Published:Updated:

கார்கள் 2019

கார்கள் 2019
பிரீமியம் ஸ்டோரி
கார்கள் 2019

அறிமுகம் - கார்கள் 2019

கார்கள் 2019

அறிமுகம் - கார்கள் 2019

Published:Updated:
கார்கள் 2019
பிரீமியம் ஸ்டோரி
கார்கள் 2019
கார்கள் 2019

‘சான்ட்ரோ திரும்பவும் வருதுன்னு சொன்னாங்களே? ஹோண்டாவுல 7 சீட்டர் உண்டா இல்லையா? கியா எப்ப விற்பனைக்கு வரும்?’ - மெயில், வாட்ஸ்-அப், FB, ட்வீட் என எல்லாவற்றிலும் இப்படி ஏகப்பட்ட கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு. அதனால், 2019-ல் வரப்போகும் முக்கியமான 30 கார்களைப் பற்றிய ஒரு சின்ன ட்ரெய்லர் உங்களுக்காக! பக்கங்களை வரிசையாகப் புரட்டுங்கள், வரிசை கட்டி வரும் கார்களைப் பற்றித் தெரிந்து கொள்ள!

கார்கள் 2019

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி Q3

டுத்த வருடத்தின் இறுதிக்குள்ளாக, புதிய இரண்டாம் தலைமுறை Q3 எஸ்யூவி-யை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஆடி. ஃபோக்ஸ்வாகனின் லேட்டஸ்ட் வெர்ஷன் MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட ஸ்போர்ட்டியாக இருப்பதுடன், கேபின் இடவசதியும் கூடியிருக்கிறது. விர்ச்சுவல் காக்பிட், அடாப்டிவ் டேம்பர்ஸ், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட் என லேட்டஸ்ட் வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ்.

கார்கள் 2019

டட்ஸன் கோ-க்ராஸ்

டுத்த ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்குள்ளாக, ஒரு காம்பேக்ட் எஸ்யூவி-யை இந்தியாவில் களமிறக்கும் முடிவில் இருக்கிறது டட்ஸன். இது ரெனோ க்விட் தயாரிக்கப்படும் அதே CMF-A பிளாட்ஃபார்மில் ரெனோவின் புதிய எம்பிவி-யுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளது. இதில் ரெனோ க்விட் மற்றும் டட்ஸன் ரெடி-கோ ஆகிய கார்களில் இருக்கும் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்படும் என்றாலும், கூடுதல் பவருக்காக டர்போ சார்ஜரை இணைத்துள்ளது டட்ஸன். இதில் மற்ற டட்ஸன் கார்களைப்போலவே, டீசல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவுதான்.

கார்கள் 2019

ஹோண்டா CR-V

ந்தியாவில் CR-V வரலாற்றில் முதன்முறையாக டீசல் இன்ஜின் வரப் போகிறது. 7 சீட்ஸ், ஃப்ரேம் இல்லாத டச் ஸ்க்ரீன் சிஸ்டம், தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்கால் ஆன டேஷ்போர்டு,  டீசல் இன்ஜினில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எனப் புதிய தலைமுறை CR-V-யைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. வெளிநாட்டு மாடலில் இருப்பது 1.6 லிட்டர் டீசல். இந்தியாவுக்கு வரும் மாடலிலும் அதே டீசல் இன்ஜின்தான். ஆனால் சிங்கிள் டர்போ சார்ஜர் என்பதால், குறைவான 120bhp பவர் மற்றும் 30kgm டார்க் மட்டும்தான்.

கார்கள் 2019

ஹோண்டா HR-V

HR-V
மிட்-சைஸ் எஸ்யூவி-யின் பேஸ்லிஃப்ட் மாடலை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது ஹோண்டா. பார்க்க மினி CR-V போல இருக்கும் இதில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனான லேட்டஸ்ட் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். சர்வதேச மாடலில் லேன் கீப்பிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், Collition Mitigation பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடங்கிய ஹோண்டா Sense Safety பேக்கேஜ் இருக்கும் நிலையில், அது இந்தியாவுக்கு வருமா என்பது சந்தேகமே!

