Published:Updated:

ஷாங்காய் டூரர்!

ஷாங்காய் டூரர்!
பிரீமியம் ஸ்டோரி
ஷாங்காய் டூரர்!

டிரைவ் - MG 6தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஷாங்காய் டூரர்!

டிரைவ் - MG 6தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
ஷாங்காய் டூரர்!
பிரீமியம் ஸ்டோரி
ஷாங்காய் டூரர்!

ந்திய ஆட்டோமொபைல் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், சீன நிறுவனங்கள் இந்தியாவில் வெற்றி பெற்றதில்லை. ஆனால், அந்தச் சூழ்நிலை மாறுவதற்கான சாத்தியங்கள் இப்போது தெரிகின்றன. ஆம், இந்தியாவில் ஏற்கெனவே செவர்லே நிறுவனத்துடன் இணைந்து, தனது தயாரிப்புகளை SAIC (Shanghai Automotive Industry Corporation) நிறுவனம் இங்கே விற்பனை செய்தது நினைவிருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளில், தனது தயாரிப்புகளின் ஒட்டுமொத்த தரத்தில், முன்னேற்றம் கண்டிருக்கிறது SAIC. அது, இங்கே படங்களில் பார்க்கும் MG 6 காரைப் பார்க்கும்போதே தெரிகிறது. உலக சந்தையில் இருக்கும் GT கார் போன்ற டிசைன் காரணமாக, முன்பக்கத்தில் பார்க்க கார் ஸ்டைலாக இருக்கிறது. பின்பக்கமாக காரைப் பார்க்கும்போது பல்க்காகத் தெரிகிறது.

ஷாங்காய் டூரர்!
ஷாங்காய் டூரர்!

கேபின்

கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் கேபினுக்குள்ளே நுழையும்போது, சீட்ஸ்தான்  முதலில் கவனத்தைக் கவர்கின்றன. அதில் செய்யப்பட்டுள்ள தையல் வேலைப்பாடுகள், நமக்குக் கிடைக்கும் சப்போர்ட் ஆகியவை செம. டோர் பேடுகளில் செய்யப்பட்டிருக்கும் இரட்டை தையல் வேலைப்பாடுகள், கார்பன் ஃபைபர் மற்றும் மெட்டல் வேலைப்பாடுகள் அற்புதம். அதற்கு மேட்சிங்காக, டேஷ்போர்டில் செய்யப்பட்டிருக்கும் லெதர் வேலைப்பாடுகள் க்ளாஸ் ரகம்; காரின் கட்டுமானத் தரத்தை, காரின் கதவுகள் மூடும் விதத்தை வைத்தே தெரிந்துகொள்ள முடிகிறது. சீனாவில் SAIC நிறுவனம் ஃபோக்ஸ்வாகனுடன் கூட்டணி வைத்திருப்பது, இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், டேஷ்போர்டின் மேல்பகுதி, முழுக்க இறுக்கமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கிறது; டச் ஸ்கிரீனுக்குக் கீழே இருக்கும் பட்டன்களின் தரம் நன்றாக இல்லை. கேபின் டிசைனும் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்கலாம்; அதேபோல இங்கிருக்கும் சிவப்பு நிறம், எல்லாருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. இந்தக் குறைகளை எல்லாம், அதிகளவில் இருக்கும் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் மறக்கடிக்கச் செய்கின்றன.

ஷாங்காய் டூரர்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால், MG 6 காரை ரிலாக்ஸாகவே ஓட்டினோம். இதில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 169bhp பவரை வெளிப்படுத்துகிறது. 1,700 ஆர்பிஎம் முதலே பவர் கிடைப்பதால், மிதமான ஆக்ஸிலரேஷனிலும் கார் துள்ளிக்கொண்டு செல்கிறது. இதை நம்பி வேகத்தை அதிகரிக்கும்போது, பவர் டெலிவரி அவ்வளவு சீராக இல்லை என்பதுடன், இன்ஜின் அதிகச் சத்தம் போடுவதுடன் இன்ஜினுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை. மேலும், ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, கியர்பாக்ஸ் சுணக்கம் காட்டுகிறது.

ஓட்டுதல் அனுபவம்

சுருங்கச் சொல்வதென்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களைப் போலவே, MG6 காரின் ஓட்டுதல் தரம் அமைந்திருக்கிறது. திருப்பங்களில் காரைச் செலுத்துவது நன்றாக இருப்பதுடன், சாலை இடர்பாடுகளைச் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ளும் விதத்தில் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்கிறது. ஆனால், திருப்பங்களில் காரின் வேகத்தை அதிகரிக்கும்போது, அதனை கார் விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது. இதனை காரின் பாடி ரோல் உறுதிபடுத்திவிடுகிறது.

ஷாங்காய் டூரர்!

MG 6 காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தும் உடனடித் திட்டம் எதுவும் இப்போது இல்லை. ஆனால், இந்த காரைப் பார்க்கும்போது, இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சீன தயாரிப்பு கார்களைப்போல இது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கச்சிதமான விலையில், போதுமான சிறப்பம்சங்களுடன்கூடிய காரை, MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தினால், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் SAIC நிறுவனத்தின் Baojun 530 எஸ்யூவியை, இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைத்து, MG பேட்ஜில் களமிறக்கும் முடிவில் அந்நிறுவனம் இருக்கிறது. இது இங்கே நீங்கள் படங்களில் பார்க்கும் MG 6 கார் அளவுக்கு இருக்காது என்றாலும், டொயோட்டா ஃபார்ச்சூனர் சைஸில் இருக்கும் Baojun 530 எஸ்யூவியை – ஹூண்டாய் க்ரெட்டா விலையில் விற்பனைக்குக் கொண்டுவந்தால், அது ஹிட் அடிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.