Published:Updated:

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்/பைக்தமிழ்

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்/பைக்தமிழ்

Published:Updated:
ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சஸரீஸ்
ஆக்சஸரீஸ்

‘சில ஆண்டுகளுக்கு முன்பு, கார் விண்டோவிலேயே ஹீட் அப்ஸார்பிங் கிளாஸ் டீஃபால்ட்டாக வந்தது. அப்படியும் வெப்பம் தாளாமல், சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டினோம். இப்போது கறுப்பு நிற சன் கன்ட்ரோல் ஃபிலிம் பொருத்தினால் சட்டப்படி குற்றம். உள்ளே என்ன நடக்கிறது என்பது டிரான்ஸ்ப்ரன்ட்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, குற்றங்களைக் குறைப்பதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்.

ஆக்சஸரீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்னி நட்சத்திரத்தில் பயணிக்கும்போது, ஏ.சி போட்டாலும் உள்ளே அனல் காற்று சுழன்றடிக்கும். நெற்றியில், முதுகில் வியர்வை அப்பிக்கொள்ளும். காரணம், ஹீட் அப்ஸார்ப் செய்யாத சாதாரண கண்ணாடிகள். இந்த நேரத்தில் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்குப் பதிலாக, சன் ஷேடு வாங்கி ஒட்டிக் கொள்ளலாம். சிலர் டோல்கேட்டுகளில், ஹைவேக்களில் சிறுவர்கள் விற்கும் சன் ஷேடுகளை வாங்கிப் பொருத்துவார்கள். இது வெயில் படாமல் காக்கும். ஆனால், சூட்டைக் குறைக்காது. நாளடைவில் கண்ணாடியுடன் ஒட்டிக்கொள்ளவும் மறுக்கும். டோல்கேட்டுகளில் பணம் செலுத்தும்போது, கண்ணாடியை இறக்கும்போது ஒவ்வொரு தடவையும் கழற்றி மாட்டி... இது பெரிய தொந்தரவாகவும் இருக்கும். ‘ஆட்டோஃபேக்ட்’ எனும் நிறுவனத்தின் சன் ஷேடுகளை, கார்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து பொருத்திக்கொள்ளலாம். கண்ணாடியும் டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கும். வெயிலின் தாக்கமும் அவ்வளவாக இருக்காது என்பதுதான் இதன் ஸ்பெஷல். இதை கார் கண்ணாடியுடனேயே ஜிப் மூலம் ஃபிக்ஸ் செய்வதால், டோரை இறக்கி ஏற்றி... நம் ஹேண்ட்லிங்கையும் ஈஸியாக்கும். நான்கு கண்ணாடிகளுக்கும் சேர்த்து 1,200 முதல் 1,600 வரை கார்களுக்கு ஏற்ப கிடைக்கிறது.

ஆக்சஸரீஸ்

ப்போது வரும் ஸ்கூட்டர்களில் மொபைல் சார்ஜிங் போர்ட், ஸ்டாண்டர்டாகவே வருகிறது. பழைய ஸ்கூட்டர்களில் இந்த ஆப்ஷன் இருக்காது. எல்லோருக்கும் மொபைல் சார்ஜர் என்பது தேவையான வசதிதான். ஆக்டிவா, ஆக்டிவா-i, டியோ, ஏவியேட்டர் போன்ற ஸ்கூட்டர்களில் மொபைல் சார்ஜிங் போர்ட்டுக்கான ஸ்லாட் இருக்கும். ஆனால், சார்ஜர் இருக்காது. பழைய ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள், இந்த ஒரு வசதிக்காக வாகனத்தை மாற்ற முடியாது.

ஆக்சஸரீஸ்

மொபைல் சார்ஜர், ஸ்கூட்டருக்கும் ஆக்சஸரீஸாக வந்துவிட்டது. ‘அக்யூ சார்ஜர்’ எனும் இந்திய நிறுவனம் - ஹை ஸ்பீடு சார்ஜரை இந்த ஸ்கூட்டர்களுக்காகவே தயாரிக்கிறது. LED லைட் இண்டிகேட்டருடன் ஹை ஸ்பீடு சார்ஜராக இருக்கும் இதில் - ஷார்ட் சர்க்யூட், ஓவர் சார்ஜிங், ஓவர் ஹீட்டிங் போன்ற ஆபத்துகளெல்லாம் இருக்காது என்கிறது இந்த நிறுவனம். USB ஸாக்கெட்டில் தூசு படியாமல் இருக்க, கவரும் உண்டு. விலை 650 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

ஆக்சஸரீஸ்

ட்யூப்லெஸ் டயர்களில் பிரச்னை இல்லை. பழைய ட்யூப் டயர்களில் காற்று இறங்குவது, பஞ்சராவது - இதெல்லாம் நடக்கவே கூடாது. நடந்தால், பைக்கைத் தள்ளிக் கொண்டு நட நட என்று பஞ்சர் கடைகளுக்கு நடக்க வேண்டியதுதான். அதுவும் புல்லட் போன்ற பெரிய பைக்குகளை நினைத்தே பார்க்க முடியாது. இந்த மாதிரி சூழ்நிலைகளில் மினி ஏர் பம்ப் இருப்பது ரொம்ப நல்லது. சுருக்கமாகக் காற்றடித்துவிட்டு, அட்லீஸ்ட் வீட்டுக்காவது பஞ்சர் கடைகளுக்காவது வண்டியைக் கிளப்பலாம். காலை வைத்துக் காற்றடிப்பதற்கு ஏற்றபடி வசதியாக, இதன் ஃபுட்ரெஸ்ட் இருப்பதால், வசதியாக இருக்கும். மீட்டர் கேஜும் உண்டு என்பது ப்ளஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism