Published:Updated:

சீஸன் ஓவர்!

தேசிய கார் ரேஸ்

  சு.சுரேஷ்குமார்   பா.காயத்ரி அகல்யா

 ##~##

ந்தியாவில் நடந்த ஃபார்முலா ஒன் போட்டி, நம் நாட்டு ரேஸ் ஆர்வலர்களிடையே அட்ரினலின் பாய்ச்சிய நேரத்தில், சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது தேசிய கார் ரேஸ் பந்தயம். போட்டியின் 6-வது மற்றும் இறுதிச் சுற்று, கடந்த நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. லேசான மழைத் தூறலுக்கு இடையே நடந்த போட்டியில், வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க, போட்டி போட்டுக் கொண்டு மின்னலாகப் பறந்தன கார்கள்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபார்முலா எல்ஜிபி ஸ்விஃப்ட்

ஃபார்முலா ஸ்விஃப்ட் பிரிவில் மார்ஸ் ரேஸிங்கின் அமேயா வால்வால்கர் 162 புள்ளிகளுடன் முதல் இடமும், தீபக் இரண்டாம் இடமும், மீக்கோ ரேஸிங்கின் சித்தேஷ் மண்டோடி மூன்றாவது இடமும் பிடித்தனர். கடைசிச் சுற்றில் 37 புள்ளிகள் பெற்றதன் மூலம், ஐந்தாவது சுற்று வரை முதலிடத்தில் இருந்த தீபக்கைப் பின்னால் தள்ளி, சாம்பியன் பட்டத்தை வென்றார் வால்வால்கர். டீம் சாம்பியன்ஷிப்பில் டிவிஎஸ் கிர்லிங் முதலிடமும், மார்ஸ் ரேஸிங் இரண்டாம் இடமும், மேகோ ரேஸிங் மூன்றாவது இடமும் பிடித்தன.

சீஸன் ஓவர்!

போலோ கப்:

ஃபோக்ஸ்வாகன் போலோ கப் சாம்பியன்ஷிப் பட்டத்தை விஷ்ணு பிரசாத் கைப்பற்றினார். புனேவைச் சேர்ந்த ஓஷான் கொத்தாடியா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கடைசிச் சுற்று போட்டியில் கெஸ்ட் டிரைவர் சன்னி சித்து முதலிடமும், சர்வதேச பெண் டிரைவரான மைகேன் ராஸ்முசென் இரண்டாவது இடமும் பிடித்தனர். ராஸ்முசென் க்ரிட்டில் பதினெட்டாவதாக ஆரம்பித்தும், பரபரவென முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான கடைசிச் சுற்றுப் போட்டியில் முதல் ஏழு டிரைவர்களும் வெறும் 5 விநாடிகள் வித்தியாசத்தில் ரேஸை முடித்தது இதில் ஹை லைட்!  

பல்வேறு விதிமுறை மீறலுக்காக, மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகளில் தண்டனை கொடுக்கப்பட்ட போதும், ஐந்தாவது சுற்று வரை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த விஷ்ணு பிரசாத், கடைசிச் சுற்றில் நான்காவதாக வந்ததன் மூலம் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார்.

சீஸன் ஓவர்!

இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ்:  

ஐ.ஜே.டி.சி சாம்பியன்ஷிப் பிரிவில் எல்.சி.டி சிகாரம் ஸ்போர்ட்ஸ் அணியின் தில்ஜித் 228 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், 2010-ம் ஆண்டின் சாம்பியன் மோட்டோரெவ் இந்தியாவின் பாலவிஜய் இரண்டாம் இடத்தையும் ஹெச்.சி.ஜி ரேஸிங்கின் ஃபெரோஸ் கான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

தில்ஜித் ஐந்தாவது சுற்றின் போதே 201 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்திருந்தார். 2010-ன் சாம்பியனான பாலவிஜய் விபத்தின் காரணமாக நான்காவது சுற்றில் இருந்து விலக நேரிட்டபோதும், ஆறாவது சுற்றில் 25 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சூப்பர் சலூன்:

சூப்பர் சலூன் இந்தியன் டூரிங் கார்ஸ் பிரிவில் பிரைம் ரேஸிங்கின் ராஜ் விர்தன் 217 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ராட் ரேஸிங்கின் லீலா கிருஷ்ணன் இரண்டாவது இடமும், பிரைம் ரேஸிங்கின் விஜயகுமார் மூன்றாம் இடமும் பிடித்தனர்!