ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ராக் அண்டு ரோல்! ரோல் பாடி ரோல்!

ராக் அண்டு ரோல்! ரோல் பாடி ரோல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ராக் அண்டு ரோல்! ரோல் பாடி ரோல்!

ஃபன் டிரைவ் / ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்வேல்ஸ், படங்கள்: தே.அசோக் குமார்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் பற்றி எல்லாத் திசைகளில் இருந்தும் ஏராளமான எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அதைப் போலவே ஏராளமான விமர்சனங்களும் கிளம்பியிருக்கின்றன.

ஃபோர்டு இதை CUV,  அதாவது காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள் என்கிறது. ஆனால் விமர்சகர்களோ, இதை காஸ்மெட்டிக் சர்ஜரி செய்யப்பட்ட ஃபிகோ என்றே குறிப்பிடுகிறார்கள். இது ஃபோர்டு சொல்வதைப் போல சியூவியா அல்லது விமர்சகர்கள் சொல்வது போல ஜஸ்ட் ஹேட்ச்பேக்கா அல்லது ஆக்டிவ் i20  போன்ற கார்களுக்குப் போட்டியாக வந்திருக்கும் குட்டி கிராஸ் ஓவரா?

இதைச் சாதாரண சாலைகளிலும், சமவெளிகளிலும் மட்டும் டெஸ்ட் செய்தால் இதன் அருமை புரியாது. வாருங்கள் சாம்பார் ஏரிக்கு என்று அழைப்பு விடுத்திருந்தது ஃபோர்டு!

ராக் அண்டு ரோல்! ரோல் பாடி ரோல்!

ஜெய்ப்பூரிலிருந்து சாம்பார் ஏரிக்கு ஃப்ரீஸ்டைலில் செல்லத் தயாரான நமக்கு, ஃபோர்டு கொடுத்த சவால் ஒன்றே ஒன்றுதான்.

சவால் எண் 1: வழியில் தென்படும் ஸ்பீடு பிரேக்கர் எதுவானாலும் வேகத்தைக் குறைக்காமல் அதைக் கடக்க வேண்டும்.

சவால் எண் 2: சாம்பார் ஏரியின் வறண்ட பாலை மணலில் வேகமாகத் திருப்பும்போது, வேகத்தைக் குறைக்கவே கூடாது.

இந்தச் சவால்கள் வாயிலாக அது நிரூபிக்க விரும்பிய விஷயங்கள் இரண்டு.

ராக் அண்டு ரோல்! ரோல் பாடி ரோல்!

ஃப்ரீஸ்டைலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மிமீ-தான் என்றாலும் இதன் சஸ்பென்ஷன் செயல்படும் விதம் - வேறு மாதிரி. அதனால், என்னதான் வேகமாக மேடு பள்ளங்களையும் ஸ்பீடு பிரேக்கர்களையும் கடந்தாலும் கார் அடிவாங்காது. அடுத்ததாக, இந்த காரில் பாடி ரோல் என்பது துளிகூட இருக்காது.

அன்றைய நாள் முழுக்க நம்மோடு சேர்ந்த மற்ற எட்டு ஃப்ரீஸ்டைல் கார்களோடு சாம்பார் ஏரி புகை மண்டலமாக்கும் அளவுக்குப் புழுதியைக் கிளம்பி விளையாடினோம். வேகமாகச் சென்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் எனப் பல வகைகளிலும் பல விதமான வேகங்களிலும் காரை ஓட்டி அனைவரும் விளையாடினோம். ஒரே ஒரு கார்கூட நிலைதடுமாறவில்லை.

ராக் அண்டு ரோல்! ரோல் பாடி ரோல்!

புதிய XUV 500...  புதிய வேகம்!

‘அறிமுகமானதில் இருந்து இன்றுவரை தன் செக்மென்டில் ஒரு கார் தொடர்ந்து ட்ரெண்ட் செட்டாராக இருந்து வந்திருக்கிறது என்றால், அது மஹிந்திராவின் XUV 500தான்’ இப்படி பெருமையாகச் சொன்னார் மஹிந்திராவின் ராஜன். மூன்றாவது தலைமுறை XUV 500 ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தும் விழாவின்போது, பேசிய அவர், ‘‘2011-ம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து இன்று வரை 2.32 லட்சம் XUV 500 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த வேகம் போதாது. இந்த வேகத்தை அதிகப்படுத்துவதுதான் புதிய XUV 500-ன் தலையாய நோக்கமாக இருக்கும்’’ என்றார்.