Published:Updated:

மாதத் தவணையா? மொத்தத் தொகையா?

மாதத் தவணையா? மொத்தத் தொகையா?
பிரீமியம் ஸ்டோரி
News
மாதத் தவணையா? மொத்தத் தொகையா?

தொடர் - கார் வாங்குவது எப்படி?தமிழ், படங்கள்: விநாயக்ராம், எஸ்.ரவிக்குமார்

சேல்ஸ்மேன்களின் டகால்ட்டி வேலைகளையெல்லாம் புரிந்து, இப்போது எந்தக் கார் வாங்குவது என்கிற முடிவுக்கு வந்திருப்பீர்கள். அதனால், எப்போதும் ஷோரூம்களில் பேரம் பேசத் தயங்கவே வேண்டியதில்லை. ‘ஷோரூம்ல போய் எப்படி பேரம் பேசுவது’ என்று சிலர் டிஸ்கவுன்ட் கேட்கத் தயங்கி, சேல்ஸ்மேன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டி விடுவார்கள். இப்படிச் செய்தால் நஷ்டம் நமக்குத்தான்.

டிஸ்கவுன்ட் கேட்கலாமா?

லட்சங்களாகச் செலவழித்து கார் வாங்கப் போவது நீங்கள். எனவே, நீங்கள் கேட்ட டிஸ்கவுன்ட் கிடைக்கவில்லையென்றால், வேறு ஷோரூம்களில் கிடைக்கும் டிஸ்கவுன்ட்டைப் பற்றிச் சொல்லுங்கள். ‘கொஞ்ச நாளாகும் சார்’ என்றால், ‘பரவாயில்லை; காத்திருக்கிறேன்’ என்று அலெர்ட் ஆறுமுகம் போல் டீல் செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வழிக்கு வருவார்கள். டிஸ்கவுன்ட் குறைவாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், ஆக்சஸரீஸ் கேட்கத் தயங்க வேண்டாம். 5 லட்ச ரூபாய் காருக்கு 5,000 ரூபாய் பெறுமான ஆக்சஸரீஸ் கொடுப்பதால், கம்பெனிக்குப் பெரிய நட்டம் வந்துவிடாது.

மாதத் தவணையா? மொத்தத் தொகையா?

எந்தக் கலர்?

கார் கலரைத் தேர்ந்தெடுப்பதிலும் சிலருக்குக் குழப்பங்கள் இருக்கும். வெள்ளை, கிரே - டீஸன்ட்டான கலர். இவைதான் உலகில் அதிகம் விற்பனையாகும் வண்ணங்கள். கறுப்பு வண்ணம் சிலருக்கு மிகவும் பிடிக்கும். கறுப்பு நிற காரில் கீறல் விழுந்தால், பளிச்செனத் தெரியும். இரவு நேரப் பயணங்களிலும் இது எதிர்வரும் வாகனங்களுக்கு விஸிபிளாக இருக்காது. இப்போது சிவப்பு நிற கார்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம். இதுதான் யூனிக்காக இருக்கும். சிவப்பு நிற ஹேட்ச்பேக்குகளுக்கு இருக்கும் அழகே தனி! ரீ-சேல் செய்யும்போதும், சிவப்பு நிறத்துக்கு அதிக டிமாண்ட் இருக்கும்.

லோனா, கேஷா?

காரைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. நீங்கள் மிடில் பட்ஜெட்காரர்கள் எனும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆப்ஷன் - காரை லோனில் எடுப்பது. கொஞ்சம் பணம் கொழிக்கும் பார்ட்டிகள் என்றால், உதாரணத்துக்கு காருக்கான மொத்தத் தொகையும் உங்கள் கைவசம் இருக்கிறது எனும் பட்சத்தில், ‘லோன் போட்டுடலாமா? நெட் கேஷ்லயே வாங்கிடலாமா’ என்கிற பெரிய குழப்பம் உங்கள் முன் கும்மியடிக்கும். இங்கே உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

‘கையில் காசு; வாயில் தோசை’ என்பது போல உடனடியாக முழுத் தொகையையும் செலுத்தி ஒருவர் கார் வாங்கினால், அது கம்பெனிக்கு நல்லதுதான். வாடிக்கையாளரின் கையில் இருக்கும் பணத்தை வாங்கி உடனடியாக கல்லாவில் போட கம்பெனிகள் டிஸ்கவுன்ட் போன்ற சில சலுகைகளைக் கொடுக்கலாம்.

கடன் வாங்கித்தான் கார் வாங்கப் போகிறீர்கள் என்றாலும் கம்பெனிக்கு அது நன்மைதான். ஏனெனில், அவர்கள் கைகாட்டும் நிதி நிறுவனங்களிடம் லோன் வாங்கச் சொல்லி சபலப்படுத்துவார்கள். தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஆகும் கால விரயத்துக்குப் பயந்து, நீங்கள் கார் கம்பெனிகள் சொல்வதற்குத் தலையாட்டி விட்டால், நன்மை கார் கம்பெனிகளுக்குத்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாதத் தவணையா? மொத்தத் தொகையா?

