Published:Updated:

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?
பிரீமியம் ஸ்டோரி
எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

போட்டி - யாரிஸ் VS வெர்னா VS சிட்டி VS சியாஸ்தொகுப்பு: தமிழ்

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

போட்டி - யாரிஸ் VS வெர்னா VS சிட்டி VS சியாஸ்தொகுப்பு: தமிழ்

Published:Updated:
எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?
பிரீமியம் ஸ்டோரி
எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?
எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு டொயோட்டாவின் பாஸ் ‘Akiyo Toyoda’ இப்படிச் சொன்னார்: ‘‘இனி டொயோட்டாவில் இருந்து போர் அடிக்கும் கார்கள் ரிலீஸ் ஆகாது!’’ அவர் சொன்னது உண்மைதான் என்று நிரூபிக்கிறது, லேட்டஸ்ட் ரிலீஸான டொயோட்டா யாரிஸ். இந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டொயோட்டா ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று யாரிஸ் காரை மட்டும்தான் புதிதாகப் பார்வைக்கு வைத்தது. ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு’ என்று தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு சின்ன வயசில் இன்ட்ரோ கொடுப்பார்களே.. அதுமாதிரி யாரிஸில் ஏதோ இருப்பதாக நம்பினார்கள் டொயோட்டா ரசிகர்கள். இத்தனைக்கும் யாரிஸில் டீசல் இல்லை; வெறும் பெட்ரோல் மட்டும்தான். எக்ஸ்போவில் யாரிஸ் பக்கத்தில் செம கூட்டம். யாரிஸ் அறிமுகமும் ஆகிவிட்டது; டெஸ்ட் டிரைவும் முடித்துவிட்டோம்; யாரிஸின் வருகை இதன் போட்டி கார்களை எந்த அளவுக்குப் பாதிக்கும்?

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹூண்டாயின் நியூ ஜென் வெர்னாவுக்கு இப்போது ஸ்டைல் மட்டுமல்ல, ஓட்டுதலும் சேர்ந்திருக்கிறது. ஹோண்டா சிட்டியின் ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு முடிவில்தான் வந்தது. மாருதியின் சியாஸுக்கு புரொமோஷன் கிடைத்துவிட்டது. ஆம்! சியாஸ், இப்போது மாருதியின் காஸ்ட்லியான நெக்ஸாவில்தான் விற்கப்படுகிறது.

நாலு பேரையும் ஆலுமா டோலுமா ஆட வைத்தோம்.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

வெளியே...

யாரிஸ்: ஏற்கெனவே சொன்னபடி, யாரிஸின் டிசைன் போர் அடிக்கவில்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் மெருகு தேவை. யாரிஸின் ஹெட்லைட்ஸ் பெருசுதான். பம்பருக்குக் கறுப்புப் பூச்சு தனித்துத் தெரிந்தாலும், பின் பக்கம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மற்ற மூன்றை ஒப்பிடும்போது, அலாய் வீலில்கூட இன்னும் ஸ்டைல் தேவைதான்.

வெர்னா: கோட், சூட், டை, ஷூவெல்லாம் போட்ட ஒரு ஜென்டின்மேனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படி புரொஃபஷனலாக, டீசன்ட்டாக இருப்பதுதான் வெர்னாவின் ஸ்டைல். செம நீட்! கேஸ்கேடிங் கிரில், ஸ்டைலிஷ் ஹெட்லைட்ஸ், டைமண்ட் கட் அலாய் வீல்ஸ், டெய்ல் லைட்டுக்கு LED எல்லாமே கண்களைக் கவர்கின்றன! அந்த ரூஃப் பின்னோக்கி இறங்குவதுகூட மென்மையாக, ஸ்டைலாக இருக்கிறது. அட! சன் ரூஃப்கூட இருக்கிறது.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

சியாஸ்: பழைய மாடல்தான் என்பதால், சியாஸைப் பற்றி அவ்வளவாக சிலாகிக்கத் தேவையில்லை. சியாஸை நெக்ஸாவுக்கு மாற்றியது சரிதான். ரிச் அண்டு நீட்டாக இருக்கிறது. அதே நேரத்தில் பாந்தமான காராகத் தெரிகிறது. இங்கே இருப்பதிலேயே நீளமான, (4,490 மிமீ) அகலமான செடான், சியாஸ்தான். பெரிய வீல்பேஸும் இதில் மட்டும்தான்(2,650 மிமீ). சியாஸில் ஃபேஸ்லிஃப்ட்கூட வரவிருக்கிறது. மாருதி, சன் ரூஃப் கொடுத்திருக்கலாம்.

