Published:Updated:

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

Published:Updated:
ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சஸரீஸ்

சிலரது காருக்குள்ளே ஏறும்போதே, ஏதோ ஒரு வாசனை மூக்கைப் பாடுபடுத்தும். கார் உரிமையாளர்களுக்கு இந்த வாசனை பழகிப் போயிருக்கும். ஆனால், அந்த காரில் புதிதாக ஏறுபவர்களுக்கு, இந்த வாசனை ஒவ்வாது. அது உணவுப் பொருட்களின் மீந்த வாசனையாக இருக்கலாம்; சிகரெட் புகை ‘கப்பு’ அடிக்கலாம்; பிளாஸ்டிக் வாடையாக இருக்கலாம்; ஷூ நாற்றமாக இருக்கலாம். இது நிச்சயம் உடலுக்கு நல்லதல்ல. இது போன்ற பிரச்னைகளின்போது நமக்குக் கைகொடுப்பது - கார் ஐயனைஸர்கள்!

ஆக்சஸரீஸ்

இதை ஒருவகையில் ஏர் பியூரிஃபையர் என்றும் சொல்லலாம். காருக்குள் உலவும் பேக்டீரியாக்கள், கிருமிகளை அழித்து, காற்றைச் சுத்தப்படுத்துவதுதான் ஐயனைஸர்களின் வேலை. ஏர் பியூரிஃபையர்களில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. பிளக்-இன் கார் ஐயனைஸர் என்று மார்க்கெட்டில் கேட்டால், எக்கச்சக்க பிராண்ட்களை எடுத்து நீட்டுவார்கள். சில ஏர் பியூரிஃபையர்கள் அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இதை செக் செய்து கொண்டு வாங்கவும். சாதாரண ஏர் பியூரிஃபையர்களை, டேஷ்போர்டில் வைத்தால் போதும். பிளக்-இன் அயனைஸர்களை நம் காரின் சார்ஜிங் அடாப்டரில் சொருகிவிட்டால், 12V பவர் ஸாக்கெட் மூலம் கொசுவர்த்திபோல் இது தனது வேலையைச் செய்கிறது.

ஆக்சஸரீஸ்

சிலருக்கு ரொம்ப நேரம் கார் ஓட்டினால், முதுகு வலி படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடும். நேரம் ஆக ஆக கூன் விழுந்தபடி ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். இதற்குக் காரணம், சீட்களில் முறையான லம்பர் சப்போர்ட் இல்லாததுதான். அதாவது, முதுகுக்கான சப்போர்ட்! சில லக்ஸூரி கார்கள், லம்பர் சப்போர்ட்டுடன் சீட்களை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், பல பட்ஜெட் கார்களில் இந்தப் பிரச்னை உண்டு. சீட் கவர்கள்போல், லம்பர் சப்போர்ட்டுக்கும் தனியாக பேக்ரெஸ்ட் இருக்கிறது. மெஷ் வேலைப்பாடுகளால் சற்றுத் தூக்கலாக வடிவமைக்கப்பட்ட இந்த பேக்ரெஸ்ட்டுகளை சீட்டின் முதுகுப்புறம் மாட்டிவிட்டால் போதும். முதுகு வளையாமல், கம்பீரமான ரைடிங் கிடைப்பதுடன், முதுகு வலியும் குறைய வாய்ப்புண்டு. முதுகு வலி இருப்பவர்கள்கூட இதைப் பயன்படுத்தினால், வலி நாளடைவில் குறைய வாய்ப்புண்டு. 4 சீட்களும் சேர்த்து விலை ரூ499.

ஆக்சஸரீஸ்

டூர் அடிக்கும்போது, லக்கேஜ்தான் பெரிய பிரச்னையே! பின்னால் ஆட்கள் இல்லாத பட்சத்தில், சீட்களையும் லக்கேஜால் நிரப்பிவிடுவோம். பூட்டில் வைத்ததை பின் சீட்டில் தேடுவது, சீட்டில் வைத்ததை பூட்டில் தேடுவது என்று நேர விரயம் ஆகும். பூட் ஆர்கனைஸர் எனும் லக்கேஜ் பாக்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கிறது. பெரிய தொழில்நுட்பமெல்லாம் கிடையாது. காரின் பூட்டுக்குத் தகுந்தாற்போல், பெரிய சைஸ் ஹேண்ட்பேக்குகள் போல் இருக்கும் இதில், டூல் கிட்டில் இருந்து சிடி பாக்ஸ், கேன்கள், லஞ்ச் பாக்ஸ், காய்கறிகள், ஃபைல் வரை எல்லாவற்றையும் வைப்பதற்கு இடம் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். பொருட்களை இந்தப் பையில் அடுக்கி, பூட்டில் வைத்துவிட்டால், வேலை ரொம்ப சிம்பிள். கசகசவென டிக்கியை அடைத்து நிரப்பாமல், டீசன்ட்டாகவும் வைத்திருக்க இந்த ஆர்கனைஸர் உதவுகிறது. வேலை முடிந்ததும், சுருக்குப்பை போல் மடித்து சின்னதாகவும் வைத்துக் கொள்ளலாம்.