காரணம் - ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கும் ஷோரூமுக்கும் உள்ள உடன்படிக்கை.

‘‘லோனில் கார் எடுப்பது சிறந்ததா? ரொக்கம் கொடுத்து எடுப்பது சிறந்ததா?’’ டொயோட்டா ஃபைனான்ஸியர் புகழேந்தி இது பற்றிச் சொல்கிறார்.

‘‘உங்கள் கையில் 8 லட்ச ரூபாய் இருக்கிறது. காரின் முழு விலையையும் செலுத்தி கார் வாங்குகிறீர்கள் எனும்போது, உங்கள் சேமிப்பு அந்த காரில் லாக் ஆகிவிடுகிறது. அவசரம் என்று வரும்போது, கையில் பணம் இருக்காது. அப்போது அவசரத் தேவைக்காக நீங்கள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

அப்படியென்றால், லோன் வாங்கி கார் வாங்குவதுதான் சிறந்ததா?

லோனில் 10 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கினால், எக்ஸ்ட்ராவாக 3 லட்ச ரூபாய் வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

அதனால், காருக்கான பணத்தை மொத்தமாகச் செலுத்தி கார் வாங்கினாலும்  மாதந்தோறும் இ.எம்.ஐ கட்டுவதாக நினைத்துக்கொண்டு அந்தத் தொகையை  மியூச்சுவல் ஃபண்டிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டாகவோ செலுத்தி சேமித்து வந்தால், அதுதான் சிறந்த வழி. 

எனவே, என்னைப் பொறுத்தவரை, ரொக்கப் பணம் கொடுத்து எடுப்பதைவிட, EMI-யில் கார் எடுப்பதுதான் சிறந்த ஐடியா என்பேன்!’’ என்றார்.

- கார் வாங்கலாம்

கடனில் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

* இனிஷியல் தொகையை முடிந்தவரை அதிகமாக்கி, கடன் தொகையைக் குறைக்கலாம்.

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை தவணை செலுத்துவது போல வைத்துக்கொள்வது பெஸ்ட்.

சிலர் 7 ஆண்டுகள் வரை இழுப்பார்கள். இதனால், மாதத் தவணைக்கானத் தொகை குறைவதுபோல் தெரியும்; ஆனால், வட்டித் தொகை அதிகரிக்கும்.

ஒவ்வொரு மாதமும் ECS முறையில் உங்கள் வங்கித் தொகையில் இருந்து பணத்தை ஆட்டோமேட்டிக்காக எடுக்கும்படி சிஸ்டம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாதத் தவணையைத் தவறாமல் கட்டி, உங்கள் Cibil ஸ்கோரைக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த கடன் அப்போதுதான் சுலபமாகக் கிடைக்கும்.

முன்கூட்டியே கடனை அடைக்க முற்பட்டால், (ப்ரீ க்ளோஷர்) 2 முதல் 4 சதவிகிதம் வரை அபராதக் கட்டணம் வசூலிப்பார்கள்.

ஆண்டுக் கடைசியில் கார் வாங்காமல், புது வருடம் பிறந்த பிறகு எடுப்பது பெஸ்ட். காரின் உற்பத்தி ஆண்டு லேட்டஸ்ட்டாக இருக்கும் பட்சத்தில், ரீ-சேல் மதிப்பு அதிகமாகும்.

மொத்தத்தில், ‘நாடே கடனில்தான் இருக்கிறது. கார் வாங்கும் நாம் கடனில் இருப்பதில் தப்பொன்றுமில்லை’ என்பதுதான் துறை நிபுணர்களின் கருத்து.

கடனில் கார் வாங்குவதால் ஏற்படும் பாதகங்கள்....


லோன் ஓகே ஆன பிறகே, காருக்கான சேல்ஸ் பிராசஸ் துவங்கும் என்பதால், டெலிவரி காலம் தாமதமாகலாம்.

கடன் தவணை முடியாத பட்சத்தில், உங்கள் காரை விற்க முடியாது.

மாதத் தவணையா? மொத்தத் தொகையா?

அப்படியென்றால், ரொக்கப் பணம் கொடுத்து கார் வாங்குவதில் லாபம் இல்லையா? சில ப்ளஸ்கள் உண்டு.

பேங்க், கையெழுத்து, அஃபிடவிட் போன்ற தொல்லைகள் இல்லாமல், ஈஸியாக கார் டெலிவரி எடுக்கலாம்.

கார் உங்கள் பெயரில் இருப்பதால், ஏதோ ஒரு காரணத்துக்காக காரை விற்க வேண்டும் என்றால், உடனடியாக வேலை முடியும்.

Cibil, EMI போன்ற சிஸ்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தேவையில்லாமல் காருக்காக வட்டி கட்டுவது குறையும்.