வீல் ஃப்ளாஷ் லைட்

பொதுவாக மழையில் பயணம் செல்லும்போது, அதிலும் இரவில் நல்ல விஸிபிலிட்டி கிடைக்காது. எதிரே ஹைபீமில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தால், கண்கள் கூசுவது மட்டும்தான் நடக்கும். வருவது பைக்கா, லாரியா என்று தெரியாத அளவுக்குப் பனி படர்ந்திருக்கும் நேரங்களில், இந்த ஃப்ளாஷ் லைட் சூப்பர் சாய்ஸ். இது கொஞ்சம் ஸ்டைலான ஆக்சஸரீ. அதே நேரம், மலிவானது. குட்டி சீரியல் பல்புபோல் இருக்கும் இதை, காற்றடிக்கும் ‘மவுத்’தில் மாட்டிவிட வேண்டும். பைக் ஓடும்போது, இந்த மவுத்தில் இருக்கும் பல்பு எரிந்து மொத்த வீலுக்கும் கவர் ஆவதால், கல்யாணப் பந்தலுக்கு சீரியல் லைட் போட்டதுபோல் ஜொலிக்கும். நீங்கள் விரும்பும் வண்ணங்களில் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இது சைக்கிள் முதல் பஸ் வரை எல்லா வாகனங்களுக்கும் உண்டு. குட்டி ‘AAA’ பேட்டரியில் இயங்கும் இந்த ஃப்ளாஷ் லைட், நீங்கள் பைக்கை ஆஃப் செய்தால், ஆஃப் ஆகிவிடும். ஒரே ஒரு வேலை - காற்றடிக்கும்போது இந்த பல்பைக் கழற்றி மாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. மற்றபடி கலர்ஃபுல்லாக வாகனம் ஓட்டலாம்.

ஷூ ரெயின் கவர்

மழைக்காலத்தில் பைக் ஓட்டுவதற்கு இணையான சிக்கல் - உடைகள் நனைந்து போகாமல் பயணிப்பது. ஆடைகளுக்கு ரெயின் கோட் எனும் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால், ஷூக்களுக்கு? இந்தத் தொல்லைக்காகவே சிலர், மழை நேரங்களில் செப்பல், ட்ராக் என்று கேஷுவலுக்கு மாறிவிடுவார்கள். ‘மழைதான் நின்னு போச்சே... இனிமேல் ஷூ போட்டுக்கலாம்’ என்று நினைத்தாலும், சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர், ஷூக்களை மிரட்டும். காஸ்ட்லியான ஷூ என்றால், பார்த்துப் பார்த்துதான் பைக் ஓட்ட வேண்டும். அதையும் தாண்டி, ஷாக்ஸுக்குள் தண்ணீர் போகாதவரை ஓகே!

ஷூ அணிந்துதான் செல்ல வேண்டும் என்பவர்களுக்காக ஓர் ஆப்ஷன் இருக்கிறது. அது ஷூ கவர். அதாவது, ஷூக்களைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் கவர். பொதுப்பணித் துறை சாலைப் பணியாளர்கள் அணியும் ஷூக்களைப்போல் தோற்றமளிக்கும் இந்த ரெயின் கவரைக் கால்களில் மாட்டிக்கொண்டு, எப்படிப்பட்ட தண்ணீரிலும் பயணத்தைத் தொடரலாம். வாட்டர் ப்ரூஃப் நைலான் மெட்டீரியலில் இது தயாரிக்கப்பட்டிருப்பதால், உள்ளே தண்ணீர் துளியளவுகூட நுழைய சான்ஸே இல்லை. எலாஸ்டிக் டைப்பில் இது வருகிறது என்பதால், சட்டெனக் கழற்றி மாட்டவும் எளிதாக இருக்கிறது. நைலான் என்பதால், தேவையில்லாத பட்சத்தில் மடித்து ஷோல்டர் பேக்கில்கூட வைத்துக் கொள்ளலாம்.

செயின் ஸ்ப்ரே

புயலடித்து ஓய்ந்தபின் அமைதி இருக்கும். இது பைக்கின் செயின் ஸ்ப்ரொக்கெட்டு களுக்கு மட்டும் பொருந்தாது. யமஹா FZ, கேடிஎம், பல்ஸர், அப்பாச்சி, புல்லட், ஹார்னெட், ஜிக்ஸர் போன்ற சில நேக்கட் பைக்குகளுக்கு செயின் கார்டு இருக்காது. அதாவது, செயின் ஸ்ப்ராக்கெட் ஓப்பனாக இருக்கும். மழையில் நனைந்து வேலை பார்த்து அலுத்துப்போய்க் கிடக்கும் இந்த செயின், போகப்போகத் தன் வேலையைக் காட்டும். இதன் லூப்ரிகேஷன் தன்மை குறைந்து போயிருப்பதால், செயின் ஸ்ப்ராக்கெட்டுகள் ‘கற கற’வென நாராசமான சத்தத்தை எழுப்ப ஆரம்பித்துவிடும். சர்வீஸின்போது, இதைக் கவனிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன் தி ஸ்பாட்டில் இதைச் சரிசெய்ய ஒரு வழி இருக்கிறது. அது செயின் ஸ்ப்ரே. இந்த செயின் ஸ்ப்ரேவை பைக்கின் செயின் ஸ்ப்ராக்கெட்டைச் சுற்றிலும் அடித்தால், அதன் மசகுத்தன்மை குறையாமல் பார்த்துக்கொள்ளும். கொஞ்ச நேரத்தில் `கறகற’ சத்தம் போய், ஸ்மூத் டிரைவ் கிடைக்கும். செயின் கார்டு இல்லாத பைக் உரிமையாளர்கள், இதைக் கைவசம் வைத்திருப்பது நல்லது. ஆன்லைனிலும் இதை ஆர்டர் செய்துகொள்ளலாம்.