கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

CVT சிட்டிக்கு ஓகே-வா?

CVT சிட்டிக்கு ஓகே-வா?
பிரீமியம் ஸ்டோரி
News
CVT சிட்டிக்கு ஓகே-வா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ரெனோ டஸ்ட்டர் CVTதொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹேட்ச்பேக், செடான் கார்களைத் தொடர்ந்து, எஸ்யூவி-களிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வர ஆரம்பித்துவிட்டன. ரெனோ டஸ்ட்டரில், பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலுமே இப்போது ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உண்டு.

CVT சிட்டிக்கு ஓகே-வா?

வேரியன்ட் மற்றும் வசதிகள்

பெட்ரோலில் CVT என்றால் டீசலில் AMT. டாப் வேரியன்ட்டான RXZ-ல் மட்டுமே டீசல் ஆட்டோமேட்டிக்கை வாங்க முடியும். இதுவே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் என்றால், அதை RXS வேரியன்ட்டிலேயே வாங்கிவிடலாம். இது டாப் வேரியன்ட்டுக்கு அடுத்தபடியாக இருக்கும் வேரியன்ட் என்பதால், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி மற்றும் ரியர்வியூ கேமரா போன்ற சில வசதிகள் மிஸ்ஸிங்! ஆனால் டச் ஸ்க்ரீன், ஏபிஎஸ், EBD, 2 காற்றுப்பைகள், ESP, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என பாதுகாப்பு வசதிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறது டஸ்ட்டர் CVT.

டிசைன் மற்றும் கேபின்

வழக்கமான டஸ்ட்டருடன் ஒப்பிடும்போது, டெயில்கேட்டில் இருக்கும் X-Tronic ஸ்டிக்கரைத் தாண்டி, அதற்கும் ஆட்டோமேட்டிக் டஸ்ட்டருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

வெளிப்புற டிசைனைப்போலவே கேபினிலும் எந்தப் புதுமையும் இல்லை. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது டஸ்ட்டர் இங்குதான் பின்தங்குகிறது. பிளாஸ்டிக் தரம், ஃபிட் அண்டு ஃப்னிஷ் ஆகியவை தரத்தில் சுமாராக இருப்பதுடன், டச் ஸ்க்ரீனும் பழைய ஸ்டைலில் இருக்கிறது. ஆனால், சொகுசான சீட்கள் மற்றும் அதிக இடவசதி என பிராக்டிக்கலாக ஈர்க்கிறது டஸ்ட்டர்.

CVT சிட்டிக்கு ஓகே-வா?

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்

பேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய டஸ்ட்டரில், 104bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருந்தது. இப்போதைய டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்டில் இருப்பது, நிஸான் சன்னி / ரெனோ ஸ்காலாவில் இருந்த அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இது 106bhp பவர் மற்றும் 14.2kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள CVT கியர்பாக்ஸின் டிரைவ் பெல்ட்டில் ஓவர்டைம் பார்த்திருக்கிறது நிஸான். எனவே, இது இந்த நிறுவன கார்களில் இருந்த CVT கியர்பாக்ஸைவிட சிறியதாகவும், எடை குறைவாகவும், 30 சதவிகிதம் வேகமாகச் செயல்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய 1.5 லிட்டர் இன்ஜின் அமைதியாக இயங்குவதுடன், பவர் டெலிவரியும் சீராகவே இருக்கிறது.

ஆனால், கியர்பாக்ஸ் செயல்படும் விதம் கொஞ்சம் மந்தமாக இருப்பதால், சட்டென வேகம் பிடிக்காமல் ஆற அமர வேகத்தைக் கூட்டுகிறது டஸ்ட்டர் CVT. இதன் மேனுவல் மோடில் 6 Set Points வழங்கப்பட்டிருப்பதால், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்போல இருக்கிறது. மேனுவல் மோடில் ஓட்டும்போது, காரின் பர்ஃபாமென்ஸில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், மற்ற CVT கியர்பாக்ஸ்களுடன் ஒப்பிடும்போது, இங்கே கியர்கள் ஸ்மூத்தாக மாறுவதுடன், Rubber Band Effect-ம் குறைவாகவே இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, நெடுஞ்சாலைகளில் விரட்டி ஓட்டுவதற்கு டஸ்ட்டர் CVT சரியான சாய்ஸ் அல்ல.

CVT சிட்டிக்கு ஓகே-வா?

டிசைன், கேபின் போலவே டஸ்ட்டர் CVT-ன் ஓட்டுதல் அனுபவத்திலும் எந்த மாற்றமும் இல்லை. எனவே, கரடுமுரடான சாலைகளில் சென்றாலும் அது தரும் அதிர்வுகளை காரின் சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக்கொள்கிறது. திருப்பங்களில் காரைச் செலுத்துவதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. மேலும், அதிக வேகத்தில் காரின் நிலைத்தன்மையும் பக்கா.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, `நான் சிட்டிக்குள்தான் காரை ஓட்டுவேன். பெட்ரோல் எஸ்யூவிதான் வேண்டும். அதில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இருக்க வேண்டும்’ என்பவர்களுக்கு, டஸ்ட்டர் CVT நல்ல சாய்ஸ். அதிரடி பர்ஃபாமென்ஸை எதிர்பார்ப்பவர்கள் வேறு ஆப்ஷன்களைப் பார்க்கலாம். ஏனெனில் பார்த்துப் பழகிய டிசைன், டல்லான கேபின், குறைவான சிறப்பம்சங்கள் என சில மைனஸ்கள் இருந்தாலும், எஸ்யூவி-க்கான கெத்து, கேபின் இடவசதி, ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றில் இது டிஸ்டிங்ஷன் வாங்குகிறது. போட்டியாளரான ஹூண்டாய் க்ரெட்டா பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலுடன் ஒப்பிடும்போது, 4 லட்சம் ரூபாய் விலை குறைவு என்பது டஸ்ட்டரின் மிகப் பெரிய பலம்!