Published:Updated:

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!
பிரீமியம் ஸ்டோரி
வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - வால்வோ XC40வேல்ஸ் - படங்கள்: கே.ராஜசேகரன்

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - வால்வோ XC40வேல்ஸ் - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!
பிரீமியம் ஸ்டோரி
வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

‘காம்பேக்ட் லக்ஸூரி எஸ்யூவியேதான் வேண்டும்’ என்பவர்களுக்கு, இதுவரை பிஎம்டபிள்யூ X1, ஆடி Q3, பென்ஸ் GLA ஆகிய கார்கள் மட்டும்தான் சாய்ஸாக இருந்தன. இப்போது இந்த செக்மென்ட்டில் புதிதாக ஸ்வீடன் அழகனான வால்வோ XC 40 காரும் சேர்ந்திருக்கிறது. வெளிநாடுகளில் அறிமுகமான சில நாட்களிலேயே, நம் நாட்டிலும் அறிமுகமாகும் இந்த காரை ஹைதராபாத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.

‘வால்வோ எஸ்யூவிகளிலேயே சின்ன கார்’, ‘ஆரம்ப மாடல்’, ‘வால்வோவுக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையைப் பெருக்கப் போகும் கார்’... என்று XC 40-க்கு ஏராளமான பில்டப் கொடுத்துவிட்டுத்தான் காரின் சாவியை கொடுத்தார்கள். 

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!
வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

டிசைன்

கறுப்பு நிற ரூஃப் டாப். ஸ்டைலான அதே சமயம், கச்சிதமான டிசைன் என்று முதல் பார்வையிலேயே மனதைக் கொத்தியது XC 40. கண்களைக் கவரும் விஷயங்களைச் சொல்வதற்கு முன்பு கருத்தைக் கவரும் எண்களுக்கு வருவோம். இது ஆடி Q3-ஐவிட நீளம், அகலம் உயரம். வீல்பேஸ் ஆகியவை அதிகம். ஆனால், பிஎம்டபிள்யூ X1-ஐவிட வீல்பேஸ் மற்றும் நீளத்தில் குறைவு.

இப்போது வால்வோ கோணத்தில் இருந்தே வால்வோவைப் பார்ப்போம். இது XC 60 மாடலைச் சுருக்கியது மாதிரி இருக்கிறதா? இல்லை. இது புது மாதிரியாக, அதே சமயம் வால்வோவின் அடிநாதம் மாறாமல் இருக்கிறது. கிரில், ஹெட்லைட் எல்லாம் க்யூட்டாக இருக்கின்றன. ஆனால், லோகோ மட்டும் பெரிய சைஸில் இருப்பது புதிய காம்பினேஷன். ரூஃப் டாப், பக்கவாட்டில் இருக்கும் கிளாடிங், டயருக்கு மேலே இருக்கும் வீல் ஆர்ச் என்று பல விஷயங்களிலும் இதன் தீம் கலர்தான் எடுப்பாகத் தெரிகிறது. அதனால், இதில் க்ரோம் பூச்சுக்களை  எதிர்பார்க்கக் கூடாது.

ஆரம்பத்தில் R-டிசைன் என்ற ஒரு வேரியன்ட் மட்டுமே நம் நாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த வேரியன்டில் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், ப்ளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

வால்வோ என்றால், பாதுகாப்பு என்று தெரியுமே! இதைத் தாண்டி என்ன புதுமை?  தன் வழக்கமான டிசைனை வால்வோ நிறைய மாற்றியிருக்கிறது. ஆம், வால்வோவின் XC 90, S90, XC 60 ஆகிய கார்கள் எல்லாம் SPA (Scalable Product Architecture) ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டது என்றால், XC40 தயாரிக்கப்படுவதோ CMA (Compact Modular Architecture) பிளாட்ஃபார்மில். வால்வோவின் தாய் நிறுவனமான Geely Auto பயன்படுத்தும் பிளாட்ஃபார்ம் இது. அதனால்தான் இந்தப் புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கிறது வால்வோ XC40.

காரில் ஏறி உட்கார்ந்தேன். ஆம், ஏறி உட்காரும் அளவுக்கு உயரமாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது. 

காரின் முகப்பில்தான் க்ரோமுக்குத் தடா. ஆனால், காரின் உள்ளே ஆங்காங்கே க்ரோம் ஃபினிஷ் கண்ணைப் பறிக்கிறது. பிரேக் பெடல், கியர் லீவர், ஏ.சி வென்ட் என்று இதில் நிறைய விஷயங்கள் செங்குத்தாக டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. 9 இன்ச் டச் ஸ்கிரீன்கூட செங்குத்தாகத்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வசதியாக இருக்கிறது. இளமை என்றால், ஆரஞ்ச் வண்ணம்தானே. அதனால்தானோ என்னவோ காரின் கார்பெட் துவங்கி ஆங்காங்கே ஆரஞ்ச் கண் சிமிட்டுகிறது.

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

முன்னிருக்கைகள் வசதியாக இருக்கின்றன. காரணம், டிரைவர் சீட்டை வசதிக்கு ஏற்றது போல அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடிகிறது. ஆனால், பின் சீட்டில் ஏறுவதும் இறங்குவதும் பல எஸ்யூவிகளைப்போல இதிலும் சற்றே சிரமமாகத்தான் இருக்கிறது. சீட்டும் நெட்டுக்குத்தலாக இருக்கிறது. பின்னிருக்கையில் மூன்று பேர் உட்கார முடியும் என்று வால்வோ சொன்னாலும், இரண்டு பேர்தான் செளகரியமாக உட்கார முடியும். 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி இருக்கிறது. இதில் டிரைவர் சீட்டுக்குக் கீழேகூட சின்னதாக ஒரு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார்கள்.

ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோ பார்க் - இன், ஆட்டோ பார்க் - அவுட், ஹர்மான் ஸ்பீக்கர்ஸ், சன் - ரூஃப், டூயல் டோன் கிளைமேட் கன்ரோல், பார்கிங் சென்ஸார் என்று சிறப்பம்சங்களுக்குக் குறைவு இல்லை.

விலை உயர்ந்த XC 90 மாடலில் இருக்கும் அதே 4 சிலிண்டர், 2 லிட்டர் டீசல்  இன்ஜின்தான் இதை இயக்குகிறது. இது கொடுக்கும் 190bhp சக்தியும் 40kgm டார்க்கும் 8 ஸ்பீடு கியர்பாக்ஸோடு இயைந்து சத்தமின்றி  வேலை செய்கிறது.  ஒரு கியரில் இருந்து இன்னொரு கியருக்கு மாறுவது ஸ்மூத்தாக இருக்கிறது. ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் தேவையான சமயத்தில் கைக்கொடுக்கிறது.  இதன் மிட் ரேஞ்ச் பிரமாதம்.

விலை உயர்ந்த XC 90 மற்றும் XC60 மாடல்களில் இருப்பதைப் போன்று, சஸ்பென்ஷனை இதில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாது. இருந்தாலும் சஸ்பென்ஷன் குறையில்லாமல் செயல்படுவதால், பயணம் அசதி இல்லாமல் இருக்கிறது. சில சமயங்களில், இதில் பாடி ரோல் இருப்பதை உணர முடிகிறது. ஆம், சில சந்தர்பங்களில் ஓட்டுவதற்கு இது எஸ்யூவி போலத்தான் இருக்கிறது.

வால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி!

பின்னிருக்கையில் ஒரு சில குறைகள் உண்டுதான். ஆனால், இதன் பாதுகாப்பு அம்சங்கள், சிறப்பம்சங்கள், விலை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், இது நிச்சயம் பெஸ்ட் டீல்தான்!