பைக் ஹெல்மெட் கேமரா

இது கொஞ்சம் அட்வென்ச்சர் விரும்பிகளுக்கானது. சிலர் பைக்குகளில் லாங் டூர் அடிப்பதை ஹாபியாக வைத்திருப்பார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள்தானே நினைவுகளின் தொகுப்பு. குழுவாகவோ, டபுள்ஸோ என்றால் பரவாயில்லை. தனியாகப் போனால், ஒவ்வொரு இடத்திலும் வீடியோ எடுக்க போனை ஆன் செய்து, நினைவுகளைப் பதிவு செய்வதற்குள் கண்ணைக் கட்டிவிடும். இதுவே ஹெல்மெட்டிலேயே கேமரா இருந்தால்..?

இந்த கேமராவை உங்கள் ஹெல்மெட்டில் பொருத்திக்கொள்ளலாம். வேண்டுமென்ற இடத்தில் கேமராவை ஆன் செய்து, உங்கள் பயணத்தையே நீங்கள் வீடியோ எடுப்பதுதான் இதன் ஸ்பெஷல். ரேஸ் போட்டிகளில் இருக்கும் அம்சம் இது. இதை சாதாரண பயணங்களுக்குப் பயன்படுத்தினால் த்ரில்லிங்காகத்தானே இருக்கும். இதை அட்வென்ச்சர் கேமரா என்றும் அழைக்கிறார்கள். உங்கள் பயணத்தின்போது நீங்கள், மற்றவர்கள் சாலையில் செய்யும் தவறையும் சுட்டிக் காட்ட இது ரொம்பவும் பயன்படும். இதில் 32GB வரை மெமரி இருப்பதால், வீடியோ எடுத்து அசத்தலாம். ‘ரைடிங் டு... ஹில்ஸ்’ என்று யூடியூபில் நீங்கள் பயணிக்கும்போது எடுத்த லைவ் வீடியோவை அப்லோடுங்கள். லைக்ஸ் குவியலாம்.

ஃபோல்டபுள் பாட்டில் ஹோல்டர்

சில கார்கள் ஆஜானுபாகுவாக, ஓட்டுவதற்குக் கம்பீரமாக, ஸ்டைலாக, பெப்பியாக இருக்கும். ஆனால், இன்டீரியரைப் பொறுத்தவரை வசதிகளில் `பெப்பே' காட்டும். சிலவற்றில் டோல்கேட் பில்கள் வைக்கக்கூட இடத்தைத் தேட வேண்டும். கார்களைப் பொறுத்தவரை பாட்டில் ஹோல்டர்கள் ரொம்ப முக்கியம். டூர் அடிக்கும்போது, தண்ணீர் குடித்துவிட்டு பாட்டில்களை வைக்க இடம் இல்லாமல் திணறுவது ரொம்ப அவஸ்தை. அதற்காகத்தான் ஆஃப்டர் மார்க்கெட்டில் பாட்டில் ஹோல்டர்கள் இருக்கின்றன. கார்களின் கதவுகள், சீட்கள், டேஷ்போர்டு போன்றவற்றில் இவற்றை ஃபிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். நம் விருப்பத்துக்குத் தகுந்தாற்போல், 1 லிட்டர் முதல் 2 லிட்டர் கேன்கள் அளவுவரை ஹோல்டர்கள் கிடைக்கின்றன. மடிக்கும் வசதி கொண்ட இதை வேண்டுமென்றால் அகற்றிச் சுத்தம் செய்துகொள்ளலாம். உயர்தர பிளாஸ்டிக்கில் தயார் செய்யப்பட்ட வாட்டர் புரூஃப் என்பதால், தரம் பற்றிக் கவலையில்லை. உங்கள் காரின் கலருக்கு ஏற்ப இதைத் தேர்ந்தெடுக்க மறந்துவிடாதீர்கள். Speedwave மற்றும் Vheelocity போன்ற மேக்குகள் பிரபலம். விலை 550 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

பைக் வீல் லாக்

இப்போது பைக் திருடுவதெல்லாம் வடை திருடுவதுபோல் சாதாரண விஷயமாகிவிட்டது. சைடு லாக் போட்ட புல்லட்டையே ‘அவென்ஜர்ஸ்’போல ஈஸியாகத் திறக்கும் திருடர்கள் பற்றிய வாட்ஸ்அப் வீடியோ பார்த்திருப்பீர்கள்தானே? இந்த நேரத்தில், நாமும் கொஞ்சம் விழிப்பாக இருந்தால்தான் நல்லது. ‘சைடு லாக்தான் போட்டாச்சே’ என்று தைரியமாக இருப்பதெல்லாம், நம் அறியாமையாகிவிட்டது. இதற்காகத்தான் பைக்குக்கான வீல் லாக், காலம் காலமாக இருக்கிறது. இதற்கான க்ளாம்ப்பை பைக்கின் ஃபோர்க்கில் ஃபிட் செய்வதை மெக்கானிக்குகள் பார்த்துக்கொள்வார்கள். அதற்கப்புறம் அந்த லாக்கை க்ளாம்ப்புக்குள் செருகி, சாவி கொண்டு பூட்டிவிட்டு நிம்மதியாக உறங்கலாம். திருடர்கள் லாக்கை உடைத்து, க்ளாம்ப்பைக் கழட்டி பைக்கைத் திருடுவது நடக்காத காரியம். கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பைக்குக்காக, கொஞ்சம்போல நேரத்தைச் செலவழிக்கத் தயங்கலாமா?