சிட்டி:
LED ஹெட்லைட் வாவ். முதலில் சிட்டிக்கு இதற்காகவே ஒரு பொக்கே. நல்ல வெளிச்சத்தை மட்டுமல்ல; ஹோண்டாவுக்கு இந்த LED ஹெட்லைட், ஒரு ட்ரெண்டை உருவாக்கலாம். மற்ற மூன்றிலும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்தான். வெர்னா மாதிரி சன் ரூஃப்கூட உண்டு. புதிய க்ரோம் கிரில் செம ரிச் லுக். அலாய் வீல்கள்கூட பிரீமியம் ரகம்தான். ‘நாலு வருஷ பழைய டிசைன் கார்’ என்பதை இந்த இரண்டு விஷயங்களும் மறைத்துவிடுகின்றன.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

உள்ளே...

யாரிஸ்:
டேஷ்போர்டு, நிச்சயம் யூனிக் டிசைன். ஆனால், ஹார்டு டச் பிளாஸ்டிக்ஸ், ஸ்டீயரிங் வீல் கவரின் தரம் போன்றவற்றால் பிரீமியம் லுக்கை இழக்கிறது யாரிஸ் டேஷ்போர்டு. அதேநேரம், பில்டு குவாலிட்டியைக் குறை சொல்ல முடியாது. சென்டர் கன்ஸோலின் டாப்பில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருப்பது ஸ்டைலாகத்தான் இருக்கிறது. ஸ்பீடோமீட்டருக்கு அருகே இருக்கும் 4.2 இன்ச் MID செம. டொயோட்டாவில் முதன்முதலாக ஒரு வசதி - பவர்டு சீட்கள். டிரைவர் சீட்டை 8 விதமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அட்ஜஸ்ட்மென்ட் ஓகே; ஆனால், டெட் பெடல் காணவில்லை.

வெர்னா: கதவை மூடும்போதே வெர்னாவின் கட்டுமானத்தரம் தெரிந்துவிடுகிறது. இந்த நான்கு கார்களில் வெர்னாவில்தான் கேபின் தரம், வாஆவ்! டேஷ்போர்டை நீட்டாக டிசைன் செய்திருக்கிறார்கள். ஏனென்றால், சீட் தாழ்வாக இருந்தாலும் வெளிச்சாலை நன்றாகத் தெரிகிறது. முன் பக்க சீட்டில் வென்டிலேஷன் வசதிக்காகவே சம்மர் நேரங்களில் வெர்னாவை ஓட்ட ஆசையாய் இருக்கும். வெர்னாவில் மட்டும்தான் இந்த ஆப்ஷன் உண்டு.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

சிட்டி: ஹோண்டாவின் கேபின் ஸ்போர்ட்டிதான். ஆனால், ஓவர்-ஆலாக ஏனோ வெர்னா அளவுக்குத் தரமாக இல்லை. ஆனால், இதன் சாஃப்ட் டச் பிளாஸ்டிக்ஸை நிறைய பேர் ரசிக்கிறார்கள். சீட் கம்ஃபர்ட்தான் சிட்டியின் பலம். பெரிதாகவும், நல்ல குஷனிங்கோடும் இருக்கின்றன சிட்டியின் சீட்கள். டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட் இருப்பதால், நல்ல டிரைவிங் கம்ஃபர்ட்டும் கிடைக்கிறது. டச் ஸ்கிரீன் கூல்! ஆனால், இதன் டச் ஸ்க்ரீன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பயணிக்கும்போது பயன்படுத்தக் கொஞ்சம் சிரமம்தான். மற்றபடி நான்கிலுமே ரியர் ஏ.சி வென்ட்கள் உள்ளன.

சியாஸ்: சிம்பிள் அண்டு நீட் டிசைன் என்று சொல்லலாம் சியாஸின் இன்டீரியரை. ஆனால், மற்ற கார்களை ஒப்பிடும்போது டிஸ்டிங்ஷன் வாங்கவில்லை. டேஷ்போர்டை க்ளோஸ்-அப்பில் பார்த்தால், சில பாடி பேனல்கள் சரியாக அலைன் செய்யப்படவில்லையோ என்று தோன்றுகிறது. சுவிட்ச்கள்கூட விலை குறைவான மாருதி சுஸூகி கார்களில் இருந்து காஸ்ட்லியான சியாஸுக்குப் பொருத்தி இருக்கிறார்கள். மற்றபடி முன் பக்க சீட் வசதியாக இருக்கிறது. ஆனால், உயரமான டிரைவர்களின் பாடு கொஞ்சம் திண்டாட்டமாகலாம். தாழ்வான பொசிஷன்தான் இங்கு உயரமான பொசிஷன் என்பதால், உயரமானவர்கள் லோ பொசிஷனில் வைத்தாலும் உயரமாகத்தான் இருக்கிறது.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

பின்னாடி என்ன இருக்கு?

யாரிஸ்: இங்கிருப்பதிலேயே பின் சீட் நடுவில் ஹெட்ரெஸ்ட் இருக்கும் ஒரே கார், யாரிஸ்தான். நடுப்பக்கப் பயணிக்கும் முறையாக சீட் பெல்ட் வசதியெல்லாம் கொடுத்துள்ளார்கள். முன்பக்க ஆர்ம் ரெஸ்ட், அப்படியே பின் பக்கம் வரை வந்து, நடுப்பக்கப் பயணியின் லெக்ரூமைக் காலி செய்கிறது. பின் பக்கம் அமர்ந்தபோது, திடீரென இனோவாவுக்குள் வந்துவிட்டோமோ என்று ஒரு உணர்வு. ரூஃபில் மவுன்ட் செய்யப்பட்ட அந்த ஏசி வென்ட்கள், இனோவா ஸ்டைல். கீழே வைப்பதைவிட, இதுதான் பின் பக்கப் பயணிகளுக்கு கூலிங் கேரன்ட்டி தரும். இங்கே ஃபேன் ஸ்பீடையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். பின் பக்க சீட்டை மடித்தால், 60:40 விகித அளவு இடம் கிடைக்கிறது. பூட் ஸ்பேஸ், யாரிஸில்தான் குறைவு. 476 லிட்டர். ஆனால், பொருட்களை ஏற்றி இறக்க எளிதாக இருக்கிறது.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

வெர்னா: லெக்ரூம், ஹெட்ரூம் - எல்லாமே லிமிடெட்தான் வெர்னாவில். ரியர் சீட் ஹெட்ரெஸ்ட்டுகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். சீட்கள் சொகுசாக இருக்கின்றன. வழக்கம்போல் நடுப்பக்கப் பயணிக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை. நான்கு கார்களிலுமே லெதர் சீட்டுகள்தான். யாரிஸைவிட 4 லிட்டர் பூட் ஸ்பேஸ் அதிகம். அவ்வளவுதான். (480 லிட்டர்).

சிட்டி: சந்தேகமே தேவையில்லை. பின் சீட் சொகுசுக்கு சிட்டிதான் பெஸ்ட். சியாஸுக்கு அடுத்து நல்ல லெக்ரூம் கொண்ட கார் சிட்டி. மூன்று பேர் தாராளமாக அமர்ந்து நெடுந்தூரம் பயணிக்கலாம் சிட்டியில். மற்ற கார்களில் ஃப்ளோர் போர்டு ஃப்ளாட்டாக இருக்கும். ரொம்ப தூரம் பயணிப்பதில் சிக்கல் இருக்கும். இதில் ஃப்ளோர் போர்டு சற்று மேலேறி வைத்திருப்பதால், நீண்ட நேரம் கால்களை மேல்நோக்கி நீட்டிப் பயணிப்பதில் சிரமம் இருக்காது! சும்மா உட்கார்ந்தாலே ஒரு கெத்து வந்துவிடும். சிட்டி டிசைனர்ஸுக்கு ஒரு ஸ்மைலி.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

சியாஸ்: நான்கு கார்களில் அதிக லெக் ரூம் கொண்ட கார் - சியாஸ் மட்டும்தான். அதற்காக இடவசதி இருந்தால், சொகுசு இருக்கும் என்று அர்த்தமில்லை. அதிக இடவசதி வேறு; சொகுசு என்பது வேறு. சிட்டியின் சொகுசுக்கு முன்னால், சியாஸ் தலைகுனிந்துதான் ஆக வேண்டும். பின் பக்க சீட்கள் கொஞ்சம் கடினமாகவும், சீட் கிரிப்பும் சுமார்தான். லெக்ரூம் அளவு ஹெட்ரூம் இல்லை. ஓகே ரகம்தான்.

டிரைவிங்

யாரிஸ்:
நான்குமே பெட்ரோல்தான். யாரிஸின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 107 bhp பவரையும், 14 kgm டார்க்கையும் கொடுக்கிறது. யாரிஸ் இன்ஜினை ‘ஈஸி கோயிங்’ இன்ஜின் என்று சொல்லலாம். சட் சட் என ரியாக்ட் ஆகிறது. அதாவது டிராஃபிக்கில் பர்ஃபாமென்ஸ் சூப்பர். ஆனால், மிட் ரேஞ்சில் ரொம்ப சாதுவாக இருக்கிறது. ஓவர்டேக் செய்ய, கியர் டவுன்ஷிஃப்ட் பக்கம் போக வேண்டியிருக்கிறது. கியர் டைமிங் சுமார்தான். அதனால், இப்படியும் சொல்லலாம். இங்கிருப்பதிலேயே வேகம் குறைவான கார் யாரிஸ்தான். அதாவது 0-100 கி.மீ வேகத்துக்கு 12.39 விநாடிகள்...

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

வெர்னா: வெர்னாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்ததே அதன் இன்ஜின்தான். இங்கேயும் அப்படித்தான். வெர்னாதான் பெரிய இன்ஜின். 1.6 லிட்டர், 123 bhp, 15.1 kgm டார்க். சிட்டி டிராஃபிக்கில் வெர்னா அசத்துகிறது. பவர் டெலிவரியும் அசத்தல் (0-100கி.மீ: 11.18 விநாடி). பெரிய இன்ஜின் என்றால், சத்தம் போடும் என்று நினைத்தேன். இங்கே வெர்னாதான் அமைதியாக வேலை பார்த்தது. நினைத்த நேரத்தில் வெளியூர்களுக்கு வெர்னாவில் டாப் கியரைப் போட்டுக் கிளம்புவது செம ஃபன்னாக இருக்கும்.

சிட்டி: வெர்னாவுக்கு அப்படியே நேரெதிர் சிட்டி. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, இங்கே அதிகமாகச் சத்தம் போடுவது சிட்டிதான். ஏ.சியைப் போட்டுவிட்டு ஐடிலிங்கில் நிறுத்திவிட்டு, வெளியே வந்து கேட்டால்.. ‘புஷ்ஷ்ஷ்’ எனச் சத்தம் போடுவது சிட்டியின் குணம். சிட்டியின் 1.5 i-Vtec இன்ஜினில் இருப்பது 119 bhpயும், 14.5 kgm டார்க்கும். ஆனால், ஓட்டுவதற்கு ஃபன்னாக மாறி, இந்தக் குறைகளை மறக்கடிக்கிறது சிட்டி. 4,500-ல் இருந்து 7,000 ஆர்பிஎம் வரை சிட்டியை விரட்டிப் பாருங்கள். இதன் ஃபன் டு டிரைவ் புரியும். 0-100 கி.மீ-யை 10.13 விநாடிகளில் கடந்து சிரிக்கிறது சிட்டி. அதேநேரம், சிட்டிக்குள் ஓட்டவும் கார் அருமை.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

சியாஸ்: எல்லா கார்களும் 100-க்கு மேல் பவர் டெலிவரியில் அசத்த, வெறும் 92bhp-யில் பம்முகிறது சியாஸின் 1.4 லிட்டர் இன்ஜின். டார்க்கும் 13. kgmதான். பவர் டெலிவரி கொஞ்சம் ஃப்ளாட்தான். மிட் ரேஞ்ச் கொஞ்சம் டல் அடிக்கிறது. டாப் எண்டில் எந்த எக்ஸைட்மென்ட்டும் இல்லை. ஹைவேஸில் மிதிக்க மிதிக்க உற்சாகம் கூட வேண்டும்தானே?  சப்ச்! குறைந்த எடை (1,025 கிலோ) இருந்தாலும், சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, நிலைத்தன்மை நன்றாக இருக்கிறது. இந்த எடைதான் சியாஸுக்கு இன்னொரு இடத்தில் ப்ளஸ் ஆக மாறுகிறது. குறைவான கியர்களில் இதன் திராட்டில் ரெஸ்பான்ஸ் செம! தினசரி டிராஃபிக் சிச்சுவேஷனில் சியாஸை எந்தவித பிரஷரும் இல்லாமல் ஓட்டலாம்.

ரைடு ரைடுதான்...

யாரிஸ்: நான்கிலுமே எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கும், முன் பக்கம் மெக்ஃபர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும்தான். அதனால், காரைத் திருப்பி... யு-டர்ன் அடிக்க எல்லாமே சூப்பர்! யாரிஸ், லோ ஸ்பீடில் சஸ்பென்ஷனும் சரி; ஸ்டீயரிங்கும் சரி - கொஞ்சம் டைட் ஆக இருக்கிறது. இதுதான் ஹைஸ்பீடில் தன்னம்பிக்கையாக இருக்கிறது. பாடி ரோல்கூட அவ்வளவாகத் தெரியவில்லையே! வாவ்! ரோடு கிரிப்பிலும் யாரிஸ்... சூப்பர்.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

வெர்னா: டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸில் ஏதோ ஒரு சுணக்கம் இருக்கிறது என்பதுதான் பழைய வெர்னாக்களின் குறை. காரணம், லைட் வெயிட் ஸ்டீயரிங்தான். இந்தப் புதுசு எப்படி? இதிலும் ஓரளவு அப்படித்தான் தெரிகிறது. ஆனால், பாடி கன்ட்ரோலும், ஹை ஸ்பீடுகளுக்கான குணநலன்களும் பெஸ்ட் ஆக இருக்கிறது. ஓவர்-ஆலாக இதன் ரிஃபைன்மென்ட் அசத்தல். இதே லைட் வெயிட் ஸ்டீயரிங்தான் சிட்டிக்குள்ளும் வெர்னாவை ஜாலியான கார் ஆக்குகிறது.

சிட்டி: எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப்பை சிட்டியில் மாற்றாதுபோல ஹோண்டா? ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்குவதைப் பெரிய சிரத்தையாகச் செய்கிறது சிட்டி. மோசமான சாலைகளில் சஸ்பென்ஷன் இன்னும் வேலை செய்ய வேண்டும். சஸ்பென்ஷன் திணறுவது லேசாக நமக்கு ஃபீல் ஆகிறது. அச்சச்சோ என்று பதற வேண்டாம். இந்தப் பிரச்னைகள் எதையும் உள்ளே கடத்தாதவாறு இதன் சொகுசான சீட்கள், ஒரு கேர் டேக்கர் போல் நம்மைப் பார்த்துக்கொள்கிறது. டிரைவிங் ஃப்ரீக்குகளுக்கு ஒரு நற்செய்தி: இங்கிருப்பதிலேயே அருமையான ஸ்டீயரிங் ஃபீட்பேக் கொண்ட கார் சிட்டிதான்.

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

சியாஸ்: சியாஸின் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளில் நன்றாகவும், வேகமாகவும் வேலை பார்க்கிறது. எடை குறைவாக இருந்தாலும், பாடி ரோல் அவ்வளவாக இல்லை என்று சொல்லலாம். எல்லா மாருதிகளையும்போல, ஸ்டீயரிங் செல்ஃப் சென்ட்ரிங் சரியாக இல்லை. அதாவது, ஸ்டீயரிங்கை முழுவதுமாகத் திருப்பினால் தானாகவே சென்டர் ஆவது. மாருதியில் இது ஒரு குறைதான். ஆனால், ரைடிங்கைக் குறை சொல்ல முடியவில்லை. பெரிய கார் ஓட்டுவதுபோல் ஃபீல் கிடைக்கிறதே!

என்ன இருக்கு? என்ன இல்லை?

எல்லாவற்றிலும் டாப் எண்ட் வேரியன்ட்டைத்தான் டெஸ்ட் டிரைவ் செய்தோம். எல்லாவற்றிலும் பொதுவான விஷயங்கள் சில உண்டு. லெதர் சீட்கள், ரியர் ஏசி வென்ட்ஸ், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இந்த நான்கிலும் உண்டு. மேலும், என்ன உண்டு... என்ன இல்லை என்பதை அட்டவணையும், எது வாங்கலாம் என்பதை தீர்ப்பும் சொல்லும்.

யாரிஸ்: ­பாதுகாப்பு விஷயத்தைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. ஒரு செடான் காரில்

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

முதன்முறையாக 7 காற்றுப் பைகள், Electronic Stability Programme வசதி, நடுப்பக்கப் பயணிக்கும் சீட் பெல்ட், அப்புறம் பவர்டு டிரைவர் சீட். இதைத் தாண்டி பெரிதாக நம்மை இம்ப்ரஸ் செய்யவில்லை யாரிஸ். டொயோட்டாவில் இருந்து வழக்கம்போல ஒரு 4 மீட்டருக்கு மேற்பட்ட செடான் வந்திருக்கிறது. இப்படித்தான் யாரிஸுக்குத் தீர்ப்பு எழுத முடிகிறது. இங்கிருப்பதிலேயே விலை அதிகமான கார் யாரிஸ்தான். ஒரு மிட் சைஸ் பெட்ரோல் செடான் காரை 16 லட்சத்துக்கு வாங்க கொஞ்சம் பெரிய மனசு வேண்டும்.

சிட்டி:
‘டிரைவர் வெச்சு ஜாலியா பின்னால் உட்கார்ந்து வரப் போறேன்’ என்பவர்கள்... ப்ளீஸ் யோசிக்க வேண்டாம். சிட்டிதான் உங்களுக்கான சாய்ஸ். இதன் டாப் எண்ட் பர்ஃபாமென்ஸ், அத்தனை ஜாலி! ஆனால், சத்தம் போடாத ஹோண்டா வேண்டும் என்று மக்கள் இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு ஏதாவது வழி பண்ணுங்கள் ஹோண்டா! யாரிஸைப் போல் இதுவும் கொஞ்சம் காஸ்ட்லிதான். இதன் டாப் எண்ட் VX வேரியன்ட்டின் விலை: 14.40 லட்சம். ஆனால் யாரிஸைவிட 1.5 லட்ச ரூபாய் குறைவு!

சியாஸ்: சிட்டிக்குள் பெப்பியாக இருக்க வேண்டும்; இடவசதி தாராளமாக வேண்டும்; (கவனிக்கவும்: சொகுசு இல்லை) கொடுக்கும் காசுக்கு மதிப்புள்ளதாக இருக்க வேண்டும்; விலை ரொம்பவும் குறைவாக இருக்க வேண்டும்; சர்வீஸ் பிரச்னை இருக்கக் கூடாது என்பவர்கள், சியாஸை இப்போதே புக் செய்யுங்கள். ஆனால், டாப் எண்டில் தூங்கி வழியும் இன்ஜின், வசதிகள் இல்லை. இதற்கு ஓகே என்றால், சியாஸ் ஓகே! கொஞ்சம் காத்திருந்தால் ஃபேஸ்லிஃப்ட் பார்க்கலாம்.

வெர்னா: தரம், இன்ஜின் ரிஃபைன்மென்ட், இன்டீரியர், லுக், ஓட்டுதல் அனுபவம் - என்று ஒரு செக் லிஸ்ட்டை எடுத்துக்கொண்டால், எல்லாவற்றிலும் டிக் வாங்குகிறது வெர்னா. இதன் டாப் மாடல் SX(O) விலை 13.90 லட்சம். யாரிஸைவிட 2 லட்ச ரூபாய் குறைவு. அந்தப் பின் பக்க இடவசதியும் மைலேஜும் ஒரு பெரிய விஷயம் இல்லையென்றால், ‘வெர்னா வேணாம்’ என்று சொல்லமாட்டீர்கள். ஹூண்டாய்க்கும் வெர்னா பிரியர்களுக்கும் பூங்கொத்து!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism