Published:Updated:

புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?

புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?
பிரீமியம் ஸ்டோரி
புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்தொகுப்பு: தமிழ்

புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்தொகுப்பு: தமிழ்

Published:Updated:
புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?
பிரீமியம் ஸ்டோரி
புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?
புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?

ப்போதுதான் ஃபேஸ்லிஃப்ட் வந்தது... அதற்குள் 17,000 கார்கள் புக்கிங் ஆகிவிட்டது! க்ரெட்டாவுக்கு எப்போதுமே மவுசுதான். ஃபேஸ்லிஃப்ட்டை ஓட்ட வாய்ப்புக் கிடைத்தால் விடுவேனா?

பழசே புதுசு மாதிரிதான் இருக்கும். புது க்ரெட்டா இன்னும் ரிச் லுக்கில் அசத்துகிறது. உருவம் மாறவில்லை. சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே! புதிய கிரில், ஹெட்லாம்ப் டிசைன் மாறவில்லை; ஆனால், பை-புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், LED DRL இப்போது பனிவிளக்குகளைச் சுற்றி, ரீ-ஸ்டைல்டு ‘C’ வடிவ பம்பர்... இவையெல்லாம் மாற்றங்கள். எஸ்யூவி லுக் வேண்டுமே... ஸ்கிட் பிளேட்டுகளின் டைமென்ஷன்கள் பெரிதாகி உள்ளன. 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள். பின் பக்கம் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை.

கேபினில் எதுவுமே மாறவில்லை. அதே டிசைன்தான். ஆனால், போர் அடிக்கவில்லை. பின் பக்க சீட்கள் அதே தாழ்வான பொசிஷனிலும், விண்டோ ஏற்றமாகவும்தான் இருக்கின்றன. உட்கார்ந்தால், பிக் பாஸ் வீடு போல் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவே இல்லை.

டாப் வேரியன்ட் SX(O) பழசைவிட 50,000 ரூபாய் அதிகம். வசதிகளும்தான். எலெக்ட்ரிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் இன்டர்னல் ரியர்வியூ மிரர். ஹூண்டாயின் ஆட்டோலிங்க் ஆப் கனெக்ட்டிவிட்டியில் காரின் ஹெல்த், டிரைவிங் பேட்டர்ன், ரோடு சைடு அசிஸ்டன்ஸ் போன்றவற்றைப் பார்த்துக்கொள்ளலாம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் டச் ஸ்கிரீனும் ரிவைஸ் செய்யப்பட்டுள்ளன. சாஃப்ட்வேரும்தான். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே உண்டு. வெர்னாவில் இருக்கும் வென்டிலேட்டட் சீட், க்ரெட்டாவில் மிஸ்ஸிங். குழந்தைகள் பாதுகாப்பு வசதியான ISOFIX மவுன்ட் சீட், SX  ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் மட்டும்தான். டாப் வேரியன்ட்டில் SX (O) சைடு ஏர்பேக்ஸும், ESC-யும் (Electronic Stability Control) உண்டு.

புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?

நான் ஓட்டியது 1.6 லிட்டர் டீசல். அதே 126 bhp. 26 kgm டார்க். டார்க்கில் மட்டும் சின்ன வேலை நடந்துள்ளது. பழசில் 1,900-2,750 rpm-ல் கிடைத்த டார்க், இதில் 1,500-3,000-லேயே கிடைத்து விடுகிறது. ஆனாலும் 1,700 rpm வரை டர்போ லேக் தெரிகிறதே? சிட்டிக்குள் இதுதான் படுத்தும். ஆனால், அதற்கப்புறம் பவர் டெலிவரி அருமை. ஹூண்டாயின் இன்ஜின் ரிஃபைன்மென்ட் பற்றி எல்லோருக்கும் தெரியும்.

இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸில், குறைந்த வேகத்தில்கூட அதிக கியரில் செல்ல முடிகிறது. அப்படியென்றால், மிட் ரேஞ்ச் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன். அட... அருமை!  ஓவர்டேக்கிங் செம ஈஸி. கிளட்ச் வேறு செம லைட் வெயிட்டாக இருந்தது அதைவிட ஜாலியான விஷயம் - இதன் மைலேஜும் 4% வரை டீசல் இன்ஜினில் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும் என்கிறது ஹூண்டாய். பெட்ரோலில் இது 3%.

சஸ்பென்ஷனிலும் செம ட்யூனிங் வேலை நடந்துள்ளது. குறைந்த வேகங்களில் சாஃப்ட் செட்-அப், அருமை. ஏதோ ஒரு பெரிய பள்ளத்தில் இறக்கும்போது மட்டும், கேபினுக்குள் அந்த அதிர்வை உணர்ந்தேன். ஸ்டீயரிங் வழக்கம்போல் லைட் வெயிட். சிட்டிக்குள் ஈஸியாக இருக்கிறது. ஆனால், அதிவேகங்களில் நம்முடன் டச்சில் இல்லாததுபோல் ஒரு உணர்வு.

க்ரெட்டாவை எஸ்யூவி-யாக மாற்ற ஹூண்டாய் பிரயத்தனப்பட்டது ஒர்க்-அவுட் ஆகிவிட்டது. எக்ஸ்ட்ரா 50,000 ரூபாய் செலவழிக்க வேண்டுமே என்று கவலைப்படாதீர்கள். க்ரெட்டா, எஸ்யூவி பிரியர்களை நிச்சயம் ஏமாற்றாது.