Published:Updated:

க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?
பிரீமியம் ஸ்டோரி
க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

போட்டி - ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் VS மாருதி சுஸூகி இக்னிஸ் (டீசல்)தொகுப்பு: தமிழ்

க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

போட்டி - ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் VS மாருதி சுஸூகி இக்னிஸ் (டீசல்)தொகுப்பு: தமிழ்

Published:Updated:
க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?
பிரீமியம் ஸ்டோரி
க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?
க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

‘டால்பாய் அளவுகோள்களுடன் க்ராஸ்ஓவர் நிலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்டது’ என்று இக்னிஸுக்கு விளக்கம் சொல்கிறது மாருதி. இதனுடன் போட்டி போட வேறு டால்பாய் கார்களைத் தேடினால், க்ராஸ்ஓவர்தான் சிக்குகிறது. அதில், ஃபோர்டின் ஃப்ரீஸ்டைல்தான் புது வரவு. இதை CUV என்கிறது ஃபோர்டு. அதாவது, ‘Compact Utility Vehicle’. ‘இரண்டுக்கும் போட்டி வெச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று வாசகர்களிடம் இருந்து வந்த கமென்ட்டுகளைப் பரிசீலனை செய்து, இரண்டு டீசல் கார்களையும் கிளப்பினோம்.

உள்ளே...

ஃப்ரீஸ்டைல்:
கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இன்டீரியர், ஸ்போர்ட்டியா டல்லா என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். டேஷ்போர்டின் பாதி சாக்லேட் பிரவுன் கலரோடு, இன்னும் வேறு சில வண்ணங்களைக் கொடுத்திருக்கலாமோ? SYNC3 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சட்டென ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற பாப்-அப் சிஸ்டம் கொண்ட பிரீமியம் கார்களை நினைவுபடுத்திவிட்டது. அப்புறம்தான் தெரிந்தது - இதை டேஷ்போர்டின் உயரத்தில் நன்றாக பொசிஷன் செய்துள்ளார்கள். ஸ்டைலாகவும் இருக்கிறது. படிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. ஆனால், நேவிகேஷன் இருந்தால் நன்றாக இருக்கும். ரிவர்ஸ் கேமரா உண்டு. தரம், இக்னிஸைவிட சூப்பர். சீட்டிங் பொசிஷன் நன்கு உயரமாகவே இருப்பதால், உள்ளே போய் வர ஈஸியாக இருக்கிறது. லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஹைட் அட்ஜஸ்டபிள் சீட்ஸ், ஏர் வென்ட்களுக்கு குரோம் ஃபினிஷிங் என்று ஆங்காங்கே பிரீமியம் டச் செம.

பின் பக்கம் லெக்ரூம் ஓகே! ஹெட்ரூம் நினைத்ததுபோலவே உயரமானவர்களுக்கு தலை கூரையில் இடித்தது. ஃப்ரீஸ்டைலில் 257 லிட்டர் பூட் ஸ்பேஸ். வீக் எண்ட் டூர் அடிக்கலாம். இதற்காக, பின் பக்க சீட்களை மடித்துக் கொள்ளும் வசதி கொடுத்துள்ளார்கள். ஆனால், 60:40 விகிதத்தில் மடிக்க முடியாது.

இக்னிஸ்: நெக்ஸா ஷோரூமில் கிடைக்கும் விலை குறைந்த பிரீமியம் கார் இக்னிஸ். டூ-டோன் தீம் கொண்ட இன்டீரியர், கண்ணைப் பறிக்காத லைட் கலர்கள், ‘நைஸ்’ என்று சொல்லவைக்கிறது. ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன், சிலிண்டரிக்கல் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் என எல்லாமே யூத்ஃபுல். சில பாகங்கள் ஃபோர்டு அளவுக்கு தரம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால்,  ஒட்டுமொத்த தரம் ஓகே! லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாமே அசத்தல். ஆனால், கேபின் குறுகலாக இருப்பதால் ஃப்ரீஸ்டைல் அளவுக்கு மூன்று பேர் தாராளமாக உட்கார முடியவில்லை. ஜாலியான விஷயம் - கழுத்துக்கான அட்ஜஸ்டபிள் நெக்ரெஸ்ட் கொடுத்துள்ளார்கள். கதவில், சீட் பாக்கெட்டில், பாட்டில் வைக்க ஹோல்டர் என்று ஸ்டோரேஜ் ஸ்பேஸ் சூப்பர்.

