Published:Updated:

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

விலை: 6.43 - 10.24 லட்சம் (சென்னை ஆன்ரோடு)ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா அமேஸ்வேல்ஸ் - படங்கள்: கே.ராஜசேகரன்

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

விலை: 6.43 - 10.24 லட்சம் (சென்னை ஆன்ரோடு)ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா அமேஸ்வேல்ஸ் - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013-ஆம் ஆண்டு, அமேஸ் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிரியோ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டது.

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

ஆனால், இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா அமேஸ், புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டு இருப்பதுடன் இனி வரும் பல ஹோண்டா கார்களும் இதே பிளாட்ஃபார்மில்தான் தயாராகப் போகிறது. வரும் காலத்தில் மேலும் கடுமையாகப் போகும் க்ராஷ் டெஸ்ட் விதிகளைத் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவுக்கு இப்போதே அமேஸ் தயாராகி விட்டது என்று ஹோண்டா அதிகாரிகள் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். அமேஸைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் - ஹை டென்ஸில் ஸ்டீல் என்பதால், இது முன்பைவிட உறுதியானதாக இருக்கும். அதே சமயத்தில் எடை குறைவானதாக இருக்கும். ஆம், பழைய அமேஸைவிட புதிய அமேஸ் 40 கிலோ எடை குறைவு.   இத்தனைக்கும் அமேஸின் வீல் பேஸ் 65 மிமீ அதிகமாகியிருக்கிறது. அதேபோல, இதன் நீளமும் அகலமும், அதிகரித்திருக்கின்றன. இது பார்வைக்கும் நன்றாக தெரியும் விதத்தில் வெளிப்புறம் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதனாலேயே இதன் 175/65 R15 டயர்கள் சிறிதாகத் தெரிகின்றன. C வடிவத்தில் இருக்கும் டெயில் லைட், சிவிக் போன்ற ஒரு அந்தஸ்த்தை இதற்குக் கொடுக்கிறது.

அமேஸின் பேனட், மேல் நோக்கித் தூக்கப்பட்ட ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருப்பது காருக்குப் புதிய முகத்தைக் கொடுத்திருக்கிறது. ‘பிரியோவில் ஒரு டிக்கியைச் சேர்த்து அமேஸ் என்று பெயரிட்டு விற்கிறார்கள்’ என்று யாரும் அமேஸை இனி விமர்சிக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

உள்ளலங்காரம்

 முன்பைவிட அமேஸ் இப்போது அதிக இட வசதியுள்ள காராக மட்டுமல்ல…கவர்ச்சியான காராகவும் மாறியிருக்கிறது. காரின் உள்ளலங்காரத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்ஸின் தரம் மேம்பட்டிருக்கிறது. டச் ஸ்கிரீனில் ஆப்பிள் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உண்டு. சாட்டிலைட் நேவிகேஷன் இல்லாமல் இருக்குமா... அதுவும் இருக்கிறது. முன் சீட் பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட்டை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதி இப்போது சேர்ந்திருக்கிறது. ஹெட் ரூம், லெக்ரூம், ஷோல்டர்ரூம் என்று எதிலும் முன்பக்க சீட் பயணிகளுக்குக் குறை இல்லை. பின்பக்க சீட்டுகளும் பழைய அமேஸைப் போலவே தாராளமானதாக இருக்கின்றன. சரியான கோணத்தில் பின் சீட்டுகளின் சாய்மானம் இருப்பது வசதியாக இருக்கிறது. காலை நீட்டி மடக்கவும் போதுமான இடம் இருக்கிறது.

பின் சீட்டுகளுக்கு என தனியாக ஏசி வென்ட் இல்லை. ஆனால், ஏ.சி கம்ப்ரஸரின் திறன் மேம்பட்டிருப்பதால், பின் சீட்டுகளுக்கும் ஏ.சி காற்றின் குளிர் பரவிவிடுகிறது.

க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்மென்ட், கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளும் உண்டு. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் பேடில் ஷிஃப்டர் உண்டு. ABS, EBD, 2 காற்றுப்பைகள், குழந்தைகளின் பாதுகாப்புக்கான isofix சீட் ஆகியவை எல்லா வேரியன்ட்டுகளுக்கும் உண்டு. பாட்டில், போன் போன்ற விஷயங்களை வைக்க காரில் போதுமான இடம் இருக்கிறது. ஆனால், ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கினால், க்ளோவ் பாக்ஸ் தானாகவே திறந்துகொள்கிறது. காரின் டிக்கி 20 லிட்டர் பெரிதாகியிருக்கிறது. அதாவது, டிக்கியின் கொள்ளளவு இப்போது 420 லிட்டராக  உயர்ந்திருக்கிறது.

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

இன்ஜின்

பெட்ரோல், டீசல், பெட்ரோல் CVT, டீசல் CVT என்று நான்கு விதமான ஆப்ஷன்களை ஹோண்டா கொடுக்கிறது.

100 bhp திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் மேனுவல், முந்தைய அமேஸைப் போலவே நாம் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறது. காரின் வேகம் கூடக் கூட தேவைக்கு ஏற்ப சக்தி சீராக அதிகரிக்கிறது. 1,800 rpm-ஐ தாண்டியதும் சக்தி மேலும் பிரவாகம் எடுக்கிறது. 3,800 rpm வரை கேட்கக் கேட்க உடனுக்குடன் சக்தி கிடைக்கிறது. இன்ஜின் சத்தத்தையும் அதிர்வுகளையும் கட்டுப்படுத்த ஹோண்டா எடுத்திருக்கும் முயற்சிகள் நல்ல பலன் கொடுத்திருப்பதை உணர முடிகிறது. ஐந்து கியர்களைக் கொண்ட கியர்பாக்ஸ் இயக்குவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது. கிளட்சில் எந்தப் பிரச்னைகளும் இல்லை. இப்போது டீசல் CVT மாடலுக்கு வருவோம். ஹோண்டாவுக்கு மட்டுமல்ல, இந்த செக்மென்ட்டில் டீசல் CVT ஆப்ஷன் என்பது இதில்தான் முதல்.  டீசல் மேனுவலைவிட இதில் 20 சதவிகிதம் சக்தியும் டார்க்கும் குறைவு. அதாவது, இதில் வெளிப்படுவது 80bhp திறனும், 16 kgm டார்க்கும்தான். ஆனால், ஓட்டும்போது இந்தக் குறை தெரியவில்லை. CVT அற்புதமாக வேலை செய்வதால், கேட்ட மாத்திரத்தில் கேட்ட அளவுக்கு சக்தி தங்கு தடையில்லாமல் கிடைக்கிறது.

பெட்ரோல் மேனுவல் அமேஸைப் பொறுத்தவரை, இதில் இருப்பதும் 90 bhp திறனை வெளிப்படுத்தக்கூடிய அதே 1.2 லிட்டர் கொண்ட 4 சிலிண்டர்  இன்ஜின்தான். நகர்புறத்தில் ஸ்மூத்தாகவும் சத்தமில்லாமலும் இயக்குவதற்கு இது வசதியாக இருக்கிறது. ஆனால், பழைய அமேஸைப் போலவே மிட் ரேஞ்சில் இது சக்தி போதாமல் திணறுகிறது. நான்காவது கியரில் ஓவர்டேக் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் இந்தக் குறை வெளிப்படுகிறது. நல்ல மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 4 மற்றும் 5-வது கியர்களை வடிவமைத்திருக்கும் விதத்தினால்தான் இந்தக் குறை. இதன் கியர்பாக்ஸ் இயக்குவதற்கு ஈஸியாக இருந்தாலும், பெட்ரோல் அமேஸிலும் CVT ஆப்ஷன் உண்டு. இந்த வேரியன்டில் பேடில் ஷிஃப்டர் உண்டு. அதேபோல, தேவைப்படும்போது S என்கிற ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாறிக்கொள்ளும் வசதியும் இந்த வேரியன்ட்டில் உண்டு.

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

சஸ்பென்ஷன்:

பழைய அமேஸைவிட மேடு பள்ளமான சாலைகளை புதிய அமேஸ் நன்றாகவே சமாளிக்கிறது. ஆனால், குறைந்த வேகங்களில் பயணிக்கும்போது சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருக்கிறது. வேகம் கூடக் கூட இந்தக் குறை மறைந்து விடுகிறது. டிக்கி முழுக்க பெட்டி படுக்கைகளை ஏற்றிக்கொண்டு நான்கு பேர் பயணிக்கும்போது ஸ்பீட் பிரேக்கரில் இடிக்கின்றன.

டிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்!

கலம், நீளம், வீல்பேஸ் என்று எல்லா விதத்திலும் அமேஸ் வளர்ந்திருக்கிறது. முன்பைவிட ஸ்மூத்தாகவும் சத்தமில்லாமலும் இயங்குகிறது. டீசல் CVT தான் இதன் ஹைலைட்! ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும் இந்த வேரியன்ட் திறன் படைத்ததாகவும் இருக்கிறது. டச் ஸ்கிரீன் ஆப்ஷன் இருக்கும்  VX வேரியன்டில் இந்த CVT ஆப்ஷன் இல்லை என்பது குறை. மாருதியின் டிசையர் உடன் போட்டி போடும் அளவுக்கு ஹோண்டா, அமேஸின் விலையை நிர்ணயித்திருக்கிறது.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism