Published:Updated:

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹோண்டா WR-V (டீசல்)தமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹோண்டா WR-V (டீசல்)தமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

‘‘வேறென்ன சொல்லப் போறேன். வெயில் கொடுமைதான் தாங்க முடியலை. ஏதாவது சின்னதா அருவிக் குளியல் போடலாம்!’’ என்று கூகுளில் தேடினார் பன்னீர்செல்வம். ‘‘சிக்கிடுச்சு... கொடிவேரியில செமையா தண்ணி வருதாம். ஃபேமிலியோட போய் மீன் வறுவல், குளியல்னு என்ஜாய் பண்ணிட்டு வந்துடாலாமா!’’ என்று குடும்பத்துடன் WR-V-யைக் கிளப்பிவிட்டார் பன்னீர்செல்வம்.

வெள்ளக்கோவில் ஏரியாவில் பால் பண்ணை வைத்திருக்கும் பன்னீர்செல்வம், ஹோண்டா பிரியர் இல்லை; வெறியர். ‘‘ரொம்ப வருஷமா சிட்டி வெச்சிருந்தேன். இப்போதான் WR-Vக்கு மாறினேன்’’ என்றார். 5 சீட்டர் கார்தான் என்றாலும், மகன் சிபி - மகள் சிவஷக்தி - மனைவி ரங்கநாயகி, புகைப்பட நிபுணர் என பெரிய படையே கிளம்பிவிட்டது. ஹோண்டாவின் இரண்டாவது பெரிய கி.கிளியரன்ஸ் கொண்ட கார் இதுதான். (188 மிமீ) ஒரு ஸ்பீடு பிரேக்கரில்கூட இடிக்கவில்லை.

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

சென்னைக்காரர்களுக்கு மெரினா, மகாபலிபுரம், புதுச்சேரி, பழவேற்காடு எப்படியோ... அப்படி கோவை, திருப்பூர், ஈரோடுவாசிகளுக்கு கொடிவேரி அணை வசதியான பிக்னிக் ஸ்பாட். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 25 கி.மீ தொலைவில் இருக்கிறது கொடிவேரி. ஒரே நாள் ட்ரிப் என்றாலும், இப்போது வரை அடிக்கடி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறது கொடிவேரி.

* திருப்பூரில் இருந்துதான் பயணம் தொடங்கியது. WR-V-யின் இன்டீரியர் அசத்தல். டச் ஸ்கிரீன் வசதி உண்டு. ஜிபிஎஸ் மூன்று வழிகள் சொல்லியது. ‘‘ஊத்துக் குளியில அண்ணன் இருக்கான். பிக்-அப் பண்ணிக்கலாம்’’ என்றாள் சிவஷக்தி. பள்ளிப் பாளையம், கோலப்பலூர், குருமந்தூர் வழியாக கொடிவேரிக்கு WR-V-யை செலுத்தினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

* WR-V ஹைவேஸில் நல்ல ஸ்டெபிலிட்டி கிடைத்தது. 100-ல் அசால்ட்டாகப் பறந்தது. சிட்டி போல் 6 கியர் கொடுத்திருக்கிறார்கள். மிட் ரேஞ்சிலும் சரி; டாப் எண்டிலும் சரி, மோடியைப் பார்த்த எடப்பாடியைப் போல் WR-V பம்முகிறது. இத்தனைக்கும் 6 கியர்கள் உண்டு. ஆனால், சிட்டிக்குள் ஓட்ட சூப்பர். கோபிச் செட்டிப்பாளையம் டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு ஃபன்னாக இருந்தது.

* சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 25 கி.மீ-க்கு முன்பாக இடதுபுறம் திரும்ப வேண்டும். கொடிவேரி 2 கி.மீ என்கிற போர்டு தென்பட்டது. இங்கிருந்து பழனிக்குப் பாதயாத்திரை போல் கொடிவேரிக்கு நடந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். ‘‘வாரா வாரம் கொடிவேரியிலதான் குளியல் போடுவேன். இந்தப் பச்சை வயலைப் பார்த்துக்கிட்டே நடந்தா, வயசே ஏறாது’’ என்று கமென்ட் அடித்தார் 65 வயது பெரியவர் ஒருவர். பாதையே பச்சைப் பசேல் என ரம்மியமாக இருந்தது.

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

* கொடிவேரி இப்போது பரபரப்பான டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. கார் பார்க்கிங்கே அதகளப்பட்டது. WR-V சப் 4 மீட்டர் கார்தான் என்றாலும், தடிமனான ‘A’ பில்லர் பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்துவதால், பார்க்கிங் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. நல்லவேளையாக - டச் ஸ்கிரீனில் ரிவர்ஸ் கேமரா கைக்கொடுக்கிறது.

* கொடிவேரிக்கு நுழைவுக் கட்டணம் 5 ரூபாய்தான். 3 வயசுக்குட்பட்ட சிறுசுகள் என்றால், கட்டணம் இலவசம். இப்போதைக்கு ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 5,000 பேர் வருகிறார்கள் என்றார் ஓர் அதிகாரி.

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

* ஈரோடு மாவட்டத்தின் நீர்ப்பாசனத்துக்கு ஆதாரமே கொடிவேரிதான். 17-ம் நூற்றாண்டில் அப்போதைய மைசூர் மஹாராஜா இந்த அணையைக் கட்டினாராம். 400 ஆண்டுகளுக்கும் மேலான நிலையிலும், கட்டடக் கலைக்குச் சவால் விடுகிறது கொடிவேரி அணை. கருங்கல்லின் நடுவில் துளையிட்டு, கற்கள் நகராதபடி இரும்புக் கம்பிகளால் இணைத்து, அந்தக் காலத்திலேயே செம ஸ்ட்ராங்காகக் கட்டியிருக்கிறார்கள். 151 மீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கும் கொடிவேரி அணை நீரில், இப்போது பரிசல் சவாரி ஆரம்பித்திருக்கிறார்கள்.

* ‘‘வெயில் அடிச்சாலும் பரவாயில்லைப்பா... போட்டிங் போலாம்’’ என்று சிவஷக்தி அடம்பிடிக்க, பரிசல் பயணம் தயாரானது. தலை ஒன்றுக்கு 50 ரூபாய் கட்டணம். ஒரு பரிசலில் 6 பேர் வரை ஏற்றுகிறார்கள். சில பரிசல் பயணங்கள் த்ரில்லிங்காக, ஹாரர் மூவி பார்ப்பதுபோல் இதயம் லப் டப்பென அடிக்க ஆரம்பிக்கும். காரணம், நீரின் போக்கும் ஆழமும் அப்படி இருக்கும். கொடிவேரி அணை நீரின் ஆழமே மொத்தம் 6 அல்லது 7 அடிக்குள்தான் என்பதால், பயப்படத் தேவையில்லை. கைக்கு எட்டும் தூரத்தில் மாங்காய் மரங்கள்... நீர்ப் பறவைகள்... துள்ளிக் குதிக்கும் மீன்கள் என்று என்ஜாய் பண்ண அற்புதமாக இருந்தது. ‘‘செம ஃபன்னா இருக்கு’’ என்றாள் சிவஷக்தி. பிச்சாவரம் காடுபோல், கடைசியாக ஓர் இடத்தில் மாமர நிழலில் படகை பார்க் செய்து, பறவைகள், மனிதர்கள் என்று கண்ணில் தெரிவதை எல்லாம் கேமராவில் சிறைப்படுத்திக் கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர்.

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

* அடுத்தது அருவிக் குளியல்தான். வெறும் 20 அடி உயரத்திலிருந்துதான் விழுகிறது. ‘பெருசா என்ன ஜாலியா இருந்துடப் போகுது’ என்று நினைத்தால்... வேற லெவலில் இருந்தது அருவி. தண்ணியையே அப்போதுதான் பார்த்ததுபோல் என்ஜாய் செய்து கொண்டிருந்தார்கள் சிலர். மொத்தமாக பல்லாயிரக்கணக்கான குழாய்களில் தண்ணீரைத் திறந்துவிட்ட எஃபெக்ட். ‘‘மேன்ஷன்ல தண்ணி பிராப்ளம். ரொம்ப நேரம் குளிச்சா வார்டன் திட்டுவாரு. கொடிவேரியில அந்தப் பிரச்னையே இல்லை. எவ்வளவு நேரம் வேணாலும் குளிக்கலாம்’’ என்றார் ஒரு பேச்சிலர்.

* சில அருவிகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கொடிவேரி அப்படிப்பட்ட ஆபத்தான ஸ்பாட் இல்லை. சொல்லப் போனால், இது குழந்தைகளுக்கான தீம் பார்க் என்று சொல்லலாம். ஆழமே இல்லாமல் கெட்டிக் கிடக்கும் நீரில் குழந்தைகள் படுத்து.. உருண்டு... மீன்களுடன் விளையாடியது ‘சொல்வனம்’ கவிதைப் பகுதிக்கான விஷுவல். குளித்து முடித்து விளையாட பூங்காவும் இருக்கிறது கொடிவேரியில். மாங்காய், நிலக்கடலை, தின்பண்டங்கள் என்று எப்போதுமே திருவிழா எஃபெக்ட். 10-ம் வகுப்பு முடித்த சிவஷக்திக்கே திரும்ப மனமில்லை.

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

* காதலி என்றால் முத்தம் இல்லாமலா? கோயில் என்றால் தெய்வம் இல்லாமலா? அருவிக் குளியல் என்றால், மீன் வறுவல் இல்லாமல் எப்படி? மீன் வறுவல்தான் கொடிவேரியின் ஃபேவரைட். தடுக்கி விழுந்தால் மீன் கடைகள். கொடிவேரி முழுக்க மீன் வாசம்தான். ஜிலேபி, கட்லா போன்ற ஏரி மீன்களை அப்படியே பிடித்து, சுடச் சுட வறுத்துத் தருகிறார்கள். ‘‘கட்லா, முள்ளே இருக்காதுய்யா... வறுத்துத் தாரேன்’’ என்று  மீன்களை வறுத்து தட்டில் அடுக்கினார் ஒரு பாட்டி. சோற்றுக்கு நடுவில் பாத்தி கட்டி ஜிலேபி மீன் குழம்பை ஊற்றி அடித்தால்... அசைவப் பிரியர்கள் ஜென்ம சாபல்யமே அடையலாம்.

* வி.ஐ.பி.க்கள் நாலு நிமிஷம் பேசினாலும், நாள் முழுக்க ஒளிபரப்பும் டி.வி போல, ஒரே நாள் டூர் என்றாலும் ஆண்டு பூராவும் மனசில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும் கொடிவேரி டூர்.

என்ன பார்க்கலாம்? கொடிவேரியில் இருந்து...

பவானிசாகர் அணை (35 கி.மீ)

பவானிசாகர் அணையில் இப்போது படகுச் சவாரி தொடங்கியிருக்கிறார்கள். அணைக்கட்டு வியூ அத்தனை அற்புதம். மீன் வறுவல்தான் இங்கே ஃபேவரைட். இங்கிருந்து பிடிக்கப்படும் மீன்கள்தான் கொடிவேரியிலும் கிடைக்கின்றன.

பண்ணாரி அம்மன் கோவில் (21 கி.மீ)

சத்தியமங்கலம் காட்டுப் பகுதி தாண்டி வரும் அம்மன் கோவில். பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா ஃபேமஸ்.

தலமலை (48 கி.மீ)

திம்பம் தாண்டி இடது பக்கம் திரும்பினால், இந்தக் காட்டுப் பகுதி வரும். முறையான அனுமதி வாங்கித்தான் உள்ளே போக முடியும். த்ரில்லிங்கான காட்டுப் பகுதி. விலங்குகள் பார்க்கலாம்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் (12 கி.மீ)

தமிழ்நாட்டின் 4-வது பெரிய புலிகள் சரணாலயம். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் காரில் பயணிப்பதே செம த்ரில்லிங்கான அனுபவம்.

மைசூர் (145 கி.மீ)

திம்பம் வழியாக மைசூருக்குச் செல்லும் பாதை. மாலை நேரப் பயணத்தில் நிச்சயம் விலங்குகள் பார்க்கலாம்.

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

WR-V எப்படி?

ஹோண்டாவின் சின்ன எஸ்யூவி. 4 மீட்டர் கார் என்பதால், 5 சீட்டர்தான். 7 இன்ச் டச் ஸ்கிரீன், டைமண்ட் கட் அலாய், பிளாஸ்டிக் கிளாடிங் என்று பார்க்கவே செம லுக்! ‘‘யூனிக்கா தெரியணும். எல்லாரும் மாருதியா வாங்குறாங்க. அதான் WR-V வாங்கினேன்’’ என்கிறார் பன்னீர்.  கி.கிளியரன்ஸ் நன்றாகவே இருக்கிறது. 6 பேர் சென்றபோதும், ஒரு ஸ்பீடு பிரேக்கரில்கூட தட்டவில்லை. ஆனால், ஃபன் பார்ட்டிகளுக்கு ஏற்ற கார் WR-V இல்லை. காரணம், மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்டில் ரொம்ப ஸ்லோ. ஒரு பன்ச் இல்லை. ‘‘எங்க காரில் ஏ.சியும், பாட்டில் ஹோல்டரும்தான் எனக்குப் பிடிக்கவே இல்லை. பின்னால் உட்கார்ந்தா ஏ.சி வரவே மாட்டேங்குது. பாட்டில் வைக்க இடமே இல்லை. இங்க பாருங்க..’’ என்று கூடையில் வாட்டர் பாட்டில்களை அடுக்கி காலுக்கடியில் வைத்திருந்ததைக் காண்பித்தார் ரங்கநாயகி. மற்றபடி, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு அழகான கார் WR-V.

நோட் பண்ணுங்க!

பவானிசாகர் அணைக்குக் கீழே 35 கி.மீ தொலைவில் இருக்கும் கொடிவேரி அணை, விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டால், எப்போது வேண்டுமானாலும் ஜாலிக் குளியல் போடலாம். கொடிவேரியில் உணவகங்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்க. வீட்டிலிருந்து சமைத்தும் கொண்டுவந்து இங்கே சாப்பிடலாம். மீன் விரும்பிகளுக்குச் சரியான தீனி போடும் கொடிவேரி. பச்சைப் பசேல் வயல் வாசத்தையும் மீறி, கொடிவேரி என்ட்ரன்ஸிலேயே மீன் வாசம் நாசியை நிரப்பும். மீன் வாங்கும்போது, கவனம் தேவை. கெட்டுப்போன மீன்களைச் சாப்பிட்டு, ‘சேட்டை’ சந்தானம்போல் திண்டாட வேண்டும். ‘‘பவானிசாகர்ல பிடிச்சிட்டு வாரக்கணக்குல ஃபிரிட்ஜ்ல வெச்சதை விக்கிறாங்க. அதான் இத்தனைக்கும் காரணம்’’ என்றார் ஒரு மீன் வியாபாரி. மீனவர்கள் தங்கள் சொந்தச் செலவில் கொடிவேரியில் பரிசல் விட்டு, அரசாங்கத்துக்குப் போக மீதம் கிடைப்பதை வைத்து தொழில் புரிகிறார்கள். மீன் பிடித்தல் போக அவர்களின் வாழ்வாதாரம் இதுதான். எனவே, பேரம் பேசாத நமது பரிசல் பயணம் அவர்களது வாழ்க்கைப் பயணம் என்பதை உங்கள் பெரிய மனசில் ஏற்றிக் கொள்க!

மிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism