Published:Updated:

லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?

லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் டூஸான் AWDதொகுப்பு: ராகுல் சிவகுரு

லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் டூஸான் AWDதொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?

ஹூண்டாய் டூஸான்... க்ரெட்டா அளவுக்கு அதிரடி காட்டாவிட்டாலும், விற்பனையில் இது ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், 20 லட்ச ரூபாய்க்கு அதிகமான எஸ்யூவியில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதியான 4 வீல் டிரைவ் சிஸ்டம் இதில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைச் சரிசெய்யும் விதமாக, டூஸானின் டாப் வேரியன்ட்டான GLS வேரியன்டை AWD வசதியைச் சேர்த்துவிட்டது ஹூண்டாய். முன்பு டீசல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைத்த GLS வேரியன்ட்டுக்குப் பதிலாக, இந்த மாடலை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 25.44 லட்ச ரூபாய்.

லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?

பெரும்பான்மையான நேரத்தில் முன்பக்க வீல்களை மனதில் வைத்தே செயல்பட்டாலும், பின்பக்கச் சக்கரங்களுக்கு பவர் அல்லது கூடுதல் கிரிப் தேவைப்படும்போது, காரின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. மேலும், AWD Lock இருப்பதால், ஒரே பட்டன் மூலமாக முன்பக்க மற்றும் பின்பக்க வீல்களுக்கு 50:50 விகிதத்தில் பவர் மற்றும் டார்க் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிஸென்ட் கன்ட்ரோல், ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல் ஆகியவை இருப்பதால், டூஸானில் துணிந்து ஆஃப் ரோடிங் மேற்கொள்ளக்கூடிய நம்பிக்கைக் கிடைத்துவிடுகிறது.

இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 185bhp பவர் மற்றும் 40kgm டார்க், ஆஃப் ரோடிங்கில் கச்சிதமாகக் கைகொடுக்கிறது. இதனால் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்தின் துணையின்றி, அதிக வேகத்தில் காரை லாஞ்ச் செய்வது சீரான அனுபவமாக மாறியிருக்கிறது. ஆனால், இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு, பேடில் ஷிஃப்ட்டர்கள் வழங்கப்படாதது நெருடல். 2 வீல் டிரைவ் மாடலைவிட 4 வீல் டிரைவ் மாடலின் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக மாறியிருப்பதால், திருப்பங்களில் செல்லும்போது பாடி ரோல் ஆவது குறைந்திருக்கிறது.

இன்ஜின் பவர்ஃபுல்லாக இருக்கிறது; ஸ்டீயரிங் போதுமான எடையுடன் இருக்கிறது; ஆனால், டூஸான் இன்னமும் ஃபேமிலிக்கான சொகுசு எஸ்யூவியாக இருக்கவே விரும்புகிறது. சிறப்பான குஷனிங், இடவசதி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சாய்மானம் என இருக்கைகள் செமையாக ஸ்கோர் செய்கின்றன. பவர்டு டிரைவர் சீட், டிரைவிங் மோடுகள், தானாகத் திறக்கக்கூடிய டெயில் கேட், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே உடனான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என வசதிகளிலும் சொல்லியடிக்கிறது டூஸான். ஆனால், விலை குறைவான கார்களில் இருக்கும் சன் ரூஃப், முன்பக்கப் பயணிக்கான இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி இல்லாதது மைனஸ்.

ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் (புதிய அறிமுகம்) என டூஸான் இருக்கும் இதே செக்மென்ட்டில் சிறப்பான மாடல்கள் இருக்கின்றன. என்றாலும், டூஸான் எஸ்யூவியை வாங்கும் முடிவில் இருப்பவர்களுக்கு, ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட மாடல் நல்ல சாய்ஸாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism