Published:Updated:

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் Sதொகுப்பு: ராகுல் சிவகுரு

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் Sதொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

ந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013-ம் ஆண்டில் அறிமுகமான எக்கோஸ்போர்ட்டில், 1.0 லிட்டர் எக்கோபூஸ்ட் டர்போ பெட்ரோல் இன்ஜினை வழங்கியிருந்தது ஃபோர்டு. ஆனால், கடந்தாண்டு வெளியான இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இந்த இன்ஜின் ஆப்ஷன் காணாமல் போயிருந்தது. தற்போது எக்கோபூஸ்ட் இன்ஜினை மீண்டும் பொருத்தி விட்டது ஃபோர்டு. இது வெளிப்படுத்தும் 125bhp பவர் மற்றும் 17kgm டார்க்கில் வித்தியாசம் இல்லாவிட்டாலும், கியர்பாக்ஸ் மாறியிருக்கிறது. ஆம், முந்தைய மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், இங்கே இருக்கும் காரில் இருப்பதோ, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்!

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!
எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

டிசைன்

எக்கோஸ்போர்ட் S எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், அதற்கேற்றபடி ஸ்போர்ட்டியாகக் காட்சியளிக்கிறது. முன்பக்க கிரில், ரூஃப் மற்றும் ரூஃப் ரெயில், பனி விளக்கைச் சுற்றியுள்ள பகுதி, ஹெட்லைட்ஸ் ஆகியவற்றில் இருந்த க்ரோம் வேலைப்பாடுகள், இங்கே கறுப்பு நிறத்துக்கு மாறியுள்ளன. அதேபோல, வழக்கமான மாடலில் இருந்த ஹாலோஜன் பல்ப் உடன் கூடிய ஹெட்லைட் மற்றும் 16 இன்ச் அலாய் வீலுக்குப் பதிலாக, இங்கே HID ஹெட்லைட் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

கறுப்பு நிற கேபினில், கதவு – சென்டர் கன்ஸோல் – சீட் கவர் ஆகியவற்றில் காரின் ஆரஞ்ச் நிறம் இருப்பது அழகு. இன்ஸ்ரூட்மென்ட் கிளஸ்டரில் புதிய LCD MID ஸ்கிரீன் இருப்பதுடன், டயல்களுக்கு க்ரோம் ரிங் வழங்கப்பட்டுள்ளது. இதை எல்லாவற்றையும்விட நம்மை ஈர்த்தது, கேபினில் புதிதாக இடம்பிடித்திருக்கும் எலெக்ட்ரிக் சன்ரூஃப்தான்!

8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆப்பிள் கார் ப்ளே – ஆண்ட்ராய்டு ஆட்டோ – SYNC 3 கமாண்ட் போன்ற வசதிகள் இருக்கின்றன. இந்த S மாடலுக்கு எனப் பிரத்யேகமாக, டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் உண்டு; அலாய் பெடல்கள் செம ஸ்டைல் ரகம். டைட்டானியம் ப்ளஸ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், Part லெதர் சீட் கவர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், 6 காற்றுப் பைகள், பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹீல் ஹோல்டு அசிஸ்ட் போன்ற சிறப்பம்சங்கள் இங்கும் தொடர்கின்றன.

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

ஐடிலிங்கில், இன்ஜின் சத்தமின்றியும் அதிர்வுகளின்றியும் இருக்கிறது. 3000 ஆர்பிஎம்மைத் தாண்டும் போது இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்கத் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லும்போது, காருக்குள்ளே கேட்கும் இன்ஜின் சத்தமும் அதிகமாகிறது. இந்தச் சமயத்தில் ஆக்ஸில ரேட்டரில் இருந்து காலை எடுக்கும்போது, டர்போ சார்ஜரின் உறுமலை உணர முடிகிறது.

இதையெல்லாம், காரின் பவர் டெலிவரி ஓரளவுக்கு மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. முந்தைய மாடலில் இருந்த டர்போ லேக், இங்கே பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.

1,600 ஆர்பிஎம் தொடங்கி 6,600 ஆர்பிஎம் வரை தன் கைவசம் இருக்கும் பவரை இன்ஜின் சீராக வெளிப்படுத்துகிறது. இதனால் நான்காவது கியரில் சென்று கொண்டிருந்தாலும், முன்னே செல்லும் காரை முந்துவதற்கு கியரைக் குறைக்காமல் அப்படியே ஆக்ஸிலரேட்டரில் அழுத்தத்தைக் கூட்டினாலே போதுமானது. சிட்டிக்குள் காரை ஓட்டும்போது, மூன்றாவது கியரிலேயே காரை ஓட்ட முடிகிறது.

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

ஓட்டுதல் அனுபவம்

 போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கிளட்ச்சின் எடை இங்கே அதிகமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், அதன் இயக்கம் துல்லியமாக இருக்கிறது. புதிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் ரேஷியோக்கள் பக்காவாக இருப்பதுடன், கியர் மாற்றுவதும் ஸ்மூத்தாக இருக்கிறது. கூடுதலாக ஒரு கியர் இருப்பதால், டாப் கியரில் 100 கி.மீ வேகத்தில் இன்ஜின் 2,400 ஆர்பிஎம்-ல் ரிலாக்ஸாக இயங்குகிறது. எனவே, நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் கன்ட்ரோலின் உதவியுடன் க்ரூஸ் செய்வது சுலபம்; பிரேக்ஸ் செம ஷார்ப். எக்கோஸ்போர்ட் S, நிச்சயம் டிரைவர்ஸ் கார்!

ஃபோர்டு கார்களுக்கே உரித்தான விதத்தில் இருக்கிறது, இதன் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ். இதனுடன் அற்புதமான ரோடு கிரிப் சேரும்போது, திருப்பங்களில் காரைச் செலுத்துவது நல்ல அனுபவமாக இருக்கிறது. இறுக்கமான செட்-அப்பைக் கொண்டிருக்கும் சஸ்பென்ஷன், காரின் அசத்தலான நிலைத்தன்மைக்குக் கைகொடுக்கிறது. ஆனால், இதே காரணத்தால், எந்த வேகத்தில் சென்றாலும் சாலையில் இருக்கும் இடர்பாடுகளை காருக்குள் இருப்பவர்களால் உணர முடிகிறது. போட்டியாளர்களைவிடப் பெரிய அலாய் வீலில் Low Profile டயர்கள் இருப்பது, இந்நேரத்தில் அசெளகரியத்தைத் தருகிறது.

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் எக்கோஸ்போர்ட் S, வழக்கமான டைட்டானியம் ப்ளஸ் வேரியன்ட்களைவிட ஏறக்குறைய 1 லட்ச ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது. ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் அதிரடியான ஓட்டுதல் அனுபவத்துடன், HID ஹெட்லைட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை, இரண்டு மாடல்களுக்கும் பொதுவானது. ஆனால், வழக்கமான பெட்ரோல் மாடலுடன் ஒப்பிடும்போது, பெட்ரோல் எக்கோஸ்போர்ட் S மாடலில் இருக்கும் எக்கோபூஸ்ட் இன்ஜின் – 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி புதிது. இதன் விலை சற்றே அதிகமாகத் தோன்றினாலும், கார் ஆர்வலர்களுக்கு ஏற்ற சாய்ஸாக இருக்கிறது.