கார் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் உலோகம், தேவை மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்துதான் இருக்கும். ஆனால், அந்தக் காரின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், பவர்ஃபுல் இன்ஜினைத் தாண்டி காரின் எடை குறைவாக இருப்பதும் அவசியம். இதனாலேயே ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் ஹைப்பர் பர்ஃபாமென்ஸ் கார்களின் கட்டுமானத்தில், அலுமினியம் - கார்பன் ஃபைபர் போன்ற விலை அதிகமான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதைப் பற்றிப் பார்ப்போம்.

1. கண்ணாடி

பெயருக்கு ஏற்றபடியே கண்ணுக்குத் தெரியாத, ஆனால் காரில் தனது இருப்பைக் காட்டுவது கண்ணாடிதான். முன்பக்க மற்றும் பின்பக்க விண்ட் ஷீல்ட், கதவுகள், பில்லர்களைத் தாண்டி, ஒரு காரின் பல இடங்களில் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது பிரதானமான பயன்பாட்டைத் தாண்டி, மீதமுள்ள இடங்களில் பாலி-கார்பனேட் போன்ற க்ளியர் பிளாஸ்டிக்தான் இடம்பெற்றுள்ளது. இது குறைவான உடையும் தன்மை மற்றும் எடைக் குறைப்புக்கு உதவுகிறது. முன்பக்க மற்றும் பின்பக்க விண்ட் ஷீல்ட் உடையாமல் இருப்பதைத் தடுக்க, அதன் உறுதித்தன்மையை அதிகரிக்கும் வகையில் Tempering செய்யப்படுகின்றன. இதன் பின்னர் 2 கண்ணாடி பரப்புக்கு இடையே, மெல்லிய பிளாஸ்டிக் அடுக்கு ஒன்று லேமினேஷனாகச் செய்யப்படும். இதனால், கண்ணாடி உடைவதற்கான சாத்தியங்கள் குறையும், உடைந்தாலும் அது கூர்மையான பாகங்களாகத் தெறிக்காது. மேலும், வெளியே இருக்கும் வெப்பம் - குளிர் - புறஊதாக் கதிர்களை, காருக்குள் நுழைவதைத் தடுப்பதில் பெரும்பங்கு கண்ணாடிக்கு உண்டு. கதவு மற்றும் பில்லர்களில் இருக்கும் கண்ணாடிகள், லேமினேட் செய்யப்படாமல்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விபத்து நேரத்தில் காருக்குள் இருந்து வெளியே தப்பிப்பதற்கு இவை துணைநிற்கின்றன.

2. அலுமினியம்

ஸ்டீலுக்கு அடுத்தபடியாக, கார் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உலோகம், அலுமினியம்தான். மென்மையான இந்த உலோகத்தின் கடினத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, மெக்னீஸியம் போன்ற உலோகங்களுடன் கலப்பு செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் காரின் பாடி தயாரிப்பில் முதலில் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் இன்ஜின் - சேஸி - வீல்கள் - உதிரிபாகங்கள் என காரில் அலுமினியத்தின் அளவு அதிகரித்துவிட்டது. இதற்கு எடைக் குறைப்பு, பர்ஃபாமென்ஸ், மைலேஜ் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். இதனால் ஸ்டீல் விலைக்கு அலுமினியம் வரும் நாள், வெகு தொலைவில் இல்லை.

3. கார்பன் ஃபைபர்

உலோகம் அல்லாத ஒன்று. ஆனால், கார் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கவர்ச்சியான மெட்டீரியல்தான் கார்பன் ஃபைபர். தளர்வாக இருக்கும் நெய்யப்பட்ட கார்பன் ஃபைபர், தேவைப்படும் வடிவத்தில் தயாரிக்கும் பொருட்டு, அதற்கான அச்சில் நிரப்பப்பட்டு, தொடர்ச்சியாக அதிக வெப்பநிலையில் வைத்திருப்பதால், அது இறுக்கமடைந்துவிடுகிறது. மிகவும் எடை குறைவாக இருந்தாலும், பலத்தில் பலமடங்கு கெத்து காட்டுவதுதான் கார்பன் ஃபைபரின் மிகப் பெரிய ப்ளஸ். மேலும் விபத்து ஏற்படும்போது, அதனால் உண்டாகும் ஆற்றலை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு உடையும் தன்மையைக் கொண்டிருப்பதால், பயணிகள் பாதுகாப்பிலும் இது டிஸ்டிங்ஷன் வாங்குகிறது.

அதிவேகத்தை மனதில் வைத்து தயாரிக்கப்படும் ரேஸ் பைக் மற்றும் ரேஸ் கார்களில், கார்பன் ஃபைபர் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால், பிஎம்டபிள்யூ மற்றும் லம்போகினி ஆகிய நிறுவனங்கள், இதை வெகுஜனப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. கார்பன் ஃபைபரைத் தேவைப்படும் வடிவத்தில் தகவமைப்பது, மிகவும் விலை அதிகமான செயல்முறை.

4. டைட்டானியம்

வாகனங்களுக்கான கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கவர்ச்சியான உலோகம், டைட்டானியம். அதிக வலிமை, நீடித்த ஆயுள், குறைவான எடை போன்ற சாதகமான தன்மையைக்கொண்டிருக்கும் இந்த உலோகத்தை, ஸ்பெஷலான வெல்டிங் வழியாகவே இணைக்க முடியும். அதிகப்படியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் திறன் இருப்பதால், ஹை-பர்ஃபாமென்ஸ் இன்ஜின்களில் மட்டுமே டைட்டானியம் பயன்படுத்தப் படுகிறது. அவற்றில் இருக்கும் வால்வ் மற்றும் வால்வ் ஸ்பிரிங் ஆகியவற்றை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

5. தங்கம்

மென்மையான மற்றும் எடை அதிகமான உலோகமாக இருப்பதால், காரின் இன்டீரியரை அழகுபடுத்துவதற்காகவே தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அடிப்படையில் வெப்பத்தைத் தடுக்கும் உலோகமாக இருப்பதால், பெரும்பான்மையான விலை அதிகமான கார்களின் இன்ஜின் பே-க்களில் தங்கம் இடம் பெறுகிறது.

6. நானோ தொழில்நுட்பம்

நானோ துகள்கள்... வருங்காலத்துக்கான தொழில்நுட்பத்தைக்கொண்ட நுண்ணிய அளவில் இருக்கும் மெட்டீரியல். தானாகச் சரிசெய்து கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், நானோ துகள்களால் செய்யப்பட்டிருந்த வாகனம் விபத்தினால் சேதமானாலும், உயர் அழுத்த மின்சாரத்தினால் அதனைப் பழைய வடிவமைப்புக்கே கொண்டு வரமுடியும். மேலும், நிறத்தை மாற்றக்கூடிய திறனும் இருப்பதால், நானோ துகள்களால் செய்யப்பட்ட வாகனம், எப்போதும் புதியது போலவே தோற்றமளிக்கும்.