கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

ஒப்பீடு - மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா AMT VS டாடா நெக்ஸான் AMTதமிழ்

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

ஹிந்திரா, டாடா, மாருதி சுஸூகி என்று மூன்று நிறுவனங்களுமே AMT-கியர்பாக்ஸோடு காம்பேக்ட் எஸ்யூவிக்களை விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டன.  மேனுவலாக கியரை மாற்றி, கிளட்ச்சை அழுத்தி, ஆக்ஸிலரேட்டரை ஏறி மிதிப்பதற்குள் பதில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் வெறும் ஆக்ஸிலரேட்டர், பிரேக்கில் மட்டும் மாறி மாறி விளையாடி மலையேறுவதும் ஒரு தனி சுகம்தானே!

மாருதி சுஸூகியின் பிரெஸ்ஸா AMT டீசலைையும், டாடாவின் நெக்ஸான் AMT டீசலையும் அடுத்தடுத்து மலைப்பாதைகளில் ஓட்டி டெஸ்ட் செய்தோம். இரண்டுக்கும் நடந்த AMT போட்டியில் கிடைத்த  ரிப்போர்ட் இது.

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

ஸ்டைல் அண்ட் டிசைன்

பிரெஸ்ஸா:
AMT அறிமுகமான கையோடு, கலர் மாற்றங்களையும் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. ஆரஞ்ச் கலர்தான் இப்போதைக்கு  பலரது விருப்பத் தேர்வு. ரூஃபுக்கு மட்டும் சில்வர் கலர் யுனிக்காகத்தான் இருக்கிறது. அதே சில்வர் கலர், விங் மிரர்களிலும் தொடர்வது அசத்தல். கறுப்பு அலாய் வீல்கள் ஸ்போர்ட்டியாக இருக்கின்றன. மற்றபடி டிசைன் கொஞ்சம் பார்த்துப் பழகியதுதான்.

நெக்ஸான்: AMT என்றாலே ஆரஞ்ச் கலர்தான் என்று முடிவு செய்து விட்டார்கள்போல. இது XZA+ மாடலில் மட்டும்தான். கூபே வடிவ டிசைனை, ஒரு எஸ்யூவி-யில் கொண்டு வந்ததற்காக டாடாவுக்கு ஒரு ஸ்டார் எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கலாம். கிரில்லை லாங் ஷாட்டில் இருந்து பார்த்தால், கார் சிரிப்பதுபோலவே இருக்கிறது. இதிலும் ரூஃப்-க்குத் தனி கலர். நல்ல ஐடியா.

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

பர்ஃபாமென்ஸ், ரிஃபைன்மென்ட்

பிரெஸ்ஸா:
ஃபியட்டின் அதே 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜின்தான். ஓட்டுதல் அனுபவத்துக்குக் குறைவில்லை. 90 bhp பவர். 5 ஸ்பீடு AMT. கியர்ஷிஃப்ட்டிங்கில் தடுமாற்றம் தெரியாமல், நல்ல ஃபீல் தரும்படி செட்அப் செய்திருக்கிறார்கள். த்ராட்டில் ரெஸ்பான்ஸ் செம ஸ்மூத். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டவுன்ஷிஃப்ட்டிங்கிற்கு  மட்டும் கொஞ்சம் அதிக நேரம் எடுக்கிறது. இதில் AMT-க்கே உரிய Creep வசதி இருப்பது, ப்ளஸ். அதாவது, ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தாலும், கார் லேசாக முன்னோக்கி நகர்வதுதான் Creep ஃபங்ஷன். மிட் ரேஞ்சில்தான் இதன் ஃபன் டு டிரைவ்-ன் மகத்துவம் வெளிப்படுகிறது. ஆனால், அதிக ஆர்பிஎம்மில் கொஞ்சம் சத்தம் போடுகிறது ஃபியட் இன்ஜின். ஆட்டோமேட்டிக் என்பதால், அவ்வளவாக டர்போ லேக் இல்லை. மகிழ்ச்சி.

நெக்ஸான்:
ஸ்டார்ட் அண்ட் ஸ்டாப் டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு நெக்ஸான் சிறப்பாகவே இருக்கிறது. சிக்னலில் இருந்து எடுக்கும்போது நல்ல பவருடன் கார் புறப்படுகிறது. பவர் டெலிவரி சீராக இருக்கிறது. இதன் 6 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ், 110 bhp பவர், 26 kgm டார்க் என்று டெக்னிக்கல் ஏரியாக்களிலும் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. AMTதான், ஆனால் டார்க் கன்வெர்ட்டர் போல் இதன் ரெஸ்பான்ஸ் துரிதமாக இருக்கிறது. டவுன்ஷிஃப்ட், அப்ஷிஃப்ட் என எல்லாமே சட் சட் என நடப்பதுதான் இதன் ஸ்பெஷல். இதில் மூன்று டிரைவிங் மோடுகள் இருப்பது பெரிய ப்ளஸ். பிரெஸ்ஸாவைவிட 20 bhp பவர் அதிகம் என்றாலும், பிரெஸ்ஸாதான் வேகமாக இருக்கிறது.

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

பிரெஸ்ஸா:  குறைந்த வேகங்களில் செல்லும்போது, சஸ்பென்ஷன் செட் அப் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருக்கிறது. ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போது இது நல்ல ஸ்டெபிலிட்டியையும், ஓட்டுதல் உற்சாகத்தையும் கொடுக்கிறது. ஸ்டீயரிங் லைட் வெயிட். இதனால், சிட்டி டிரைவிங்கில் ஈஸியாக டிரைவ் செய்யலாம். ஆனால், நெடுஞ்சாலைகளில் ஸ்டீயரிங் டிஸ்கனெக்ட் ஆவதுபோல் ஒரு உணர்வு. பிரேக்ஸ், நன்றாகவே இருக்கிறது. திடீரென பிரேக் அடிக்கும்போது சட்டென வேகத்தைக் குறைத்து நின்றது பிரெஸ்ஸா. டயர் கிரிப்பும் அருமை. பாடி ரோலையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது மாருதி சுஸூகி.

நெக்ஸான்:
பிரெஸ்ஸாவைவிட ஓட்டுதல் தரம் நெக்ஸானில் சூப்பர். இதன் சஸ்பென்ஷன் செட்-அப் எப்படிப்பட்ட மோசமான சாலைகளையும் சமாளிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுபோல் இருக்கிறது. ஸ்டீயரிங் அதிக வெயிட்டும் இல்லை; லைட்டும் இல்லை. உடனடியாக ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. பிரேக்ஸும் ஓகே! பிரெஸ்ஸாவைப்போல் இல்லை; நெக்ஸானில் கொஞ்சம் பாடி ரோல் இருக்கிறது.

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

உள்ளே

பிரெஸ்ஸா:
கறுப்பு மற்றும் பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இதன் கேபின், ப்ரீமியம் கார் என்கிற உணர்வைத் தரவில்லை. இருட்டறைக்குள் இருப்பதைப்போல் இருக்கிறது. ஆனால், எர்கானமிக்ஸ் ஓகே! எல்லா கன்ட்ரோல்களும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன. சற்றே உயரமான A பில்லர்கள்தான் இதை ஒரு பக்கா எஸ்யூவியாகக் காட்டுகின்றன. அதனால், வெளிச்சாலை தெரியாதோ என்று பயப்படத் தேவையில்லை. சீட்டிங் பொசிஷன் அதற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொண்டால், சாலை நன்றாகத் தெரிகிறது.

நெக்ஸான்:
பிரெஸ்ஸா போல் இல்லாமல் வண்ணமயமாக இருக்கிறது நெக்ஸான். சில்வர் பூச்சுகள், க்ரோம் வேலைப்பாடுகள், பியானோ பிளாக் ஃபினிஷ் என்று கலந்து கட்டி அட்ராக்ட் செய்கிறது  இன்டீரியர். இந்த வண்ணங்களே காருக்கான ப்ரீமியம் லுக்கைக் கொண்டுவந்துவிடுகின்றன. சில இடங்களில் மட்டும் ஃபிட் அண்ட் ஃபினிஷ் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும். நெக்ஸானில் புரியாத ஒரே ஒரு விஷயம் - சீட் உயரமாக இருந்தாலும், ஒரு எஸ்யூவியில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படவில்லையே... ஏன்?

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

இடவசதி

பிரெஸ்ஸா: முன் பக்க இருக்கைகள் அகலமாகவும் சப்போர்ட்டிவ் ஆகவும் இருக்கின்றன. பின் பக்க இருக்கைகளில் ஹெட்ரூம், லெக்ரூம் எல்லாமே பக்கா! சில கார்களில் உள்ளே உட்கார்ந்தால், வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாது. பிரெஸ்ஸாவில் அந்தக் குறை இல்லை. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வரலாம் ஆனால்,. பின் பக்கப் பயணிகளுக்கு ஏ.சி வென்ட் இல்லையே? பிரெஸ்ஸாவின் டிக்கி 328 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

நெக்ஸான்: முன் பக்க இருக்கைகள்  சப்போர்ட்டிவாக இருக்கின்றன. லம்பர் சப்போர்ட்டும் ஓகே. கூபே டிசைன் என்பதால், பின் பக்கப் பயணிகளின் தலை இடிக்கும் என்று ஆரம்பத்தில் எல்லோரும் பயந்தார்கள். ஆனால், அந்த பயம் தேவையில்லை. நெக்ஸானில் ஹெட்ரூம் ஓகே. ஆனால் பிரெஸ்ஸாவுடன் ஒப்பிடும்போது குறைவுதான். பின் பக்கப் பயணிகள், பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதுபோல் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல்தான் பயணிக்க வேண்டும். இதன் ரோடு வியூ சுமார்தான். ரியர் ஏ.சி வென்ட், நெக்ஸானில் உண்டு. டிக்கி இடவசதியிலும் நெக்ஸான்தான் கில்லி. 350 லிட்டர் கொள்ளளவு.

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

வசதிகள்

பிரெஸ்ஸா:
டாப் எண்டில் இருக்கும் வசதிகளுக்காக பிரெஸ்ஸாவுக்கு ஒரு ஹைஃபை கொடுக்கலாம். 16 இன்ச் அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், டச் ஸ்க்ரீன் இன்ஃபோ சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, மிரர்லிங்க் கனெக்டிவிட்டியுடன் நேவிகேஷன் எனப் பல அம்சங்களைக் கொடுத்திருக்கிறார்கள். பாதுகாப்பிலும் அசத்துகிறது பிரெஸ்ஸா. 2 காற்றுப் பைகள், ABS - EBD, குழந்தைகளுக்கான ISOFIX சீட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் என்று பல பாதுகாப்பு வசதிகள். ஆனால் காற்றுப் பைகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டியிருந்தால் வசதிகளில் பிரெஸ்ஸாவுக்கு 5 ஸ்டார் கொடுக்கலாம்.

நெக்ஸான்:
டாடாவின் கனெக்ட்நெக்ஸ்ட் 6.5 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நெக்ஸானின் ஹைலைட். இதில் ஆப்பிள் கார் ப்ளே இல்லை. ஆண்ட்ராய்டு ஆட்டோ மட்டும்தான். ஹர்மான் ஆடியோ சிஸ்டத்தின் 8 ஸ்பீக்கர்கள், தெறிக்க விடுகின்றன. 16 இன்ச் அலாய் வீல்கள், 60:40 ரியர் ஸ்ப்ளிட் சீட் வசதி, புரொஜெக்டர் ஹெட்லாம்ப், DRL என்று சில வசதிகள் உண்டு. ABS-EBD, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா (கைடு லைன்களுடன் வருவதால், காரை ரிவர்ஸ் எடுப்பது ஈஸி), 2 காற்றுப் பைகள் என பாதுகாப்பு வசதிகளிலும் போட்டியாளர்களுக்கு இணையாகவே இருக்கிறது நெக்ஸான்.

கேபின் ரிச் லுக்காக இருந்தாலும், தரத்தில் ஓகேதான். காரணம், டியாகோவில் இருந்து சில பிளாஸ்டிக்

மாருதியா? டாடாவா? எந்த AMT வேண்டும்?

பாகங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். இன்ஜினில் ஏதோ பன்ச் மிஸ் ஆவதுபோலவே தெரிகிறது. நெக்ஸானை முழுமையான எஸ்யூவி என்று சொல்ல முடியாது. ஆனால், கண்ணைக் கவரும் அதிரடியான டிசைனில், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் போன்ற வசதிகளுடன் டிசைனில் வேற லெவலில் இருக்கிறது நெக்ஸான். உள்பக்கத்தரம் பற்றிப் பிரச்னை இல்லை என்றால், நெக்ஸானுக்கு டிக் அடிக்கலாம்.

டல் அடிக்கும் கறுப்பு இன்டீரியரைத் தாண்டி, ஃபியட் இன்ஜினின் ஃபன் பர்ஃபாமென்ஸ், ஸ்மூத்தான கியர்ஷிஃப்ட், தாராளமான இடவசதி - இதெல்லாம் பிரெஸ்ஸாவின் ப்ளஸ். எல்லாவற்றையும் விட மாருதி சுஸூகியின் மிகப்பெரிய சர்வீஸ் நெட்வொர்க் மிகப்பெரிய பலம். கேபின் இடவசதி, இன்ஜின் பன்ச், சிறப்பம்சங்கள் என எல்லாம் சேர்ந்து இங்கு பிரெஸ்ஸாவை வெற்றியாளர் ஆக்குகின்றன.