Published:Updated:

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!
பிரீமியம் ஸ்டோரி
ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

போட்டி - டொயோட்டா யாரிஸ் AT Vs ஹூண்டாய் வெர்னா AT (பெட்ரோல்)தொகுப்பு: தமிழ்

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

போட்டி - டொயோட்டா யாரிஸ் AT Vs ஹூண்டாய் வெர்னா AT (பெட்ரோல்)தொகுப்பு: தமிழ்

Published:Updated:
ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!
பிரீமியம் ஸ்டோரி
ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!
ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

நாளொரு சொட்டும் பொழுதொரு துட்டுமாக ஏறிக்கொண்டிருக்கிற பெட்ரோல் விலைக்கு, டீசல் கார்தான் பெஸ்ட் என்கிற ஒரு பேச்சு இருந்துவந்தது. இப்போது பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வெறும்  8 ரூபாய்கூட வித்தியாசம் இல்லை. அதனால்தான் என்னவோ, டீசல் மாடலை வெளியிடாமல் யாரிஸில் பெட்ரோல் AT ஆப்ஷனை களம் இறக்கியிருக்கிறது டொயோட்டா.

ஆட்டோமேட்டிக் என்றாலே ஒரு பிரீமியம் லெவல் வந்துவிடும். யாரிஸ், பிரீமியம் செடான் லெவலில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. அந்த லெவலுக்கு ஈடு கொடுத்துக்கொண்டிருக்கிறது வெர்னா AT. இந்த AT மாடல்கள் இரண்டும், ஏட்டிக்கு போட்டியாக இருக்கிறதா... பார்க்கலாம்.

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!
ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

டிசைன், இன்டீரியர்

வெளித்தோற்றம், டிசைன், பாடி போன்ற விஷயங்களைக் கடந்த இதழிலேயே சொல்லியாகிவிட்டது. இரண்டுமே புரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் புரொஃபெஷனல் லுக்கில் ஆளை மயக்குகின்றன. 15 இன்ச் டயர்கள் யாரிஸில். 16 இன்ச் டயர்கள் வெர்னாவில்.

யாரிஸின் இன்டீரியரில் சில்வர் கலர் சீட்டுகள் பளிச்சென கண்களை  அள்ளுகின்றன. 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மட்டும் ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பொருத்தியதுபோல இருக்கிறது. கூல்டு க்ளோவ்பாக்ஸ், பின் பக்கம் இனோவா போல ரூஃபில் மவுன்ட் செய்யப்பட்டுள்ள ஏர்-கான் வென்ட்கள், பாட்டில்கள் வைக்க இடம், டிரைவர் சீட் எலெக்ட்ரிக்கல் ஹைட் அட்ஜஸ்ட் (முதல் இரண்டு டாப் வேரியன்ட்டில் மட்டும்) என்று பிராக்டிக்கல் யாரிஸுக்கு ஒரு கைக்குலுக்கல்.

வெர்னாவின் இன்டீரியர், வெளிப்புறத் தோற்றம் போலவே அசத்துகிறது. ஃபிட் அண்ட் ஃபினிஷில் ஹூண்டாய் இப்போது செம ஃபார்மில் இருக்கிறது. செம மாடர்ன். கறுப்பு மற்றும் பீஜ் நிற சீட்கள், பிரீமியம். பட்டன்கள், யாரிஸைவிட தரம்தான். எல்லாமே லக்ஸூரியஸ். முன் பக்க சீட்கள் நல்ல அகலம். ஆனால், பின் சீட்டுகளை இத்தனை தாழ்வாக ஏன் ஹூண்டாய் வடிவமைத்தது என்று தெரியவில்லை. வெளிச்சாலை தெரியவே இல்லை. பூட் வசதியிலும் வெர்னா பிரீமியம் - 480 லிட்டர். லோடு செய்ய மட்டும் கொஞ்சம் சிரமப்பட வேண்டும்.

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!
ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

டிரைவ்

ஓகே! ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு வருவோம். யாரிஸின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 107 bhp பவரை வெளிப்படுத்துகிறது. AT கியர்பாக்ஸுக்கு ஒரு பெரிய லைக். 7 ஸ்டெப் CVT கியர்பாக்ஸ். ஸ்டார்ட் செய்தேன். அட! ஸ்டீயரிங் வீலில் வைப்ரேஷன் தெரியவே இல்லை. கேபின் இன்சுலேஷன்கூட அருமை. ஆக்ஸிலரேஷன் கொடுத்துப் பார்த்தபோதும், சத்தம் போடவில்லை யாரிஸ். அப்படியென்றால், இனிஷியல் பவர் டெலிவரி சூப்பர் என்று அர்த்தம். ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்ததும் சட்டென 3,000 ஆர்பிஎம்-முக்கு எகிறுகிறது யாரிஸின் இன்ஜின். நகரத்து டிராஃபிக்குக்கு அற்புதமாக இருந்தது யாரிஸ்.

நெடுஞ்சாலையில் யாரிஸை விரட்டினேன். நான் நினைத்தது சரியாகிவிட்டது. லோ எண்டில் அற்புதமாக இருந்தால், மிட் ரேஞ்சில் சொதப்புவது என்ன வகையான லாஜிக்கோ? . மிட் ரேஞ்சில் பவர் டெலிவரி தட்டையாக இருப்பதுபோல் இருந்தது. இந்த நேரத்தில் பேடில் ஷிஃப்ட்டர்களைப் பயன்படுத்தி டவுன்ஷிஃப்ட் செய்து, பவரை ஏற்றிக்கொண்டேன். அப்போதுதான் ஓவர்டேக்கிங்கில் பதற்றம் இருக்காது. ஆனால், எல்லா நேரங்களிலும் பேடில் ஷிஃப்ட்டர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாதே?! மெதுவாக நேரம் எடுத்துக்கொண்டுதான் யாரிஸ் வேகம் எடுக்கிறது. இந்நேரத்தில் இன்ஜின் சத்தமும் கொஞ்சம் அதிகம்தான்.

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

வெர்னாவில் யாரிஸைவிடப் பெரிய இன்ஜின். 1.6 லிட்டர், 123 bhp பவர். இதில் இருப்பது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ். ஹூண்டாயின் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அடுக்களைக்குள் நுழையும் பூனைபோல் சத்தமில்லாமல் நகர்கிறது இன்ஜின். குறைந்த வேகத்தில்கூட புல்லிங் பவர், யாரிஸைவிட ஆஹா! பவரிலும் ஆக்ஸிலரேஷனும்கூட வித்தியாசம் அருமையாகத் தெரிகிறது. மிட் ரேஞ்ச், செம ஸ்ட்ராங்! பவர் டெலிவரியும் அற்புதம்.

0-100 கி.மீ-யை யாரிஸைவிட 2 விநாடிகள் குறைவாகக் கடக்கிறது. அதனால், வெர்னாதான் வேகம். ஆனால், யாரிஸ் போல பேடில்ஷிஃப்டர்கள் வெர்னாவில் இல்லை. அதற்குப் பதிலாக மேனுவல் மோடு கொடுத்திருக்கிறார்கள்.

ரைடு அண்டு ஹேண்ட்லிங்

பொதுவாக, ஹூண்டாயில்தான் ஸ்டீயரிங் ஃபீட்பேக் பற்றிக் குறை சொல்வார்கள். ஆனால், இதில் யாரிஸின் ஸ்டீயரிங் ஃபீட்பேக் கொஞ்சம் மந்தமோ என்று தோன்றியது. அதிவேகங்களில், ஸ்டீயரிங் அலைபாய்ந்து கொஞ்சம் நம்பிக்கை இழக்கவைக்கிறது. டேஷ்போர்டுக்குப் பக்கத்தில் வேறு இருக்கிறது ஸ்டீயரிங். வெறும் டில்ட் அட்ஜஸ்ட் மட்டும்தான். டிரைவருக்கான என்ஜாய்மென்ட் யாரிஸில் மிஸ்ஸிங்தான். மற்றபடி, மோசமான சாலைகளை ஈஸியாகச் சமாளிக்கிறது யாரிஸின் சஸ்பென்ஷன். டயர் கிரிப்பும் அருமை. யாரிஸின் ஹைலைட்டே இதன் பிரேக்ஸ்தான். இரண்டு பக்கமும் டிஸ்க்குக்காக டொயோட்டாவுக்கு தேங்க்ஸ். பயப்படத் தேவையில்லை. டிராஃபிக்கில் ரொம்பவும் சென்ஸிட்டிவ் ஆக இருக்கிறது பிரேக்ஸ். இது புது ரைடர்களுக்கு ஒருவிதமான ஜெர்க்கை உண்டு செய்யலாம்.

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

வெர்னாவில், இப்போது ஸ்டீயரிங் ஃபீட்பேக் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஜாலியாக இருக்கிறது. யாரிஸில் வெர்னா தோற்கும் விஷயம் இங்கேதான். பிரேக்கிங். இதன் ஹார்டு பிரேக்கிங், பெடல்களுக்கு எக்ஸ்ட்ரா ஆற்றலைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. குறைந்த வேகங்களில் ரைடு கம்ஃபர்ட், டீசன்ட். ஆனால், வேகமாகப் போகும்போது... ‘ஏதோ ஒரு பள்ளத்தில இறக்கியிருக்கோம்’ என்று ஸ்டீயரிங்கில் கிடைக்கும் அதிர்வை வைத்தே கண்டுபிடித்து விடலாம். ரைடர்களையும் குலுக்கி எடுக்கிறது சஸ்பென்ஷன்.

பார்ட்டிக்கு லேட்டாக வந்திருக்கிறது யாரிஸ். ஆனால், சரக்கோடு வந்திருக்கிறது. யாரிஸில் எக்கச்சக்க

ஸாரி யாரிஸ்... கமான் வெர்னா!

ப்ளஸ்கள். கேபின் ஸ்பேஸ் தாராளம்; பின் பக்க சீட் வெர்னாவைவிட கம்ஃபர்ட், பாதுகாப்பு... வாவ் (7 காற்றுப்பைகள்), பேடில் ஷிஃப்டர், பார்க்கிங் சென்ஸார் (முன்/பின்) என்று வெர்னாவில் இல்லாத வசதிகள். பிரேக்கிங்கிலும் டபுள் டிஸ்க். மேலும், டொயோட்டாவில் வாரன்ட்டிக்கும் பஞ்சம் இருக்காது. 3 ஆண்டுகளில் இருந்து 1 லட்சம் கி.மீ வரை வாரன்டி. எல்லாம் சூப்பர்! ஆனால், ஓட்டுதலில் வெர்னாவிடம் சிஎஸ்கே-விடம் சிக்கிய ஹைதராபாத்போல அடிவாங்குகிறதே! சிட்டிக்குள் ஓட்ட அற்புதமாக இருந்தாலும், ஹைவேஸில் ஓட்டுநருக்கான உற்சாகம்தான் ஆட்டோமேட்டிக்கின் ப்ளஸ்ஸே! விலையும் வெர்னாவைவிட ஆன்ரோடு 2 லட்சம் (!) அதிகம். ஸாரி யாரிஸ்.

உள்பக்கத் தரம், வெளிப்பக்க ஸ்டைல், ஃபிட் அண்டு ஃபினிஷ் எல்லாவற்றிலும் வெர்னா அசத்துகிறது. டிரைவருக்கான வென்டிலேட்டட் சீட்டுக்காகவே வெர்னாவுக்கு ஓட்டுப் போடலாம். டிரைவிங்கிலும் செம பன்ச். ஃபன் டு டிரைவில் ஃபோர்டு, ஃபோக்ஸ்வாகனோடு இப்போது ஹூண்டாயும் சேர்ந்துகொண்டுவிட்டது. ஆனால், பேடில் ஷிஃப்டர்களைச் சேர்த்திருக்கலாம். இது பெரிய குறை இல்லை. விலையும் யாரிஸைவிட கன்னாபின்னாவென குறைவு. மொத்தத்தில், ஒரு எக்கானமி எக்ஸிக்யூட்டிவ் பேக்கேஜாக எல்லாவற்றிலும் அசத்தும் வெர்னாவுக்கே ஓட்டு!