Published:Updated:

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி சியாஸ்

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி சியாஸ்

Published:Updated:
சியர்ஸ் சொல்லும் சியாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாருதி, சியாஸை அறிமுகப்படுத்தியது. அது அறிமுகமான காலகட்டத்தில் இந்த கோதாவில் ஹோண்டா சிட்டி கார்தான் தாதா. அதற்கு அடுத்த இடத்தில் இருந்தது ஹூண்டாய் வெர்னா. அறிமுகமான இரண்டே ஆண்டுகளில், வெர்னாவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது சியாஸ். கடந்த ஆண்டு சிட்டியை முந்திக் கொண்டு முதலிடத்தைப் பிடித்தது. (கடந்த ஒருசில மாதங்களாக பேஸ்லிஃப்ட் வரப்போகிறது என்பதால், சியாஸின் விற்பனை சற்றே பின்தங்கியது வேறுவிஷயம்).

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

ஒரு காரின் லைஃப் சைக்கிளில் நான்காவது ஆண்டு என்பது முக்கியமான காலக்கட்டம். காலத்துக்கு ஏற்ற மாற்றங்களுடன் ஃபேஸ் லிஃப்ட் என்ற புதிய அடையாளத்துடன் மறு அறிமுகமாகியே தீரவேண்டும். இல்லை என்றால் தனது இடத்தைவிட்டு அது கீழே இறங்கிவிடும். அதனால் மறு அவதாரம் எடுத்திருக்கிறது சியாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

மாறியது என்ன?

பெட்ரொல் இன்ஜின் மாறியிருக்கிறது. டீசல் வேரியன்ட்டில் இருந்த ஹைபிரிட் டெக்னாலஜியை இப்போது பெட்ரொல் வேரியன்ட்டிலும் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர, காரின் வெளிப்புறத் தோற்றத்திலும் சிறப்பம்சங்களிலும் மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

சியாஸின் நீளம்/அகலம்/உயரம் மாறவில்லை. ஏறக்குறைய அப்படியேதான் இருக்கிறது. ஆனாலும் கார் ஃப்ரெஷ்ஷாகக் காட்சியளிக்கிறது. காரணம், முகப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள். க்ரோம் பட்டைகள் சேர்ந்திருப்பதால் கிரில் முன்பைவிடக் கவர்ச்சியாக இருக்கிறது. LED ஹெட்லைட், LED DRL, LED பனிவிளக்கு ஆகியவை எடுப்பாக இருக்கின்றன. ‘C’ என்ற ஆங்கில எழுத்தின் தாக்கம், பனி விளக்குகளைச் சுற்றி இருக்கும் க்ரோம் பட்டைகளில் தெரிகின்றது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தெரியும் பெரிய மாற்றம் - அலாய் வீல். அதேபோல காரின் பின்பகுதியிலும் LED டெயில் லைட் தவிர பெரிய மாற்றங்கள் இல்லை.

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

இந்த மாற்றங்கள் எல்லாம் இது ப்ரீமியம் கார்தான் என்பதை உரக்கச் சொல்லும் விதமாக மாருதி சுஸூகி அமைத்திருக்கிறது.

உள்ளே

4.5 மீட்டர் நீளம், 1.7 மீட்டர் அகலம் என்று இந்த செக்மென்ட்டிலேயே பெரிய கார் சியாஸ்தான். முன் சீட்டுகளைப் பின்னுக்கு முழுவதுமாகத் தள்ளிவிடப்பட்டிருக்கும் நிலையில்கூட, பின் சீட்டில் இருப்பவரால் கால்களை நன்றாக நீட்டி உட்கார முடியும். இத்தனைக்கும் ஹைபிரிட் கார் என்பதால் இதற்குத் தேவையான லித்தியம் பேட்டரி முன் சீட்டுக்கு அடியில்தான் வைக்கப் பட்டிருக்கிறது. பின் சீட்டில் இருக்கும் ஹெட்ரெஸ்ட்டை, தேவைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிவது வசதியாக இருக்கிறது.  டிக்கி வழக்கம்போல 510 லிட்டர்... பெரிதாகவே இருக்கிறது.

ஸ்டீயரிங் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதிலிருந்த பட்டன்கள் மட்டும் இடம் மாறியிருக்கின்றன. அதில் மெல்லிய கீற்றுப்போல தெரியும் க்ரோம் வேலைப்பாடு ப்ரீமியம் ஃபீல் கொடுக்கிறது. ஹைபிரிட் டிரைவ் சிஸ்டம் எப்படி இயங்குகிறது என்பதை கிராஃபிக்ஸ் வடிவில் காட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் புதிதாக இருக்கிறது.  ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி மற்றும் மல்ட்டிமீடியா தேவைகளுக்கு இருக்கவே இருக்கிறது மாருதி சுஸூகியின் ஸ்மார்ட் ப்ளே சிஸ்டம்.

இன்ஜின்

முந்தைய இன்ஜினைவிட இப்போது  கொடுக்கப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் K15 இன்ஜின் அதிக திறன் வாய்ந்தது. முன்பு பெட்ரோல் வேரியன்ட்டில் ஹைபிரிட் டெக்னாலஜி இல்லை. டீசல் வேரியன்ட்டில் மட்டும்தான் இருந்தது. இப்போது அந்த ஹைபிரிட் டெக்னாலஜியை பெட்ரோலுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், முன்பு டீசல் வேரியன்ட்டில் ஒரு லித்தியம் பேட்டரிதான் இருக்கும். இப்போது இது இரண்டாக உயர்ந்திருக்கிறது. அதனால் பேட்டரி சார்ஜாவது சீக்கிரமாக நடக்கும். 

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

முன்பு 92bhp சக்தியும், 13kgm டார்க்கும் கொடுத்த சியாஸ், இப்போது 105bhp சக்தியும் 13.8kgm டார்க்கும் கொடுக்கிறது. அராய் மைலேஜ் கணக்குப்படி 20.73 கி.மீ கொடுத்த மேனுவல் பெட்ரோல், இப்போது லிட்டருக்கு 21.56 கி.மீ கொடுக்கிறது. 19.12 கி.மீ மைலேஜ் கொடுத்த ஆட்டோமேட்டிக் வேரியன்ட்,  இப்போது 20.28 கி.மீ கொடுக்கிறது.

சிட்டி டிரைவிங்கில் எந்தக் குறையும் தென்பட வில்லை. ஆம் 1,800 rpm வரை இன்ஜின் சத்தம் இல்லாமல் ஸ்மூத்தாக இயங்குகிறது. மேனுவல் வேரியன்ட்டைப் பொறுத்தவரை, கியர் ஷிஃப்ட்டிங் மென்மையாக இருக்கிறது.  கிளட்சும் பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில், காரின் சக்தி கொஞ்சம் காணாமல் போய்விடுகிறது. 0 - 100 கீ.மீ வேகத்தைத் தொட மேனுவல் வேரியன்ட்டைவிட ஆட்டோமேட்டிக் மாடல் கூடுதலாக இரண்டு விநாடிகள் எடுத்துக் கொள்கிறது.  ஸ்டீயரிங் பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது. பார்க்கிங் செய்யும்போது சிரமமாக இல்லை.  ‘பயண சுகமா, ஹேண்ட்லிங்கா?’ என்றால்… ‘பயண சுகம்’ என்கிறது சியாஸ். இதற்கு ஸ்டீயரிங்கே சரியான உதாரணம். சஸ்பென்ஷனிலும் குறைகள் இல்லை. ஸ்பீட் பிரேக்கர்களை அது கடக்கும்விதம் நல்லவிதமாகவே இருக்கிறது. 

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

சியாஸுக்கு ‘பீப் கார்’ என்று செல்லப் பெயர் வைக்கலாம். 80 கி.மீ வேகத்தைத் தாண்டினால் 30 விநாடிகளுக்கு ஒரு முறை பீப் சத்தம் வருகிறது. இதுவே 120 கி.மீட்டர் வேகத்தைத் தாண்டினால் ஓயாமல் ‘பீப்’ ஓசை ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த ஓசையை நிறுத்தவும் வழியில்லை. வரப்போகும் சாலைப் பாதுகாப்புச் சட்டத்தை மனதில் வைத்து, காலத்தை முந்திக்கொண்டு மாருதி சுஸூகி இந்த எச்சரிக்கை ஒலியை இப்போதே அறிமுகப்படுத்திவிட்டது.
ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் AT வேரியன்ட்டில் பிரத்யேகமாகச் சேர்க்கப்பட்டிக்கின்றன.

வேல்ஸ் படங்கள்: ப.சரவணகுமார்

சியர்ஸ் சொல்லும் சியாஸ்!

ந்த செக்மென்ட்டிலேயே இது பெரிய கார். அது காரின் உள்ளேயும் தெரிகிறது. இது பர்ஃபாமென்ஸ் கார் இல்லை. கம்ஃபர்ட் டிரைவ்தான் இதன் அடிநாதம். புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பம் மைலேஜைக் கூட்டுகிறது. சிட்டி போலவோ, வெர்னா போலவோ காரின் டிசைன் யூத்ஃபுல்லாக இல்லை. ஆனால், முன்பைவிட அதிக சக்தியைக் கொடுக்கும் இன்ஜின், சிட்டி டிரைவுக்கு ஏற்ற ஓட்டுதல் அனுபவம், புதிய டிசைன்… எல்லாவற்றும் மேலாக இரண்டு லட்ச ரூபாய் அளவுக்குக் குறைவான விலை - இவையெல்லாம் சியாஸின் பலம். தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்க இந்த பலங்கள் மட்டுமே போதுமா என்பதற்கான விடை, ஒரு சில மாதங்களில் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism