“கார்களை கன்ட்ரோல் செய்ய ஏன் செல்போனை பயன்படுத்தக் கூடாதுன்னு சின்னதா ஒரு யோசனை. அதுதான் இது!” - தாங்கள் உருவாக்கியிருக்கும் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் காரை ஆன் செய்து காட்டியபடி உற்சாகமாகப் பேசுகிறார்கள் அருணும், கண்ணனும்.

கோவை காரமடையை அடுத்துள்ள சீளியூர் கிராமத்தைச் சேர்ந்த அருண், அவ்வப்போது ஏதாவது கண்டுபிடிப்போடு மீடியா முன் நிற்பார். ஸ்மார்ட்போன் வருவதற்கு முன்பே, சாதாரண செல்போனைக்கொண்டு பம்ப்செட் இயக்கும் டெக்னாலஜி; குழந்தைக் கடத்தல்கள் அதிகமான சமயத்தில், குழந்தையை ட்ராக் செய்ய பெல்ட்டில் பொருத்தும் சிப் எனச் சின்னச் சின்ன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான அருணும் கோவையைச் சேர்ந்த கண்ணனும் சேர்ந்து, இப்போது கார்களுக்கெனப் பிரத்யேகமாக ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ‘விர்ச்சுவல் கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் செய்யும் விஷயங்கள் அமேஸிங்.

“நாம் லாங் டிராவல் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கார் சாவி தொலைந்துபோனால், டூப்ளிகேட் சாவி போடும் மெக்கானிக்கைத் தேடிப் பிடித்து, வேறு சாவி போடுவதெல்லாம் எல்லா இடத்திலும் சாத்தியம் இல்லை. அதை எப்படிச் சமாளிப்பது... அதற்குத்தான் இந்த விர்ச்சுவல் கீ கான்செப்ட்.

நம் கார் சாவியில் உள்ள எல்லா ஆப்ஷனும் இந்த விர்ச்சுவல் கீ ஆப்பில் இருக்கின்றன. ஒரு ஸ்மார்ட்போன், ப்ளூடூத் கனெக்ஷன், இந்த ஆப் - இது மூன்றும் இருந்தால் போதும். உங்கள் பழைய கார்கூட ஸ்மார்ட் காராக மாறிவிடும். காரில் ப்ளூடூத் டிவைஸும் எங்கள் சாஃப்ட்வேர் கோடிங் அடங்கிய டூலும் பொருத்திவிடுவோம். இந்த விர்ச்சுவல் கீ ஆப்பை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து பாஸ்வேர்டை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். அந்த ஆப் மூலமாகவே உங்கள் காரை லாக், அன் லாக் செய்துகொள்ளலாம். உங்க போன் தொலைந்து போனாலோ அல்லது ரிப்பேர் ஆனாலோ பிரச்னையில்லை. இன்னொரு ஆண்ட்ராய்டு போனில் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, பாஸ்வேர்டை போட்டால் போதும்; அடுத்த கீ ரெடி. இதில் இருக்கும் இன்னொரு ஸ்பெஷல், உங்கள் கார் வெயிலில் நிற்கிறது. உடனே காருக்குள் ஏற முடியாத அளவுக்கு அனல் கக்கும் அல்லவா? இந்த ஆப் மூலமாக, வெளியில் இருந்துகொண்டே காரின் இக்னீஷனை இயக்கி, ஏ.சி-யை ஆன் செய்துகொள்ளலாம். கார் கூல் ஆனதும் நீங்கள் பயணிக்கலாம்’’ என்று அருண் நிறுத்த, கண்ணன் ஆரம்பித்தார்,

“அருண் ஏரியா சாஃப்ட்வேர் என்றால் நான் ஹார்டுவேர் பார்த்துக்கொள்கிறேன். பழைய கார்களுக்கு இந்த கான்செப்ட் செய்யும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், புதிய கார் வைத்திருப்பவர்கள் வாரன்ட்டி பிரச்னை வருமே என்று யோசிப்பார்கள். நாங்கள் கம்பெனி வொயரிங்கை கட் செய்யவே மாட்டோம். சின்னதாக ஓர் இடத்தில் பின் பொருத்துவதுதான். இன்னொரு ஸ்பெஷலும் இதில் உண்டு. கார் கண்ணாடியை ஏற்ற மறந்துவிட்டாலும் கவலை இல்லை. விர்ச்சுவல் கீ ஆப் இன்ஸ்டால் ஆகியிருக்கும் உங்கள் போனை எடுத்துக்கொண்டு காரைவிட்டு சிறிது தூரம் போனாலே ப்ளூடூத் கனெக்ஷன் கட் ஆகிவிடும். ஆட்டோ மேட்டிக்காக கார் லாக் ஆகி கார் கண்ணாடிகள் தானாக மூடிக்கொள்ளும். உங்கள் காரை டூப்ளிகேட் சாவி கொண்டு திருட முடியாது. எனக்கு விர்ச்சுவல் கீயும் வேண்டும்; நார்மல் கீ இக்னீஷனும் வேண்டும் என்பவர்கள், இரண்டையுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டையும் பயன்படுத்தும் காரில் டூப்ளிகேட் சாவி போட்டு உங்கள் கண்முன்பாகவே திருடிக்கொண்டுபோனால், இந்த ஆப் மூலமா (ப்ளூடூத் ரேஞ்ச் அளவுக்குள்) காரின் இக்னீஷனை உடனடியாக ஆஃப் செய்துவிடலாம்” என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.