ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் / கார்/பைக்தமிழ்

ஏ.சி ஹெல்மெட்

விலை: ரூ. 2,500 முதல்...


வெயில் நேரங்களில் பைக்கில் போகும்போது வைஸரைத் திறந்துவிடலாம் என்றால், தூசு/மாசுப் பிரச்னை. இந்த நேரத்தில் குளுகுளு ஹெல்மெட் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்காக ஹெல்மெட்டில் ஏ.சி-யா பொருத்த முடியும்? ‘முடியும்’ என்று 2,500 ரூபாய்க்கு பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். ‘BluSnap’ எனும்  ஹெல்மெட்டை அறிமுகம் செய்திருக்கிறது.

ஆக்சஸரீஸ்

ஹெல்மெட்டின் மவுத் வென்ட்டுக்குப் பக்கத்தில் இந்தச் சின்ன ஏ.சி-யை ஸ்ட்ராப் கொண்டு பொருத்திவிடுகிறார்கள். வாட்டர் ரிஸர்வாயர், ஃபேன், ஆன்ட்டி-பேக்டீரியல் ஃபில்டர் இந்த மூன்றும்தான் இதில் பிரதானம். (எல்லாம் சேர்ந்து ஹெல்மெட்டின் எடை எக்ஸ்ட்ராவாக 250 கிராம் எடை கூடும்.) ரீ-சார்ஜபிள் பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஃபேன், குளுகுளுக் காற்றை - தாடையில் இருக்கும் சின்ன ட்யூப் மூலம் ஹெல்மெட்டுக்குள் சுற்றிவிடுகிறது. தாடை வழியாகக் கிடைக்கும் இந்தக் குளுகுளு காற்று, கொஞ்ச நேரத்தில் ஹெல்மெட்டின் உள்புறம் முழுவதும் பரவி, வியர்வைக்குத் தடா போட்டு விடும். 6 முதல் 15 டிகிரி வரை உள்ளே டெம்பரேடச்சர் கிடைக்கும் என்கிறது இந்நிறுவனம். இதனால் வியர்வைக்கு சான்ஸே இல்லை. ஏர் சர்க்குலேட் ஆவதால், சமயங்களில் இது பனியை விலக்கும் ‘டிஃபாகர்’ ஆகவும் செயல்படுமாம். டிஃபாகர் என்பது கார்களில் இருக்கும் அம்சம். மழை நேரங்களில் விண்ட்ஷீல்டில் ஏற்படும் பனியைச் சுத்தம் செய்து, விஸிபிளிட்டி கிடைக்கச் செய்வதுதான் டிஃபாகர்.

சிங்கிள் சார்ஜுக்கு 10 மணி நேரம் இந்த பேட்டரி நேரம் எடுத்துக் கொள்ளுமாம். நம் வீட்டில் ஏர் கூலரில் தண்ணீரை மாற்றுவதுபோல், இந்த வாட்டர் ரிஸர்வாயரில் உங்களுக்குத் தேவையானபோது, அல்லது இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு தடவை புதுத் தண்ணீரை நிரப்பிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஃப்ரெஷ் காற்று கிடைக்கும். இனி ‘Chill’ பயணம் ரெடி.

ரேட் ரெப்பெல்லென்ட்

விலை: ரூ. 750


நமது கார்களுக்கு பார்க்கிங் ஏரியா - நம் வீடோ, கொல்லைப்புறமோ என்றால், எலிகளின் பார்க்கிங் ஏரியா - நம் கார். இவை வொயர்களைக் கடித்துவிடுவதால், சர்வீஸ் செலவு மட்டுமல்ல; தேவையில்லாத ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆக்சஸரீஸ்

சிலர் பானெட்டில் மிளகுத் தூள், நாட்டுப் புகையிலையெல்லாம் வைப்பார்கள். காய்ந்த நிலையில் உள்ள நாட்டுப் புகையிலை, இன்ஜின் சூடான சமயங்களில் தீப்பிடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். என்னதான் பாதுகாப்பாக காரை நிறுத்தினாலும், எலிகள் வரத்தான் செய்யும். மார்க்கெட்டில் எலிகளை கட்டுப்படுத்த சில ரெப்பெல்லென்ட்கள் உள்ளன. ரோடன்ட் ரெப்பெல்லென்ட், ரேட் கில்லர், ரேட் ரெப்பெல்லென்ட், ரேட் பஸ்டர், ரேட் ரிலீஸ் கார்டு ரெப்பெல்லென்ட், ரோடென்ட் கன்ட்ரோல் என்று வெரைட்டியாக ஸ்ப்ரே முதல் ரெப்பெல்லென்ட் வரை கிடைக்கின்றன. 450 ரூபாயில் ஆரம்பித்து 2,000 ரூபாய் வரை விலைகொண்ட இவற்றில், உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து எலிகளை எலிமினேட் செய்யுங்கள்.

கார் வீல் ரிம் ஸ்க்ரப் பிரஷ்

விலை: ரூ. 300


சிலருக்கு காரைச் சுத்தம் செய்யும் பழக்கமே இருக்காது. ‘சர்வீஸ்ல பார்த்துக்கலாம்’ என்று விட்டுவிடுவார்கள். சிலருக்கு காரைத் தினசரி சுத்தம் செய்தால்தான் சோறே இறங்கும். அப்படிப்பட்ட க்ளீன் பார்ட்டிகளுக்கான ஆக்சஸரீஸ் மார்க்கெட்டில் வாக்குவம் க்ளீனர், கார் வாஷ் ஷாம்பூ என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. என்னதான் காரை மாங்கு மாங்கு எனச் சுத்தம் செய்தாலும், வீல்களைச் சுத்தம் செய்ய மட்டும் எக்ஸ்ட்ரா எனர்ஜி தேவைப்படும். வீல் ரிம்கள், டயர்களைச் சுத்தப்படுத்துவதற்கென்றே ஒரு ஸ்க்ரப் பிரஷ் இருக்கிறது. இதன் விலை ரூ.300-ல் இருந்து தொடங்குகிறது.

ஆக்சஸரீஸ்

டயர்களில் ஏற்படும் ரோடு கிரீஸ், அழுக்குகள் இவற்றை மேனுவலாக இந்த பிரஷ்ஷில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பார்ப்பதற்கு டாய்லெட் பிரஷ் போல் இருக்கும் இது ரப்பரால் செய்யப்பட்டது என்பதால், வீல் ரிம்களில் ஸ்க்ராட்ச் விழுமோ என்கிற கவலை வேண்டியதில்லை. பம்பர், வீல், டயர், ஃபெண்டர் என்று எல்லாவற்றையும் இதில் சுத்தம் செய்யலாம் - கார் பாடியைத் தவிர!