க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?
க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

வெளியே

ஃப்ரீஸ்டைல்: ஃபிகோவின் ஒன்றுவிட்ட அண்ணன் மாதிரிதான் இருக்கிறது ஃப்ரீஸ்டைல். ஸ்மோக் எஃபெக்ட் ஹெட்லைட்ஸ், 8 ஸ்போக் அலாய் வீல்கள், 185 செக்ஷன் கொண்ட 15 இன்ச் டயர்கள், ரூஃப் ரெயில், ஸ்கஃப் பிளேட்டுகள்... க்ராஸ்ஓவருக்கான டெஸ்ட்டில் நல்ல மார்க் வாங்குகிறது. ரூஃப் ரெயிலோடு சன் ரூஃபும் கொடுத்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும்.

இக்னிஸ்: நெக்ஸா விற்பனை என்றால் சும்மாவா? பிரீமியமாக இருக்க வேண்டுமே? பெரிய கிரில், கறுப்பு நிற ‘A’ பில்லர்கள், கறுப்பு அலாய், டெயில் கேட், பின் பம்பரில் கறுப்பு நிற கிளாடிங், டே டைம் DRL... இரவு நேரங்களில் இது நன்கு ஜொலிப்பதாக வாசகர்களே புளகாங்கிதப்பட்டுள்ளார்கள். ஆனால், இது டாப் மாடலான ஆல்ஃபாவில் மட்டும்தான். 15 இன்ச் அலாய் வீல்கள் உண்டு. ஆனால், ஃப்ரீஸ்டைலைவிட செக்ஷன் கம்மிதான். இந்த டால்பாய் டிசைன் எல்லோரையும் கவருமா என்று தெரியவில்லை.

பர்ஃபாமென்ஸ்

ஃப்ரீஸ்டைல்: 1.5 லிட்டர் இன்ஜின், 100 bhp பவர், 21.5 kgm டார்க் என்று லிஸ்ட்டே கொஞ்சம் பெருசாக இருக்கிறது. ஃபிகோவில் இருக்கும் அதே இன்ஜின்தான். புதிய ஃபிகோ வந்தபோது, அதை பவர்ஃபுல் ஹேட்ச்பேக்காக மாற்றியது இந்த இன்ஜின்தான். ஃபிகோவைவிட எடை கொஞ்சம் அதிகமான ஃப்ரீஸ்டைலுக்கு இப்போது இந்த இன்ஜின் என்பதால், பவர்ஃபுல் க்ராஸ்ஹேட்ச் என்று சொல்லலாம். ஐடிலிங்கில் இருந்தே ரெஸ்பான்ஸ் அருமை. ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் சந்தோஷமாகக் கிளம்புகிறது ஃப்ரீஸ்டைல். ஸ்டார்ட்/ஸ்டாப் டிராஃபிக்கில் ஃப்ரீ ஆக இருக்கிறது. 100 bhp ஆச்சே? ஹைவேஸிலும்தான். இன்ஜின் ரிஃபைன்மென்ட்டில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கிறதுபோல! சத்தம் அதிகம்தான்.

ஆனால், டர்போ லேக்கும் லேசாக ஃபீல் ஆகிறது. இது பெரிய பிரச்னை இல்லை. 4,500 தாண்டியும் பர்ஃபாமென்ஸ் பட்டையைக் கிளப்புகிறது. 0-100 கி.மீ-யை 11.7 விநாடிகளில், இக்னிஸைவிட வேகமாகக் கடக்கிறது. சந்தேகம் இல்லை; ஃபன் டு டிரைவில் ஃபோர்டு தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இக்னிஸ்: ஃபியட் இன்ஜின்தான் மாருதிக்குப் பெயர் வாங்கிக் கொடுப்பதே! இக்னிஸிலும் அதே கதைதான். 75 bhp, 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜின், 19 kgm டார்க். ஃப்ரீஸ்டைலைவிட எல்லாமே குறைவுதான். 2,000 rpm-க்குப் பிறகுதான் இன்ஜின் கண்விழிக்கிறது. இதுவே 4,000-ஆர்பிஎம் தாண்டினால், ஃபியட்டை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்று தெரியும். 5,000 வரை ஈஸியாக ஸ்பின் ஆகிறது இன்ஜின். ஃப்ரீஸ்டைலைவிட டெக்னிக்கல் அம்சங்களில் குறைவாக இருந்தாலும், மூன்றாவது கியரில் சூப்பர் ஃபாஸ்ட்டாக இருக்கிறது இக்னிஸ். ஓவர்டேக்கிங் ஓகே! அப்படியென்றால், இதுவும் ஃபன் டு டிரைவ் கார்தான்.

க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?
க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

ரைடு அண்டு ஹேண்ட்லிங்

ஃப்ரீஸ்டைல்:
சஸ்பென்ஷனை உயர்த்தி  இருப்பதுதான் ஃப்ரீஸ்டைலில் டாக் ஆஃப் தி ரைடிங். ஃபிகோவைவிட உயரமாக இருப்பதால் இந்த வேலை. நினைத்தபடியே இது ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப், மோசமான சாலைகளை அசால்ட்டாக எதிர்கொள்கிறது ஃப்ரீஸ்டைல். ஸ்டீயரிங் ஃபீட்பேக்கும் அருமை. செம லைட் வெயிட். இதனாலேயோ என்னவோ, சில மேடு பள்ளங்களில் ஸ்டீயரிங்குக்கு இந்த அதிர்வுகள் கடத்தப்படுகின்றன. கார்னரிங்கில் நம்முடன் தொடர்பிலேயே இருக்கிறது. பிரேக்கிங்கும் சூப்பர். கி.கிளியரன்ஸும் 190 மிமீ. ஓகே!

இக்னிஸ்: ஸ்டீயரிங், கிளட்ச், கியர்பாக்ஸ் எல்லாமே லைட் வெயிட் இக்னிஸில். சிட்டிக்குள் ஜாலியாகச் சிரித்துக்கொண்டே ஓட்ட முடிகிறது. ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே மெக்ஃபர்ஸனும், டார்ஸன் பீம் செட்-அப்பும்தான். ஆனால், ஸ்விஃப்ட்டுடன் ஒப்பிடும்போது, ப்ச்! ஃப்ரீஸ்டைல்போல் இல்லாமல், இதில் ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப். 40-50 கி.மீ-ல் மட்டும் மேடு பள்ளங்களில் போகும்போது, வெளியே நடப்பதை உள்ளே உணர முடிகிறது. நெடுஞ்சாலையில் இந்த ஸ்டிஃப்னெஸ்தான், இக்னிஸை ஜாலி காராக்குகிறது.

பாதுகாப்பு, வசதிகள்


ஃப்ரீஸ்டைல்: ஃப்ரீஸ்டைலை சும்மா ஒரு க்ராஸ்ஓவராக இறக்கிவிடவில்லை ஃபோர்டு. வசதிகளில் அத்தனை மும்முரம் காட்டி வந்திருக்கிறது ஃப்ரீஸ்டைல். உள்ளே 6.5 டச் ஸ்கிரீன் சிஸ்டம். இதில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு , ஃபோர்டின் புதிய SYNC3 ஆப்ஷன் எல்லாம் உண்டு. ஃப்ரீஸ்டைலில் உள்ள ‘My Key’ எனும் வசதி, வித்தியாசமானது. வால்யூம் லெவல், ஸ்பீடு லிமிட் போன்றவற்றை கன்ட்ரோல் செய்துகொள்ளக்கூடிய ஆப்ஷன், ஆட்டோ ஹெட்லாம்ப், அங்கங்கே பாட்டில் ஹோல்டர்கள் எல்லாமே உண்டு.

பாதுகாப்பில் அடுத்த லெவல். 6 காற்றுப் பைகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ESP, ஆக்டிவ் ரோல்-ஓவர் புரொடக்ஷன்... இது போக ரைடிங்குக்கு 15 இன்ச் பெரிய டயர்கள். சின்ன க்ராஸ்ஓவருக்கு இத்தனை பாதுகாப்பு போதாதா?

இக்னிஸ்: கீ லெஸ் என்ட்ரி, LED ஹெட்லாம்ப்ஸ் என்று ஃப்ரீஸ்டைல் தவறவிட்டதை இக்னிஸ் கச்செனப் பிடித்துக்கொள்கிறது (ஃபோர்டில் ‘கீலெஸ் கோ’ மட்டும்தான்.) இக்னிஸில் இரண்டு காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ்தான் பெரிய பாதுகாப்பே! 15 இன்ச் வீல்கள்தான், ஆனால், செக்ஷன் குறைவு. ஃப்ரீஸ்டைல் போலவே டச் ஸ்கிரீன் வசதியும் உண்டு.

பொதுவாக, டால்பாய் கார்களின் பெரிய ப்ளஸ் - அதில் ஏறி இறங்க வசதியாக இருப்பதுதான்.

க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

இக்னிஸும் அப்படித்தான். செம ஸ்மார்ட் பாய். அளவுகள் சின்னதாக இருந்தாலும், உள்ளேயும் இத்தனை இடவசதியா என்று வியக்கவைக்கிறது. பின் பக்க சீட்கள், உயரமானவர்களுக்குக்கூட அசத்தலாக இருக்கிறது. ஃப்ரீஸ்டைல் போல் இல்லாமல், 60:40 என்கிற விகிதத்தில் சீட்களை மடிக்க முடிவதால், லக்கேஜ் இடவசதியும் தாராளம். எர்கானமிக்ஸ், லைட் ஸ்டீயரிங் என்று சிட்டிக்குள் இக்னிஸை ஓட்ட அற்புதமாக இருக்கிறது. ஃபியட் இன்ஜின் என்பதால், டர்போ லேக் இருக்கும்தான். ஆனால், ஹைவேஸில் இக்னிஸின் இன்ஜின் செம ஃபன். இதே உயரமான டால்பாய் டிசைன் லேசாக பயமுறுத்துகிறது. இந்த நேரத்தில் ஏபிஎஸ் மற்றும் EBD தவிர இக்னிஸில் பெரிதான பாதுகாப்பு வசதிகளை எதிர்பார்க்க முடியவில்லை.

ஃபோர்டு இங்கேதான் சொல்லியடிக்கிறது. 6 காற்றுப் பைகளில் ஆரம்பித்து, எல்லாமே உண்டு. மாருதியை ஒப்பிடும்போது பெரிய இன்ஜின் என்பதால், பர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்குச் சரியான தீனி போடுகிறது ஃப்ரீஸ்டைல். கொஞ்சம் ஆஃப் ரோடு விரும்பிகளுக்கு சஸ்பென்ஷன் செட்-அப் லேசாகக்கூட வருகிறது. பெரிய டயர்கள், பிரேக்கிங் எல்லாமே பார்ட்னர்ஷிப். ஃப்ரீஸ்டைலின் ஒரே குறை -  பின் பக்க இடவசதி. உயரமானவர்களையும் தலைகுனிய வைப்பதில் ஃபோர்டு பின்தங்குகிறது.

மாருதியை ஒப்பிடும்போது கொஞ்சம் விலை அதிகம்தான் (Titanium+). ஆனால், அதற்கான காரணிகளாக பாதுகாப்பு + வசதிகள் ஃப்ரீஸ்டைலில் கவர்கின்றன. சர்வீஸ் நெட்வொர்க், ரீ-சேல் போன்ற விஷயங்களுக்காக மாருதியை டிக் அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தான். அதைத் தாண்டி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் ஃப்ரீஸ்டைல்தான், கில்லி!