சில வீடுகளுக்கு விருந்துக்குச் சென்றால், திரும்பி வரவே மனசிருக்காது. காரணம், அவர்களது அன்பு. சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகளும் அப்படித்தான். அங்கே அன்பு என்றால், இங்கே அழகு. அதாவது இயற்கை! சலிப்பு ஏற்படுத்தாமல் அழகைக் கொட்டும் சில இடங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஓர் இடம், திருநெல்வேலி தாண்டி இருக்கிறது.

‘‘ஆங்... அத்ரி மலைதானே... நானும் கேள்விப்பட்டிருக்கேன். வாங்க... செமையா ஒரு எஸ்கேப் போலாம்’’ என்று உற்சாகமாகத் தனது புது மனைவி சுகன்யாவுடன் கிளம்பினார், பண்ருட்டியில் எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரியும் ஜெயப்பிரகாஷ். கூடவே அவர் அண்ணன் சதீஷும் சியாஸில் ஏறினார்.

ஜெ.பி பற்றிச் சொல்லியாக வேண்டும். ‘சியாஸில் கிரேட் எஸ்கேப் பண்ணியாச்சே?’ என்றால், ‘‘அது டீசல் மாடல். ஜூன் மாசம். 2015. 95-ம் பக்கம்’’ என்று புள்ளிவிவரமாகப் பேசும் மோட்டார் விகடனின் தீவிர ரசிகர். ‘‘அந்தப் பொண்ணு ரேஸிங்ல ஜெயிச்சிடுச்சா?’’ என்று மோ.வி-யில் பேட்டி கொடுத்த ரேஸர் பற்றிக் கேட்கிறார். ‘‘சிட்டியில் 6 கியர் இருந்தா நல்லாருக்கும்னு நீங்க 6 வருஷத்துக்கு முன்னால சொன்னீங்க... நடந்துடுச்சு’’ என்று நினைவாற்றலில் அசத்துகிறார். ‘‘கார் வாங்கும்போது கூப்பிட்டேன். இப்போ 40,000 கி.மீ ஓடிருச்சு. சர்வீஸ் விட்டிருக்கேன். எடுத்துட்டுக் கிளம்பிடலாம்’’ என்று உற்சாகமாகிறார்.

அவரது வீடு பண்ருட்டிதான். ஆனால், காரை சென்னையில் சர்வீஸ் விட்டிருந்ததால், சென்னையில் இருந்துதான் பயணம் தொடங்கியது. சீஸன் நேரமானாலும் சரி; சாதாரண பீக்-அவர்ஸ் ஆனாலும் சரி - இப்போதெல்லாம் செங்கல்பட்டு வரை பம்பர் டு பம்பர் டிராஃபிக்தான். இதில் சியாஸும் முக்கி முனகியது. ஆனால், இது சியாஸின் பவர் டெலிவரியைச் சோதனை செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

பெட்ரோல் மாதிரியே தெரியவில்லை; எந்த இடத்திலும் டர்போ லேக் தெரியவில்லை; சில நேரங்களில் 40 கி.மீ வேகத்தில் 5-வது கியரில் இருந்து கியரைக் குறைக்க மறந்தாலும் திணறவில்லை; 60 கிலோமீட்டரில் 4-வது கியரில் சென்றாலும் முனகவில்லை; ஓவர்டேக்கிங்கில் ‘எதுக்கு கியரைக் குறைச்சுக்கிட்டு’ என்று கியர் குறைக்கவிடவில்லை. டேங்க்கை ஃபில் செய்துவிட்டு, முதல் டோலில் 50 ரூபாய் பில்லைக் கட்டிவிட்டு, விண்ட்ஷீல்டு வழியாகச் சாலையைப் பார்த்தால்... சீஸன் முடிந்த பிக் பாஸ் வீடு மாதிரி வெறிச்சென்று இருந்தது. ஆளே இல்லை என்று தெரிந்ததும் தைரியமாக ஆக்ஸிலரேட்டர் மிதித்தேன். ஸ்பீடோ மீட்டர் 140 என்று காட்டியது. ஹைவேஸில் சியாஸுக்கு விசில் போடலாம். சில நேரங்களில் 6-வது கியரைத் தேடினேன். (நோட் தி பாயின்ட் மாருதி!)

75, 60, 45, 50 ரூபாய் என்று வெரைட்டியாக வசூலித்தன டோல்கேட்டுகள். காற்று போன பலூன்போல பர்ஸ் காலியானது. ஹைவேஸில் நெடும்பயணம் போகிறவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ். எப்போதும் வலப்புற லேனில் செல்லும்போது, மிகக் கவனம் வேண்டும். 4-வே, 2-வே சாலைகளில் நடுவில் உள்ள செடிகளை மேய்ந்துவிட்டு, சில கால்நடைகள் அப்படியே சாலையில் இறங்கின. டிரைவிங்கில் கில்லாடிகளாக இருப்பவர்கள்கூட மாடு விஷயத்தில் நிச்சயம் கட்டுப்பாடு இழக்க வாய்ப்பு உண்டு.

மதியம் மறைந்து மாலை ஆனது. வெளியே 24 டிகிரி என்று சியாஸின் டெம்பரேச்சர் மீட்டர் சொன்னது. ஜன்னல் கண்ணாடியை இறக்கினால், தென்றல் அடித்தது. தென்காசி வந்திருந்தது. ‘‘ஏங்க, கல்யாணம் முடிஞ்சு எங்கேயும் கூட்டிட்டுப் போகலை. குற்றாலம் போய் குளிக்கலாம்ல’’ என்று கணவருக்குக் கோரிக்கை வைத்தார் சுகன்யா.

‘‘குற்றாலத்துலேயே ரூம் போட்டுக்கலாம்’’ என்று முடிவெடுக்கப்பட்டுத் தங்கினோம். சீஸன் இல்லாத நேரங்களில்கூட சில லாட்ஜ்காரர்கள் பணத்தைக் குறைக்கவில்லை. ‘‘இதுதான் குறைந்த கட்டணம்’’ என்று 1,700 ரூபாய் அறையைக் காட்டினார்கள். ‘‘நாளைக்குத்தான் ரியல் கிரேட் எஸ்கேப்பே இருக்கு’’ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு, மிளகு தோசை, கார தோசை சாப்பிட்டுவிட்டு ஜில்லென்று தங்கினோம்.

மறுபடியும் டேங்க் ஃபில். மறுபடியும் மிளகு தோசை. ‘‘ரொம்ப தூரம் ட்ரெக்கிங் போகணும். நல்லாச் சாப்பிட்டுவிடலாம்’’ என்று பார்ட்னர்ஷிப் வைத்தோம். இந்த முறை சியாஸ், கொஞ்சம் கரடுமுரடுச் சாலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. கடையம் வழியாக சிவசைலம் செல்லும் வழியில் வலதுபுறம் திரும்பினால்... `கடனாநதி அணை’. செல்லும் வழியெங்கும் பச்சைப் பசேல் என்று இருந்தது.

கடனாநதி அணை ஆர்ச்சுக்குப் பக்கத்தில் சுடச்சுட வெயிலில் ஒரு போட்டோ ஷூட். ஆரம்பத்திலேயே காடு தொடங்குவதற்கான அறிகுறி தெரிந்தது. சிறுத்தை, கரடிகளெல்லாம் உலவும் பாதை என்றார்கள். பாதையே பயமுறுத்தியது.

வெயிலின் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. காரணம், கடனாநதி அணையின் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன். எப்போதும் சிலுசிலுவென்ற காற்றுக்கு இங்கே கேரன்ட்டி. வெயிலும் காற்றும் இதமாக இருந்தது. சில சமயங்களில் இங்கே பெரிய கார்களையே தள்ளாட வைக்கும் அளவுக்கு ‘பராங் பராங்’ எனக் காற்றடிக்கும் என்றார்கள். இயற்கையின் பிரமாண்டம் அத்தனை வெயிலிலும் குளிர்ச்சியாக முகத்தில் அறைவதுதான் கடனாநதி அணைக்காற்றின் ஸ்பெஷல். மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து, தாமிரபரணியில் கலக்கும் இந்த அணைதான் திருநெல்வேலி மாவட்டத்தின் பசுமைக்குக் காரணம்.

‘‘அடுத்ததுதான் டூரே’’ என்றார் புகைப்பட நிபுணர். அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. அத்ரி மலை ட்ரெக்கிங்கைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார். செக்போஸ்ட்டில் இரண்டே இரண்டு காவலர்கள் மட்டும் இருந்தார்கள். சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை. சாதாரண நாள்களில் இங்கு டூர் வருபவர்களுக்கு, அத்ரி மலைக்குள் அனுமதி இல்லை. பௌர்ணமி, அமாவாசை நாள்களில் மட்டும்தான் அனுமதி. மேலே உள்ள கோரக்கநாதர் கோயிலில் நடக்கும் விசேஷம், மேற்படி நாள்களில்தான் திருவிழாபோல் நடக்கும்.

‘கோயிலுக்கு மட்டும்தான் போவேன்’ என்று கீழே உள்ள செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு அடையாள அட்டையைக் காட்டினால், அனுமதி கிடைக்கலாம்.

டிரைவிங் முடிந்து ட்ரெக்கிங் ஆரம்பித்தது. 9 கி.மீ நடக்க வேண்டும் என்றார்கள். சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலை ஹாயாகப் படுத்திருக்க, கடனாநதி அணையின் வயிற்றுப் பகுதியைத் தாண்டிக் காட்டுக்குள் நடை போட்டோம். பகலில் கரடி வரலாம் என்று எச்சரித்தே அனுப்பினார்கள். திரும்பி வரும் வரை கரடி பார்க்கவில்லை. ஒருவேளை கரடி எங்களைப் பார்த்திருக்கலாம்.

முன்பு அணைநீர் குறைவாக இருந்ததால், குறுக்கு வழியில் பாதி தூரத்தைக் கடக்கலாம் என்றார் புகைப்படக்காரர். அணை நீர், சாப்பாட்டு ராமன்களின் வயிறுபோல் நிரம்பியே கிடந்தது. இதுவும் நல்லதுதான். காட்டுக்குள் எக்ஸ்ட்ராவாக நடக்க கொடுத்து வைக்க வேண்டும். ‘‘பாதி வழியில் அருவி, ஓடையெல்லாம் இருக்கு. குளிக்கணும்னா குளிச்சிடுங்க’’ என்று சொல்லியே அனுப்பியிருந்தார் கார்டு. நீரோடையின் சலசலப்பு சிலமணி நேர நடைக்குப் பிறகு கேட்க ஆரம்பித்தது. கால் வலிக்க நடந்து வருபவர்களுக்கு, கால் நீவிவிடுவதுபோல் மென்மையாக வருடுகிறது சிற்றோடை. தூரத்தில் குட்டி அருவி. லேசான ஆக்ரோஷக் குளியல் விரும்புபவர்கள், சிற்றருவிக்கு நடந்து சென்று குளிக்கலாம். இங்குதான் விலங்குகள் நீரருந்த வரலாம் என்றார்கள்.

லேசான குளியல் முடித்துவிட்டு மறுபடியும் மலையேற்றம். கடைசியாக ஓர் இடத்தில், ‘சித்தர் வாழும் பகுதி; செருப்புக்கு அனுமதி இல்லை’ என்று குட்டியாக அறிவிப்புப் பலகை. அகத்தியர், அத்ரி மகரிஷி, கோரக்கர், தேரையர் போன்ற சித்தர்கள் இங்குதான் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். காட்டின் கருவறை வாசம் இப்போது நன்கு தெரிந்தது. காரணம், இங்குள்ள மூலிகைகள். மூலிகைகளைப் பற்றிப் படர்ந்துவரும் காற்று மேலே பட்டவுடனே சிலிர்ப்பு தொற்றிக்கொண்டது. ‘பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’ என்ற பாடலுக்கு உண்மையான அர்த்தம் விளங்கியது.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முனிவர்தான் அத்ரி. மேற்குத்தொடர்ச்சி மலை வழியாகப் பயணம் வந்த அத்ரி முனிவர், சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்த இடம் இதுதான். அதனால்தான் இதற்குப் பெயர் அத்ரி மலை. அவரது விசுவாசமான சீடர்களில் ஒருவர்தான் கோரக்கர். அவர் நினைவாகத்தான் இங்கே கோயில். ‘‘சக்தி விகடனில்கூட இது பற்றிப் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்’’ என்றார்கள் சுகன்யாவும் ஜெயப்பிரகாஷும்.

செருப்பில்லாத கால்களில் வலி பின்னியெடுத்தது. நாம் ஒரே ஒரு தடவை இங்கே வந்ததற்கே கஷ்டப்படுறோம்; ஆனால், இங்கே இரண்டு பேர் தினமும் நடந்துவந்து அலுவலகம் வருவதுபோல் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். ‘‘எங்களுக்குப் பழகிடுச்சு பார்த்துக்கிடுங்க. சிவன், அம்மனுக்குப் பாலபிஷேகம், பூஜைனு முடிச்சுட்டு, சமைச்சு சாப்பிட்டுட்டுப் போக தினமும் மதியம் ஆகிடும்’’ என்றனர் கோயில் பூசாரிகள்.

கால் வலியையும் மீறி, கோயில் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்துப் புன்னகை செய்தார் சுகன்யா. ‘சாமில்லாம் எனக்குப் பிடிக்காது’ எனும் நாத்திகர்கள்கூட இந்தக் கோயிலைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிட வாய்ப்பு உண்டு. கால இயந்திரத்தில் ஏறி 1,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றதுபோலவே இருந்தது. ‘‘இந்த அம்மன் சிலைக்கு ஆயிரம் வயசு’’ என்று ஒரு குட்டி கல்சிலையைப் பூசாரி காண்பிக்க... சுற்றிச் சுற்றி வந்து கும்பிட்டனர் இருவரும்.

ஏற்கெனவே நாம் வருவதை அறிந்திருந்த பூசாரிகள், நமக்காகவும் சோறு வடித்திருந்தார்கள். சுனை நீரில் கை கழுவிவிட்டு, சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டே சாப்பிடுவது சுகமாக இருந்தது. ‘‘உண்மையிலேலேயே இதுதான் செ‘மத்தியான’ சாப்பாடு’’ என்றார்கள் இருவரும்.

ஜாலியாக இயற்கையைக் கொஞ்சிவிட்டு, மறுபடியும் மலைப்பாம்புபோல் மலை தழுவிக் கீழிறங்கினோம். சுத்தமான காட்டுப் பகுதி. வாகன இரைச்சல் இல்லை; புகை மாசு இல்லை; மின்சாரம் இல்லை; செல்போன் நெட்வொர்க் இல்லை; வீடு இல்லை; வாசல் இல்லை. அதேநேரம் உள்மனம், அதிரி புதிரியாகப் போட்ட சந்தோஷக் கூச்சலுக்கும் குறையில்லை. சித்தர்களுக்கும் அத்ரி மலைக்கும் கோடானு கோடி லைக்ஸ்!

எப்படிப் போகலாம்?

சென்னைவாசி என்றால், யோசிக்காமல் திருநெல்வேலி வந்தாக வேண்டும். அங்கிருந்து அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி. அடுத்து சிவசைலம் செல்லும் பாதையில் வலதுபுறம் திரும்ப வேண்டும். கடனாநதி அணை. அங்கிருந்து அத்ரி மலைக்கு ட்ரெக்கிங்.

எங்கே தங்கலாம்?

தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் தென்காசி, திருநெல்வேலி போன்ற இடங்களில் அறைகள் எடுத்துக்கொள்ளலாம். குற்றாலத்திலும் அறை எடுக்கலாம். 750 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை வாடகைக்கு அறைகள் உள்ளன.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!