கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மெர்சிடீஸ் பென்ஸ் E க்ளாஸ் 200D ஆல் டெரெய்ன்தொகுப்பு: சிந்து தமிழ்

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

வால்வோவின் S90 செடானுக்கு அண்ணனாக S90 க்ராஸ் கன்ட்ரி எப்படி வந்ததோ, அதுபோல் பென்ஸ் E கிளாஸ் செடானுக்கு ஒரு ஆல் ரவுண்டர் அண்ணன் வந்துவிட்டார். இதற்கு ‘ஆல் டெரெய்ன் E க்ளாஸ்’ என்று பெயர் வைத்துள்ளது பென்ஸ். இதை E க்ளாஸின் எஸ்டேட் வெர்ஷன் என்றும் சொல்லலாம்.

E க்ளாஸைப் பார்த்திருக்கிறீர்களா? அதே காரின் வீல்பேஸை லேசாகக் குறைத்து, ரைடு உயரத்தை அதிகமாக்கி, காரை நீளமாக்கி, பெரிய வீல்களுடன், 4Matic ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தைச் சேர்த்து ஒரு எஸ்டேட் காரைக் கற்பனை செய்து கொண்டு கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் கற்பனையில் தோன்றும் அதே கார்தான் E க்ளாஸ் ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்.

காரின் நீளம்தான் இதன் கெத்து. 5 மீட்டருக்கு 53 மிமீதான் குறைவு. டயரும்தான். 19 இன்ச் வீல்கள், எந்த டெரெய்னையும் சமாளிக்கும் போல! கிரில்லில் இரண்டு க்ரோம் ஸ்ட்ரிப்புகள்தான். ஆனால், முரட்டுத்தனமாக இருக்கிறது. பின் பக்க பம்பருடன் எக்ஸாஸ்ட்டில் முடியும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கஃப் பிளேட்டுகள் நச்!

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

உள்பக்கத்தைப் பொறுத்தவரை பென்ஸ் என்றாலே நீட் அண்ட் க்ளீன்தான். E கிளாஸில் இருக்கும் அதே ஸ்மூத்தான டேஷ்போர்டு தான் இந்த எஸ்டேட் காரிலும். தரத்தில் அத்தனை கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பானெட் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், வெளிச்சாலை வியூ டீசன்ட்டாகவே இருக்கிறது. சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து விட்டால் சிறப்பான டிரைவிங் பொசிஷன் கிடைத்துவிடுகிறது.

பின் பக்க சீட்கள், அப்படியே முதலாளிகளுக்கானவை. சென்டர் ஆர்ம் ரெஸ்ட்டுடன், தாராளமான லெக் ரூமுடன், ரியர் ஏ.சி வென்ட்டுடன், 10 டிகிரி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்டுடன் பிராக்டிக்கலாகவும், கெத்தாகவும் இருக்கின்றன. இதன் டிக்கியின் கொள்ளளவு 640 லிட்டர். பின் சீட்களை 40:20:40 விகிதத்தில் மடித்துக் கொண்டால், மொத்தமாக 1,820 லிட்டர் பூட் வசதி கிடைக்கும். ஸ்பேர் வீல் பொசிஷனுக்குப் பதிலாக ஸ்பேஸ் சேவர் ஸ்பேர், டிக்கியின் இடத்தைச் சாப்பிட்டு விடுகிறது.

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

இதற்குப் பெயரே ஆல் டெரெய்ன். அப்படியென்றால்... எல்லாச் சாலைகளிலும் இந்த பென்ஸ் ஓட வேண்டும்தானே! முதலில் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை செக் செய்தால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும்156 மிமீதான் இருந்தது. எனவே, இந்த E கிளாஸ் எஸ்வியூ கிடையாது.  வீல்பேஸ் 2.9 மீட்டர் நீளம். சட் சட் என்ற யு-டர்ன்களுக்கு வாய்ப்பில்லை. பெரிய ‘ஓ’ டர்ன்தான் போட வேண்டும்.

இந்த பென்ஸில் ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தது - இதன் 4Matic ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்தான். முன்/பின் ஆக்ஸில்களுக்கு டார்க்கை அளவாகப் பங்கிட்டுக் கொள்கிறது இந்த சிஸ்டம். இதன் டார்க் - 40 kgm. மழைச்சாலையோ, தாறுமாறு ஆஃப்ரோடோ - எந்த இடத்திலும் பென்ஸ் டார்க் போதாமல் திணறவே இல்லை.

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

பொதுவாக செடான் கார்களில்தான் சஸ்பென்ஷன், ஸ்டிஃப் செட்-அப்பில் இருக்கும். ஆனால், E 350D செடானில் இருப்பது ஏர் சஸ்பென்ஷன். எனவே ஓட்டுதல் சொகுசாக இருக்கும். இந்த ஆல் டெரெய்ன் கார் இதற்கு நேரெதிர். பயணத்தில் கொஞ்சம் ஸ்டிஃப்னெஸ் தெரிகிறது. இதுவே நெடுஞ்சாலைகளில் E கிளாஸ் செடானைவிட 1.9 டன் எடை கொண்ட இந்த ஆல் டெரெய்ன் பயங்கர ஸ்டெபிலிட்டி. இதன் ஏரோ டைனமிக் டிசைனும், ஃப்ளூயிட் ஸ்டீயரிங்கும்தான் இதன் ஹேண்ட்லிங்கை அற்புதமாக்குகின்றன. இதில் 5 டிரைவிங் மோடுகள் உண்டு. உங்கள் பயணத்துக்கு ஏற்றவாறு இதன் சஸ்பென்ஷன் செட்டிங், ஸ்டீயரிங் செட்-அப், பவர் டிரெய்ன் எல்லாவற்றையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

நெடுஞ்சாலையில் இதன் பவர் டெலிவரியும், டிரைவிங்கும் அற்புதம். 194 bhp பவர் என்றால் சும்மாவா? கார் ஓடவில்லை; பறக்கிறது. 0-100 கி.மீ-யைக் கடக்க வெறும் 8 விநாடிகள்தான். 1.9 டன் எடையுள்ள காருக்கு இது நல்ல பர்ஃபாமென்ஸ்தான். ஒரு முக்கியமான விஷயம் - இதுதான் மெர்சிடீஸின் முதல் BS-VI எமிஷன் நார்ம்களின்படி வெளிவந்திருக்கும் இன்ஜின். இந்த இன்ஜினின் ரிஃபைன்மென்ட்டும் பெர்ஃபாமென்ஸும் வேறு லெவலில் இருக்கிறது. இந்த 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் பவர் டெலிவரி செம ஸ்மூத். அவசரத்துக்கு ஸ்டீயரிங்குக்குக் கீழ் பேடில் ஷிஃப்டரும் கொடுத்திருக்கிறார்கள்.

சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்!

சின்னதாக ஒரு எஸ்டேட் பயணம், ஜில்லுனு ஒரு நெடுஞ்சாலைப் பயணம் என இரண்டுக்கும் இந்த ஆல்டெரெய்ன் பென்ஸ் எஸ்டேட் கார் நல்ல சாய்ஸ். 71 லட்ச ரூபாய் வால்வோ V90 க்ராஸ் கன்ட்ரிக்கு ஒரு சவாலான போட்டி காத்துக்கொண்டிருக்கிறது.