கார்கள் 2019

ஹூண்டாய் சான்ட்ரோ

பு
திய சான்ட்ரோ ஹேட்ச்பேக்கை இந்தியாவில் வெளியிடுகிறது ஹூண்டாய். இதுவும் டால் பாய் டிசைன்தான். டச் ஸ்க்ரீன், இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் எல்லாமே டாப் வேரியன்ட்டில்தான்! இதில் சான்ட்ரோ ஜிங் மற்றும் i10-ல் இருந்த அதே 1,086 சிசி இன்ஜின்தான் இருக்கும் என்றாலும், ஹூண்டாய் வரலாற்றில் முதன்முறையாக AMT கியர்பாக்ஸ் இதில் வழங்கப்பட உள்ளது. விரைவில் அமலுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப, முந்தைய i10 காரின் பிளாட்ஃபார் மில்தான் சான்ட்ரோ தயாரிக்கப்படும்.

கார்கள் 2019

ஹூண்டாய் கார்லினோ

ந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் டிரெண்டிங்கில் இருந்தாலும், அதிலிருந்து ஹூண்டாய் இதுவரை விலகியே இருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வாக, கார்லினோ கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு, QXi எனும் குறியிட்டுப் பெயரைக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி-யை அந்த நிறுவனம் தயாரிக்கும் எனத் தெரிகிறது. பாக்ஸ் பாணி டிசைன் என்றாலும், அதில் ஹூண்டாயின் பிரத்யேக டிசைன் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். தாமதமாக கோதாவுக்குள் வருவதால், விலை விஷயத்தில் ஹூண்டாய் கவனமாகவே இருக்க வேண்டும்.

கார்கள் 2019

ஹூண்டாய் கோனா EV

டுத்த ஆண்டு மத்தியில், கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் களம் கண்டிருக்கும். இது பார்வைக்கு வழக்கமான கோனா போலவே இருந்தாலும், கிரில் மற்றும் எக்ஸாஸ்ட் இல்லாதது இதை `EV’ என உணர்த்தி விடுகிறது. காரின் ஃப்ளோரில் பேட்டரிகள் இருப்பதால், கேபின் இடவசதி நன்றாகவே இருக்கும். சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணிக்கக் கூடிய இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, 0-100கிமீ வேகத்தை 9.7 விநாடியில் எட்டிப்பிடிக்கிறது. அதிகபட்சமாக 155 கிமீ வேகம் வரை செல்கிறது. தனது தொழில்நுட்பத்திறனை இந்தியாவில் பறைசாற்ற, ஹூண்டாய்க்கு கோனா ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

கார்கள் 2019

ஜாகுவார் E-பேஸ்

ந்தியாவில் ஜாகுவார் விற்பனை செய்யப்போகும் இரண்டாவது எஸ்யூவி இதுதான்! எனவே, பார்க்க மினி F-பேஸ் போலக் காட்சியளிக்கும் இது, அந்த நிறுவனத்தின் டிசைன் பாணியைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கேபினில் இது தெரிகிறது என்றாலும், Rotary கியர் நாபுக்குப் பதிலாக வழக்கமான கியர் லீவர் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல்/டீசல் இன்ஜின், ஃப்ரன்ட் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்பு,  9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இதில் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன.

கார்கள் 2019

ஜீப் ரெனிகாடே

ரு எஸ்யூவி-யில் வாடிக்கை யாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் இருக்கின்றன. LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், கூடுதல் பனி விளக்குகள், பெரிய டச் ஸ்க்ரீன் உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இதன் ஃபேஸ்லிஃப்ட்டில் காரை நீட்டாக மாற்றியிருக்கிறது ஜீப். இதில் காம்பஸ் எஸ்யூவி-யில் இருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான். ஆனால், உள்நாட்டு உதிரிபாகங்களைக்கொண்டு கார் தயாரிக்கப்படும் என்பதால், விலை மகிழ்ச்சியைத் தரலாம்.

கார்கள் 2019

ஜீப் காம்பேக்ட் எஸ்யூவி

கா
ம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் கால் பதிக்கிறது ஜீப். ரெனிகாடே எஸ்யூவி-க்குப் பிறகு இது அறிமுகமாகும். ஃபியட் பான்டா மற்றும் ஃபியட் 500 ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாரிக்கப்படவுள்ளது. `ஜீப் 526’ என்ற குறியீட்டுப் பெயரைக்கொண்டிருக்கும் இது, ஜீப்பின் விலை குறைவான எஸ்யூவி-யாக பொசிஷன் செய்யப்படும்.

கார்கள் 2019

ஜீப் காம்பஸ் டிரெய்ல்ஹாக்

பு
த்தாண்டுப் பரிசாக, காம்பஸில் டிரெய்ல்ஹாக் எனும் ஆஃப் ரோடர் வேரியன்ட்டைஇந்தியாவுக்குக் கொண்டுவருகிறது ஜீப். BS-VI  விதிகளுக்கு ஏற்ப இன்ஜின் ரீ-ட்யூன் செய்யப்படும். மேலும், ஜீப்பின் ஆக்டிவ் டிரைவ் லோ ரேஞ்ச் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில், கூடுதலாக Rock மோடு ஆப்ஷனும் உண்டு. சன்ரூஃப், 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பவர்டு டிரைவர் சீட் ஆகியவை இருக்கும். டீசல் இன்ஜினுடன் - ஒரே டாப் வேரியன்ட்டில் வரப்போகும் இதில், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கார்கள் 2019

கியா Trazor

ந்தியாவில் கியாவின் முதல் காராக Trazor-தான் இருக்கும். 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பலத்த வரவேற்பைப் பெற்ற SP கான்செப்ட்டை அடிப்படையாகக்கொண்டே Trazor வடிவமைக்கபடும். முன்பக்கத்தில் கியாவின் பிரத்யேக `Tiger Nose’ பாணி கிரில் இருந்தாலும், பின்பக்கத்திலிருந்து பார்க்க க்ரெட்டா போலவே கார் காட்சியளிக்கிறது. ஏனெனில், க்ரெட்டா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தான் இதுவும் தயாரிக்கப்பட உள்ளது. இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் அதேதான்!

கார்கள் 2019

கியா காம்பேக்ட் எஸ்யூவி

ப்படி க்ரெட்டாவிலிருந்து Trazor உருவாகப் போகிறதோ, அதைப்போலவே ஹூண்டாய் கார்லினோவை அடிப்படையாகக்கொண்டு ஒரு காம்பேக்ட் எஸ்யூவி-யைத் தயாரிக்க உள்ளது கியா. இதில் தனது பிரத்யேக `Tiger Nose’ பாணி கிரில் மற்றும் LED ஹெட்லைட்ஸ், டூயல் டோன் ரூஃப் என காரின் டிசைன் ஸ்டைலாக இருக்கும் எனத் தெரிகிறது. இதில் கார்லினோவில் இருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

கார்கள் 2019

மஹிந்திரா டிவோலி

ர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக்கொண்டு, புதிதாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவி-யைத் தயாரிக்க உள்ளது மஹிந்திரா. S201 எனும் குறியீட்டுப் பெயரைக்கொண்டிருக்கும் இதை, 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காராக இந்த நிறுவனம் மாற்றியிருக்கிறது. மற்றபடி கேபின், வசதிகள் அப்படியே டிவோலியின் ஜெராக்ஸ்தான்! எனவே, டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ESP, ஏழு காற்றுப்பைகள் என ப்ரீமியம் வசதிகள் காரில் இடம் பெற்றிருக்கும். இதில் தனது புதிய டர்போ பெட்ரோல் இன்ஜினை வெளியிட இருக்கிறது மஹிந்திரா.

கார்கள் 2019

மஹிந்திரா XUV 7OO

ஹிந்திராவின் விலை உயர்ந்த கார், ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் எஸ்யூவி. ஆனால்  இது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இரண்டாம் தலைமுறை ரெக்ஸ்ட்டன் எஸ்யூவி வரவிருக்கிறது. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார், அந்த நிறுவனத்தின் டிரேட்மார்க் கிரில்லைக் கொண்டிருந்தது. இதற்கு `XUV 7OO’ எனப் பெயர் சூட்டப்படலாம். 7 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக்கொண்டுள்ள இந்த எஸ்யூவி, குறைவான விலையை மனதில் வைத்து, இந்தியாவில் அசெம்பிள் செய்யும் முடிவில் இருக்கிறது மஹிந்திரா.

கார்கள் 2019

மாருதி சுஸூகி எர்டிகா

கே
பின், பூட் ஸ்பேஸ், 3-ம் வரிசை  என எல்லாவற்றிலும் ஏற்றம் கண்ட எர்டிகா வரவிருக்கிறது. Heartect பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முன்பைவிட காரின் எடை குறையும். ஆனால் திடத்தன்மை குறையாது. சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் இருக்கும் 1.5 லிட்டர் (பெ)/1.3 (டீ) இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கலாம். Auto க்ளைமேட் கன்ட்ரோல், LED லைட்டிங், 3 வரிசைகளுக்கும் ஏசி வென்ட்கள், புரொஜெக்டர் ஹெட்
லைட்ஸ் என வசதிகள் ப்ரீமியமாக இருக்கும். எம்பிவிகளின் ‘தல’ இனோவா-வுக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது.

கார்கள் 2019

மாருதி சுஸூகி வேகன்-ஆர்

மி
னி/மைக்ரோ செக்மென்ட்டில் போட்டி அதிகரித்து வருவதால், முற்றிலும் புதிய வேகன்-ஆரை அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி சுஸூகி. இதில் தனது பலங்களான கேபின் இடவசதி, ஸ்மூத் இன்ஜின் ஆகியவை தொடரும் என நம்பலாம். அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகள் காரணமாக, புதிய பிளாட்ஃ பார்மில் வேகன்-ஆர் காரைத் தயாரிக்க உள்ளது மாருதி சுஸூகி. ஆனால், இது Heartect பிளாட்ஃபார்ம் ஆக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

கார்கள் 2019

மாருதி சுஸூகி ஆல்ட்டோ

னது டாப் செல்லிங் மாடல்களில் ஒன்றான ஆல்ட்டோவை, முற்றிலும் புதிய அவதாரத்தில் களமிறக்க உள்ளது மாருதி சுஸூகி. இது ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஆல்ட்டோவைப்போல வடிவமைக்கப்படும் என்றாலும், அதில் இந்தியாவுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோவின் அதே இன்ஜின் ஆப்ஷன்களே தொடரும் என்றாலும், அவை BS-VI விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படும்.

கார்கள் 2019

MG Baojun 530

ந்தியாவில் Baojun 530 எஸ்யூவி வாயிலாக டயர் பதிக்க இருக்கிறது MG மோட்டார் இந்தியா நிறுவனம். இதன் நீளம் 4.6 மீட்டர். ஜீப் காம்பஸைவிடப் பெரிய எஸ்யூவி. LED ஹெட்லைட் & டெயில் லைட், பெரிய கிரில் & வீல் ஆர்ச், கறுப்பு நிற பில்லர்கள், கட்டுமஸ்தான பம்பர்கள் என பக்கா எஸ்யூவியாக இருக்கும். டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சன் ரூஃப், என எல்லாமே உண்டு. ஜீப் காம்பஸில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைப் பொருத்தவுள்ளது MG மோட்டார் இந்தியா. உள்நாட்டிலேயே காரின் உற்பத்தி நடைபெறும் என்பதால், அசத்தலான விலையில் கார் வெளிவரலாம்.

கார்கள் 2019

மெர்சிடீஸ் பென்ஸ் A-க்ளாஸ் செடான்

2018
பெய்ஜீங் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட A-க்ளாஸ் செடானை, இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது மெர்சிடீஸ் பென்ஸ். A செடான் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், கூபே போன்ற டிசைனை இது கொண்டிருக்கும். சீனாவில் பிரத்யேகமான Long வீல்பேஸ் மாடல் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவுக்கு வரப்போவது வழக்கமான மாடல்தான். MBUX உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Speech Recognition, மாடர்ன் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்கள், உயர்தரமான டேஷ்போர்டு என இதன் கேபின் அசத்துகிறது.

கார்கள் 2019

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

பெ
ரிய க்ரோம் கிரில் - LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் என ஸ்டைலான டிசைன், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், Flowing பாணி சென்டர் கன்சோல், சில்வர் வேலைப்பாடுகள், லெதர் உள்ளலங்காரம், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 7 காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக் என முற்றிலும் புதிய அவதாரத்தில் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-யை வெளியிட இருக்கிறது மிட்சுபிஷி.

கார்கள் 2019

ஃபோக்ஸ்வாகன் போலோ GTi

றாம் தலைமுறை போலோ GTi காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். தனது MQB AO பிளாட்ஃபார்மில் இந்த காரைத் தயாரித்திருக்கும் அந்த நிறுவனம், முந்தைய மாடலைவிட அளவில் பெரிதாக இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல, முந்தைய மாடலில் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருந்த நிலையில், புதிய மாடலில் இருப்பதோ 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்! இதனால் 7kgm டார்க் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது (32kgm). சர்வதேச மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்டிருந்தாலும், இந்திய மாடலில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வரும்.

கார்கள் 2019

நிஸான் லீஃப்

‘அ
ப்போ வரும்... இப்போ வரும்’ என தண்ணி காட்டிக் கொண்டிருந்த லீஃப், ஒருவழியாக இந்தியாவுக்கு வரவிருக்கிறது. உலகளவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனமாக இது இருந்தாலும், இந்தியாவில் லீஃப் காரை அதிகளவில் விற்பனை செய்யும் முடிவில் நிஸான் இல்லை. ஏனெனில், CBU முறையில் இந்தியாவில் இந்த கார் இறக்குமதி செய்யப்பட உள்ளதால், விலை விஷயத்தில் லீஃப் எகிறியடிக்கலாம். எனவே, தனது தொழில்நுட்பத் திறனை இந்தியாவுக்குப் பறைசாற்றக்கூடிய காராக இது இருக்கும் என நிஸான் நம்புகிறது.

கார்கள் 2019

ரெனோ எம்பிவி

க்
விட் தயாரிக்கப்படும் அதே CMF-A பிளாட்ஃபார்மில், புதிய எம்பிவி ஒன்றைத் தயாரிக்க உள்ளது ரெனோ. இது ஸ்டைலான டிசைனுடன் கூடிய 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட எம்பிவி-யாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். 3 வரிசை இருக்கை, அனைத்து இருக்கைகளுக்கும் ஏசி வசதி, டச் ஸ்க்ரீன் சிஸ்டம் ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் கேபின், க்விட்டை நினைவுபடுத்துகிறது. இதில் தனது புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ.

கார்கள் 2019

ரெனோ டஸ்ட்டர்

ற்போதைய டஸ்ட்டருக்கு வயதாகி விட்டதால், புதிய டஸ்ட்டரை இந்தியாவில் களமிறக்க உள்ளது ரெனோ. பெரிய கிரில், அகலமான ஹெட்லைட், ஸ்டைலான அலாய் வீல்கள் என வெளிப்புறத்தில் கணிசமான மாற்றங்கள் இருக்கின்றன. செவ்வக வடிவ ஏசி வென்ட், பல கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய டேஷ்போர்டு என கேபின் மாடர்னாக இருக்கும். கேப்ச்சருக்குக் கீழே இது பொசிஷன் செய்யப்படலாம்.

கார்கள் 2019

ஸ்கோடா கரோக்

கோ
டியாக் ரிலீஸுக்குப்பிறகு, தனது அடுத்த அஸ்திரமாக கரோக் எஸ்யூவி-யை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா. யெட்டி காருக்கு மாற்றாக வரப்போகும் இது, அசப்பில் மினி கோடியாக் போலவே இருக்கிறது.  ஆக்டேவியா, சூப்பர்ப், கோடியாக் தயாரிக்கப்படும் அதே MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், கேபின் தரம் மற்றும் கட்டுமானத்தரம் டாப் க்ளாஸாக இருக்கும். 5 சீட்டரான இதில், இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை வெளியிடுகிறது ஸ்கோடா.

கார்கள் 2019

டாடா Harrier

H5X
கார்தான், தற்போது `Harrier’ என்ற பெயரில் 5 சீட்டர் எஸ்யூவி-யாக வருகிறது. இதிலேயே 7 சீட்டர் மாடல் ஒன்றையும் வேறு பெயரில் அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா. இது ஜாகுவார் லேண்ட் ரோவரின் JLR D8 பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டுள்ள டாடாவின் OMEGA பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ளது. ஜீப் காம்பஸில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் இதிலும். 6 ஸ்பீடு AT ஆப்ஷனல். பெரிய வீல்கள், தடிமனான வீல் ஆர்ச், LED லைட்டிங், ஃப்ளோட்டிங் ரூஃப், சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட், டச் ஸ்க்ரீன் சிஸ்டம் என எல்லா வசதிகளையும் கேரி செய்துவருகிறது ஹேரியர்.

கார்கள் 2019

டொயோட்டா C-HR

னது புதிய TNGA பிளாட்ஃபார்மில் தயாராக உள்ள C-HR காரை, ஹைபிரிட் அமைப்புடன் களமிறக்குகிறது டொயோட்டா. 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட இது, ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும். வழக்கமான டொயோட்டா கார்களுடன் ஒப்பிடும்போது, கான்செப்ட் கார் போன்ற தோற்றத்தைக்கொண்டிருக்கும் C-HR, ஸ்டைலான டேஷ்போர்டையும் அதிக இடவசதியையும் கொண்டுள்ளது. இதை இந்தியாவில் அசெம்பிள் அல்லது உற்பத்தி செய்யும் முடிவில் டொயோட்டா இருப்பதால், அசத்தல் விலை உறுதி.

கார்கள் 2019

டொயோட்டா கரோலா

C-HR
கார் போலவே, இதுவும் TNGA பிளாட்ஃபார்மில் தயாராகப்போகும் டொயோட்டா கார்தான்! எனவே, இதுவும் அதைப்போன்ற அட்டகாசமான டிசைனைக்கொண்டிருக்கிறது. இதில் தற்போதைய மாடலில் இருக்கும் பெட்ரோல் இன்ஜின் தொடரும் என்றாலும், கூடுதலாக ஹைபிரிட் அமைப்பைக் கொண்ட மாடலும் வரும். இது C-HR காரில் இருப்பதுதான் என்பதுடன், LED ஹெட்லைட்ஸ் - 7 காற்றுப்பைகள் - ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இருக்கும்.

கார்கள் 2019

வால்வோ S60

னி வால்வோவில் இருந்து டீசல் கார்கள் வராது. அதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல்கள் வெளிவரும். புதிய S60 செடானின் இன்ஜின் ஆப்ஷன்களைப் பாருங்கள். ஆரம்ப மாடலில் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருந்தால், டாப் மாடலில் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 65kW எலெக்ட்ரிக் மோட்டார் அமைப்பு. இதன் டார்க் 64kgm... அம்மாடி! பெட்ரோல் மாடல் FWD என்றால், ஹைபிரீடு மாடல் AWD. தனது SPA பிளாட்ஃபார்மில் தயாராகும் S60-ல் நீளம்/அகலம்/வீல்பேஸ் எல்லாமே எக்ஸ்ட்ரா! எனவே, இடவசதி ஆசம் ஆசம்..!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism