.

பேரடைஸ் பீச்சில் தங்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. ஆலப்புழா ஸ்டைலில், ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று பெரிய படகு வீடு வைத்திருக்கிறார்கள். ஸ்டார் ஹோட்டலுக்கு இணையாக மூன்று ரூம்கள் இருக்கின்றன. ஒரு ரூமுக்கு, 7,500 ரூபாய் வாடகை. 12 மணி முதல் மறுநாள் 10 மணி வரைதான் செக்-இன், செக்-அவுட் நேரம். ரொம்ப தூரம் சென்று, நங்கூரம் போட்டு நிறுத்திவிடுவார்கள். சுற்றிலும் தண்ணீர். ‘பிக் பாஸ்’ வீடு மாதிரி இந்தப் படகு வீட்டைத் தாண்டி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

நவீன்களை வைத்து ஜாலியான போட்டோ ஷூட் முடிந்து, மறுபடியும் படகில் ஏறி, சுண்ணாம்பாறு வந்தோம். 90-களில் ஒரு நாளைக்கு 8,000 ரூபாய் மட்டும்தான் வருமானம் வந்ததாம் இங்கு. ஆனால், சனி ஞாயிறுகளில் மட்டும் ஒரு நாளைக்கு 8 லட்சம் வருமானம் பார்க்கிறது சுண்ணாம்பாறு. அதாவது, மாதம் கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய், புதுச்சேரி அரசாங்கத்திடம் கொடுக்கப்படுகிறதாம். இதற்குப் பின்னால் ஒன்-மேன் ஆர்மியாக இருப்பவர், ஷாஜி. சுண்ணாம்பாறு படகுக் குழாமுக்கு இன்சார்ஜ்.

‘‘படகுக் குழாமுக்கு மட்டுமில்லை; ஒவ்வொரு படகுக்கும் நான்தான் இன்சார்ஜ்’’ எனும் ஷாஜிதான், படகை அசெம்பிள் பண்ணுவதிலிருந்து பேரடைஸ் பீச் பராமரிப்பு வரை எல்லாமே கவனிக்கிறார். ‘‘பிச்சாவரம் மாதிரி புன்னைமரக் காடுகள் வைக்கலாம்னு பிளான். சுனாமிக்குக் கவலைப்பட வேண்டியதில்லை பாருங்க!’’ என்றார் ஷாஜி.

படகுப் பயணம் முடிந்து, மறுபடியும் டிசையர் பயணம். மீண்டும் ஜிஎஸ்டி ஹோட்டல் சாப்பாடு. திரும்பவும் டோல்கேட் காத்திருப்புகள். ‘பை பை சுண்ணாம்பாறு... ஆன் தி வே டு சென்னை’ என்று ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டிருந்தார்கள் நவீன்கள்.