Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் 7 லட்ச ரூபாய். அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுகளுடன் கூடிய ஸ்டைலான கார் வாங்க ஆசைப்படுகிறேன். எனக்கான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- வி. நாகராஜன், இமெயில்.

உங்கள் தேவை பெட்ரோல் காரா அல்லது டீசல் காரா என்பதை நீங்கள் சொல்லவில்லை. இருப்பினும் மாதத்துக்கு 1,500 கி.மீ-க்கும் குறைவாக காரைப் பயன்படுத்துவீர்கள் என்றால், பெட்ரோல் கார்; உங்கள் காரின் மாதாந்திர பயன்பாடு 1,500 கி.மீ-க்கும் அதிகம் என்றால், டீசல் கார் சரியாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம் அதிகரித்தால், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 - ஃபோர்டு ஃப்ரிஸ்டைல் - மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ஆகியவற்றில் ஒரு காரை நீங்கள் வாங்கலாம். இதில் லேட்டஸ்ட் ரிலீஸான ஃப்ரிஸ்டைல் காரை நீங்கள் பரிசீலிக்கலாம்.

எனக்குப் புதிதாக எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்க வேண்டும் என்று வெகு நாள் ஆசை. கடந்த மூன்று ஆண்டுகளாக Tork T6X பைக்குக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் Okinawa Praise ஸ்கூட்டர் பற்றியும் படித்தேன். இதில் எதாவது ஒன்றை வாங்க தீர்மானித்துள்ளேன். தமிழ்நாட்டில் இதை எங்கு வாங்குவது என்பது குறித்த தகவல்களைத் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

- சதீஷ் ஈஸ்வர், இமெயில்.

எலெக்ட்ரிக் பைக்கான Tork T6X-ன் புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டாலும், அது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவிலே Okinawa Praise நல்ல தயாரிப்பாக இருந்தாலும், நிறுவன மதிப்பு மற்றும் டீலர் விஷயத்தில் அது பின்தங்கிவிடுகிறது. சென்னையில் Okinawa நிறுவனத்தில் டீலர்ஷிப், விரைவில் துவங்கப்பட இருக்கிறது. உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்.

மோட்டார் கிளினிக்

கடந்த ஆண்டு முதலாக, நான் ராயல் என்ஃபீல்டு பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது புதிய பைக் வாங்கும் முடிவில் இருக்கிறேன். பஜாஜ் NS200 மற்றும் RS200 ஆகியவற்றில் எதை வாங்கலாம்?

- அஷ்ரப், இமெயில்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பைக்குகளும் மெக்கானிக்கலாக ஒன்றுதான்; அதாவது சேஸி, டயர்கள், பிரேக்ஸ், சஸ்பென்ஷன் ஆகியவற்றில் சமநிலை நீடிக்கிறது. தவிர, இரண்டு பைக்கிலுமே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக உள்ளன. NS200 நேக்கட் டிசைன் கொண்ட பைக் என்றால் (152 கிலோ எடை), RS200 ஓரு ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக் (165 கிலோ எடை). NS200 பைக்கில் ஹாலோஜன் ஹெட்லைட், கார்புரேட்டட் இன்ஜின், வழக்கமான இண்டிகேட்டர்கள் இருக்கின்றன. இதுவே RS200 பைக்கில் ஃபுல் ஃபேரிங், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், LED இண்டிகேட்டர்கள், LED DRL ஆகியவை இருக்கின்றன. எனவே, உங்கள் தேவைக்கு ஏற்ப முடிவெடுங்கள்.

நான் கடந்த 8 ஆண்டுகளாக, யமஹா FZ16 பைக்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன், தற்போது 300சிசிக்கு மேல், புதிதாக ஒரு பைக்கை வாங்க உத்தேசித்துள்ளேன். எனது மனதில் பஜாஜ் டொமினார் D400 மற்றும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X ஆகியவை உள்ளன. இதில் எதை வாங்கலாம்?

- கண்ணன், இமெயில்.

உங்களது புதிய பைக்கின் தேவைகளை நீங்கள் சொல்லவில்லை. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் பஜாஜ் டொமினார் சரியான தேர்வாக இருக்கும். இதன் Non ABS மாடலின் விலையே, ஒரே வேரியன்ட்டில் கிடைக்கக்கூடிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X பைக்கைவிடக் குறைவாக உள்ளது; எனினும் குறைவான எடை - அதிக பவர்/டார்க், சிறப்பம்சங்கள், கட்டுமானத் தரம், பர்ஃபாமென்ஸ் - ஓட்டுதல் அனுபவம், பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றிலும், டொமினாரே முன்னிலை வகிக்கிறது.

மோட்டார் கிளினிக்

நான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன்கூடிய காம்பேக்ட் எஸ்யூவியை வாங்க விரும்புகிறேன். டாடா நெக்ஸான் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவற்றில் எது பெஸ்ட்?

-  ராம், இமெயில்.

 உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, டாடா நெக்ஸான் சரியான சாய்ஸாக இருக்கும். தற்போதைக்கு டாப் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும் இதன் விலை, விட்டாரா பிரெஸ்ஸாவைவிடக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது; ஆனால், ஸ்போர்ட்டியான டிசைன் - ஸ்டைலான கேபின் - அதிக சிறப்பம்சங்கள் - பவர்ஃபுல் இன்ஜின் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் - அசத்தலான கட்டுமானத் தரம் ஆகியவற்றில் அதனை நியாயப்படுத்தி விடுகிறது. இருப்பினும் இரு கார்களையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு, பிடித்ததைத் தேர்ந்தெடுங்கள்.

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com