Published:Updated:

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!
பிரீமியம் ஸ்டோரி
கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

கார்த்திக் சென்னியப்பன்

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

கார்த்திக் சென்னியப்பன்

Published:Updated:
கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!
பிரீமியம் ஸ்டோரி
கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

‘ஃபெராரி ஓட்டிப் பார்க்க வர்றீங்களா?’

என்று ஃபெராரி நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தபோது...உட்கார்ந்த இடத்தில் இருந்தே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். 

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

அதிலும் நான் ஓட்டப்போகும் ஃபெராரி, சாகாவரம் பெற்ற 308 GTB மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த 308  GTS வழிவந்த 488 ஸ்பைடர் என்றும், ஓட்டப்போகும் இடம் சென்னையை அடுத்திருக்கும் இருகாட்டுக்
கோட்டை ரேஸ் ட்ராக் என்றும் தெரிந்தபோது, மகிழ்ச்சி இன்னும் வெள்ளக்காடாய் மனசு முழுதும் பரவியது. நல்ல செய்திகள் அதோடு முடிந்துவிடவில்லை. என்னோடு இந்தக் காரை ஓட்டிப் பார்க்கப் போவது, தென் மாநிலங்களில் இருக்கும் புகழ்பெற்ற ஃபெராரி உரிமையாளர்கள் என்று சொல்லப்பட்டபோது.. . யார் யாரை எல்லாம் சந்திக்கப் போகிறோம் என்று மனசுக்குள் தனி ட்ராக்கில் ஒரு எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிக்கொண்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!எப்போது விடியும் என்று காத்திருந்து எல்லோருக்கும் முன்னதாகச் சென்றுவிட வேண்டும் என்று அவசர அவசரமாக ரேஸ் ட்ராக் சென்றால் மும்பை, கொச்சி, ஹைதராபாத் என்று தொலைதூரங்களில் இருந்தெல்லாம் தங்கள் ஃபெராரி கார்களோடு பல பிஸினஸ்மேன்கள் எனக்கு முன்னதாக வந்திருந்தார்கள்.

ஃபெராரி கார்களை ஓட்டுவதற்கு கையில் பல கோடிகள் மதிப்புள்ள காரும், அருமையான ரேஸ் டிராக் அல்லது சாலைகள் இருந்தால் மட்டும் போதாது. ஃபெராரியின் முழு த்ரில்லையும் அனுபவக்க வேண்டுமானால் ‘கோர்ஸா பிலாட்டோ’ என்ற ஃபெராரியின் டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி எடுக்க வேண்டும். அந்தப் பள்ளியிலிருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள்தான் நமக்கு முதலில் தியரி கிளாஸ் எடுத்தார்கள். 

பாடம் 1: ரேஸ் ட்ராக்கில் நேரான பாதையில் படு வேகமாக கார் ஓட்டும் பலரும், திருப்பம் திடீர் என்று எதிர்ப்படும் போது பிரேக் போடுவார்கள். இப்படிச் செய்யக்கூடாது. திருப்பம் வருவதை முன்கூட்டியே பார்த்துவிட்டு, திருப்பத்துக்கு வெகுமுன்பாகவே பிரேக்கைப் போட்டு வேகத்தைக் குறைத்துவிட வேண்டும். கார் திரும்பும்போது, ஆக்ஸிலேட்டரை மிதித்து வேகத்தைக் கூட்ட வேண்டும்.

பாடம் 2: திருப்பங்களில் காரை வேகமாகச் செலுத்தவேண்டும் என்றால் சாதாரண சாலைகளில் திரும்புவதைப்போல இடது பக்கமாகச் சென்று திரும்பக் கூடாது. படத்தில் காட்டியிருப்பதைப்போலத்தான் திரும்ப வேண்டும். 

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

ஸ்டீயரிங் வீலை எப்படிப் பிடிக்க வேண்டும், எந்த அளவுக்கு சீட்டில் சாய்ந்து உட்காரலாம், அல்லது உட்காரக்கூடாது, என்பது துவங்கி பல நுட்பமான விஷயங்களை அவர் சொல்லிக்கொடுத்ததை, கூடியிருந்தவர்கள் தங்கள் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டார்கள். அவர் கூறிய ஒரு பாயின்ட் - சாதாரண சாலையில் கார் ஓட்டும்போதும் பயன்படக்கூடியது. ''நமக்கு முன்னே செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்றால், அதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சாலையில் முழுப் பார்வையையும் பதித்து காரைச் செலுத்த வேண்டும். மாறாக, முன்னே செல்லும் வாகனத்தைப் பார்த்துக் கொண்டே ஓவர் டேக் செய்தால் அதை முட்டி விடுவதற்கான சாத்தியங்கள் கூடும். நாம் எதைப் பார்க்கிறோமோ அதை நோக்கித்தான் செல்லுவோம். ஆகையால், சாலையைத் தவிர எதிரே வரும் வாகனங்களையோ, சாலையை இரண்டாகப் பிரிக்கும் சென்டர் மீடியன்களையோ பார்த்துக் கொண்டே கார் ஓட்டக் கூடாது. காரை எந்தப் பாதையில் செலுத்தப் போகிறோமோ... அதாவது ஹெட்லைட் வெளிச்சம் விழும் இடத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

பாடங்கள் எல்லாம் முடிந்து டிராக்கிற்கு அழைத்துப் போனது அந்த பயிற்சியாளர்கள் குழு. ஹெல்மெட் கொடுத்து காரில் உட்காரச் சொன்னார்கள். டிரைவர் சீட்டின் கதவைத் திறக்கப் போனவரைத் தடுத்து, 'பயிற்சியாளர் எப்படி ஓட்டுகிறார் என்று பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தபடி செல்லுங்கள். அதன் பிறகு அடுத்த லேப் நீங்கள் ஓட்டலாம்" என்று சொல்லி டிரைவரின் பக்கத்து சீட்டில் உட்காருமாறு பணித்தார்கள். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். காண்பது கனவா அல்லது நினைவா என்ற தெரியாமல் சந்தோஷத்தின் உச்சியில் மிதந்து கொண்டிருந்த எனக்கு அவரது பெயர் காதில் விழவில்லை. 

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

அதன் பிறகு எனக்கு நேர்ந்த ஒரு சில நிமிடங்கள் என் வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாதவை. ஃபெராரி 488 ஸ்பைடரின் V8 3902சிசி சீற்றமான சத்தத்தை, 'இசை' என்று பயிற்சியாளர் வர்ணிக்க... கிளம்பிய வேகத்திலேயே கார் 130 கி.மீட்டர் வேகத்தைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது.   இதன் வீரியம் அதையும் தாண்டி வேகமானது. 0 - 100 கி.மீட்டர் வேகத்தை 3 விநாடிகளிலும், 0 - 200 கி.மீட்டர் வேகத்தை 8.7 விநாடிகளிலும் கடக்கக்கூடியது இந்த ஸ்பைடர்.

தியரி கிளாஸில் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் ரேஸ் ட்ராக்கில் பிராக்டிக்கலாகச் செய்து காட்டினார் பயிற்சியாளர். 3.7 கி.மீ நீளமான அந்த ரேஸ் ட்ராக்கில் நொடிக்கு நொடி திருப்பங்கள். திடீர் திருப்பங்கள். அகலமான திருப்பங்கள், குறுகலான திருப்பங்கள் என்று பல திருப்பங்களால் ஆனதாகவே இருந்தது. 250 மீட்டர் நீளத்துக்கு இருந்ததுதான் இருப்பதிலேயே நீளமான நேர்பாதை.

இதில் ஒரு லேப் முடித்துவிட்டு பிட் ஸ்டாப் வந்தவர், ‘‘இப்போது நீங்கள் ஓட்டலாம்'' என்று உத்தரவு கொடுத்தார். ஆக்ஸிலேட்டரை லேசாக மிதிக்க... உறுமிக் கொண்டு கிளம்பிய ஃபெராரியின் ஸடீயரிங் நம்பமுடியாத அளவுக்கு நம் மனது நினைப்பதை எல்லாம் துல்லியமாக நிறைவேற்றியது. ‘‘பிற ஃபெராரி மாடல்களை எல்லாம் வட இந்த 488 ஸ்பைடர்தான் ஏரொடைனமிக்ஸில் சூப்பர்.'' -  பயிற்சியாளர் சொன்னது உண்மை என்பதை நிரூபிப்பதைப்போல காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது ஸ்பைடர்.

‘சூது கவ்வும்’ படத்தில் சொல்வதுபோல, ‘நான் கார் ஓட்டவில்லை; கடவுளையே ஓட்டிவிட்டு வந்திருக்கிறேன்’ என்று எனக்கு நானே புலம்பிக் கொண்டே காரை விட்டிறங்கினேன்.

கார்த்திக் சென்னியப்பன் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

கார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்!

கோடிகள் கொடுத்து ஃபெராரி காரை வாங்கிவிட்டால் போதுமா. அதன் முழு வீரியத்தையும் சோதித்துப் பார்க்க டிராக் வேண்டாமா? இதற்காகத்தான் நாட்டின் தென் பகுதிகளில் இருக்கும் ஃபெராரி உரிமையாளர்களை எல்லாம் அவரவர் ஃபெராரிகளோடு வந்து ஓட்டிப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பை  'டிராக் டே' என்ற பெயரில் வழங்கியிருந்தது ஃபெராரி.  அப்படி ஒரு ஃபெராரி உரிமையாளராக சமந்தாவின் கணவர் நாக சைத்தன்யா அங்கு வந்திருந்து ஒன்று இரண்டு மூன்று என்று தன் நண்பர்களை தன் ஃபெராரியில் ஏற்றிக் கொண்டு பல லேப் சென்று வந்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism