Published:Updated:

வாவ்! டாடா காரா இது? - அசத்தும் ஹேரியர் #VikatanExclusive

வாவ்! டாடா காரா இது? - அசத்தும் ஹேரியர் #VikatanExclusive
வாவ்! டாடா காரா இது? - அசத்தும் ஹேரியர் #VikatanExclusive

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் வெளிப்புற டிசைனைப் போலவே உட்புற டிசைனும் கான்செப்ட் காரை நினைவுபடுத்தும்படி அமைந்திருப்பது தெரிகிறது. ஆனால் உற்றுநோக்கும்போது, சின்னச்சின்ன வித்தியாசங்கள் தென்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'A Dominant Beast imbued With Endless Stamina and Strength. Gifted with Unwavering Instinct. Effortlessly Conquers Every Challenge Thrown its Way'.... 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய H5X பிரிமியம் எஸ்யூவி கான்செப்ட்டின் அதிகாரபூர்வ பெயர் அறிவிப்பின்போது, ஹேரியர் என்பதற்கான விளக்கமாக டாடா சொன்னது இது!

ஆம், இதுவரை வந்த எந்த டாடா கார் போலவும் இல்லாமல், அந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட்டான Impact Design 2.0 எப்படி இருக்கும் என்பதைக் காட்டியது ஹேரியர். நெக்ஸான் போல, அதாவது கான்செப்ட் காரில் இருந்த பெரும்பான்மையான டிசைன் அம்சங்கள் புரொடக்‌ஷன் மாடலில் இருக்கும் என டாடா தெரிவித்துள்ளது. இணைய உலகில் தற்போது வைரலாகப் பகிரப்படும் இதன் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, இது உண்மை என்றே தோன்றுகிறது.  

ஹேரியரின் கேபினில் என்ன ஸ்பெஷல்?

இந்நிலையில், இந்த எஸ்யூவி-யின் பிரத்தியேக கேபின் ஸ்பை படங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சென்னையில் உள்ள தில்லை கங்கா நகர் சப்வே அருகே ஹேரியர் டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகியான சி.வினிதா. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் வெளிப்புற டிசைனைப்போலவே உட்புற டிசைனும் கான்செப்ட் காரை நினைவுபடுத்தும்படி அமைந்திருப்பது தெரிகிறது. ஆம், பக்கவாட்டு ஏசி வென்ட், ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல், லெதர் சீட்கள், க்ரோம் கதவுக் கைப்பிடி ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், உற்றுநோக்கும்போது, சின்னச்சின்ன வித்தியாசங்கள் தென்படுகின்றன.

கான்செப்ட் காரின் சென்டர் கன்சோலில் ஏசி வென்ட்கள் இல்லாத நிலையில், இங்கே அது இருக்கிறது. மேலும் கான்செப்ட் காரில் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டருடன் இணைந்திருந்தது. ஆனால், அவை இங்கே தனித்தனியாக உள்ளன. கான்செப்ட் காரில் ஜாகுவார் கார்களைப் போல Rotary கியர் லீவர் இருந்த நிலையில், இங்கே வழக்கமான கியர் லீவரைக் காணமுடிகிறது. கான்செப்ட் கார் டேஷ்போர்டின் மேற்புறத்தில், தையல் வேலைப்பாடுகளுடன்கூடிய கறுப்பு லெதர் மற்றும் நடுப்புறத்தில் மர வேலைப்பாடுகள் இருந்தால், இங்கே ஒரே கறுப்பு மயமாகத்தான் இருக்கிறது! கீழ்ப்பகுதி சில்வர் கலரில் இருப்பது செம Contrast. அதேபோல இங்கே எந்த வகையான ஸ்பீடோமீட்டர் இருக்கும் என்பதும் தெரியவில்லை. கியர் லீவரைச் சுற்றியுள்ள பகுதி, நெக்ஸானைப் போல இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்!

இன்ஜின்-கியர்பாக்ஸ், பிளாட்ஃபார்ம், மற்ற விவரங்கள்

* 5 சீட்டர் மாடலின் பெயர்தான் ஹேரியர்; 7 சீட்டர் மாடல் (H7X) வேறு பெயரில் வெளிவரும். இதில், 5 சீட்டர் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ரெனோ கேப்ச்சர், ஹோண்டா BR-V ஆகிய கார்களுடன் போட்டியிடும். இதுவே, 7 சீட்டர் மாடல் என்றால் ஜீப் காம்பஸ், மஹிந்திரா XUV 5OO, நிஸான் கிக்ஸ் ஆகிய கார்களுடன் போட்டிபோடும். அதற்கேற்ப இரண்டு மாடல்களிலும் டிசைன், இன்ஜின், வசதிகள் ஆகியவற்றில் வித்தியாசங்கள் இருக்கும்.

* தனது குழும நிறுவனங்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவரின் டிஸ்கவரி ஸ்போர்ட் தயாரிக்கப்படும் L550 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்டு, டாடா செய்திருப்பதுதான் OMEGA (Optimal Modular Efficient Global Advanced) ப்ளாட்ஃபார்ம். ஹேரியர் மற்றும் H7X ஆகிய இரண்டு மாடல்களும் இந்த ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட உள்ளன. எனவே ஃப்ளோர் பேன், ஸ்டீயரிங் அமைப்பு, இண்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் செட்-அப், 2741 மி.மீ வீல்பேஸ் ஆகியவை டிஸ்கவரிக்கும் - H7X /ஹேரியருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், காரின் விலையைக் கட்டுக்குள்வைக்க, கட்டுமானத்தில் அலுமினியத்துக்குப் பதிலாக ஸ்டீல் இடம்பெற்றுள்ளது. ஹேரியரின் எடை 1,650 கிலோதான் என்பது ஆச்சர்யம்தான்! 

* ஜீப் காம்பஸ் எஸ்யூவி-யில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் ஹேரியர் எஸ்யூவியிலும்! ஹேரியரில் இது 140bhp பவரை வெளிப்படுத்தினால், H7X மாடலில் இது 175bhp பவரை வெளிப்படுத்தும். மாடர்ன் டாடா கார்களைப் போலவே, இங்கும் டிரைவ் மோடுகள் இருக்கும் என்பது ப்ளஸ். இரண்டு மாடல்களிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக இருக்கும். காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் மாடலில் அறிமுகமாக உள்ள ZF நிறுவனத்தின் 9HP (9ஸ்பீடு AT)-ன் விலை அதிகமாக இருப்பதால், ஹூண்டாய் டூஸானில் இருக்கும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது, டாடா. ஹூண்டாயின் சில சர்வதேச மாடல்களில் இது இருக்கிறது.

* மெலிதான LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், உப்பலான வீல் ஆர்ச், பெரிய 19 இன்ச் அலாய் வீல்கள், ஷார்ப்பான பாடி லைன்கள், ஃப்ளோட்டிங் ரூஃப், ரியர் வைப்பர் என H5X... சாரி, ஹேரியர் பார்க்க செம செக்ஸியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேபினில்  அனைத்து வரிசை இருக்கைகளுக்கும் சென்டர் ஆர்ம் ரெஸ்ட், ஆரியா போல தலைக்கு மேலே ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பின்பக்க ஏசி வென்ட், சன்ரூஃப், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய புதிய ஸ்டீயரிங் வீல், லெதர் சீட்ஸ், சில்வர் மற்றும் க்ரோம் வேலைப்பாடுகள், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், முன்பக்க இருக்கைகளுக்கு சீட் மெமரி மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் என சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. மற்ற டாடா கார்களைப் போலவே, இங்கும் இடவசதிக்குப் பஞ்சமிருக்காது என நம்பலாம்.

* ஜனவரி 2019-ல் முதற்கட்டமாக ஹேரியர் அறிமுகமாகும்; H7X மாடல் பின்னர் வெளிவரும். தனது புதிய பிரிமியம் கார்களுக்கு ஏற்ப, டீலர்ஷிப்கள் பிரிமியமாக இருக்க வேண்டும் என டாடா விரும்புகிறது. எனவே, தற்போதைய டீலர்களில் இந்த கார்களுக்கு எனப் பிரத்யேகமான இடம் ஒதுக்கப்படலாம். மேலும், டீலர்ஷிப்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம். புனேவில் இருக்கும் டாடா தொழிற்சாலையில்தான், ஹேரியர் & H7X மாடலின் உற்பத்தி நடைபெறும். 

* Corporate Average Fuel Economy (CAFE) விதிகளுக்கு ஏற்ப, பின்னாளில் ஹைபிரிட் அல்லது எலெக்ட்ரிக் மாடல்களையும் எதிர்பார்க்கலாம். மேலும், தற்போது பெட்ரோல் & டீசல் எரிபொருள்களுக்கு இடையேயான விலை வித்தியாசமும் கணிசமாகக் குறைந்துவிட்டதால், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் எதிர்பார்க்கலாம். OMEGA ப்ளாட்ஃபார்ம் இது எல்லாவற்றுக்குமே ஈடுகொடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு