Election bannerElection banner
Published:Updated:

மாருதி எர்டிகாவுக்குப் போட்டி... - `சுறா' இன்ஸ்பிரேஷனில் மஹிந்திரா மராஸோ!

மாருதி எர்டிகாவுக்குப் போட்டி... - `சுறா' இன்ஸ்பிரேஷனில் மஹிந்திரா மராஸோ!
மாருதி எர்டிகாவுக்குப் போட்டி... - `சுறா' இன்ஸ்பிரேஷனில் மஹிந்திரா மராஸோ!

மஹிந்திராவின் சென்னை ஆராய்ச்சி மையம், டெட்ராய்ட் ஆராய்ச்சி மையம், பின்னின்ஃபரினா, மும்பை டிசைன் ஸ்டுடியோ இணைந்து உருவாக்கியிருக்கும் மராஸோவில் என்ன ஸ்பெஷல்...

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு... இதோ, விற்பனைக்கு வந்துவிட்டது மஹிந்திராவின் பிரிமியம் எம்பிவி மராஸோ. XUV500 எப்படிச் சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டதோ அதேபோல சுறாவின் டிசைனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் மராஸோ. மஹிந்திராவின் வரலாற்றில் நீளமான பாசஞ்சர் வாகனமாக வெளிவந்திருக்கும் மராஸோ, ஸைலோ போல லேடர் ஃபிரேம் சேஸியில் தயாரிக்கப்பட்ட கார். 

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் உள்ள மஹிந்திராவின் தொழில்நுட்ப மையமும் சென்னையில் உள்ள ஆராய்ச்சி மையமும் இணைந்து, காரின் பொறியியல் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். சர்வதேச சந்தையை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டிருப்பதால், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம் உறுதி என்கிறது மஹிந்திரா. 

காரின் வெளிப்புறத்தில் சுறாவை இன்ஸ்பிரேஷனாக கொண்ட க்ரோம் கிரில் வருகிறது. ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள் (டாப் வேரியன்டில் 17 இன்ச்), DRL உடனான பனி விளக்குகள், இண்டிகேட்டர் உடன் கூடிய மிரர்கள், ரியர் வைப்பர் & ஸ்பாய்லர், ரிவர்ஸ் கேமரா, க்ரோம் ஃப்னிஷ்,  Shark Fin Antenna, surround cool ரூஃப் ஏசி என ப்ரீமியம் வசதிகளுடன் அசத்துகிறது மராஸோ. பில்லரில் ஃபிட் செய்யப்பட்டிருக்கும் ரியர் வியூ மிரர்கள் மஹிந்திராவின் புதிய டிசைன் டச்.

உட்புறத்தில் பியானோ ப்ளாக் & க்ரோம் வேலைப்பாடு உடன் கூடிய டூயல் டோன் (கறுப்பு-பீஜ்) டேஷ்போர்டு - Leatherette சீட்கள் உள்ளன. இதனுடன் பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல் என உயர்ரக வசதிகளால் நிறைந்துள்ளது கேபின். 7/8 சீட் செட்டப் உடன் வருகிறது மராஸோ. 7 சீட்டரை விட 8 சீட் கார் 5000 ரூபாய் விலை அதிகம்.  

கூடுதலாக அனைத்து வரிசை இருக்கைகளுக்கும் ஒரே மாதிரியான கூலிங்கைக் கொடுக்கும் ரூஃப் ஏசி சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. M2, M4, M6, M8 என நான்கு வேரியன்டுகளாக வரும் மராஸோவில் இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், ஈபிடி, பிரேக் அசிஸ்ட், குழந்தைகள் சீட்டுக்கான ஐஸோஃபிக்ஸ் மவுன்டுகள் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டோர் லாக் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லா வேரியன்டிலுமே வருகிறது. 9.99 லட்சம் முதல் 13.90 லட்சம் ரூபாய் (அறிமுக எக்ஸ் ஷோரூம்) விலையில் வருகிறது மராஸோ. மராஸோவில் புதிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி உள்ளது. இது 121 bhp பவரையும், 30 Kgm டார்க்கையும் 17.6 கி.மீ மைலேஜ் (அராய்) தரக்கூடியது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் மட்டுமே. 4 வீல் டிரைவ் இல்லை. 2020-ல் பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் ஆட்டோமேடிக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளார்கள். 9.99 லட்சம் எனும் ஆரம்ப விலையில் தற்போதைய டீசல் எர்டிகாவை விட 71,000 கூடுதலாகவும், ரெனோ லாஜியை விட 1.18 லட்சம் ரூபாய் விலையில் வந்துள்ளது மராஸோ.

ஆனால், புது எர்டிகா தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வருகிறது. புது எர்டிகா வந்தால் ஆட்டம் மாறும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு