Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... www.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... www.vikatan.com

Published:Updated:
மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

மஹிந்திரா மராஸோவில் என்ன ஸ்பெஷல்?

மோட்டார் நியூஸ்

நீங்கள் இந்தச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்போது, மஹிந்திராவின் மராஸோ பிரிமியம் MPV அறிமுகமாகி இருக்கும்! எப்படி சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு XUV 5OO வடிவமைக்கப்பட்டதோ, அதேபோல சுறாவை அடிப்ப டையாகக் கொண்டு மராஸோவை டிசைன் செய்திருக்கிறது மஹிந்திரா. ஸ்பானிஷ் பாஷையில் மராஸோ என்றால் ‘சுறா’ என அர்த்தம். வட அமெரிக்காவில் உள்ள மஹிந்திராவின் தொழில் நுட்ப மையம் மற்றும் சென்னையில் உள்ள ஆராய்ச்சி மையம் இணைந்து பொறியியல் பணிகளை மேற்கொண்டால், PininFarina - மஹிந்திரா டிசைன் குழு சேர்ந்து மரோஸோவை டிசைன் செய்திருக் கிறார்கள். இப்படி சர்வதேச மற்றும் இந்தியக் கூட்டணி காரணமாக, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் உறுதி என்கிறது மஹிந்திரா. நாசிக் தொழிற்சாலையில் தயாராகப் போகும் இதில், புதிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் (130bhp/30kgm) - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. மாருதி எர்டிகா மற்றும் ரெனோ லாஜிக்குப் போட்டியாக மராஸோ இருக்கும்; ஸைலோவும் விற்பனையில் தொடரும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் நியூஸ்

வெளிப்புறத்தில் மஹிந்திராவின் டிரேட்மார்க் க்ரோம் கிரில், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள், DRL உடனான பனி விளக்குகள், இண்டிகேட்டர் உடன் கூடிய மிரர்கள், ரியர் வைப்பர் & ஸ்பாய்லர், ரிவர்ஸ் கேமரா, க்ரோம் ஃப்னிஷ், Shark Fin Antenna என மராஸோ அசத்துகிறது. உட்புறத்தில் பியானோ ப்ளாக் & க்ரோம் வேலைப்பாடு உடன் கூடிய டூயல் டோன் டேஷ்போர்டு - Leatherette சீட்கள் உள்ளன. இதனுடன் பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7/8 சீட் ஆப்ஷன், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல் என கேபின் கவர்கிறது. கூடுதலாக Surround Cool தொழில்நுட்பத்துடன் கூடிய ஏசி சிஸ்டம், காரின் ரூஃபில் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவன வரலாற்றிலேயே நீளமான வாகனமாக, இந்த எம்பிவி இருக்கப் போகிறது; அனைத்து வேரியன்ட்டிலும்  காற்றுப்பைகள், ABS, EBD, ரியர் பார்க்கிங் சென்ஸார் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு!

மோட்டார் நியூஸ்

இந்தியாவுக்குப் படையெடுக்கும் 250சிசி-500சிசி பைக்குகள் என்னென்ன?

ந்தியாவில் இது மினி பர்ஃபாமென்ஸ் பைக்குகளின் காலம்! ஆம், கடந்த 2 ஆண்டு களில் பஜாஜ் டொமினார் - டிவிஎஸ் அப்பாச்சி RR310 - யமஹா R3 - ஹோண்டா CBR 250R - பிஎம்டபிள்யூ 310சிசி பைக்ஸ் என 250சிசி - 400சிசி செக்மென்ட்டில் பைக்குகள் வரிசையாக வெளிவந்துள்ளன. மேலும் சுஸூகி, கவாஸாகி, பெனெல்லி, ஹார்லி டேவிட்சன், ஹஸ்க்வர்னா என இந்த செக்மென்ட்டில் புதிய பைக்குகள், இந்தியச் சாலைகளில் டயர்பதிக்கக் காத்திருக்கின்றன. அதில் சுஸூகி ஜிக்ஸர் 250, பெனெல்லியின் TRK 250/502 & லியோன்சினோ 250/502, ஹஸ்க்வர்னாவின் 401 பைக்ஸ், கவாஸாகியின் 200-250சிசி பைக், ஹார்லி டேவிட்சனின் 250-500சிசி பைக், பஜாஜ் - டிரையம்ப் கூட்டணியில் இருந்து வரப்போகும் பைக் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இவை அனைத்தையும் இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism