சேல்ஸ்மேன் சொல்வதைக் கேட்கலாமா?

கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாகி விட்டது. ‘பேங்க் லோனா... நெட் கேஷா’ என்பதற்கு முன்னால், சேல்ஸ்மேன்களை எப்படி டீல் செய்வது என்று தெரிந்துகொண்டாக வேண்டும்.

ஹேட்ச்பேக்கா, செடானா? பெட்ரோலா, டீசலா? காரை ஓட்டப்போவது நீங்களா, இல்லை டிரைவரா... போன்ற கேள்விகளுக்கு நீங்கள் ‘ஓரளவு’ பதில் வைத்திருப்பீர்கள். ‘பார்ப்போம்; செட் ஆச்சுனா ஹேட்ச்பேக்... இல்லேனா மினி வேன் போயிடலாம்’ என்று இரண்டும்கெட்டான் நிலையில் ஒருவர் இருப்பதுதான் சேல்ஸ்மேன்களுக்கு கிடைக்கும் சைக்கிள் கேப். இந்த நிலையில் மினி வேனும் இல்லாமல், ஹேட்ச்பேக்கும் இல்லாமல் வேறு ஒரு காரை உங்கள் தலையில் கட்டுவதுதான் பெரும்பாலும் நடக்கும்.

‘‘நீங்க கேட்ட ரெட் கலர் காருக்கு அஞ்சு மாசம் வெயிட்டிங் பீரியட் இருக்குது. கறுப்பு சூப்பரா இருக்கும். ஒரே வாரத்துல கொடுத்துடலாம்’’ என்று அவர்கள் விருப்பத்துக்கு உங்களைச் சம்மதிக்க வைப்பதற்குத்தான் அவர்களுக்குச் சம்பளம். இங்கே டீலர்களை டீல் செய்வது என்பது ஒரு கலை.

எந்த பிராண்ட்?

உங்கள் பட்ஜெட், தேவையை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டால் போதாது. என்ன பிராண்ட் என்பதையும் முடிவு செய்யுங்கள். உதாரணத்துக்கு, 6 லட்ச ரூபாய் பட்ஜெட், பெட்ரோல் கார் என்று வைத்துக் கொள்வோம். மாருதி, ஹூண்டாய், ஃபோர்டு, ஃபியட், மஹிந்திரா, டாடா என்று கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களில் இருந்தும் 6 லட்சத்துக்கு பெட்ரோல் கார்கள் இருக்கின்றன. மோ.வி-யின் கார் மேளா பகுதியை ஒரு அலசு அலசினால் ஐடியா கிடைக்கும்.

பொதுவாக, அதிக டிமாண்ட் உள்ள, சர்வீஸ் நெட்வொர்க் நன்கு கிடைக்கின்ற பிராண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ‘‘நம்ம தெருவுலதான் ஏகப்பட்ட ஹூண்டாய் இருக்கே... யூனிக்கா தெரியணும்...’’ என்று அதிகம் விற்பனை ஆகாத, பிரீமியம் பிராண்ட் வேல்யூ கொண்ட காரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதைப் பற்றிய புரிந்துகொள்ளலுடன் இருப்பது அவசியம். அதேசமயம், நீங்கள் வாங்க விரும்பும் மாடலில் ஃபேஸ்லிஃப்ட் எதுவும் வரவிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த மாடலைத் தவிர்ப்பது நலம். காரணம், நம் வாசகர் ஒருவர் கணிசமான டிஸ்கவுன்ட்டில் KUV1OO காரை வாங்கிய அடுத்த இரண்டு வாரங்களில், ‘KUV1OO நெக்ஸ்ட்’ எனும் மாடல் வந்து, அவரைத் தூங்கவிடாமல் செய்துவிட்டது.

டெஸ்ட் டிரைவ் அவசியம்!

வெறுமனே ஆன்லைனில் வரும் விமர்சனங்களை மட்டும் நம்பிவிடாமல், நீங்கள் வாங்க நினைக்கும் காரை வாங்கிய நண்பர்கள்/உறவினர்களிடம் காரைப் பற்றி விசாரியுங்கள். ஒரே காருக்கு வெவ்வேறு விதமான ரெவ்யூஸ் கிடைக்கும். இதை மட்டும் நம்பிவிடாமல், களத்தில் இறங்குவது பெஸ்ட். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் டெஸ்ட் டிரைவ் செய்வது அவசியம். டிரைவிங் பொசிஷன், ஹேண்ட்லிங், பர்ஃபாமென்ஸ், வசதிகள் எல்லாவற்றையும் நீங்கள் கவனித்துக்கொள்ள, பின்னால் உங்கள் நண்பர்களை அமரச் செய்து ஃபீட்பேக் வாங்கலாம். மூன்று கார்கள் உங்கள் லிஸ்ட்டில் இருக்கிறது என்றால், மூன்றையும் டெஸ்ட் டிரைவ் செய்வது அவசியம்.

டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, பிடித்திருந்தால், உடனே புக் செய்ய கையெழுத்துப் போட்டுவிடாதீர்கள். வேறு பிராண்டுகள் உங்கள் பட்டியலில் இருக்கிறதென்றால், அவற்றையும் டெஸ்ட் செய்துவிட்டு, ‘யோசிச்சுச் சொல்றேன்’ என்று ஜகா வாங்கிவிட்டு, பொறுமையாக முடிவெடுக்க வேண்டும்.

வசதிகளைப் பாருங்க!

அடுத்து, என்ன வசதிகள் தேவை... எந்த வேரியன்ட் என்பதும் முக்கியம். உங்களுக்கு டெஸ்ட் டிரைவ் தரப்படும் கார், சில கார்களுக்கு ஸ்டீரியோவும், சைடு மிரர் இண்டிகேட்டர் மட்டும்தான் எக்ஸ்ட்ராவாக இருக்கும். இதற்கு நீங்கள் 40,000 வரை அதிகமாக எடுத்துவைக்க வேண்டியதிருக்கும். இதற்குப் பதிலாக, நீங்கள் முந்தைய மாடலைத் தேர்ந்தெடுத்து, கம்பெனியிலேயே ஸ்டீரியோ போட்டுக்கொள்வது பெஸ்ட். இதில் நிச்சயம் கணிசமாகச் சேமிக்கலாம்.

‘எனக்கு இது நிச்சயம் தேவை’ என்று உங்கள் மனதில் ஒரு கணக்கு இருக்கும். அதற்கு காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். உதாரணத்துக்கு, சில கார்களில் சன் ரூஃப் இருக்கும். சன் ரூஃப் உங்களுக்குத் தேவையா என்று பாருங்கள். ‘நிறைய அட்வென்ச்சர் ட்ரிப் அடிப்பேன். சன் ரூஃப் அவசியம்’ என்பவர்கள், யோசிக்க வேண்டாம். முடிவு உங்கள் சாய்ஸ்!

டீலர்களை டீல் செய்யுங்கள்!

டீலர்களை டீல் செய்வது, ஒரு கலை. குழந்தைகள் அடம்பிடித்து நம் மனசை மாற்றுவதுபோல், நம் தேவைகளை அறிந்துகொண்டு சாமர்த்தியமாக அவர்கள் வழிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுவார்கள், ‘‘இந்தத் தேதி வரைக்கும்தான் ஆஃபர். அதுவும் உங்களுக்காகத்தான் சார் எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்கோம்’’ என்றால், நிச்சயம் அது சேல்ஸ் ட்ரிக்தான். குறிப்பிட்ட தேதிக்குள் அந்த காரை விற்றால், அவர்களுக்கு இன்சென்ட்டிவ்ஸ் கிடைக்கலாம். அதன்பிறகும், இந்த ஆஃபர் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை, நீங்கள் அந்த காரை முதல் சர்வீஸ் விடும்போதுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

உதாரணமாக, நீங்கள் வேகன்-ஆர் காரைத் தேர்ந்தெடுத்து ஷோரூமுக்குள் வலது காலை எடுத்துவைத்து நுழைந்திருப்பீர்கள். வேகன் ஆரைப் பற்றிச் சொல்லிவிட்டு, கூடவே ஸ்டிங்ரே பற்றியும் பாசிட்டிவ்வாக எடுத்துரைப்பார்கள். ‘‘இரண்டுமே ஒரே இன்ஜின்தான் சார். 1 லிட்டர், 67bhp தான். ஆனா, பர்ஃபாமென்ஸ் அதிகம். வேகன்-ஆரைவிட ஹெட்லைட், பாடி கலர் பம்பர், சீட் எல்லாமே ஸ்டைலா இருக்கும். எடை அதிகம். அதனால் வேகன்-ஆரைவிட ஸ்டெபிலிட்டி சூப்பரா இருக்கும். அதான் ஸ்டிங்ரே காஸ்ட்லி. உங்களுக்காக ஸ்டிங்ரேவை வேகன்-ஆர் விலையிலேயே பண்ணித் தரலாம். மூணு வருஷம் வாரன்ட்டி வரும். வேகன்-ஆருக்கு இது வராது’’ என்று சொன்னால், நிச்சயம் இதுவும் மார்க்கெட்டிங் ட்ரிக்தான்.

புதிதாக கார் ஓட்டப் பழகும் நம் நண்பர் ஒருவருக்கு, சிவப்பு நிற ஆட்டோமேட்டிக் கார் வாங்க வேண்டும் என்பது கனவு. ‘யூஸ்டு கார் வாங்கலாமா? புது கார் வாங்கலாமா’ என்கிற டயலமாவிலேயே 6 மாதங்களைக் கடத்தியவர், ‘புதுசே எடுத்துடலாம்’ என்கிற முடிவுக்கு வந்து ஷோரூம் போயிருக்கிறார். ‘‘கரெக்ட். ஆட்டோமேட்டிக்தான் புதுசா பழகுறவங்களுக்கு செட் ஆகும். மலைப் பயணங்கள்லேயும் செமையா இருக்கும்’’ என்று முதலில் 5,000 ரூபாய் வாங்கி புக் செய்ய வைத்த சேல்ஸ்மேன், மறு வாரத்தில் ‘‘சார், ஆட்டோமேட்டிக்கில் நிறைய கம்ப்ளெய்ன்ட் சொல்றாங்க. வெயிட்டிங் பீரியட்டும் 6 மாசம். நீங்க ஆட்டோமேட்டிக் பதிலா, மேனுவலே பார்க்கலாமே. சிட்டிக்குள்ள செமையா இருக்கும். மைலேஜும் அதிகமா வரும். அப்படி இல்லைனா, நீங்க புக் பண்ணின அமௌன்ட் 5,000 ரூபாயை ரிட்டர்ன் பண்ணிடுறோம். ஆனா, ஒரு மாசத்துக்கு மேல ஆகும்!’’ என்று ஒரே போடாகப் போட்டு, அவரை மேனுவல் காரை புக் செய்யவைத்து டெலிவரியும் எடுக்க வைத்துவிட்டார்.

நம் அறியாமையை அல்லது உடனடியாக கார் வாங்க வேண்டும் என்ற பரவசத்தை சேல்ஸ்மேன்களிடம் வெளிக்காட்டினால், வெற்றி அவர்களுக்குத்தான். ‘‘அந்த ஷோரூம்ல இவ்வளவு கேஷ் டிஸ்கவுன்ட் ஃப்ரீ இன்ஷூரன்ஸ்லாம் வருதே... நீங்க பேசிட்டுச் சொல்லுங்க... நான் வெயிட் பண்றேன். எனக்கு ஒண்ணும் அவசரமில்லை’’ என்று இரண்டுநாள் கண்டுகொள்ளாமல் விட்டால், தானாக வழிக்கு வருவார்கள்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘ச்சீ.. இவ்வளவு மோசமானவங்களா சேல்ஸ்மேன்’ என்கிற முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். முடிந்தளவு சேல்ஸ்மேன்களிடம் கறாராகவும் இல்லாமல், அவர்கள் சொல்வதற்குத் தலையையும் ஆட்டாமல்... அவர்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதுதான் பெஸ்ட்.

(கார் வாங்கலாம்)