உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் கார் - டொயோட்டா கரோலா ஆல்டிஸ். அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல், மெல்லிய எக்ஸாஸ்ட் சத்தத்தோடு செல்லமாக உறுமியபடி, ஒரு விடுமுறை நாள் காலையில் நமது அலுவலகத்துக்கு வந்திருந்தது கரோலா ஆல்டிஸ். ‘‘எத்தனை தடவைதான் நீங்க ரெவ்யூ பண்ணுவீங்க; இது எங்களோட மோ.வி டாஸ்க்கா இருக்கட்டும்’’ என்று சாவியைப் பிடுங்கினார்கள் பிரதீப் - தீபா தம்பதி. ‘‘நாங்க ஜாஸ் வெச்சிருக்கோம். அடுத்து பெட்ரோல் செடான் வாங்கலாம்னு பார்க்கிறோம். வெர்னா - சிட்டி... இப்போ இது இரண்டும்தானே ரஜினி - கமல் மாதிரி! நல்ல நேரத்துல கரோலா ஆல்டிஸ் வந்துடுச்சு. இதையும் டெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்’’ என்று டிரைவர் சீட்டில் அமர்ந்து, தனது மனைவி தீபாவையும் ஏற்றிக்கொண்டு ஒரு லாங் டிரைவ் போய் வந்தார்கள்.

‘‘செம ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ்’’ என்று சிலாகித்தபடி, நம்மிடம் காரின் ரிமோட்லெஸ் கீ-யை ரிட்டர்ன் செய்துவிட்டு அவர்கள் சொன்ன ரிப்போர்ட்.

சைன்

பிரதீப்: டிசைன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. செடான் கார்களுக்கு அழகே, அந்த பானெட்டின் நீளம்தான். பழைய ஆல்டிஸைவிட இதன் ஷார்ப்பான டிசைன் பிடிச்சிருக்கு. அலாய் வீல் டிசைன் அருமை. பழைய காரை விட நீளம்/அகலம் எல்லாமே அதிகம். மொத்தத்தில், கார் பிரீமியம் லுக்கில் இருக்கு.

தீபா: இந்த அலாய் வீல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. இதுக்குப் பேர் ஏதோ சொல்வாங்களே... டைமண்ட் கட்டா? டெய்ல் லேம்ப்கூட அருமை. விங் மிரரில் இண்டிகேட்டர் லைட் செமையா இருக்குனு நினைக்கிறேன். டிசைனுக்கு நான் 9/10 மார்க் கொடுப்பேன்.

உள்ளே

பிரதீப்: வீல் பேஸ் 100 மி.மீ அதிகமாயிருக்குன்னு சொன்னீங்கல்ல. அதனால இட வசதியும் அருமையா இருக்கு. நான்தான் எங்க வீட்ல எப்பவுமே கார் ஓட்டுவேன். அதுனால எனக்கு டிரைவர் சீட்தான் ரொம்ப முக்கியம். எல்லாமே எலெக்ட்ரானிக்தான். சூப்பர். பின் பக்க சீட் வசதியைப் பற்றி என் மனைவிதான் சொல்லணும்.

தீபா: பின்னால் உட்கார்ந்தா எஜமானியம்மா மாதிரி இருப்பேங்க. காலை நல்லா நீட்டி உட்கார வசதியா இருக்கு. ஸ்பீடோ மீட்டர் டயலைக் கவனிச்சீங்களா? பேக் லிட் கலர்ஃபுல்லா இருக்கு. நைஸ். என் அத்வைதா செல்லம் நல்லா விளையாடிக் கிட்டே வரலாம்போல. சைல்டு சேஃப்டி சீட் இல்லையா? (எல்லா மாடல்களிலும் இருக்கிறது) பின் சீட்டை மடிச்சுக்கலாம்னு கேள்விப்பட்டேன். சூப்பர்.

வசதிகள்

பிரதீப்: நான் ரொம்ப எதிர்பார்க்கிறது டச் ஸ்கிரீன்தான். 8 இன்ச் சைஸில் நல்லாவே இருக்கு. நேவிகேஷன் சிஸ்டமும் ஓகே. மிரர் லிங்க், வாய்ஸ் ரெகக்னிஷன் எல்லாமே சூப்பர். க்ரூஸ் கன்ட்ரோல் இருக்கு. நம் ஊருக்கு இது வேஸ்ட்னு நினைக்கிறேன். பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி எனக்குப் பிடிச்ச வசதிகள். ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் இருக்கு. மழை நேரத்துலதான் இதை ஃபீல் பண்ண முடியும். இவ்வளவு காஸ்ட்லி காரில் சன் ரூஃப் இல்லாமல் இருப்பதா?

தீபா: நாங்க அடிக்கடி லாங் டிரைவ் போவோம். சேஃப்டி எங்களுக்கு ரொம்ப முக்கியம். 5 ஏர் பேக் இருக்கு. செம! காஸ்ட்லி காராச்சே? மற்றபடி ABS, EBD எல்லாம் இருக்கு. பவர் ஸாக்கெட்டுக்குப் பதிலா இரண்டு USB போர்ட் கொடுத்திருக்காங்க. 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் இருந்தா, நல்லா இருந்திருக்கும். காருக்கு உள்ளே ரூஃபில் LED லைட்ஸ் கொடுக்கக் கூடாதா? சாதாரண ஹாலோஜன் லைட்டுகள்தான்.

இன்ஜின்

பிரதீப்: எனக்கு இதில் ரொம்பப் பிடிச்சதே இன்ஜின் பர்ஃபாமென்ஸ்தான். அத்தனை ஸ்மூத். ஸ்டார்ட் ஆனதே தெரியலை. இப்போதான் தெரியுது - இது ஏன் விற்பனையில் நம்பர்-1 கார்னு! ஹைவேஸ்ல செம ஜாலியா பறக்கலாம். மேனுவல் கியர்பாக்ஸ், நல்ல ஸ்மூத்.

தீபா: இன்ஜின் பத்தி நமக்கு ஐடியா இல்லை. ஆனா, லாங் ரைடு போயிட்டு வந்தோமே... எந்த அலுப்பும் தெரியலை; இரைச்சல் சத்தமும் கேட்கலை. ஜாலி அனுபவம்.

கையாளுமை

பிரதீப்: பானெட் நீளமா இருக்கிறது அழகுதான். ஆனா, அதுவே ரைடிங்குக்கு லேசா கஷ்டம். பானெட் எங்கே முடியுதுன்னு தெரியலை. நீளமா இருக்கிறதால, டர்னிங் ரேடியஸும் அதிகம். யு-டர்ன்களில் கவனமா இருந்தேன். ஆனா, இதுவே ஏரோ டைனமிக்ஸுக்கு நல்லா ஹெல்ப் பண்ணுது. காற்றைக் கிழிச்சுட்டு ‘கிர்ர்’னு பறக்கிறதை ஃபீல் பண்ண முடியுது.

தீபா: சஸ்பென்ஷன் சூப்பர். எங்க ஜாஸ் காரில் திரும்பும்போது, எல்லோரும் திரும்புவோம். இதில் அவ்வளவா பாடி ரோல் இல்லை. மேடு பள்ளங்கள்ல எந்த ஆட்டமும் இல்லாம, சூப்பரா இருக்கு.

தீர்ப்பு

எக்ஸிக்யூட்டிவ் செடான் என்பதற்கான எல்லா அம்சங்களும் கரோலா ஆல்டிஸில் இருக்கு. டிரைவிங் அனுபவமும் சூப்பர். நான் ஓட்டும்போது இதன் மைலேஜ் ரேஞ்ச் மீட்டரைப் பார்த்தேன். வெறும் 9 கி.மீ-தான் காட்டியது. காஸ்ட்லி கார் என்பதற்காக, இவ்வளவு குறைவாக மைலேஜ் இருக்குமா? 22.16 லட்சம் ஆன்ரோடு என்பது கொஞ்சம் அதிகம்தான். எனக்கு பட்ஜெட் 15 லட்சத்துக்குள்தான். விலை, மைலேஜ் பற்றிப் பிரச்னை இல்லை; நல்ல டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்பவர்கள் கரோலா ஆல்டிஸை வாங்கலாம்.