Published:Updated:

ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?

ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?
பிரீமியம் ஸ்டோரி
ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஜாகுவார் i-பேஸ்தொகுப்பு: தமிழ்

ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஜாகுவார் i-பேஸ்தொகுப்பு: தமிழ்

Published:Updated:
ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?
பிரீமியம் ஸ்டோரி
ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?
ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?

ஜாகுவாரில் என்ன ஸ்பெஷல் என்று கேட்டால், இப்படிச் சொல்லலாம்: ‘எல்லாமே ஸ்பெஷல்தான்!’ ஆம், ஜாகுவார் கார்கள் அப்படித்தான். ஸ்டைலில் ஆரம்பித்து, டிரைவ், வசதிகள் வரை ஒவ்வொன்றிலும் ஓவர்டைம் பார்த்திருப்பார்கள் ஜாகுவார் இன்ஜீனியர்கள். ஜாகுவாரின் முதல் எலெக்ட்ரிக் 5 சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரான i-பேஸூம் அப்படித்தான்.

இதைப் பார்த்தால் மற்ற ஜாகுவார் கார்கள் மாதிரியே தெரியவில்லை. தெரிய வேண்டியதில்லை என்று, வேண்டுமென்றே டிசைன் செய்யப்பட்டதுபோல் இருக்கிறது. அசப்பில் குட்டி எஸ்யூவிபோல் இருக்கிறது. அப்படித்தான் இதை மார்க்கெட் செய்கிறது ஜாகுவார்.

நீட் அண்டு ரிச்சாக இருக்கிறது டேஷ்போர்டு. ஆனால், எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் கொட்டிக் கிடக்கிறது. கிளாஸ் ரூஃபில்கூட ஒரு டெக்னாலஜி. இன்ஃப்ராரெட் கதிர்களை அப்ஸார்ப் செய்வதால், வெயிலில்கூட சில் பயணம் கிடைக்குமாம். எனவே, சன் ஷேடு தேவையில்லை. விண்ட்ஷீல்டில் ஹெட்-அப் டிஸ்ப்ளே இருக்கிறது. நீங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையோ, ரிவர்ஸ் கேமராவையோ தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. எல்லாமே விண்ட்ஷீல்டில் வந்துவிடும். 656 லிட்டர் பூட் ஸ்பேஸில், ஸ்பேர் வீலுக்கான புரொவிஷன் இல்லாததற்கு ஏதாவது காரணம்கூட இருக்கலாம்.

ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?

இதில் EV நேவிகேஷன் என்றொரு வசதி உண்டு. டிராஃபிக் டேட்டாக்களை அப்டேட் செய்து, உங்கள் நேவிகேஷனில் தருவதுதான் இந்த சிஸ்டம். நீங்கள் போகும் சாலையில் கிளைமேட் எப்படி இருக்கிறது, எந்தச் சாலையில் டிராஃபிக் அதிகம்-குறைவு, உங்கள் டெஸ்டினேஷன் போகும் வரை பேட்டரி சார்ஜ் தாங்குமா, சார்ஜ் குறைவாக இருக்கும் பட்சத்தில் சார்ஜிங் ஸ்டேஷன்களை நேவிகேட் செய்து அந்தப் பக்கம் காரைத் திருப்பச் சொல்வது என்று மல்ட்டி டாஸ்க்கிங் வேலைகளைச் செய்வதுதான் இந்த EV நேவிகேஷன்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டார்ட் பட்டனைத் தட்டி, ‘Ready’ ஐகான் வரும் வரை காத்திருக்க வேண்டும். ‘D’ மோடில் செலெக்ட் செய்து, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்... அடடே... நாம் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்கிறது. அந்தளவு அமைதியோ அமைதி. ஜாகுவார் என்பதைத் தாண்டி, எலெக்ட்ரிக் மோட்டார் என்பதுதான் இதற்குக் காரணம். இதில் 90KWH லித்தியம் ஐயன் பேட்டரி பேக், கேபின் ஃப்ளோருக்குக் கீழே இருக்கிறது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள். ஒவ்வொன்றும் செம லைட் வெயிட். 80 கிலோதான். 400 bhp பவரும், 69.6 kgm டார்க்கும் இரண்டிலும் சேர்ந்து அவுட்புட் கிடைக்கிறது. பெரிய பெட்ரோல் ஸ்போர்ட்ஸ் காரெல்லாம் தோற்றது போங்கள்! 4.8 விநாடிகளில் 0-100 கி.மீயைத் தொட்டு புகையே இல்லாமல் பறக்கிறது.

ஜாகுவார் ஏன் ஸ்பெஷல்?

எஸ்யூவிதான். ஆனால், இந்த வேகத்துக்கு ட்ராக்கில்தான் விரட்ட வேண்டும். ஆம். டிராக்கில்தான் இந்த ஜாகுவாரை விரட்டினோம். 4 வீல் டிரைவ் சிஸ்டம். இரண்டு மோட்டார்களில் இருந்தும் நான்கு வீல்களுக்கும் டார்க் ‘குபுகுபு’வெனப் பாய்கிறது. பிளைண்ட் கார்னரிங்கில் செம கிரிப். எப்படிப்பட்ட வளைவிலும் திரும்பலாம்.

எலெக்ட்ரிக் கார் என்றால், ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாமலா? பிரேக் பிடிக்கப் பிடிக்க, அதன் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படுவதுதான் RGBS. அதிலும் 2 லெவலைக் கொடுத்து அசத்திவிட்டது ஜாகுவார். ‘High’ ஆப்ஷனில், இன்ஜின் பிரேக்கிங்கே செம ஸ்ட்ராங்காக இருப்பதால், சில நேரங்களில் பிரேக்கில் கால் வைக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை - சில டிராஃபிக் சிக்னல்கள் தவிர்த்து. எனவே, ஹை ஸ்பீடில்கூட பேட்டரியில் எனர்ஜி சேமிக்கப்படுவது ப்ளஸ்தானே!

எஸ்யூவி ஆச்சே? கிட்டத்தட்ட 50 செ.மீ ஆழம் தண்ணீர் வரை போகுமாம் i-பேஸ். மின்சாரத்துக்கும் தண்ணீருக்கும் ஆகாதே? எப்படி? ஜாகுவாரின் ‘ஆல் சர்ஃபேஸ் புரோக்ரஸ் கன்ட்ரோல்’ தொழில்நுட்பம், இந்த த்ராட்டிலிங்கை தண்ணீருடன் மிக்ஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்டீயரிங் கன்ட்ரோல் மட்டும்தான்.

இப்போது தெரிகிறதா, ஜாகுவார் ஏன் ஸ்பெஷல் என்பது?