Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் நீண்ட நாட்களாக, ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிதாக ஒரு பைக் வாங்க விரும்புகிறேன். ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X, பஜாஜ் டொமினார் D400, மஹிந்திரா மோஜோ UT 300 ஆகியவற்றில் எது எனக்கான சாய்ஸாக இருக்கும்?

- கலைச் செல்வன், கோயம்புத்தூர்.

ஏற்கெனவே விற்பனையில் இருந்த தண்டர்பேர்டு பைக்கின் மாடர்ன் அவதாரம்தான் தண்டர்பேர்டு 500X. எனவே, புதிய ஹேண்டில்பார் - அலாய் வீல்கள் - கலர் ஆப்ஷன் - சிங்கிள் பீஸ் சீட் - டியூப்லெஸ் டயர்களுடன் இது தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும், மெக்கானிக்கலாக ஒன்றுதான். அதுபோலவே, ஏற்கெனவே விற்பனையில் இருந்த மோஜோ பைக்கின் பட்ஜெட் வேரியன்ட்தான் UT 300. அதற்கேற்ப வழக்கமான XT 300 பைக்கில் இருந்த LED DRL, USD ஃபோர்க், பைரலி டயர்கள், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், இரட்டை எக்ஸாஸ்ட், தங்க நிற வேலைப்பாடுகள் ஆகியவை இங்கே மிஸ்ஸிங். இந்த ஆண்டின் துவக்கத்தில்தான், தனது பிரீமியம் பைக்கான டொமினாரை, புதிய கலர் ஆப்ஷன்களில் களமிறக்கியது பஜாஜ். உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் LED ஹெட்லைட் உடன் வரும் டொமினார், உங்களுக்கு ஏற்ற பைக்காக இருக்கும் எனத் தோன்றுகிறது.

மோட்டார் கிளினிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் ஃபியட் புன்ட்டோ ஈவோ வாங்கும் முடிவில் இருக்கிறேன். இந்த காரின் ப்ளஸ் - மைனஸ் என்ன? எனக்கான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- வேல்முருகன் ராமானுஜம், இமெயில்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஃபியட் புன்ட்டோ ஈவோ, பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டின் பழைய மாடல். கட்டுமானத் தரம், ஓட்டுதல் அனுபவம், டிசைன் ஆகிய ஏரியாக்களில் இந்த கார் ஜொலிக்கிறது. ஆனால், கேபின் தரம் - சிறப்பம்சங்கள் - இடவசதி - பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் ஆகிய ஏரியாக்களில் பின்தங்கிவிடுகிறது. மேலும், ஃபியட் கார்களின் ரீ-சேல் மதிப்பும் குறைவு என்பதுடன், இந்த நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் சிறிது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து தீர்க்கமாக முடிவெடுங்கள்.நான் புதிதாக 125சிசி ஸ்கூட்டர் வாங்க உள்ளேன். எனக்கு மைலேஜ் முக்கியமில்லை. ஏனெனில், தினமும் 60 கி.மீ தூரம் பயணிப்பேன் என்பதால், அதன் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருப்பது அவசியம். டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா கிராஸியா, சுஸூகி ஆக்சஸ் ஆகிய ஸ்கூட்டர்களில் எதை எனக்கு சிபாரிசு செய்வீர்கள்?

- பா.நிகில் சஞ்சய், அறந்தாங்கி.


உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும் போது, நீங்கள் குறிப்பிட்டவற்றில் சுஸூகி ஆக்ஸஸ் அல்லது டிவிஎஸ் என்டார்க் ஆகிய ஸ்கூட்டர்களைப் பரிசீலிக்கலாம். ரெட்ரோ டிசைனில் ஆக்ஸஸ் அசத்தினால், ஸ்போர்ட்டி டிசைனில் என்டார்க் கவர்கிறது. என்டார்க் அதிக பவர் மற்றும் வசதிகளைக் கொண்டிருந்தால், ஆக்ஸஸ் குறைவான எடை மற்றும் விலையைக் கொண்டிருக்கிறது. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து முடிவெடுங்கள்.

எனது பட்ஜெட் 7 லட்ச ரூபாய். நான் வாங்கப்போகும் புதிய கார், ஓட்டுதல் அனுபவம் மற்றும் பர்ஃபாமென்ஸில் அசத்தலாக இருக்க வேண்டும். மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃப்ரிஸ்டைல் ஆகியவற்றில் எது பெஸ்ட்? ஏனெனில். ஸ்விஃப்ட்டின் ஸ்போர்ட்டியான டிசைன் - போதுமான இடவசதி - ஸ்டைலான கேபின் சூப்பர் என்றால், ஃப்ரிஸ்டைலின் அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை எனக்குப் பிடித்திருக்கிறது. எதை வாங்குவது என்பதில் குழப்பம்.

- கார்த்திக், வேலூர்.

 உங்களுக்கு தேவையானது பெட்ரோல் காரா அல்லது டீசல் காரா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாதம் 1,000 முதல் 1,500 கி.மீ தூரம் பயணிப்பீர் என்றால் பெட்ரோல் காரையும், 2,000 முதல் 2,500 கி.மீ தூரம் பயணிப்பீர் என்றால் டீசல் காரையும் வாங்குவது நலம். ஸ்விஃப்ட் மற்றும் ஃப்ரிஸ்டைல் ஆகிய இரண்டு கார்களின் சாதக பாதகங்களைச் சொல்லிவீட்டீர்கள். இருப்பினும், ஸ்டைலான ஹேட்ச்பேக் வேண்டும் என்றால் ஸ்விஃப்ட்டையும், கிராஸ்ஓவர் வேண்டும் என்றால் ஃப்ரிஸ்டைல் காரையும் தேர்வு செய்யுங்கள்.

நான் புதிதாக ஒரு பெட்ரோல் செடான் வாங்க முடிவெடுத்துள்ளேன். அது நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதாகவும், குறைவான பராமரிப்புச் செலவுகளையும் கொண்டிருக்க வேண்டும். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? வேறு ஏதெனும் கார்கள் இருக்கின்றனவா?

- அமுதன், திருச்சி.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு கார்களும், ஒரே குழும நிறுவனத்தால், ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுபவை. எனவே, சில வித்தியாசங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இரண்டு கார்களும் ஏறக்குறைய ஒன்றுதான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ரேபிட் ஸ்போர்ட்டியான அனுபவத்தைத் தந்தால், வென்ட்டோ பிரீமியமான அனுபவத்தைத் தருகிறது. எனவே, உங்கள் தேவைக்கு ஏற்ப முடிவெடுங்கள். இந்த இரு கார்களின் விலையில் கிடைக்கக்கூடிய ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism