Published:Updated:

யெட்டியின் மறுபிறவி!

யெட்டியின் மறுபிறவி!
பிரீமியம் ஸ்டோரி
யெட்டியின் மறுபிறவி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஸ்கோடா கரோக்தொகுப்பு: தமிழ்

யெட்டியின் மறுபிறவி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஸ்கோடா கரோக்தொகுப்பு: தமிழ்

Published:Updated:
யெட்டியின் மறுபிறவி!
பிரீமியம் ஸ்டோரி
யெட்டியின் மறுபிறவி!
யெட்டியின் மறுபிறவி!

யெட்டி நினைவிருக்கிறதா? ஒரு படத்தில் நடித்துக் காணாமல் போன ஹீரோயின் மாதிரி, 7 ஆண்டுகளில் 5,000 கார்கள்கூட விற்பனையாகாமல் மார்க்கெட்டை விட்டு மறைந்துபோன யெட்டி, நிஜமாகவே நல்ல கார்! எஸ்யூவி என்று ஸ்கோடா சொன்னாலும் ஹேட்ச்பேக் டிசைன், குறைவான பூட் வசதி, சின்ன கேபின், வேன் போன்ற பின் பக்கத் தோற்றம்... இது எல்லாம்தான் யெட்டி நம்மை விட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம்.

இதற்குப் பரிகாரமாக ‘கரோக்’ மூலம் ஸ்கோடா களத்தில் இறங்கியிருக்கிறது. இதை யெட்டியின் அண்ணன் என்றும் சொல்லலாம்; கோடியாக்கின் தம்பி என்றும் சொல்லலாம். கரோக் காரில் ஒரு க்விக் டிரைவ்.

முன் பக்கம் பார்த்தால், அப்படியே கோடியாக் மாதிரிதான் இருக்கிறது கரோக். டூயல்-ஸ்லாட் கிரில், ஸ்லிம் அண்டு ஸ்லீக் ஹெட்லைட், சின்ன பனி விளக்குகள், ஏர் இன்-டேக்... இதையெல்லாம் உற்றுப் பார்த்தால்தான் வித்தியாசம் புரியும். யெட்டி மாதிரி ஆகிவிடக் கூடாது என்கிற ஸ்கோடாவின் கவனம் இதில் தெரிகிறது. நினைத்தது போலவே, எஸ்யூவி போலவே கிண்ணென்று இருக்கிறது; அழகாகவும்.

19 இன்ச் வீல்களே இதன் பிரம்மாண்டத்தைச் சொல்கின்றன. அப்படியென்றால், அந்த MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்குமோ? ஆம்! ஃபோக்ஸ்வாகனின் கட்டுறுதிக்குப் பெயர் பெற்ற MQB பிளாட்ஃபார்மின் லேட்டஸ்ட் செல்லம் - கரோக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யெட்டியின் மறுபிறவி!

ஸ்கோடாவில் எப்போதுமே இடவசதிக்குப் பஞ்சம் இருக்காது. பெரிய க்ளோவ்பாக்ஸ், ஒரு லிட்டர் பாட்டில்கள் வைக்க அங்கங்கே ஹோல்டர்கள், டிரைவருக்கு அருகே மினி குப்பைத் தொட்டி, முன் பக்க சீட்டின் பின் பக்கம் டேப்லெட் வைத்துக்கொள்ள ஹோல்டர்கள், பின் பக்கப் பயணிகளுக்கு ஃப்ளிப்-அப் ட்ரே, குடை என்று பிராக்டிக்கலாக இருக்கிறது கரோக். சீட்கள் உயரமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், டிரைவிங் கம்ஃபர்ட் உறுதி. தொடைக்கான சப்போர்ட்டும் இருப்பதால், லாங் டிரைவில் கலக்கலாம். பின் பக்கம் கோடியாக் அளவுக்கு இல்லை. ஆனால், அது பெரிய பிரச்னை இல்லை. ஒவ்வொரு சீட்டையும் சரித்து, ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம். இதற்கு ‘வேரியோஃப்ளெக்ஸ் சீட்டிங் சிஸ்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறது ஸ்கோடா. இதன் பூட் ஸ்பேஸ் 521 லிட்டர்.

9.2 இன்ச் டச் ஸ்க்ரீன், LED ஆம்பியன்ட் லைட்டிங், 12 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட்போன்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு டெயில்கேட், பெரிய பனோரமிக் சன்ரூஃப் என்று வசதிகளிலும் கரோக் கலக்கி எடுக்கிறது. மற்றபடி கேபின் சூப்பர்ப், கோடியாக் போன்று பிரீமியம் ரகம்தான்.

இன்ஜினைப் பொறுத்தவரை 150 bhp பவரும், 34 kgm டார்க்கும் கொண்ட 2.0 TDI டீசல் இன்ஜின்தான் நான் டெஸ்ட் செய்தது. இதில் யெட்டியில் இருக்கும் அதே 6 ஸ்பீடு மேனுவல் இருந்தது. யெட்டியின் தோல்விக்கு அதில் ஆட்டோமேட்டிக் இல்லாததுகூட ஒரு காரணம்தான் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டது ஸ்கோடா. கரோக் விற்பனைக்கு வரும்போது, கூடவே DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் இருக்குமாம்.

யெட்டியின் மறுபிறவி!

கோடியாக்கின் தம்பி என்பதால், அதைவிட 313 கிலோ எடை குறைவு. லோ ரெவ்களிலேயே ‘விருட்’டெனக் கிளம்புகிறது கரோக். லேசான டர்போ லேக் தெரிந்தாலும், 1,500 ஆர்பிஎம்-மைத் தாண்டியதும் அது காணாமல் போகிறது. மிட் ரேஞ்ஜில் வழக்கம்போல் அந்த பன்ச்... வாவ்! இது ஸ்கோடாவுக்கே உரித்தது. ஓவர்டேக்கிங்கில் கரோக் கலக்கும். 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் உறுமித் தள்ளுகிறது கரோக். என்னுடைய பரிந்துரை என்னவென்றால், 3,500-க்குக் கீழேயே ரெவ் பண்ணிக்கொண்டிருப்பதுதான் பெஸ்ட்.

எப்படியும் யெட்டி அளவுக்குச் சுறுசுறுப்பு அவ்வளவாக இல்லை கரோக். ஸ்டீயரிங் லைட்டாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டினால், ஸ்டீயரிங் இன்னும் ஹெவியாவதுபோல் தெரிந்தது. ஆனால், ரெஸ்பான்ஸில் முன்னேற்றம் இல்லை.

நான் வெளிநாட்டில் ஓட்டிய இந்த ஸ்கோடாவில் 19 இன்ச் டயர்கள் செம கிரிப். 225/45 லோ புரொஃபைல் டயர்கள் ஷார்ப்பான சாலைகளைக்கூட சாஃப்ட்டாகச் சமாளிக்கிறது. ஆனால், ‘நம் ஊருக்கு எதுக்கு 19 இன்ச்; 17 அல்லது 18 இன்ச் வீல்களே போதும்’ என்கிற ஐடியாவில் இருக்கிறதாம் ஸ்கோடா. மெக்ஃபர்ஷன் ஸ்ட்ரட் - 4 லிங்க் ரியர் ஆக்ஸில் சஸ்பென்ஷன் சைலன்ட்டாக வேலை பார்க்கிறது. இது 4 வீல் டிரைவுக்கு மட்டும்தான். ஃப்ரன்ட் வீல் டிரைவும் உண்டு. இதற்கு சாதாரண டார்ஷன் பார் செட்-அப்தான். கோடியாக்கின் ஹால்டெக்ஸ் 4x4 சிஸ்டம் வேறு இருப்பதால், கி.கிளியரன்ஸ் 200-க்கு மேல் இருந்தால், நிச்சயம் ஆஃப் ரோடில் ஜமாய்க்கலாம்.

நிச்சயம் கரோக், ஆஃப்ரோடு விரும்பிகளுக்குப் பிடிக்கும். ஆனால் விலை? அதற்கான பதில் இன்னும் தெரியவில்லை. எப்படியும் கோடியாக்கைவிடக் குறைவாக இருக்கலாம். அதாவது, கிட்டத்தட்ட 30 லட்சம் இருக்கலாம். 42 லட்ச ரூபாய்க்கு 7 சீட்டர் கோடியாக் தேவையில்லை; 30 லட்சத்துக்கு 5 சீட்டரே போதும் என்று நினைக்கும் எஸ்யூவி வெறியர்கள்தான் கரோக்குக்குக் கைகொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism