Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

Published:Updated:
மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

எக்கோஸ்போர்ட்டின் புது வரவுகள்!

எக்கோஸ்போர்ட்டில் இரண்டு வேரியன்ட்களை ரிலீஸ் செய்துள்ளது ஃபோர்டு. 1.5 டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், 123 bhp பவருடன் ‘Titanium Plus’ எனும் வேரியன்ட்டில் Signature Edition வெளிவந்திருக்கிறது. 1.5 லி, 100 bhp பவர் கொண்ட டீசல் இன்ஜினும் உண்டு. அசத்தலான சன்ரூஃப், ஸ்பாய்லர், 17 இன்ச் வீல், சென்டர் கன்ஸோல் என்று வெளியேயும் உள்ளே என ஏகப்பட்ட மாற்றங்கள். ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்டும் கொடுத்துள்ளார்கள். கூடவே, ரொம்ப நாட்களாக நிறுத்தி வைத்திருந்த 1.0 லி எக்கோபூஸ்ட் இன்ஜினை, ‘S’ எனும் வேரியன்ட்டில் புகுத்தியிருக்கிறது ஃபோர்டு. 125 bhp பவர் கொண்ட இது பர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்கு நல்ல தீனி போடும்.

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய ஹார்லி பைக்ஸ் வாங்கலாம்!

இந்தியா முழுக்க ஹார்லிக்கு மொத்தம் 27 டீலர்ஷிப்கள் உண்டு. இந்த ஆண்டுக்குள் 30 டீலர்ஷிப்கள் ஆக்கப் போகிறார்களாம். சென்னையிலும் புது ஷோரூம் வந்துவிட்டது. விஷயம் அதுவல்ல; இளசுகளுக்கு ஹார்லி பைக் வாங்க ஆசை இருக்கும்; ஆனால் காசு இருக்காது. அதற்காக யூஸ்டு ஹார்லி பைக்குகளை தனது ஷோரூமிலேயே விற்க முடிவெடுத்துள்ளது ஹார்லி. ஆனால் வாரன்ட்டி, சர்வீஸ் போன்ற விஷயங்கள் எதுவும் பழைய பைக்குகளுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரெடியா இருங்க; குறைந்த விலையில் ஹார்லி வாங்குங்க!

மோட்டார் நியூஸ்

ஒத்தையாக இல்லை; கத்தையாக!

உலகின் முதல் 41 டன் டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தி, 2019-ம் ஆண்டைத் துவங்க விருப்பதாகச் சொல்லியிருக்கிறது அசோக் லேலாண்டு. இந்த டிப்பர் லாரியை ஒத்தையாக இறக்காமல்... 320 bhp பவர் தரும் நெப்ட்யூன் இன்ஜின், 10 டன் குரு லாரி, அதிக பவர் கொண்ட டிராக்டர் மற்றும் இந்த வாகனங்களின் 6x4, 8x4 மாடல்கள் என கத்தையாக 40 புதிய வாகனங்களைக் கூடவே களமிறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் 6 மாதங்களில் புதிய பேட்டரி எலெக்ட்ரிக் பஸ்ஸையும் களமிறக்கப் போவதாக அசோக் லேலாண்ட் தலைவர் வினோத் தாசரி கூறியுள்ளார்.

மோட்டார் நியூஸ்

க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!

மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் இருக்கிறது க்ரெட்டா. 1.4, 1.6 பெட்ரோல் மற்றும் 1.6 லி டீசல். க்ரோம் ஃபினிஷ் கிரில்லையும் அலாய் வீல்களையும் பார்த்தவுடனே க்ரெட்டாவில் ‘ஏதோ மாறியிருக்கு’ என்று கண்டுபிடித்துவிடலாம். பழைய ஆரம்ப மாடலில் காற்றுப்பைகளும் ஏபிஎஸ்-ஸும் ஸ்டாண்டர்டு ஆப்ஷன் கிடையாது. இனி வரும் க்ரெட்டாவில் இவை இரண்டும் டீஃபால்ட் வசதிகள். 17 இன்ச் அலாய், புரொஜெக்டர் ஹெட்லைட், AVN இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு டிரைவர் சீட், சன் ரூஃப் என எல்லாமே பிரீமியம் ரகம்.

மோட்டார் நியூஸ்

ஆனால், எஸ்யூவி என்று விளம்பரப்படுத்தப்படும் க்ரெட்டாவுக்கு, 4வீல் டிரைவ் மற்றும் பின் பக்க டிஸ்க்கை மட்டும் இன்னும் ஏனோ தர மறுக்கிறது ஹூண்டாய்!

மோட்டார் நியூஸ்

யாவருக்கும் யாரீஸ்!

“இந்த செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் முதல் மூன்று கார்களில் நிச்சயம் யாரிஸும் இடம் பிடிக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் டொயோட்டாவின் துணைத் தலைவர் பத்மநாபா. “யாரிஸூக்கு புக்கிங்கைத் துவக்கிய ஒரு மாதத்துக்குள்  1,000 கார்களை டெலிவரி செய்துவிட்டோம். எனவே, யாரிஸ் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்துத் தயாரித்து வருகிறோம். இதனால் நிச்சயம் வெயிட்டிங் பீரியட் குறையும். நீங்கள் இதைப் படிக்கும்போது சுமார் 4,000 கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியே ஆகிவிட்டிருக்கும். யாரிஸின் எல்லா வேரியன்டுகளுக்குமே CVT ஆப்ஷன்ஸ் இருப்பதால், கணிசமான அளவு பெண் வாடிக்கையாளர்களையும் கவரும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

எந்த வேரியன்ட்டாக இருந்தாலும் கட்டாயமாக 7 காற்றுப்பைகள், ABS, EBD,  நான்கு வீல்களுக்குமே டிஸ்க் பிரேக்ஸ், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ESC, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருப்பதும், பின் சீட்டுக்கு ரூஃப் மவுன்டட் ஏ.சி வென்ட் மற்றும் சமிக்ஞைகளால் இயங்கக்கூடிய Infotainment System ஆகியவை பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கிறது” என்றார் பெருமிதத்துடன்.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism