Published:Updated:

ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

விலை: ரூ 7.74 லட்ச ரூபாய் - 10.46 லட்ச ரூபாய் (சென்னை எக்ஸ்-ஷோரூம்)ஃபர்ஸ்ட் டிரைவ் - விட்டாரா பிரெஸ்ஸா AMTதொகுப்பு: ராகுல் சிவகுரு

ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

விலை: ரூ 7.74 லட்ச ரூபாய் - 10.46 லட்ச ரூபாய் (சென்னை எக்ஸ்-ஷோரூம்)ஃபர்ஸ்ட் டிரைவ் - விட்டாரா பிரெஸ்ஸா AMTதொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!
ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

காம்பேக்ட் எஸ்யூவிகளில் இது ஆட்டோமேட்டிக் காலம். ஆம்! கடந்த ஆண்டில் TUV3OO இந்த ட்ரெண்டைத் துவக்கிவைத்திருந்தாலும், பின்னர் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் - டாடா நெக்ஸான் என வரிசையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் சூடுபிடிக்கத் தொடங்கியது. எல்லாரும் பரபரப்பாக இருக்கும்போது, மாருதி சும்மா இருக்குமா என்ன? இதோ, விட்டாரா பிரெஸ்ஸாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வந்துவிட்டது.

90bhp பவர் மற்றும் 20kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருந்த 5 ஸ்பீடு கியர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டே AMT கியர்பாக்ஸை தயாரித்திருக்கிறது மாருதி சுஸூகி. இந்த வகை கியர்பாக்ஸ்களில் பெரும் பிரச்னையாக இருந்த Jerkiness, இதில் பெருமளவு குறைந்திருக்கிறது. மேலும் Creep வசதி இருப்பது, நெரிசல்மிக்க டிராஃபிக்கில் பெரிய ப்ளஸ். தவிர, ஆக்ஸிலரேட்டரில் மிதமாக பலத்தைக் காட்டும்போது, எந்தவித இடர்பாடும் இல்லாமல் கியர்கள் ஸ்மூத்தாக மாறுகின்றன. ஆனால், திடீரென காரின் வேகத்தைக் கூட்ட முயற்சிக்கும்போது, தானாகவே சரியான கியருக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுவதை உணர முடிகிறது. மிட் ரேஞ்ச் அதிரடியாக இருப்பதால், 2,300 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகு ரெட்லைன் வரை பர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்கிறது. இந்நேரத்தில் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்பது நெருடல்.

ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

AMT ஆப்ஷன் கொண்ட மற்ற மாருதி சுஸூகி கார்களைப் போலவே, இங்கும் மேனுவல் மோடு இருக்கிறது. இங்கே நாமாக கியரை மாற்றாத வரை, அதிக ஆர்பிஎம்மிலும் அதே கியரில் அப்படியே காரை ஓட்ட முடிகிறது. ஆனால், இந்த மோடில், கியர்பாக்ஸ் செயல்படும் விதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. AMT கார்களில் இருக்கும் அதே பிரச்னை, விட்டாரா பிரெஸ்ஸாவிலும் இருக்கிறது. அதாவது, சரிவான இடத்தில் கார் பின்னோக்கிச் செல்வது; இங்கே கார் சில அடிகள் பின்னோக்கிச் சென்ற பிறகே, மீண்டும் தானாக சரிவில் இறங்குவதைத் தவிர்க்கிறது. ரிவர்ஸ் எடுப்பது மற்றும் பார்க் செய்வதில், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் மாறியிருந்தாலும், காரின் ஓட்டுதலில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, குறைவான வேகங்களில் செல்லும்போது கார் இறுக்கமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், அதிக வேகங்களில் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது இந்த செட்-அப்தான் காரின் நிலைத்தன்மைக்குக் கைகொடுக்கிறது. கேபினிலும் கியர் லீவரைத் தாண்டி, எந்த வித்தியாசமும் தெரியவில்லை. மற்றபடி ஸ்டோரேஜ் ஸ்பேஸ், இடவசதி, சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மனநிறைவைத் தருகிறது விட்டாரா பிரெஸ்ஸா.

ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

AMT ஆப்ஷனை வழங்கிய கையுடன், விட்டாரா பிரெஸ்ஸாவின் கலர் ஆப்ஷன் மற்றும் வேரியன்ட்களில் சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. 2 காற்றுப்பை, ஏபிஎஸ், ISOFIX ஆகிய பாதுகாப்பு வசதிகள், அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்ட் ஆகியிருக்கிறது. ஆரஞ்ச் பாடி கலர், கறுப்பு நிற அலாய் வீல்கள் புதிது. VDi, ZDi, ZDi+ ஆகிய 3 வேரியன்ட்களிலும், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் AMT மாடல்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் வெறும் 50,000 ரூபாய் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 6 ஸ்பீடு AMT, டிரைவிங் மோடுகள், பவர்ஃபுல் டீசல் இன்ஜின் என டாடா நெக்ஸான், இந்த காருக்குக் கடும் சவால் அளிக்கும் எனத் தோன்றுகிறது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism