‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என நாம் சொன்னதெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் - எலெக்ட்ரிக் வாகனங்கள். ‘ஒன்றைப் பெற வேண்டும் என்றால், ஒன்றை இழக்க வேண்டும்’ என்பதுதான் பொதுவான விதி. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, எரிபொருள் நிரப்ப வேண்டிய தொல்லை இல்லை; கரும்புகையை உமிழாது; சுற்றுச்சூழல் மாசுபடாது போன்ற பலன்கள் என்றால்... குறைவான வேகம் மற்றும் பர்ஃபாமென்ஸ் போன்ற சில மைனஸ்களும் இருந்தன. ஆனால், இப்போது அதற்கும் தீர்வு கிடைத்துவிட்டது.

ஆம்! எலெக்ட்ரிக் கார் ரேஸ், இப்போது உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் கார் ரேஸில் சார்ஜிங் பிரச்னை, பர்ஃபாமென்ஸ் போன்றவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

ஃபார்முலா-E உருவான கதை

நீங்கள் ஃபார்முலா-1, ஃபார்முலா-3 ரேஸ்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். இவையெல்லாமே உலகின் அதிவேக, த்ரில்லிங்கான கார் ரேஸ்கள். ஒரு சின்னத்தவறுகூட இதை ‘டெத் ரேஸ்’ ஆக்கிவிட வாய்ப்பு உண்டு. அந்த அளவு வேகம்... வேகம்... இதுதான் ஃபார்முலா ரேஸ்களின் ஸ்பெஷல். அதேநேரத்தில் இதனால் ஏற்படும் மாசுக்களும், நிரப்பப்படும் பெட்ரோலின் அளவும் எக்கச்சக்கம். ஃபார்முலா ரேஸில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு காரிலும் 75 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பெட்ரோல் டேங்க்குகள் உள்ளன. மைலேஜும் லிட்டருக்கு 1 கி.மீ-தான் கிடைக்கும்.

மாசுத் தொல்லைக்கும் எரிபொருள் பிரச்னைக்கும் ஒரே தீர்வு எலெக்ட்ரிக்தான். மாசுத் தொந்தரவு இருக்கக் கூடாது; அதேநேரத்தில் த்ரில்லிங்கும் குறையக் கூடாது. இப்படி யோசித்து உருவாக்கப்பட்டதுதான் ஃபார்முலா-E ரேஸ். இப்போது 200 கி.மீ வேகத்தில் பறக்கும் அளவுக்கு எலெக்ட்ரிக் கார் ரேஸ் உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கின்றது. ரேஸ் பிரியர்களுக்குக்கூட ஃபார்முலா-E இருப்பது அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2008-லேயே எலெக்ட்ரிக் வாகனங்களில் குட்டிக் குட்டி ரேஸ்கள் நடந்திருந்தாலும், 2014-ல்தான் முதன்முதலில் எலெக்ட்ரிக் ஃபார்முலா ரேஸ் தொடங்கியது.

இதைத் தொடங்கிவைத்த பெருமைக்குரியவர் - ஜீன் டோட். இவர்தான் FIA-வின் (Federation Internationale de'Automobile) தலைவர். 2014 செப்டம்பர் மாதம், சீனாவின் பீஜிங்கில் 20 ஃபார்முலா எலெக்ட்ரிக் கார்கள் ரேஸுக்காக அணிவகுத்து நின்றிருந்தன. ‘எலெக்ட்ரிக் காரில் ரேஸா? அதுவும் ஃபார்முலா ரேஸ்’ என்று எள்ளி நகையாடிய ஆடியன்ஸ் அனைவரும், 0-160 கி.மீ வேகத்தை வெறும் மூன்று விநாடிகளில் எட்டிப் பிடித்துப் பறந்த F1 எலெக்ட்ரிக் கார்களின் மெர்சல் வேகத்தைப் பார்த்துத் திக்குமுக்காடினர்.

ஆண்ட்ரெட்டி, ஆடி ஸ்போர்ட் ABT, ரெனோ என்று ரேஸ் டீம்கள் ஸ்பான்ஸர்களாகக் குவிய ஆரம்பித்தன. இதில் மொனாக்கோவைச் சேர்ந்த வென்ச்சுரி கிராண்ட் ப்ரீ ஃபார்முலா-E டீம், ஹாலிவுட்டின் ஆஸ்கார் நாயகன் லியானார்டோ டி காப்ரியோவுக்குச் சொந்தமானது. இந்த ரேஸுக்கு ஆசைப்பட்டு, ஜாகுவாரும் எலெக்ட்ரிக் கார் ரேஸில் பங்குகொண்டிருப்பது லேட்டஸ்ட் நியூஸ். இப்போது உலகம் முழுதும் 190 மில்லியன் ரசிகர்கள், ஃபார்முலா-E ரேஸுக்கு ரசிகர்கள்.

இங்கே ஃபார்முலாவில் இருக்கும் E என்பது எலெக்ட்ரிக்கைத்தான் குறிக்கும். ஆனால், இதற்கு Exciting, Efficiency, Environment என்று எப்படி வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது ஃபார்முலா நிர்வாகம். `என்டர்டெயின்மென்ட் என்றும் சொல்லலாம்' என்று ரசிகர்கள் `அதுக்கும் மேல’ கமென்ட் செய்கிறார்கள்.

என்னதான் வேகம், த்ரில்லிங் என்று இருந்தாலும், எலெக்ட்ரிக் கார்கள் என்பதால், சில நடைமுறைச் சிக்கல்கள் இந்த எலெக்ட்ரிக் கார் ரேஸில் உள்ளன.

ஃபார்முலா-E ரேஸில் கலந்துகொள்வது எப்படி?

எலெக்ட்ரிக் கார் ரேஸில் கலந்துகொள்வது, தமிழக முதல்வர் ஆவதுபோல் ஈஸியான விஷயம் இல்லை. ஃபார்முலா-1 கார் ரேஸுக்கு இருக்கும் அதே கடுமையான விதிமுறைகள்தான் இதற்கும். ஃபார்முலா-4, ஃபார்முலா-3, ஃபார்முலா-2 போன்ற ரேஸ்களில் கலந்துகொண்டு குறைந்தபட்ச சாம்பியனாவது ஆனபிறகுதான், எலெக்ட்ரிக் ரேஸ் காரின் ஸ்டீயரிங்கில் கை வைக்க முடியும். சீஸன் சீஸனாக நடந்து கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் ரேஸில், இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள ஒரே டீம் - மஹிந்திரா ரேஸிங் டீம்!

ஃபார்முலா-E கார்கள் பற்றி...

* சாதாரண ஃபார்முலா-1 கார்கள்போலவே மூக்கு நீளமாகவும், ஓப்பன் வீல்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஃபார்முலா கார்களின் டிசைனும் இருக்கும்.

* இவைதான் உலகின் அதிவேக எலெக்ட்ரிக் கார்கள்.

* இன்ஜினுக்கு மெக்லாரன், பேட்டரிக்கு ரெனோ என்று ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு கார் நிறுவனங்கள் உருவாக்கித் தருகின்றன. ரெனோ நிறுவனத்தின் ‘Spark-Renault SRT_01E’ எனும் மெகா சைஸ் சக்தி வாய்ந்த பேட்டரி, 200KW பவரை அளிக்கிறது. அதாவது, 270 bhp பவர் கொண்ட ஒரு காரின் சக்தியை இது தருகிறது. இதன் டாப் ஸ்பீடு 200 கிலோமீட்டரைத் தொடுகிறது.

* இந்த பேட்டரியை, ரீ-சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ‘Qualcomm’ எனும் அதிவேக சார்ஜர்களை, ரேஸில் பயன்படுத்திக்கொள்ளுதல் பற்றிய பேச்சு நெடுநாள்களாக அடிபட்டு வந்தது. ஆனால், இன்னும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.

* காரணம், ரேஸ் 1 மணி நேரத்துக்குள் மட்டும்தான் நடக்கும் என்பதால், பிட்-ஸ்டாப்பில் பேட்டரியையோ, டயர்களையோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கார்களையே மாற்றிக்கொள்ளலாம்.

* இந்த பேட்டரியை 90 நிமிடம் சார்ஜ் செய்தால், 25 நிமிடங்கள் ரேஸ் ஓட்டலாம்.

* இனி வரும் ரேஸ்களில் அதிவேக சார்ஜிங்குக்காகவும், பேட்டரி மாற்றுவதற்காகவும் டெஸ்லாவுடன் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம்.

* நம் ஊர் கார்களில் இருப்பதுபோல், இதில் டிரைவிங் மோடுகளும் உண்டு. ரேஸிங்கின்போது, டிரைவர்கள் இதிலுள்ள ரேஸிங் மோடை ஆன் செய்தால் - இது 150kw பவரைக் குறைவாக வெளிப்படுத்தும். அதாவது, 202 bhp பவர். இது சார்ஜிங் குறைவாகும்போது பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அம்சம்.

* ஐந்து செகண்டுகளுக்கு ஒருமுறை ‘திடும் திடும்’ என எக்ஸ்ட்ராவாக 30KW பவரை வெளிப்படுத்தும் ‘FanBoost’ எனும் மோடும் உண்டு. இது, ஃபார்முலா-1 கார்களில் உள்ள KERS ஃபர்ஸ்ட் சிஸ்டத்துக்கு இணையானது. இது இன்ட்ரஸ்ட்டிங்கான ரேஸிங்கை எதிர்பார்ப்பவர்களுக்கானது. FanBoost என்றொரு கேட்டகிரியே ரேஸில் உண்டு.

* இதில் கலந்துகொள்ளும் E-ஃபார்முலா கார்களின் எடை 896 கிலோவுக்குள் இருக்க வேண்டும். அதாவது, டிரைவரின் எடையையும் சேர்த்து. அப்போதுதான் 0-160 கிலோமீட்டரை வெறும் மூன்று விநாடிகளுக்குள் தொட முடியும். இதிலுள்ள பேட்டரியின் எடை மட்டும் 320 கிலோ.

* காரின் சேஸி, கார்பன் மற்றும் அலுமினியம் ஹனிகோம்ப் முறையில் லைட் வெயிட்டாகத் தயாரிக்கப்படுகிறது. இதைத் தயாரிப்பது, இத்தாலியைச் சேர்ந்த ‘Dallara’ எனும் புகழ்பெற்ற சேஸி தயாரிப்பு நிறுவனம்.

* இந்த கார்களின் டாப் ஸ்பீடு 225 கி.மீ. ‘இது FIA-வின் லிமிட்டட் வேகம் என்பதால்தான் இந்த ஸ்பீடு; இல்லையென்றால் இதையும் தாண்டிப் பறக்க வைக்க முடியும்’ என்கிறார்கள் ரேஸ் ட்யூனர்கள்.

* உயரம்-1,250 மிமீ; நீளம்-5,000 மிமீ; அகலம்-1,800 மிமீ; ரைடு உயரம் - 75 மிமீ. இந்த டைமென்ஷனில்தான் எலெக்ட்ரிக் ரேஸ் கார்கள் இருக்க வேண்டும் என்பது விதி.

* சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, டபுள் ஸ்டீல் விஷ்போன் செட்-அப், ட்வின் டேம்ப்பர்கள் மற்றும் டார்ஸன் பீம்கள் என வெகு ஜாக்கிரதையாகத் தயாரித்திருக்கிறார்கள். எனவே, வேகங்களின்போது டிரைவர்களுக்கு ஸ்டெபிலிட்டியும் கன்ட்ரோலும் கிடைப்பது உறுதி. ஏனென்றால், இந்த கார்களில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் கிடையாது என்பது பயப்பட வேண்டிய விஷயம்.

* இதிலுள்ள MGU எனும் இன்ஜின், மெக்லரான் தயாரிப்பது. வெப்ப ஆற்றலை மின்சார ஆற்றலாகத் தருவதுதான் MGU. ஒவ்வொரு காரிலும் இரண்டு MGU-க்கள் வரை ஃபிட் செய்து கொள்ளலாம். ரியர் ஆக்ஸிலில் லிங்க் செய்யப்பட்டுள்ள இது, பின் பக்க வீல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகச் சக்தியை வழங்கும்.

* உலர்ந்த, ஈரமான என்று எப்படிப்பட்ட தரைகளையும் சமாளிக்கக்கூடிய 18 இன்ச் மிஷ்லின் டயர்கள் இதில் இருக்கின்றன.

* நான் அசிஸ்டட் ரேக் அண்டு பினியன் முறையில் இயங்கும் ஸ்டீயரிங், E-ஃபார்முலா கார்களில் உண்டு.

* நான்கு பிரேக்குகளுக்கும் ஒரே பெடல். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஹைட்ராலிக் முறையில் இயங்கும் பிரேக்குகள், கிட்டத்தட்ட ஃபார்முலா-1 கார்களுக்கு இணையாக இருக்கும்.

ஃபார்முலா-E ரேஸில் கலந்துகொள்ளும் 11 அணிகள்!

1. ஆண்ட்ரெட்டி (அமெரிக்கா)

2. ஆடி ஸ்போர்ட் ABT (ஜெர்மனி)

3. நெக்ஸ்ட் EV TCR (சீனா)

4. டிராகன் ரேஸிங் (அமெரிக்கா)

5. ரெனோ (பிரான்ஸ்)

6. மஹிந்திரா (இந்தியா)

7. ட்ரல்லி (சுவிட்சர்லாந்து)

8. வென்ச்சுரி (மொனாக்கோ)

9. விர்ஜின் ரேஸிங் (இங்கிலாந்து)

10. டீம் அகுரி (ஜப்பான்)

11. ஜாகுவார்