கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!

Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!
பிரீமியம் ஸ்டோரி
News
Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!

ஆடி Q5 TFSI - ஃபர்ஸ்ட் டிரைவ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

சென்ற ஆண்டுதான் ஆடி நிறுவனம், தனது விலை அதிகமான Q7 எஸ்யூவியின் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது 2018-ல், புதிய Q5 எஸ்யூவியில் அதே இன்ஜினை வழங்கியிருக்கிறது ஆடி. டெயில்கேட்டில் 45 TFSI பேட்ஜிங்கைத் தாண்டி, பெட்ரோல் மாடலுக்கும் டீசல் மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தரம், இடவசதி, சொகுசு, சிறப்பம்சங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற இதன் கேபினிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டு இன்ஜின்களுமே 2 லிட்டர்தான் என்றாலும், டீசல் மாடல் 190bhp பவரையும், பெட்ரோல் மாடல் 252bhp பவரையும் வெளிப்படுத்துகின்றன.

Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

37kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1,984சிசி டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி என்றால் 4 வீல் டிரைவ் இல்லாமல் இருக்குமா? Q5 எஸ்யூவியில் தனது Ultra Quattro ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தைச் சேர்த்திருக்கிறது ஆடி. இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பவரை முன்பக்க வீல்களுக்குத்தான் அனுப்புகிறது. ஆனால், கூடுதல் ரோடு கிரிப் தேவைப்படும் நேரத்தில், இருக்கும் பவர் நான்கு வீல்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆரம்ப கட்ட வேகங்களில், இன்ஜினின் டர்போ லேக் மற்றும் கியர்பாக்ஸ் செயல்படும் விதம் காரணமாக, நெரிசல்மிக்க டிராஃபிக்கில் காரைச் செலுத்துவது சுலபமாக இல்லை. 2,200 ஆர்பிஎம்முக்கு மேல் டர்போ சார்ஜர் முழு உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. இந்த வேகத்தைத் தாண்டும்போது, கியர்பாக்ஸும் ஸ்மூத்தாக கியர்களை மாற்றுகிறது. டிரைவ் மோடில் சரியான வேகத்தில் சரியான கியரில் கார் பயணிக்கிறது. நாம் ஆக்ஸிலரேட்டரில் காட்டும் பலத்தைப் பொறுத்து, கியர்கள் தானாகச் சட்டென கூடுவது/குறைவது பெரிய ப்ளஸ். ஸ்போர்ட்ஸ் மோடில், பவர் டெலிவரி சிறப்பாக இருக்கிறது. கியர்பாக்ஸும் அதற்கேற்ப துல்லியமாகச் செயல்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இதே இன்ஜினைக் கொண்ட Q7 பெட்ரோல் எஸ்யூவியில் இருக்கும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் அளவுக்கு, Q5 பெட்ரோல் எஸ்யூவியின் டூயல் க்ளட்ச் கியர்பாக்ஸின் செயல்பாடு இல்லை.

Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!

ஓட்டுதல் அனுபவம்

டர்போ பெட்ரோல் இன்ஜின் சத்தமின்றி தனது பணியைச் செய்வதால், நெடுஞ்சாலைகளில் Q5 எஸ்யூவியில் க்ரூஸ் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது. இந்த நேரத்தில் காரின் நிலைத்தன்மையும் அசத்தல் ரகம். வளைத்து நெளித்து ஓட்ட ஏதுவாக இருப்பதால், திருப்பங்களில் காரை நம்பிக்கையாகச் செலுத்த முடிவதுடன், டைனமிக் மோடில் காரின் சஸ்பென்ஷன் இறுக்கமடைவதை உணர முடிகிறது. 4 வீல்களுக்கும் தேவையான ரோடு கிரிப்பை, Ultra Quattro சிஸ்டம் கச்சிதமாக வழங்குகிறது. மெக்கானிக்கலாக எல்லாமே நன்றாக இருக்கும்போது, ஸ்டீயரிங் ஃபீட்பேக் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அட்ஜஸ்டபிள் டேம்பர்கள் இருப்பதால், கரடுமுரடான சாலைகள் தரும் இடர்பாடுகளை, காரின் சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக் கொள்கிறது.

Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!
Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!
Q7 இன்ஜின் இப்போ Q5-ல்!

ரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் Q5 பெட்ரோல் எஸ்யூவியின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், முறையே 55.27 லட்சம் ரூபாய் (ப்ரீமியம் ப்ளஸ்) மற்றும் 59.29 லட்சம் ரூபாய் (டெக்னாலஜி)  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டீசல் வேரியன்ட்களைவிட 2 லட்ச ரூபாய் அதிகமாக இருந்தாலும், பர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்கு இது நல்ல டீலாகவே தெரியும்.