Published:Updated:

மைலேஜ் வேண்டுமா?

மைலேஜ் வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
மைலேஜ் வேண்டுமா?

மைலேஜ் டிப்ஸ் - கார்/பைக்தமிழ்

மைலேஜ் வேண்டுமா?

மைலேஜ் டிப்ஸ் - கார்/பைக்தமிழ்

Published:Updated:
மைலேஜ் வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
மைலேஜ் வேண்டுமா?

மாதச் சம்பளம் ஏறுகிறதோ இல்லையோ, பெட்ரோல் விலை மட்டும் தினசரி ஏறிக் கொண்டே இருக்கிறது. ‘இதெல்லாம் ட்ரெய்லர்தான்; இனிதான் மெயின் பிக்சரே’ என்பதுபோல், பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கும்போதே விலை ஏறும் அபாயமெல்லாம் இனி நடக்கும். அரசாங்கத்துக்கு, மோடிக்கு மீம்ஸ் போடுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நேரத்தில் பெட்ரோலைச் சேமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு டிரைவிங்கில் சில தந்திரங்கள் உண்டு. அது என்னான்னு கொஞ்சம் பார்க்கலாம்.

மைலேஜ் வேண்டுமா?

* வழக்கமாகச் சொல்வதுதான். எரிபொருள் நிரப்பும்போது, எப்போதுமே ஒரே பங்க்காக நிரப்புவது  நல்லது.  ‘எல்லாமே பெட்ரோல்தானே... எங்கே நிரப்பினா என்ன?’ என்பவர்கள், ஒரே இடத்தில் பெட்ரோல் போடுவதை வழக்கமாக வைத்துப் பாருங்கள். 6% பெட்ரோல் சேமிக்கலாம். நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

* பைக்கோ, காரோ... ‘வ்வ்ர்ர்ரூம்..’ என ஆக்ஸிலரேட்டரை கண்டபடி மிதித்து, முறுக்கி வாகனத்தை டார்ச்சர் செய்யாதீர்கள். கிராஜுவலான ஆக்ஸிலரேஷனும், மிதமான டவுன்ஷிஃப்ட்டும்தான் வாகனத்துக்கும் எரிபொருளுக்கும் நல்லது.

* ஐடிலிங்கில் 30 விநாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், இன்ஜினை நிச்சயம் ஆஃப் செய்வதுதான் சரி. மறுபடியும் ஸ்டார்ட் செய்வதில் கூடுதலாக பெட்ரோல் செலவழிந்து விடாது. ஐடிலிங்கில் தொடர்ந்து நிற்கும்போது, மணிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் காலியாகும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

* கிளட்ச்தான் மைலேஜுக்கு முதல் எதிரி. வண்டியை ஓட்டும்போது, கியர் மாற்ற வேண்டிய தருணங்களைத் தவிர முடிந்தவரை கிளட்ச்சைப் பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.சிலர் ஐடிலிங்கில் நிற்கும்போதுகூட, கிளட்ச்சை பாசமாகப் பிடித்துக்கொண்டே இருப்பார்கள். கிளட்ச் பிடிக்கும் ஒரு விநாடிக்கு, சுமாராக 5 மி.லி பெட்ரோல் வீணாகலாம்.

* சிக்னல் விழப் போகிறது என்று தெரிந்தால், முன்கூட்டியே ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டாம். தேவைப்பட்டால் தேவைப்படும் அளவுக்கு பிரேக் பி்டிக்கலாம். ‘ஆரஞ்ச்தானே இருக்கு; சிவப்பு விழுகுறதுக்குள்ள போயிடலாம்’ என்று முறுக்கிக்கொண்டு போய் சிக்னலில் சடன் பிரேக் போட்டு நிற்கும்போது, நிச்சயம் பெட்ரோல் வீணாகும். அதோடு நம்மைப் பின் தொடர்ந்து வரும் கார் நம் வாகனத்தின் பின்புறம் மோதவும் வாய்ப்பு உண்டு.

* பைக்/கார் ஆர்பிஎம்-கள் ஒவ்வொன்றுக்கும் வேறுபடும். உதாரணத்துக்கு, கேடிஎம்-ஐ எடுத்துக்கொள்ளலாம். நகரத்துக்குள் 3,500 - 4,000 ஆர்பிஎம்-க்குள் இருப்பதுபோல் உங்கள் ரைடிங் இருந்தால் நல்லது. ஹைவேஸ் எனும்போது 5,500-6,000 தாண்டினால் சீரான மைலேஜ் கிடைக்கும். டிரைவிங் மோடு உள்ள கம்யூட்டிங் பைக்குகளில் ‘எக்கோ’ மோடுகளைப் பயன்படுத்தியே ஓட்டுங்களேன். சிட்டிக்கு எதுக்கு ‘பவர்’ மோடு?

* டயர் பிரஷர் - மைலேஜுக்கு மறைமுகமாக உதவும் முக்கியமான நண்பன். அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் இருப்பது மைலேஜுக்குப் பெரிதாய்க் கைகொடுக்கும். அதேபோல், ட்ரிபிள்ஸ் - ‘டபுள்ஸ்’ என்று எக்ஸ்ட்ரா லோடு அடிப்பவர்கள் ‘மைலேஜ் கிடைக்கமாட்டேங்குதே’ என்று புலம்பி பிரயோஜனம் இல்லை!

*  கார்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு ஏ.சி.யை ஆஃப் செய்துவிட்டால் மைலேஜ் கிடைக்கும் என்று நினைப்பார்கள். இது மூடநம்பிக்கை. இதனால், ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்படும் என்பதோடு, ஆக்ஸிலரேஷன் அதிகமாகி எரிபொருளும் வீணாகும்.

* வழக்கம்போல், ரெகுலர் சர்வீஸ் என்பதும் ஒரு வாகனத்துக்கும் மைலேஜுக்கும் உற்ற நண்பர்கள். இன்ஜின் எந்தளவு ஸ்மூத்தாக இருக்கிறதோ, அந்தளவு மைலேஜும் ஸ்மூத்தாக இருக்கும். சரியான நேரத்தில் ஆயில் சர்வீஸ் செய்தால், ஆல் இஸ் வெல்!