Published:Updated:

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?
பிரீமியம் ஸ்டோரி
சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் எலீட் i20 CVTதொகுப்பு: ராகுல் சிவகுரு

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் எலீட் i20 CVTதொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?
பிரீமியம் ஸ்டோரி
சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ - இங்குதான் தனது பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 காரைக் களமிறக்கியது ஹூண்டாய். இதில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் எந்த வித்தியாசமும் இல்லையென்றாலும், ஆட்டோமேட்டிக் மாடலில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. முந்தைய i20 காரில் 1.4 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜின் – 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், பேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜின்– CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பை வழங்கியிருக்கிறது. இதற்கு அந்த மாடலின் அதிக விலை மற்றும் சில வசதிகள் (ABS, DRL, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் மற்றும் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, 7 இன்ச் டச் ஸ்கிரீன்) இல்லாமல் போனதே காரணம். Magna Executive & Asta எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கும் i20 ஆட்டோமேட்டிக் மாடலை, காரின் டாப் வேரியன்ட்டான Asta (O)-வில் வழங்காதது நெருடல்.

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?
சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

சிறப்பம்சங்கள்

காரின் விலையைக் கட்டுக்குள் வைக்கவே, டாப் வேரியன்ட்டில் i20 காரின் ஆட்டோமேட்டிக் மாடலை ஹூண்டாய் களமிறக்கவில்லை. எனவே, பக்கவாட்டுக் காற்றுப் பைகள், ISOFIX, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், கார்னரிங் லைட்ஸ், ஆட்டோ ஹெட்லைட், ஸ்மார்ட் கீ, லெதர் வேலைப்பாடுகளுடன்கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லீவர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் சீட் பெல்ட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, Auto Link ஆப் போன்ற பல சிறப்பம்சங்கள் இங்கே மிஸ்ஸிங். என்றாலும், ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்குக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கிறது எலீட் i20.

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

ஸ்மூத்தான டிரைவிங்குக்குப் பெயர் பெற்ற CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பவர்ஃபுல் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் சிறப்பான கூட்டணியை அமைத்துச் செயல்படுகிறது. நகரத்துக்குத் தேவையான ஆரம்ப கட்ட பர்ஃபாமென்ஸ் நன்றாக இருப்பதுடன், மிதமான ஆக்ஸிலரேஷனின்போது கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக கியர்களை மாற்றுகிறது. இந்நேரத்தில் இன்ஜினும் சத்தமின்றி தனது பணியைச் செய்வதால், நெரிசல்மிக்க சாலைகளில் இந்த காரில் செல்வது நல்ல அனுபவமாக இருக்கிறது. இதை நம்பி ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, இன்ஜின் ஆர்பிஎம்முக்கும் காரின் வேகத்துக்கும் தொடர்பு இல்லாததுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. இங்குதான் CVT கியர்பாக்ஸின் மைனஸான Rubber Band Effect தனது இருப்பைக் காட்டுகிறது. காரை விரட்டி ஓட்டும்போது, 5,500 ஆர்பிஎம்வரை கியர் மாறாமல் இருந்தாலும், அந்த பவர் வீல்களுக்கு வரவில்லையோ எனத் தோன்றுகிறது.

எனவே, முன்னால் செல்லும் காரை ஓவர்டேக் செய்வதற்கு, பிளான் செய்துகொள்வது அவசியமாகிறது; இங்கேதான் CVT கியர்பாக்ஸின் மேனுவல் மோடு நமக்குக் கைகொடுக்கிறது. கியர் லீவரை வலதுபக்கத்தில் மாற்றும்போது, மேனுவல் மோடுக்கு கியர்பாக்ஸ் வந்துவிடுகிறது. (ஹோண்டா ஜாஸ் போல இங்கு பேடில் ஷிஃப்ட்டர் இல்லை). 3,500 ஆர்பிஎம்முக்கு மேலே இன்ஜினை இயக்கும்போது, ஓவர்டேக் செய்வதற்கு ஏற்ற பவர் கிடைக்கிறது. ஆனால் 5,000 ஆர்பிஎம்முக்கு மேலே செல்லும்போது, சத்தம் அதிகமாகிறதே தவிர, வேகத்தில் பெரிய முன்னேற்றம் தெரியவில்லை.

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

ஓட்டுதல் அனுபவம்

கரடுமுரடான சாலைகளில் குறைவான வேகத்தில் செல்லும்போது, கேபினுக்குள் அதிர்வுகளைக் கடத்தாமல் சஸ்பென்ஷன் சமாளித்துவிடுகிறது. இது மென்மையான செட்-அப்பைக் கொண்டிருப்பதால், அதிக வேகத்தில் செல்லும்போது, காரின் பின்பக்கம் ஆட்டம் போடுகிறது. பிரேக்குகளின் திறன் மனநிறைவைத் தருகிறது. குறைவான எடையைக் கொண்ட ஸ்டீயரிங் – நகரத்துக்கு ஏற்ற CVT கியர்பாக்ஸ் சேரும்போது, நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு உகந்த காராக i20 இருக்காது எனலாம்.

சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

னது போட்டியாளர்களான மாருதி சுஸூகி பெலினோ மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களைவிட, குறைவான விலையில் அறிமுகமாகியிருக்கிறது ஹூண்டாய் எலீட் i20. எனவே லைட் வெயிட் ஸ்டீயரிங் உடன், சிட்டிக்குள் மட்டும் பயன்படுத்தக்கூடிய கார் வேண்டும் என்பவர்களுக்கு, இந்த கார் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு, மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட காரே சரியாக இருக்கும்.