Published:Updated:

ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!

ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மினி கூப்பர் Sதொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மினி கூப்பர் Sதொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

Published:Updated:
ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!
ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!

சொகுசு கார்களை ஒப்பிடும்போது, பார்க்க மிகச் சிறிதாகத் இருந்தாலும், மினி கூப்பரிடம் எல்லோருக்கும் பிடித்தது, அதன் ஸ்டைல் மற்றும் ஃபன் டிரைவிங்தான். இது எல்லா மினியிலும் இருப்பதால், புது மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் நிச்சயம் அதற்குக் குறை வைக்காது. இதற்காகவே, நூடுல்ஸ் போல வளைவு நெளிவான மலைப் பாதைக்கு காரைக் கொண்டுபோனோம். போகும் வழியில் மினி கூப்பரின் 192 bhp பவரைச் சோதிக்க சில நேர் பாதைகளும் கிடைத்தன.

ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளைவுகளில் முரண்டுபிடிக்காமல் அசால்ட்டாகவும், நேர் பாதைகளில் 10 நாள் பசிக்குப் பாயாசம் கிடைத்ததுபோலவும் பாய்ந்து சென்றது கூப்பர் S. காரை விரட்டி ஓட்டுகையில் பழைய கூப்பரில் இல்லாத சில வித்தியாசங்கள் தெரிந்தன. வளைவுகளில் முந்தைய காரைவிட பேலன்ஸ் குறைவு. ஆனால், ஸ்பீடுபிரேக்கர்களை பதமாகக் கடக்கிறது. அதிக வேகங்களில் முன்பை விட சொகுசாக உள்ளது. பின்பக்கம் பேலன்ஸ் குறைவு என்பதால், வளைவுகளிலும் ஆக்ஸிலரேட்டரில் ஒரு கால் தேவை. ஸ்டீயரிங் அதிவேகமாக உள்ளதால், பார்த்துப் பதமாகக் கையாள வேண்டியுள்ளது. திருப்பங்களில் கரடுமுரடாகவும், குதிக்கவும் செய்கிறது. நமக்கு ஓட்டக் கிடைத்தது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான்.

ஆட்டோமேட்டிக்கைவிட மேனுவல் காரில்தான் டிரைவிங் அனுபவம் சுகானுபவம். இன்ஜினில் புதிய ப்ரெஷர் இன்ஜெக்டர், எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் டர்போ சார்ஜர் இணைவதுதான் இதற்குக் காரணம். இன்ஜின் திறனைப் பொறுத்தவரை அதே 192bhp பவரும் 28kgm டார்க்கும்தான். ஆனால், குறைந்த இன்ஜின் வேகத்திலேயே அதிக பவர் கிடைத்து விடுகிறது. இதனால், மிட் ரேஞ்ச்க்குப் போகும்போது இன்னும் கொஞ்சம் வேகம் கிடைக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்!

இந்தியாவுக்கு வரும்போது, தற்போது இருக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்குக்குப் பதிலாக ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸ் வரும் என்பதால் வேகம் கொஞ்சம், ஸ்மூத்னஸ் கொஞ்சம் சேர்ந்து பெரிய கார்களுக்கு டஃப் கொடுக்கப்போகிறது கூப்பர் S. ஃபேஸ்லிஃப்ட் என்றால், வெளித்தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் எப்படி? புது LED ஹெட்லைட், பிரிட்டிஷ் கொடியை மடித்து வைத்தது போன்ற டிசைனில் இருக்கும் டெயில்லைட் எனப் பார்த்த உடனேயே மாற்றங்கள் தெரிந்துவிடும். காரின் உள்ளே, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் என புது அம்சங்கள் சேர்ந்துள்ளன. கேபின் தரமும் உயர்ந்துள்ளது. புது கஸ்டமைசேஷன் வசதியாக, ஆன்லைனில் ஆர்டர் செய்தால், உங்கள் லோகோவையும், பெயரையும் 3D ப்ரின்ட் அடித்து டேஷ்போர்டு, பக்கவாட்டுப் பகுதி போன்றவற்றில் பொருத்திவிடுகிறார்கள். Puddle லைட்டில்கூடப் பெயர் வரும்படி தருகிறார்களாம். மாற்றங்களில் மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் பெரிய அடியை எடுத்து வைக்கவில்லை என்றாலும், புது வசதிகளும், அட்டகாசமான டிரைவிங் அனுபவமும் இந்த கூப்பரை இன்னும் சூப்பராக மாற்றுகிறது. இந்தியாவில் தீபாவளி சரவெடியாக வரப்போகிறது ஃபேஸ்லிஃப்ட் கூப்பர் S.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism